11/05/2024
https://youtube.com/shorts/oNovqZPjxjE?si=EqbfJG-icbsy93b7
Dr.Velumani Motivational speech #motivation #motivationalvideo
Dont stop when you are tired , stop when you are done !!!This Video dedicated to All.Hope you like the video ❤️Enjoy Watching !!! (Use Headphones)Like Share ...
17/09/2019
Mobile phone addiction – What to do? – RMK Healthcare
17 Sep 2019 RMK Healthcare செல்ஃபோன் பயன்பாட்டை எப்படி கட்டுப்படுத்துவது? கற்றோருக்கு “செல் இல்லா” இடமும் சிறப்பே! செல்ஃபோன் ....
12/09/2019
உணவில் மஞ்சளின் மருத்துவப் பயன்கள்
மஞ்சள் என்பது இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவுப்பொருட்களிலும்,மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பல உயர்தர ஆய்வுகள் மஞ்சள் நம் உடலுக்கும் மூளைக்கும் பெரும் நன்மைகளைக் கொடுக்கக் கூடியது என்பதைக் காட்டுகின்றன.
முதலில் மஞ்சளை எவ்வாறு உணவில் பயன்படுத்த வேண்டும் எனப் பார்ப்போம்.
மஞ்சள் சக்திவாய்ந்த மருத்துவ பண்புகளுடைய பயோஆக்டிவ் சேர்மங்களை (bioactive compounds) கொண்டுள்ளது. இந்த சேர்மங்கள் கர்குமினாய்டுகள் (curcuminoids) என்று அழைக்கப்படுகின்றன, அவற்றில் மிக முக்கியமானது குர்குமின்(curcumin) ஆகும். இது சக்திவாய்ந்த anti-inflammatory மற்றும் anti-oxidant தன்மைகளைக் கொண்டுள்ளது.
நாம் உட்கொள்ளும் மஞ்சள் பொடியில் குர்குமின் அளவு சுமார் 3% மட்டுமே ஆகும். மேலும், செரிமான பாதையில் இருந்து குர்குமின் உறிஞ்சப்படும் அளவும் குறைவு.
கருமிளகில்(black pepper) உள்ள பைப்பரின்(piperine) எனப்படும் பொருள் கர்குமினின் உறிஞ்சுதலை 20 மடங்கு அதிகரிக்கும். ஆக, மஞ்சள் உணவின் உண்மையான பயனைப் பெற கருப்பு மிளகுடன் உட்கொள்ளுதல் உதவும்.
மேலும், குர்குமின் கொழுப்பில் கரையக்கூடியது, எனவே ஒரு கொழுப்பு உணவோடு எடுத்துக்கொள்ளப்படும் போது மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்த ஓட்டத்திற்குள் உறிஞ்சப்படுவது அதிகரிக்கிறது.
இனி, மஞ்சளின் மருத்துவ நன்மைகள் குறித்த ஆய்வுகளில் இருந்து எடுக்கப்பட்ட சில முக்கிய தகவல்ளை இக்கட்டுரையில் பார்ப்போம்.
1. குர்குமின் ஒரு இயற்கையான அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) பொருள் ஆகும். திசுக்களின் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுவதில் மிகவும் உதவக்கூடியது இந்த குர்குமின்.
NF-kB என்பது உயிரணுக்களின் கருக்களில் பயணித்து Inflammation தொடர்பான மரபணுக்களை இயக்கும் ஒரு மூலக்கூறாகும். பல நாட்பட்ட நோய்களில் NF-kB முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. குர்குமின் NF-kB -யை தடுக்கும் சக்தி வாய்ந்தது.
