Veludayar Higher Secondary School

Veludayar Higher Secondary School மாணவர்கள் & ஆசிரியர்களின் பாலம்.
04366- 240456

06/04/2026




இனிய வணக்கம்🙏இன்று 22 .12. 2024 *ஞாயிற்றுக்கிழமை கணித மாமேதை திரு ராமானுஜன் அவர்களின் 137 வது பிறந்த நாள் விழா* திருவாரூ...
22/12/2024

இனிய வணக்கம்🙏
இன்று 22 .12. 2024 *ஞாயிற்றுக்கிழமை கணித மாமேதை திரு ராமானுஜன் அவர்களின் 137 வது பிறந்த நாள் விழா* திருவாரூர் வேலுடையார் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு *திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.K.S.S. தியாக பாரி அவர்கள்* தலைமை ஏற்க, *கல்விக் குழு உறுப்பினர் திரு K.G. சீலர், துணை தாளாளர் Dr. சிவரஞ்சனி* ஆகியோர் முன்னிலை வகிக்க, உதவி தலைமை ஆசிரியர் திரு. S. வெங்கடாசலம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். விழாவில் ஆசிரியை கே .கலைவாணி மற்றும் மாணவி யாழினி ஆகியோர் ராமானுஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய கணித திறன்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் கணித ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் திரு S. பத்மநாபன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

அன்பே வாழ்வியல்
21/12/2024

அன்பே வாழ்வியல்

03/09/2024
03/09/2024
78ஆவது விடுதலைத் திருநாள்.15.08.24.நல்வாழ்த்துகள்
15/08/2024

78ஆவது விடுதலைத் திருநாள்.
15.08.24.
நல்வாழ்த்துகள்

🙏🙏🙏💐💐💐💐
15/08/2024

🙏🙏🙏💐💐💐💐

Traffic, route change and parking ❤️🔥🔥🔥
20/03/2024

Traffic, route change and parking ❤️🔥🔥🔥

பள்ளிவாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் நிற்பவர்களுக்கு....சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்....》அம்மாவிடம் இருந்து பிரிந்...
24/02/2024

பள்ளிவாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் நிற்பவர்களுக்கு....

சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்....

》அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாமல் அழுத தருணம்

》நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம்

》வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய தருணம்

》ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம்

》என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம்

》புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம் காட்டி சந்தோஷபட்ட தருணம்

》வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக கிரிக்கெட் விளையாடின தருணம்

》நண்பர் மை இல்லாமல் தவிக்கும் போது பெஞ்சின் மேல் மை தெளித்து உதவிய தருணம்

》போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த வகுப்புக்கு ரவுடி என சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ- மிக மிக அடங்கவில்லை)

》சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும் மழைக்காக விடுமுறை விட்டால் அளவில்லாத சந்தோஷத்தில் துள்ளி குதித்திருப்போம்

》எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம் பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்திருப்போம்... விடுமுறை நாளில் பிறந்தநாள் வந்தால் வருத்தப்படுவோம்

》அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத பேதம் பார்க்காமல் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்

ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம்,

நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...

திங்கள் என்றபோது வருத்தம்
வெள்ளிமாலை மகிழ்ச்சி

இப்போ அந்த நாளுக்காக ஏங்கி நிற்கின்றோம்...!!!

பகிருங்கள்

நம்ம திருவாரூர்
Veludayar Trust

09/08/2023

07.08.2023 அன்று வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தலைவர் அவர்களும், கல்விக் குழு உறுப்பினர் அவர்களும், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் அவர்களும், உடற்கல்வி இயக்குனர் அவர்களும், கலந்து கொண்டு திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியின் சார்பாக குறுவட்ட அளவில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற இருக்கின்ற மாணவ மாணவியரை வாழ்த்தி , ஊக்குவித்து உற்சாகப்படுத்திய நிகழ்வு.

Address

Meipporul Nagar. Thiruvarur
Thiruvarur
610002

Alerts

Be the first to know and let us send you an email when Veludayar Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Veludayar Higher Secondary School:

Shortcuts

Share

Category