வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி , கயத்தாறு

  • Home
  • India
  • Thoothukudi
  • வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி , கயத்தாறு

வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி , கயத்தாறு The school is named after the great king Veera Pandia Katta Bomman. He was remembered for his brave He was remembered for his brave actions against the British.

The school is located in a calm place amidst farm fields. The school has given several doctors, engineers, farmers and business men to the society.

வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளிபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 2025-26வெற்றி பெற்ற மாணவ , மாணவியர்  அனைவருக்...
08/05/2026

வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளி
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 2025-26

வெற்றி பெற்ற மாணவ , மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் , உறுதுணையாக இருந்த ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

இங்கனம்
தலைமை ஆசிரியர்
​வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளி,
கயத்தார்

Post By
கயத்தாறு மீடியா
வாட்சப் குருப் : https://chat.whatsapp.com/HldemaxOv4u7jIwWvuJ366

வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி,   - TATA Enterprise நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வ...
23/12/2025

வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி, - TATA Enterprise நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதி உதவியுடன், Sustain தொண்டு நிறுவனத்தின் மூலம் 8 கழிவறைகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட சிறுநீர் கழிப்பிடங்கள் மிகச்சிறந்த தரம் மற்றும் ஈடுபாட்டுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

​அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் இக்கட்டிடங்கள் பள்ளி வசம் ஒப்படைக்கப்பட்டன. வரும் புத்தாண்டில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக இவை திறந்து விடப்படும்.

​இத்தகைய உயரிய சேவையை வழங்கிய - TATA Enterprise நிறுவனம் மற்றும் அதனைச் சிறப்பாகச் செயல்படுத்திய Sustain தொண்டு நிறுவனத்திற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

​இவ்விழாவினை சிறப்பிக்க வருகை தந்த கயத்தாறு பேரூராட்சித் தலைவி திருமதி சுப்புலட்சுமி ராஜதுரை அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவரது கணவனார் திரு ராஜதுரை அவர்களுக்கும், , பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு காளியப்பன் அவர்களுக்கும், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி திருமதி லட்சுமி அவர்களுக்கும், பத்திரிகைத் துறையைச் சார்ந்த நண்பர்கள் மற்றும் பள்ளியின் நலனில் எப்போதும் அக்கறை காட்டும் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

இவன்
தலைமை ஆசிரியர்
மற்றும் ஆசிரியர்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி ,
கயத்தாறு.

பதிவு By
கயத்தாறு மீடியா
வாட்சப் குருப் : https://chat.whatsapp.com/HldemaxOv4u7jIwWvuJ366

புதிய வகுப்பறை கட்டிடம், ஆய்வகம்  திறப்புவிழா வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி, கயத்தாறில் புதிய கட்டடங்கள் த...
11/07/2025

புதிய வகுப்பறை கட்டிடம், ஆய்வகம் திறப்புவிழா

வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி, கயத்தாறில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா
கயத்தாறு, வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஜூலை 11, 2025) காணொலிக் காட்சி வாயிலாக நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட எட்டு வகுப்பறைகளும், இரண்டு ஆய்வகங்களும் மாண்புமிகு தமிழக முதல்வர் மதிப்புமிகு திரு.முத்துவேல் கருணாநிதி #ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.

இப்புதிய கட்டடங்களின் திறப்பு விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கும், மாவட்டத் தொடர்பு அலுவலர் அவர்களுக்கும், கோவில்பட்டி கோட்டாட்சியர் அவர்களுக்கும், கயத்தாறு பேரூராட்சித் தலைவி திருமதி #சுப்புலட்சுமி #இராஜதுரை அவர்களுக்கும், வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி , பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ,
பள்ளி மேலாண்மை குழு தலைவர்
மற்றும் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவன்
தலைமையாசிரியர் ,
வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி ,
கயத்தார்

பதிவு By
கயத்தாறு மீடியா
வாட்சப் குருப் : https://chat.whatsapp.com/HNsSgBo4vcF6nzSdjs6fjQ

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி"

#சிவனேபோற்றி
#தென்னாடுடையசிவனேபோற்றி
#கயத்தாறுதொல்லியல்
#கயத்தாறுசரித்திரம்
#கயத்தாறு
#சுந்தரபாண்டியநல்லூர்
#ஆசூர்நாடு

@followers

வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கொண்டாடிய சாதனை விழா!இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் அர...
27/06/2025

வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கொண்டாடிய சாதனை விழா!

இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில், சாதனை புரிந்த ஆசிரியர்களைப் போற்றும் விழாவும், சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டும் விழாவும் என இருபெரும் நிகழ்வுகள், முன்னாள் மாணவர்களால் இனிதே நடத்தப்பட்டன. தங்கள் பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும், மிகுதியான வேலைப்பளுவிற்கும் இடையேயும் பொன்னான நேரத்தைச் செலவிட்டு, பள்ளிக்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்த முன்னாள் மாணவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

இளம் தலைமுறையைச் செதுக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு புதிய முயற்சிக்கும் எங்கள் உளமார்ந்த வாழ்த்துக்கள். மாணவர்களின் கூச்ச சுபாவத்தைப் போக்கி, அவர்களை வாழ்க்கையில் முன்னுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், "பத்து தலைமுறையின் வறுமையை ஒரே தலைமுறையில் மாற்றும் கல்விக்கு, ஏழ்மை ஒரு தடை அல்ல; அதற்கு நாங்கள் உங்களுக்குக் கைகொடுப்போம்" என்று நம்பிக்கை வார்த்தைகளைக் கூறிய உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

எங்கள் பள்ளியை ஒரு மிளிரும் கல்விக்கூடமாக மாற்ற அயராது உழைக்கும் முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், இப்பணியை ஒருங்கிணைக்கும் ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும் எங்கள் நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளாகிய ஒழுக்கமுள்ள, தரமான, போட்டித் தேர்வுகளில் பங்கேற்கக்கூடிய, மனிதநேயமிக்க சிறந்த மாணவர்களை உருவாக்க முழு முயற்சி எடுப்போம் என இந்நேரத்தில் உறுதி அளிக்கிறோம்.
மீண்டும் ஒருமுறை, உங்கள் பொன்னான நேரத்தை எங்களுடன் செலவிட்டமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவன்
தலைமையாசிரியர் ,
வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி ,
கயத்தார்

பதிவு By
கயத்தாறு மீடியா
வாட்சப் குருப் : https://chat.whatsapp.com/HNsSgBo4vcF6nzSdjs6fjQ

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி"

#சிவனேபோற்றி
#தென்னாடுடையசிவனேபோற்றி
#கயத்தாறுதொல்லியல்
#கயத்தாறுசரித்திரம்
#கயத்தாறு
#சுந்தரபாண்டியநல்லூர்
#ஆசூர்நாடு

மிகவும் மகிழ்ச்சியான செய்தி!நமது வீரபாண்டிய  #கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக, முன்னாள் மாணவர்கள்...
24/06/2025

மிகவும் மகிழ்ச்சியான செய்தி!

நமது வீரபாண்டிய #கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நலனுக்காக, முன்னாள் மாணவர்கள் இருவர் தாராள மனதுடன் நன்கொடைகளை வழங்கியுள்ளனர் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் திரு அசோக் பிரபாகரன் தலைமை காவலர் காஞ்சிபுரம் , திரு தயாளன் தீயணைப்பு துறை மற்றும் அந்த வருட மாணவர்களால் வழங்கப்பட்ட RO இயந்திரத்தின் வடிகட்டிகள் (filters) மற்றும் சவ்வுகள் (membranes) (ரூபாய் 25,000 மதிப்பீட்டில்), அத்துடன் விளையாட்டு மைதானத்தை ஒட்டியுள்ள பின்புற கேட் (₹ 20000) ஆகியவற்றைப் பொருத்துவதற்கான நிதி உதவியை, திரு. V. சிவராமகிருஷ்ணன் ( கயத்தாறு மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர், இவருடைய தம்பி மற்றும் தங்கை ஆகியோரும் நமது பள்ளியின் முன்னாள் மாணவர்களே) அவர்களும்,திரு. S. கருப்பசாமி (2010 - 2012 ஆம் ஆண்டு முன்னாள் மாணவர், TVK பணிக்கர்குளம் கிளைச் செயலாளர், நாகலாபுரம்) அவர்களும், மனமுவந்து அளித்துள்ளனர்.
இந்த உயரிய நன்கொடைகள் மாணவர்களின் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். மாணவர்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதிலும், பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் இவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.

இத்தகைய பெருந்தன்மை மிக்க செயலுக்காக, பள்ளி நிர்வாகத்தின் சார்பாகவும், மாணவர்கள் சார்பாகவும் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்,
தலைமையாசிரியர்,
வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி, கயத்தாறு.

