30/01/2025
Swami Vivekananda Yoga Training Academy
SWAMI VIVEKANANDA YOGA TRAINING ACADEMY. A UNIT OF SWAMI VIVEKANANDA EDUCATIONAL TRUST. WE TEACH ASTHANGA YOGA / WE TRAIN YOGA TEACHERS / YOGA THERAPY
30/01/2025
16/06/2024
"சுவாமி இவர்கள் மூவரும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் வரம்பு மீறிச் செல்கின்றன. நாங்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை சுவாமி. நீங்கள் தான் இவர்களுக்கு சொல்ல வேண்டும் சுவாமி."
அந்த மூன்று நண்பர்களின் மனைவிகள் சுவாமியிடம் தங்கள் கணவர்கள் குறித்துக் குறை கூறினார்கள்.
"இவர்கள் என்னம்மா செய்கிறார்கள்?"
சுவாமி சிரித்தபடி வினவினார்.
"உங்களை மாதிரியே தலைப்பாகை கட்டிக்கொண்டு உங்களைப் போலவே நடித்து அட்டகாசம் செய்கிறார்கள் சுவாமி."
சுவாமி ஆச்சரியத்தோடு மூவரையும் பார்த்தார்.
"நண்பர்களே, எங்கே இந்த பிச்சைக்காரன் முன்பும் அதேபோல் செய்து காட்டுங்கள்."
நண்பர்கள் தயங்கினர். சுவாமி தைரியமூட்டினார்.
நண்பர்கள் அவர்கள் கொண்டுவந்த துண்டுகளை சுவாமி போல் தலையில் தலைப்பாகையாக கட்டிக் கொண்டார்கள்.
பின்னர் தனித்தனியாக சுவாமி போல் பாடியும் ஆடியும் கூத்தடித்தார்கள்.
சுவாமி அவர்கள் செய்த கோமாளித்தனத்தை உற்று நோக்கியவாறு இருந்தார்.
கூத்து முடிந்தது. அதுவரை அங்கிருந்த சிரிப்பும், கும்மாள ஓசைகளும் நின்று போயின.
சுவாமி நண்பர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக உற்றுப் பார்த்தார்.
வெகு நேரம் மௌனத்தில் கழிந்தது.
"நண்பர்களே இந்த பிச்சைக்காரன் மாதிரி வேஷம் தரிப்பதோ, இந்த பிச்சைக்காரன் போல செய்கைகள் செய்வதோ உங்களுக்கு எந்த பலனையும் தராது. மாறாக அவ்விதம் செய்வது உங்களுக்கும் உங்களைப் பார்ப்பவருக்கும் துன்பமே தரும்.
ஏன் நீங்கள் இந்த பிச்சைக்காரன் மாதிரி வேஷம் போட்டு நடிக்க வேண்டும்? என் தந்தைக்கு இப்படி செய்வது அறவே பிடிக்காது.
என் தந்தை உங்களை எப்படி வைத்திருக்கிறாரோ அப்படியே நீங்கள் இருந்தால்தான் என் தந்தை மகிழ்ச்சி அடைவார்.
இந்த பிச்சைக்காரன் போல் வேஷம் போடுவதை என் தந்தை ஒருக்காலும் ஏற்கமாட்டார். அது என் தந்தையை நோக்கிச் செல்லும் என் நண்பர்களுக்கு உகந்தது அல்ல.
மற்றவர்கள் எதுவும் செய்து கொள்ளட்டும். ஆனால் இந்த பிச்சைக்காரனின் நண்பர்கள் மட்டும் இந்த பிச்சைக்காரன் போல் வேஷமிடக்கூடாது, நடிக்கவும் கூடாது."
நண்பர்கள் தவறிழைத்த கவலையில் துவண்டு போயினர்.
சுவாமி அவர்களைப் பார்த்து அருள் பொங்கச் சிரித்தார். அவர்கள் தவறு மன்னிக்கப்பட்டது.
சுவாமி மெதுவாக இனிமையாக நாமம் பாடினார். அனைவரும் சுவாமியை தொடர்ந்து பாடினார்கள். மனதில் அனைவருக்கும் நிம்மதி ஏற்பட்டது.
யோகி ராம்சுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா.
Parthasarathy
Sannasi Parthasarathy Parthasarathy
27/02/2024
பகவான் யோகி ராம்சுரத்குமார் குறிப்பிட்டிருக்கிறார்,"கடந்த காலம் 'முடிந்து விட்டது; எதிர்காலம் என்பதை யாரும் அறிய முடியாது. இருப்பது இந்த 'நொடி தான். நிகழ்காலம் தான், நீ இந்தச் சமயத்தில் எதை நினைக்கிறாயோ, எதைப் பேசுகிறாயோ, எதைச் செய்கிறாயோ அதுதான் உனது எதிர்காலத்தை அமைக்கும்."