2. மஞ்சள் வியத்தகு முறையில் உடலின் ஆக்ஸிஜனேற்ற திறனை அதிகரிக்கிறது. ஆக்ஸிஜனேற்ற சேதம்(oxidative damage) பல நோய்களுக்குப் பின்னால் உள்ள வழிமுறைகளில் ஒன்றாக நம்பப்படுகிறது. ஆக்ஸிஜனேற்றிகள் (anti-oxidants) மிகவும் முக்கியமானவையாக இருக்கக் காரணம், அவை உங்கள் உடலை ஃப்ரீ ரேடிகல்களிலிருந்து பாதுகாக்கின்றன. குர்குமின் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது அதன் வேதியியல் கட்டமைப்பு காரணமாக ஃப்ரீ ரேடிக்கல்களை செயலற்றுப்போகச் செய்கிறது..
3. குர்குமின் BDNF (Brain Derived Neuroptrophic factor) எனப்படும் மூளை வளர்ச்சிக் காரணியை அதிகரிக்கிறது. BDNF உங்கள் மூளையில் செயல்படும் ஒரு வகை வளர்ச்சி ஹார்மோன் ஆகும்.
மனச்சோர்வு(Depression) மற்றும் அல்சைமர் நோய்(Alzhemier’s disease) ஆகியவற்றில் BDNF அளவு குறைந்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. குர்குமின் BDNF-இன் மூளை அளவை அதிகரிக்கும். இதைச் செய்வதன் மூலம், பல மூளை நோய்களை தாமதப்படுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ குர்குமின் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
4. குர்குமின் உங்கள் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்க உதவக்கூடும்
குர்குமின் இதய நோய் செயல்பாட்டில் பல படிகளை மாற்றியமைக்க உதவும்.
Endothelium என்பது இரத்த நாளங்களின் உட்புறச் சுவற்றில் உள்ளது. இதன் செயலிழப்பு என்பது இதய நோய்க்கான ஒரு முக்கிய காரணம்..
பல ஆய்வுகள் குர்குமின் Endothelium- இன் செயல்பாட்டை மேம்படுத்த வழிவகுக்கிறது என்று கூறுகின்றன.
மேலும், குர்குமின்-இன் Anti-inflammatory மற்றும் anti-oxidant பயன்கள் இதய நோய்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
5. புற்று நோய் தடுப்பதில் மஞ்சளின் பங்கு
குர்குமின் புற்றுநோய் சிகிச்சையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்ட உயிரணுக்களின் புற்றுநோய் வளர்ச்சியை குர்குமின் குறைக்கும் என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
ஆனால், நேரடியாக மனிதர்களில் இன்னும் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை.
6. மூட்டு வாதம் (arthritis) மூட்டுகளில் வீக்கத்தை உருவாக்கக் கூடியது. குர்குமின் ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு(anti-inflammatory) கலவை என்பதால், இது மூட்டு வாதத்திற்கு உதவக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
இதனைப் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
7. மனச்சோர்வு (Depression)க்கு எதிராக குர்குமின் நன்மை பயப்பதாக சில ஆய்வுகள் காட்டுகின்றன. மேற்கூறியடி மனச்சோர்வு நோயில் மூளையின் BDNF அளவு குறைவது கண்டறியப்பட்டுள்ளது. குர்குமின் பி.டி.என்.எஃப் அளவை அதிகரிக்கிறது, இது மனச்சோர்வைத் தடுக்க குர்குமின் உதவக் கூடும் என்பதைக் காட்டுகிறது.
மேற்சொன்னவாறு, உணவில் உள்ள மஞ்சளின் முழுப் பயனை அடைய மிளகுடனோ அல்லது கொழுப்பு உணவுடனோ எடுக்க வேண்டும்.
இது குறித்த கேள்விகளுக்கு [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
இணைய முகவரி - www.rmkhealthcare.com/blog
10/09/2019
Su***de prevention day 2019
இன்று (செப்டம்பர் 10) உலக தற்கொலை தடுப்பு தினம்.