கயத்தாறு மீடியா
வாட்சப் குருப் : https://chat.whatsapp.com/HNsSgBo4vcF6nzSdjs6fjQ

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி"

#சிவனேபோற்றி
#தென்னாடுடையசிவனேபோற்றி
#கயத்தாறுதொல்லியல்
#கயத்தாறுசரித்திரம்
#கயத்தாறு
#சுந்தரபாண்டியநல்லூர்
#ஆசூர்நாடு

08/05/2025

வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளி, கயத்தார்

2024-2025 ஆம் ஆண்டிற்கான அரசு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள்
எமது பள்ளியின் பெருமிதம் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.

இத்தேர்வில் பங்கேற்ற 221 மாணவர்களில் 219 பேர் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 99% என்ற உயர்வான தேர்ச்சி விழுக்காட்டை எட்டிப் பிடித்துள்ளது.

மேலும் நமது மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், அதிக மதிப்பெண்களையும் குவித்துள்ளனர். 17 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில் கீழ்க்கண்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்:

* முதலிடம்: 555 மதிப்பெண்கள் - K. ஹப்சா பாத்திமா
* இரண்டாமிடம்: 554 மதிப்பெண்கள் - S. கார்த்திகா
* மூன்றாமிடம்: 552 மதிப்பெண்கள் - M. மகாலட்சுமி.

அதுமட்டுமின்றி, சில குறிப்பிட்ட பாடங்களில் மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

* கணினி பயன்பாடு: 100/100 - பாலகுரு பார்வதி
* வணிகவியல்: 100/100 - குரு தர்ஷினி

இந்தச் சிறப்பான சாதனைகளுக்குப் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கூட்டு முயற்சியே காரணம். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்!

இப்படிக்கு,
தலைமை ஆசிரியர்,
வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளி,
கயத்தார்.

சென்ற கல்வியாண்டில் (2004) 94% தேர்ச்சி சதவீதம் பெற்ற நிலையில் பள்ளி தலைமையாசிரியர் சுதா, உதவி தலைமையாசிரியர் தேவி சுப்புலெட்சுமி, அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காளியப்பன், மாணவ -மாணவிகள் முயற்சியால் பெற்றோர்கள் உதவிகளால் 99% சதவீதம் தேர்ச்சியை அடைந்துள்ளது.

இந்த வெற்றி கிடைத்திட உழைத்திட்ட அனைவருக்கும் முன்னாள் மாணவர்கள் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கயத்தாறு மீடியா
வாட்சப் குருப் : https://chat.whatsapp.com/HNsSgBo4vcF6nzSdjs6fjQ

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி"

#சிவனேபோற்றி
#தென்னாடுடையசிவனேபோற்றி
#கயத்தாறுதொல்லியல்
#கயத்தாறுசரித்திரம்
#கயத்தாறு
#சுந்தரபாண்டியநல்லூர்
#ஆசூர்நாடு

கயத்தாறு  #வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி  12 ஆம் வகுப்பு மாணவி கார்த்திகா , 10 ஆம் வகுப்பு மாணவி சீதாலட்சு...
18/02/2025

கயத்தாறு #வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி கார்த்திகா , 10 ஆம் வகுப்பு மாணவி சீதாலட்சுமி ஆகியோர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதால் ஒரு நாள் தலைமை ஆசிரியர் ஆக கவுரவிக்கப்பட்டனர் .

பள்ளி தலைமை ஆசிரியர் மதிப்பிற்குரிய சுதா மேடம் அவர்களின் கருத்து , இதே போல் கவுரவிக்கப்பட்டால் மற்ற மாணவ , மாணவிகளுக்கு உந்து சக்தியாக இருக்கும் , மேலும் கல்வியில் தங்களது கவனத்தை செலுத்த எதுவாக இருக்கும் என்று தெரிவித்தார் .