(சரணாகதம் ஏப்ரல் 2021 இதழில் அன்னை விஜயலக்ஷ்மி அவர்கள் எழுதிய தலையங்கத்தில் இருந்து)
Bhagwan Yogi Ramsuratkumar" has remarked, "The past is over; No one can know the future. Being is this 'moment'. It is the present'. What you think, say, and do in this moment will shape your future."
27/02/2024
நம் சுவாமி யோகி ராம்சுரத்குமாரிடம் நெருங்கிப் பழகியவர்கள் அவரிடம் ஒருவித தெய்வீகப் பெண்மையின் அரும் பெரும் லட்சணம் இணைந்திருப்பதை உணர்ந்திருப்பார்கள்.
உள்ளிருந்து பொங்கிப் பெருகி வழியும் அன்பால் தரணியில் வாழும் அனைவருக்கும் தாயாகி இருப்பதை அவர்கள் அறிவார்கள்.
இதன் காரணமாகவே பெண் பக்தர்கள் அனைவரும் தங்களின் சகல விதமான பிரச்சனைகளையும் சற்றும் தயக்கமின்றி சுவாமியிடம் பேச முடிந்தது.
சுவாமியும் அனைத்து வயதுப் பெண்களின் பிரச்சனைகளையும் புரிந்து கொண்டு அதற்கான தீர்வையும் அவரவர் நிலைக்கேற்ப உபதேசிப்பார்.
அவரவர் வீட்டில், சுவாமி, பெண்களை பக்தி பூர்வமாக, உறுதியாக நிலைநிறுத்தி வீட்டில் அமைதியும், ஆனந்தமும் தாண்டவமாடச் செய்திடுவார்.
பெண்கள், மகிழ்ச்சியோடும், நிறைவோடும் வாழும் இல்லங்களே சுவாமி வாழும் இல்லங்கள் ஆகும்.
பெண்களின் பாதுகாப்பு சுவாமியின் பிரதானமான குறிக்கோளாகும். தனித்து பெண்கள் பயணிக்க அவர் ஒருபோதும் ஒப்பியதில்லை.
ஒரு சமயம் சுவாமியின் அத்யந்த பக்தரின் தாய் தன் சகவயது தோழிகள் இருவருடன் சுவாமியைத் தரிசிக்க பேருந்தில் திருவண்ணாமலை வந்தார். அவரின் வயது அப்போது சுமார் 65 இருக்கும்.
பெரிய செல்வந்தராயினும் மிக எளிமையாக வாழ்ந்து கொண்டிருந்த
உன்னதமான தாய் அவர். சுவாமியைக் குருவெனக் கொண்டவர். சுவாமியின் சந்நிதியில் அமர்ந்திருந்து சுவாமியின் அருளுரையைக் கேட்கும் விருப்புடையவர்.
இரண்டு நாட்கள் கடந்தன. அம்மை ஊர் திரும்பும் நாள் வந்தது. சுவாமியிடம் விடை பெற்று புறப்பட சந்நிதி தெரு வீட்டிற்கு அம்மை வந்தார்கள்.
நான் என் உறவினரோடு சுவாமியின் எதிரில் அமர்ந்திருந்தேன்.
"சுவாமி நாங்கள் ஊருக்கு புறப்படுகிறோம்." அம்மை சுவாமியிடம் கூறினார்.
"எப்படி போகப்போகிறீர்கள் அம்மா"
"பஸ்ஸில்தான் சுவாமி."
சுவாமி என்னைப் பார்த்தார்.
"நீ காரில்தானே வந்திருக்கின்றாய்?"
"ஆமாம் சுவாமி."
"இவர்களை நீ அழைத்துக்கொண்டு அவர்கள் ஊரில் விட்டுவிடுவாயா?"
"ஆகட்டும் சுவாமி."
ஆனால் அம்மையார் ஒப்புக் கொள்ளவில்லை. சுவாமி கெஞ்சினார்.
"பார்த்தசாரதி நல்ல டிரைவர் அம்மா. உங்களை பத்திரமாக வீட்டில் விட்டுவிடுவார் அம்மா."
"நீங்கள்தான் எங்கள் டிரைவர் சுவாமி. எங்களை பத்திரமாக பிரம்மத்தில் சேர்த்துவிடுவீர்கள். அதனால் கவலை வேண்டாம் சுவாமி. நாங்கள் பஸ்ஸிலேயே செல்கிறோம்."
"நீங்கள் அப்படி நம்புகின்றீர்கள் என்றால், பார்த்தசாரதி இந்த பிச்சைக்காரனின் கருவி எனக் கருதுங்கள் அம்மா. தயை கூர்ந்து பார்த்தசாரதியுடன் காரில் செல்லுங்கள் அம்மா."