"மரங்களைப் பாருங்கள், பறவைகளைப் பாருங்கள், மேகங்களைப் பாருங்கள், நட்சத்திரங்களைப் பாருங்கள் ... உங்களுக்கு கண்கள் இருந்தால் இவ்வுலகின் ஒவ்வொரு இருப்பும் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண முடியும். எல்லாமே மகிழ்ச்சியாக இருக்கிறது. மரங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றன- எந்த காரணமும் இல்லை; அவைகள் பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகள் ஆகப் போவதில்லை, அவைகள் பணக்காரர்களாக மாறப் போவதில்லை, அவைகளுக்கு ஒருபோதும் வங்கி இருப்பு இருக்காது. பூக்களைப் பாருங்கள் - எந்த காரணமும் இல்லாமல் சிரிக்கின்றன. மலர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றன என்பது நம்பமுடியாதது." - ஓஷோ
தற்கொலை தடுப்பு ஒரு உலகளாவிய சவாலாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், தற்கொலை என்பது உலகளவில் எல்லா வயதினருக்குமான மரணத்தின் காரணங்களில் முதல் 20 காரணங்களில் ஒன்றாகும். ஒரு வருடத்தில் சுமார் 8,00,000 க்கும் அதிகமானோரின் இறப்புகளுக்கு தற்கொலை காரணமாகும், இது ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒரு தற்கொலைக்கு சமம்.
மலேரியா, மார்பக புற்றுநோய்,போர் மற்றும் படுகொலை ஆகியவற்றால் இறந்தவர்களைவிட தற்கொலையால் இறந்தோர் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது. 38 நாடுகளில் மட்டுமே தற்கொலை தடுப்பு உத்திகள் சீரிய செயல்பாட்டில் இருப்பதாக WHO கூறுகிறது.
இழக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் நம்மில் ஒருவரின் குழந்தை, பெற்றோர், நண்பர் அல்லது சக ஊழியருடையதே! ஒவ்வொரு தற்கொலையாலும், அதில் இறந்தவரை அறிந்த சுமார் 135 பேர் கடுமையான வருத்தத்தை அனுபவிக்கிறார்கள் அல்லது நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள். ஆக மொத்தம் தற்கொலையால் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 10.8 கோடி பேர் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு 25 தற்கொலை முயற்சிகளுக்கு ஒரு மரணம் ஏற்படுகிறது.
தற்கொலை என்பது மரபணு, உளவியல், சமூக மற்றும் கலாச்சார காரணிகளின் ஒருங்கிணைப்பின் விளைவாகும். சில நேரங்களில் வாழ்வில் ஏற்படும் ஏதேனும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு மற்றும் இழப்பு பலரை தற்கொலைக்கு தூண்டுகிறது. தற்கொலை தடுப்புக்கு ஒரு பன்முக மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே இந்த சவால்களை சமாளிக்க முடியும்.
தற்கொலையைத் தடுப்பது பெரும்பாலும் சாத்தியமே! அதைத் தடுக்க தேவைப்படும் முயற்சியில் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு மிக முக்கிய பங்கு வகிப்பீர்கள்! இதைப் படிக்கும் உங்களில் ஒவ்வொருவராலும் ஒரு வித்தியாசத்தை உருவாக்க முடியும் - சமூகத்தின் உறுப்பினராக, ஒரு குழந்தையாக, ஒரு பெற்றோராக, ஒரு நண்பராக, ஒரு சக ஊழியராக அல்லது அண்டை வீட்டாராக.
தற்கொலை நடத்தையைத் தடுக்க நீங்கள் தினமும் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன.
தற்கொலைக்கான காரணங்கள் மற்றும் தற்கொலைக்கான எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து உங்களைச் சார்ந்தோருக்கும் மற்றவர்களுக்கும் கல்வி கற்பிக்கலாம்.
உங்கள் சமூகத்தில் துன்பத்தில் இருப்பவர்களுக்கு இரக்கமும் அக்கறையும் காட்டலாம், தற்கொலை, தற்கொலை எண்ணம் மற்றும் மனநல பிரச்சினைகள் தொடர்பாக சமூகத்தில் உள்ள தவறான அணுகுமுறையை தட்டிக் கேட்கலாம்.