கயத்தாறு மீடியா
வாட்சப் குருப் : https://chat.whatsapp.com/HNsSgBo4vcF6nzSdjs6fjQ

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி"

#சிவனேபோற்றி
#தென்னாடுடையசிவனேபோற்றி
#கயத்தாறுதொல்லியல்
#கயத்தாறுசரித்திரம்
#கயத்தாறு
#சுந்தரபாண்டியநல்லூர்
#ஆசூர்நாடு

கயத்தாறு மீடியாவாட்சப் குருப் : https://chat.whatsapp.com/HNsSgBo4vcF6nzSdjs6fjQ https://www.facebook.com/share/161ocgEe...
15/02/2025


கயத்தாறு மீடியா
வாட்சப் குருப் : https://chat.whatsapp.com/HNsSgBo4vcF6nzSdjs6fjQ

https://www.facebook.com/share/161ocgEegj/

வாயுதூத் சர்விஸ் - கயத்தாறு ஏர்போர்ட் - 1987 டிசம்பர் 15

1987 இல் அன்றைய #முதலமைச்சர் #இதயதெய்வம் திரு .எம் .ஜி .ஆர் அவர்களின் ஆட்சியில் #நெல்லை மாவட்டத்தில் இருந்த #கயத்தாறு #ஏர்போர்ட் இல் வாயுதூத் சர்விஸ் ஆரம்பிக்க முயற்சி எடுக்கப்பட்டது .

அப்பொழுதே கயத்தாறில் ஆரம்பிக்க ஆராய்ச்சியும் செய்யப்பட்டுள்ளதாக 1987 டிசம்பர் 15 அன்று வெளியிட்ட செய்தி தாளில் வந்துள்ள தகவல் .

#வாயுதூத் என்பது இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்ட விமான நிறுவனம்.

கயத்தாறு மீடியா
வாட்சப் குருப் : https://chat.whatsapp.com/HNsSgBo4vcF6nzSdjs6fjQ

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி"

#சிவனேபோற்றி
#தென்னாடுடையசிவனேபோற்றி
#கயத்தாறுதொல்லியல்
#கயத்தாறுசரித்திரம்
#கயத்தாறு

 #தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை சார்பில் 2024-2025 நடைபெற்ற  #கலைத்திருவிழா போட்டியில் #வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்ந...
11/01/2025

#தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை சார்பில் 2024-2025 நடைபெற்ற #கலைத்திருவிழா போட்டியில்

#வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி , மாணவர்கள் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர் .

வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

கயத்தாறு மீடியா

வாட்சப் குருப் : https://chat.whatsapp.com/HNsSgBo4vcF6nzSdjs6fjQ
"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"

#சிவனேபோற்றி
#தென்னாடுடையசிவனேபோற்றி
#கயத்தாறுதொல்லியல்
#கயத்தாறுசரித்திரம்
#கயத்தாறு

தனியார் மகளிர் சுயஉதவி குழு &  #மைக்ரோ  #பைனான்ஸ் கடன் கொடுக்கும் நிறுவனங்களின் கொடுமைகள் .நாளுக்கு நாள் நம் தேவைகள் அதி...
12/12/2024

தனியார் மகளிர் சுயஉதவி குழு & #மைக்ரோ #பைனான்ஸ் கடன் கொடுக்கும் நிறுவனங்களின் கொடுமைகள் .

நாளுக்கு நாள் நம் தேவைகள் அதிகமாவதால் கடன் வாங்கும் நிலையும் அதிகமாகி கொண்டே செல்கிறது , ஆக்கபூர்வத்திற்க்காக உருவாக்கப்பட்டது அரசு மகளிர் சுய உதவி குழுக்கள் அதை சரியாக புரிந்துகொண்ட மைக்ரோ பைனான்ஸ் போன்று கடன் கொடுக்கும் நிறுவனங்கள் தனியார் அவர்களிடம் தனியார் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கி கடன் கொடுத்து அவர்களின் வாழ்க்கை யை அழித்து கொண்டு உள்ளது .

#மது , #ஆன்லைன் #சூதாட்டம் போன்றவற்றால் குடும்பத்தை நடத்த குடும்ப பெண்கள் கடன் வாங்கும் நிலைமைக்கு #மைக்ரோ #பைனான்ஸ் நிறுவனங்களிடம் தள்ளப்படுகின்றனர் .

கயத்தாறு மீடியா
வாட்சப் குருப் : https://chat.whatsapp.com/HNsSgBo4vcF6nzSdjs6fjQ

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"

#சிவனேபோற்றி
#தென்னாடுடையசிவனேபோற்றி
#கயத்தாறுதொல்லியல்
#கயத்தாறுசரித்திரம்
#கயத்தாறு

Address

Kayathar
Thoothukudi
628952

Website

Alerts

Be the first to know and let us send you an email when வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி , கயத்தாறு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category