அம்மை வாதம் செய்யாமல் ஒப்புக்கொண்டார்.
நானும், உறவினரும் அவர்களை அவர்கள் ஊரில் இறக்கிவிட்டு, மறுநாள் நாங்கள் செல்ல வேண்டிய ஊர் சென்றடைந்தோம்.
மற்றொரு சமயம் ஆசிரமத்தில் சில காலம் சுவாமியின் அத்யந்த பக்தையுடன் ஒரு மத்திய வயது பெண்மணி தங்கியிருந்தார். இருவரும் கணவனை இழந்தவர்கள் என்பதால், அவர்களை சுவாமி தன்னுடைய நேரடிப் பாதுகாப்பில் வைத்திருந்தார்.
ஒரு நாள் அந்த மத்திய வயது பெண்ணின் மகள் நோயுற்றிருப்பதாக தொலைபேசியில் செய்தி வந்தது. அப்பெண்மணி தன் மகளைக் காண ஊர் செல்ல விரும்பினார்.
சுவாமியிடம் தகவல் சொல்ல, சுவாமி அவரிடம் யாருடன் ஊர் செல்லப் போகிறீர்கள் எனக் கேட்க, தனியாக பஸ்ஸில் செல்லப் போவதாக அப்பெண்மணி பதில் உரைத்தார்.
சுவாமி, தனித்து செல்லக் கூடாது எனக் கூறி, ஆசிரமத்தில் பணிபுரியும் தன் நம்பிக்கைக்குரிய ஒருவரை அழைத்து அப்பெண்மணியை அவர் ஊரில் பத்திரமாக பஸ்ஸில் கூட்டிச் சென்று விட்டு வருமாறு உத்திரவிட்டார்.
சுவாமியிடம் பக்தியும், நம்பிக்கையும் கொண்ட பெண்களின்பால் சுவாமி காட்டும் பரிவும், கருணையும்தான் அப்பெண்களின் குடும்பங்கள் ஷேமமாகவும், அமைதியாகவும், தெய்வீகமாகவும் இருக்க வைக்கின்றது என உறுதியாகச் சொல்லலாம்.
என் நாதன் யோகி ராம்சுரத்குமார் திருவடிகள் போற்றி.
27/02/2024
"இவரைக் கார் ஓட்டுவதற்கு ஏன் அனுமதித்தீர்கள்?"
சுவாமி யோகி ராம்சுரத்குமார் அந்த இரண்டு நண்பர்களில் ஒருவரிடம் ஆதங்கத்துடன் கேட்டார்.
"என் பேச்சை அவர் சிறிதும் கேட்கவில்லை சுவாமி. சிறிது அதட்டிக் கேட்டால் மிகவும் கோபப்பட்டார் சுவாமி. எனவே உங்கள் நாமத்தைச் சொல்லிக்கொண்டே அமைதியாக இருந்துவிட்டேன் சுவாமி."
மது போதையில் வந்த அன்பரோடு வந்த நண்பர் புலம்பினார்.
சுவாமி நண்பர்களையும், அவர்கள் வந்த காரையும், மாறி, மாறி, பார்த்த வண்ணம் இருந்தார்.
இரவு நடுநிசி அப்போது. கார் சந்நிதித் தெரு வீட்டின் எதிரில் ஏடாகூடமாக நிறுத்தப்பட்டிருந்தது. சுவாமி, காரை சரியாக, தெருவின் ஓரத்தில், யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல், நிறுத்த சொன்னார்.
போதையில் இருந்தவரிடமிருந்து கார் சாவியைப் பறித்து தெளிவாக இருந்த நண்பர் காரை யாருக்கும் தொந்தரவு இல்லாமல் தெரு ஓரமாக நிறுத்தினார்.
போதையில் இருந்த அன்பரை சுவாமி தன் கைப்பிடியில் உறுதியாகப் பற்றி சந்நிதித் தெரு வீட்டினுள் அழைத்துச் சென்றார். உடன் வந்த நண்பரும் சுவாமியைப் பின்தொடர்ந்து வீட்டிற்குள் வந்தார்.
போதையில் இருந்த நண்பரை சுவாமி தன்னருகே அமர்த்திக் கொண்டார். உடன் வந்த அன்பரை தன் எதிரில் அமர வைத்தார்.
போதையில் இருந்த நண்பர் திடீரென விம்மி விம்மி அழ ஆரம்பித்தார்.
பெரிய செல்வந்தரான அந்த அன்பர் சுவாமியைத் தெய்வமாக பாவிப்பவர். செல்வச் செழிப்பில் வாழும் சில சாதாரண ஜீவன்களைப் போல, இவரும் பலவித மயக்கங்களில் வாழ்ந்து பழகியவர்.