தற்கொலைகளைக் குறைக்க உதவுபவை என்று WHO கூறிய பிற விஷயங்கள்:
தற்கொலை குறித்து சமூக பொறுப்புடன் செய்தி பரப்புவதை ஊடகங்கள் கற்க வேண்டும். ஆபத்தில் உள்ளவர்களை முன்கூட்டியே அடையாளம் காண்பதும் வாழ்க்கை அழுத்தங்களை சமாளிக்க உதவும் திறன்களை வளர்க்க இளைஞர்களுக்கு உதவுவதும் சில உபயோகமான முறைகள் ஆகும்.
தற்கொலை எண்ணம் கொண்டவருக்கு நீங்கள் என்ன செய்யலாம்?
அக்கறையுடன் பேசுங்கள்-
தற்கொலை பற்றிய எண்ணங்களைக் கொண்டவர்கள், அக்கறையுள்ள விதத்தில் யாராவது அவர்களிடம் பேசினால் அவர்களின் தற்கொலை எண்ணம் குறையும் என ஆராய்ச்சி காட்டுகிறது. தற்கொலை எண்ணத்தைப் பற்றி அவர்கள் ஒப்புக்கொள்வதும், அதைப் பற்றி பேசுவதும், அவர்களின் தற்கொலை எண்ணத்தைக் கட்டுப்படுத்தும் என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்-
ஆபத்தான வழிமுறைகள் (துப்பாக்கி, பூச்சி மருந்து போன்றவை) எளிதாக கிடைக்கும்போது, அந்த முறையால் தற்கொலை செய்துகொள்வது அதிகம் சாத்தியம் ஆகின்றது என பல ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றை அவர்களின் பிடியில் இல்லாதிருக்கச் செய்யுங்கள்.
அவர்கள் உடனிருங்கள்-
தனக்கு நெருங்கிய ஒருவரிடம் பேசிய பிறகு அவர்கள் மனச்சோர்வு குறைந்து, தற்கொலை எண்ணம் குறைந்து அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
உதவி வாய்ப்புகளுடன் இணைக்கப்படுவதற்கு அவர்களுக்கு உதவுங்கள்-
ஆபத்து உள்ள ஒருவருக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பிற்காக வழிமுறைகள் உருவாக்க உதவுவது நம்பிக்கையற்ற உணர்வுகளை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உளவியல் நிபுணரின் உதவியை நாடுதல் மிகவும் அவசியம்.
“யாராவது செவிமடுத்தால், ஆதரவுக்கரம் நீட்டினால், ஊக்கமளிக்கும் ஒரு வார்த்தை பேசினால், தனிமையில் உள்ள ஒருவரைப் புரிந்துகொள்ள முயற்சித்தால், அவரின் வாழ்வில் அசாதாரணமான அற்புதமான விஷயங்கள் நடக்கத் தொடங்குகின்றன!”
தற்கொலையைத் தடுக்க நீங்கள் செய்யக்கூடிய இந்த வேலையின் நன்மைகள் எல்லையற்றவை. இதன் பலன் துன்பத்தில் இருப்பவர்களை மட்டுமல்ல, அவர்களின் அன்புக்குரியவர்களையும், அப்பகுதியில் பணிபுரிபவர்களையும், ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அடையும். உதவுங்கள்! உயிர்காத்திடுங்கள்!
09/09/2019
Cognitive development of children ....
குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான வழிகள்
ஒரு குழந்தையின்அறிவாற்றல் வளர்ச்சி என்பது, அது எந்த ஒரு விஷயத்தையும் கற்கும் முறை, அணுகும் முறை மற்றும் அது தன்னை சுற்றியுள்ள சூழலுடன் தொடர்பு கொள்ளும் முறை ஆகியவற்றைப் பொருத்தே இருக்கும்.
