31/01/2024
Everybody;s favorite comedian actor of Tamil movies Nagesh;s death anniversary today. Apart from comedy role, he proved himself as good character actor. I am his great fan. Thousand of movies we can tell, few to name Thiruvildayadaln Thillana Mohanambal, Kathalikka neramillai, Uttharavinti ulle vaa, Edhir neechal, Bama vijayam, etc etc many more. Remembering interaction with him few years back in Chennai..Some friends said he would have lived more years, if he is not addicted to smoking/ drinks. I didnt believe it. Anyhow his death is big loss for all the fans, including me......vedaclass ganesh Thiruvananthapuram
இன்று தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை சக்கரவர்த்தியாக விளங்கிய திரு சி கே நாகேஷ் அவர்களின் 15 வது நினைவு தினமாகும் ( 1933 - 2009)
தமிழ்நாட்டின் தாராபுரத்தில் ஒரு மாத்வ பிராமண குடும்பத்தில் பிறந்த நாகேஷ் நாகேஸ்வரன் /குண்டு ராவ் ஆகிய இயற்பெயர்களைக் கொண்டவர்
1959ல் முக்தா சீனிவாசன் இயக்கிய தாமரைக்குளம் என்ற படத்தில் சினிமாவுக்கு அறிமுகமானார்
இவருடைய ஆரம்ப காலப் படங்கள் சில
மனமுள்ள மறுதாரம், தாயில்லாப் பிள்ளை,அன்னை, தெய்வத்தின் தெய்வம், நானும் ஒரு பெண் ஆகியவை
இயக்குனர் ஸ்ரீதர் இவரை உச்சிக்கு
கொண்டு சென்றதில் முக்கியமானவர்
அவருடைய நெஞ்சில் ஓர் ஆலயம் மற்றும் காதலிக்க நேரமில்லை படங்கள் நாகேஷ் பிரபல நகைச்சுவை நடிகராக உயர அடித்தளம் வகுத்தன
தொடர்ந்து கே பாலச்சந்தரின் நீர்க்குமிழி,
சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல், அனுபவி ராஜா அனுபவி மற்றும் ஏ பி நாகராஜன் இயக்கத்தில் திருவிளையாடல், தில்லானா
மோகனாம்பாள் ஆகிய படங்கள் இவரைப் புகழேணியின் உச்சிக்கு கொண்டு சென்றன
1970 வரை நாகேஷ் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைமை இருந்து வந்தது
எல்லா முன்னணி நடிகர்களும் நாகேஷ் கால்ஷீட்டுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டது
1980க்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்
சில படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்துப் புகழ் பெற்றார்
நாகேஷ் - மனோரமா ஜோடி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று பிரபலமாக இருந்தார்கள் ஆனால் ஒரு காலகட்டத்தில்
கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி பிரிந்து பல வருடங்கள் மீண்டும் இணைந்து நடிக்காமல் இருந்தார்கள்
1990க்குப் பிறகு கமல், ரஜினி, விஜய், அர்ஜூன் போன்ற இளைய தலைமுறை நடிகர்களுடன் பல படங்களில் நடித்தார்
அவற்றில் அவ்வை ஷண்முகி, நம்மவர், பஞ்சதந்திரம், ரிதம், பூவே உனக்காக, வசூல் ராஜா எம்பிபிஎஸ் ,:தசாவதாரம் ஆகிய படங்கள் குறிப்பிடத் தக்கவை
நம்மவர் படத்தில் இவருடைய நடிப்புக்கு
தேசிய விருது கிடைத்தது