எனினும் குருவின் அருமை அறிந்தவர். குருவைத் தேடி அலைந்து முடிவில் சுவாமியின் திருவடியில் சரணாகதி அடைந்தவர்.
சுவாமியின் அருளைப் பரிபூர்ண மாகப் பெற்றவராக இருந்தும் வெகு நாளைய பழக்க வழக்கங்களிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவர்.
அன்று மாலை விரக்தியின் உச்சத்தில் மதுபானத்தை அளவுக்கு அதிகமாக அருந்திவிட்டு தன் நண்பரை வற்புறுத்தி தன்னோடு அழைத்துக்கொண்டு வெகு தூரத்தில் உள்ள திருவண்ணாமலை நோக்கி பயணித்தார்.
ரோட்டில் கார் தாறுமாறாக ஓடியது. உடன் வந்த நண்பரிடமும், காரைக் கொடுக்க போதை அன்பர் மறுத்தார்.
எப்படியோ இருவரும் பத்திரமாக சுவாமியிடம் வந்து சேர்ந்தனர்.
சுவாமி போதை அன்பரின் முதுகை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார். அன்பரின் விம்மலும், அழுகையும் அதிகமானது.
சுவாமி அவரது கரத்தைத் தன் கரத்தில் இதமாகப் பிடித்து வருடினார். அன்பரின் அழுகை மிகுந்த ஓசையுடன் வெளிப்பட்டது. அவரின் போதை தெளிந்தது.
"சுவாமி இதிலிருந்து என்னை விடுவிக்க மாட்டீர்களா?"
அன்பர் மிகுந்த தாபத்துடன் சுவாமியிடம் கேட்டார்.
"நண்பா இனி இந்த லாகிரி வஸ்துக்கள் நம்மைப் பீடிக்காது. இந்த போதை பானங்கள் இனி நம்மை விட்டுச் சென்றுவிடும். என் தந்தையின் நாமரசம் தரும் பக்தி மயக்கமே இனி எப்போதும் நம்முடன் இருக்கப் போகிறது. கவலை வேண்டாம் நண்பா. நாம் நம் தந்தையை மட்டும் நினைத்திருந்து வாழ்ந்திருப்போம்."
சுவாமியின் அருட் சொற்கள் அந்த விந்தையை செய்தது.
அந்த அன்பர் போதைப் பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டார். சுவாமியின் திருவடியே கதி எனக் கொண்டார்.
சில நாட்களில் குருவின் திருவடியில் முழுமையாக கரைந்து போனார். தேகம் துறந்தும், சென்று விட்டார்.
யோகி ராமசுரத்குமாரா ஜெய குரு ஜெய குரு ஜெய குரு ராயா
26/02/2024
ஒரே ஒரு முறை .என் தந்தையின் நாமத்தை ஆழ் மனதிலிருந்து சொல்லி பாருங்களேன் .உங்களளது துன்பங்களும் .வாழ்வின் பெரும் சுமைகளும். .இலகுவாகி கரைந்து போய்விடும் .நம்புங்கள் நண்பர்களே. .என் தந்தையின் நாமம் சகல சக்தி கொண்டது. .
பகவான் யோகிராம் சுரத்குமார்
யோககிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
யோகிராம் சுரத்குமார்
ஜெயகுரு ராயா
20/02/2024
இன்று யோகி ராம்சுரத்குமார்
நினைவு நாள்...
ஒரு சீடன் குருவிற்கு அருகே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
கூடவே இருந்து பணிவிடைகள் செய்தால் தான் சீடன் என்று அர்த்தமில்லை.
குரு சூட்சும ரூபத்தில் இயங்குவார்.
மனசுக்குள் புகுந்து கற்று கொடுப்பார்.
கனவில் வந்து வழிநடத்துவார்.
குருவை இவ்விதம் ஈர்க்க மனம்
குரு சிந்தனையோடு இருந்தால் போதும்.
இறையே குருவே சரணம் சரணம்.
10/02/2024
Yes, The flesh is weak. The body is perishable.That is why I am asking you to identify yourself with the Atman. Say you are the Atman, then see what happens.
(From Yogi Ramsuratkumar sparks book)
ஆம், சதை பலவீனமானது. உடல் அழியக்கூடியது. அதனால் தான் உங்களை ஆத்மாவுடன் அடையாளப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் ஆத்மா என்று சொல்லுங்கள், பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
(யோகி ராம்சுரத்குமார் ஸ்பார்க்ஸ் புத்தகத்திலிருந்து)
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
08/02/2024
கடல் நீர் ஆவியாகி மழையாக பொழிவது போல் இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும்,அவன் அருள் பக்குவப்பட்ட ஆன்மாக்கள் மூலமாகவே கிடைக்கின்றன.
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Rathinam Nagar
Theni
625531
26/06/2024