ஒரு குழந்தையின் வளர்ச்சியில் வெவ்வேறு படிகளில் வெவ்வேறு அறிவாற்றல் திறன்கள் பெறப்படுகின்றன. பெற்றோராக, உங்கள் குழந்தையின் அன்றாட வழக்கத்தில் சில எளிய செயல்பாடுகளை இணைப்பதன் மூலம் அதன் நினைவாற்றல், செறிவு, கவனம் மற்றும் கருத்தாளுமை ஆகிய துறைகளில் அறிவாற்றல் வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.
உங்கள் குழந்தையின் அறிவாற்றல் வளர்ச்சிக்கு நீங்கள் உதவக்கூடிய சில எளிய வழிகள்:
பாடல்கள் பாடுங்கள் - உங்கள் குழந்தைகளுடன் அடிக்கடி பாடல்கள் பாடுங்கள், உங்களுடன் சேர்ந்து பாட அவர்களை ஊக்குவியுங்கள். வீட்டில் இருக்கும்போது, காரில் பயணிக்கும் போது, அவர்களுக்குப் பிடித்த பாடல்களையும் இசையையும் அவர்கள் கேட்குமாறு வழி செய்யுங்கள். சிறிது நாட்களில் அவர்கள் தனியாக பாட ஆரம்பிப்பார்கள். இந்த செயல்பாடு நினைவாற்றல் மற்றும் சொல்-அடையாளத்திறனை மேம்படுத்த உதவுகிறது.
எழுத்துக்களைப் பயிற்சி செய்யுங்கள் - “அகரவரிசைப் பாடலுடன்” பாடுவதன் மூலமும், எழுத்துக்களைப் பற்றிய புத்தகங்களைப் படிப்பதன் மூலமும், எழுத்துக்கள், புதிர்களுடன் விளையாடுவதன் மூலமும் அகர வரிசை எழுத்துகளை ( எந்த மொழியாயினும்) அடையாளம் காண உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.
ஒலி - பொருள் தொடர்பு - உங்கள் பிள்ளைகள் நாள் முழுவதும் கேட்கும் சத்தங்களை அவர்களுக்கு அடையாளம் காட்டுங்கள். (அதாவது ஒரு பறவை பாடுவது, ஒரு கார் ஹார்ன், ஓடும் நீர் அல்லது துணி துவைக்கும் இயந்திரம்). தனது அன்றாட சூழலில் ஒலிகள் எவ்வாறு பொருள்களுடன் தொடர்புபடுகின்றன என்பதை அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள்.
சுயமாக முடிவெடுக்கும் திறன் - உங்களால் முடிந்தால், உங்கள் பிள்ளைகளுக்கு சுயமாக முடிவெடுக்க வாய்ப்பு கொடுங்கள். உதாரணமாக, “நீ பழுப்பு நிற சட்டை அணிகிறாயா அல்லது நீல நிற சட்டை அணிய விரும்புகிறாயா?” என கேட்கலாம். அல்லது, “மதிய உணவோடு ரசம் வேண்டுமா அல்லது தயிர் விரும்புகிறாயா?”. இது அவர்களுக்கு மேலும் சுதந்திரமாக உணரவும், சுயமாக முடிவெடுக்கக் கற்றுக்கொள்ளவும் உதவும்.
பல்வேறு வகையான விளையாட்டுகளை வழங்குதல் - சிக்கல் தீர்க்கும் படைப்பாற்றலை ஊக்குவிக்க உங்கள் குழந்தைகளுடன் பலவிதமான விளையாட்டுகளை விளையாடுங்கள். அவர்களின் வயதுக்கேற்ப, கிரகிக்கும் திறனுக்கேற்ப விளையாட்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
எண் பயிற்சி- எண்ணும் பயிற்சி செய்ய நாள் முழுவதும் வாய்ப்புகளை அடையாளம் காணுங்கள். உங்கள் குழந்தைகளுடன் வெளியில் செல்லும் போது வாகனங்களை எண்ணச் செய்யலாம். சாலையோர மரங்களை எண்ணலாம். விளையாட்டுப் பொருட்களை எண்ணச் செய்யலாம். விரைவில் அவர்கள் எண்ணிக்கை எண்ணும் திறன் அதிகரிப்பதைக் காணலாம்.
வடிவங்கள் மற்றும் வண்ணங்களை பயிற்சி செய்யுங்கள் - உங்கள் குழந்தைகளுடன் உரையாடும் போது அடிக்கடி வடிவங்கள் மற்றும் வண்ணங்களை அடையாளம் காணுங்கள். உதாரணமாக, பந்து விளையாடும்போது “அது ஒரு வட்ட, நீல நிற பந்து” எனக் கூறலாம். அல்லது ஒரு கட்டிட முகப்பை “ சிகப்பு நிற சதுர” கட்டிடம் எனக் குறிப்பிடலாம். அவர்கள் சிறிது வளர்ந்தவுடன், அவர்களே அவர்கள் காணும் பொருட்களை விரிவாக விளக்கத் தொடங்குவார்கள்.
கேள்விகளைக் கேளுங்கள் - உங்கள் பிள்ளைகள் தனக்குத்தானே சிந்திக்க கற்றுக்கொள்ள உதவும் மற்றொரு வழி அவர்களிடம் கேள்விகளைக் கேட்பது: “உன் விளையாட்டு அறையை சுத்தம் செய்யும் போது எந்த பொம்மையை முதலில் எடுக்க வேண்டும்?” அல்லது “படிக்கட்டுகளில் இறங்கும் போது மெதுவாக இறங்குவது ஏன் முக்கியம்?” - இது போன்ற கேள்விகளைக் கேட்கலாம். . அவர்களிடம் கேள்விகளைக் கேட்பது, அவர்களுக்கு ஒரு சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்பதை நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது.
நடைமுறை அறிவை வளர்ப்பது - நிறைய செலவு செய்து விளையாட்டுப்பொருட்கள் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்த்து, அன்றாட வீட்டு உபயோகப் பொருட்களை உபயோகித்து விளையாடக் கற்றுக்கொடுங்கள் - இவ்வாறு செய்வது, குழந்தைகளின் நடைமுறை அறிவை (practical knowledge) வளர்க்க உதவும். விளையாட்டுப் பொருட்களுக்கான செலவும் மிச்சமாகும்.
சிறு பயணங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்- ஆர்வத்தைத் தூண்டுவதற்காக உங்கள் குழந்தைகளை குழந்தைகள் அருங்காட்சியகம், நூலகம், காய்கறி சந்தை போன்ற இடங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்லுங்கள். இது போன்ற சிறிய பயணங்கள் அவர்களுக்கு அன்றாட நடைமுறை அனுபவங்களை வழங்கும் . இதை செய்யும் போதே அவர்களிடம் கேள்விகளைக் கேட்டு, அதனை எவ்வாறு எதிர்கொண்டு பதிலளிக்கிறார்கள் என ஆராயுங்கள்.
தவிர்க்க வேண்டியது - Helicopter parenting எனப்படும் முறையைத் தவிர்க்க வேண்டும். அதாவது குழந்தையின் வாழ்க்கையில் ஒவ்வொரு சிறு முடிவையும் நீங்கள் தான் எடுக்க வேண்டும் என இருக்கக்கூடாது. அவர்கள் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் முடிவிலும் நீங்கள் உட்புகுந்து உங்கள் முடிவுகளையும், எண்ணங்களையும் திணித்துக் கொண்டிருந்தால், அது, குழந்தைகளின் சுயமான முடிவெடுக்கும் திறனை முற்றிலும் மழுங்கச் செய்து விடும்.
Happy Parenting!
04/09/2019
Benefits of avoiding refined carbs in diet.
26/01/2019
Congratulations Ma'm for your achievements