Sufi Academy

Sufi Academy ஸூஃபி அகாடமி,தமிழ்நாடு ஸூஃபி அகாடமி,தமிழ்நாடு அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாத் கொள்கை விளக்கம் ஆதாரங்களுடன் வரும் முகநூல் பக்கம்.

🌹 முஹத்திஸீன்களது மவ்லித் 🌹குத்புல் இர்ஷாத் , இமாமுல் ஹதீத் பில் ஹிந்த், ஸனதுல் முஹத்திஸீன், ஜைனுல் புகஹா , ஸுல்தானுல் அ...
24/08/2026

🌹 முஹத்திஸீன்களது மவ்லித் 🌹

குத்புல் இர்ஷாத் , இமாமுல் ஹதீத் பில் ஹிந்த், ஸனதுல் முஹத்திஸீன், ஜைனுல் புகஹா , ஸுல்தானுல் அஸ்பியா , இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி قدس الله سره العزيز அவர்கள் நவின்றார்கள் ,

நான் மக்காவில் நடைபெற்ற ஒரு மீலாது (மௌலித்) மஜ்லிஸில் கலந்துகொண்டேன். அங்கு மக்கள் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மீது தரூத் மற்றும் ஸலாமை ஓதிக்கொண்டிருந்தனர். மேலும், அண்ணலார் ﷺ பிறப்பதற்கு முன்னரும் பின்னரும் நடைபெற்ற சம்பவங்களையும், அவர்கள் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு நிகழ்ந்ததாக அறிவிக்கப்படும் சம்பவங்களையும் நினைவுகூர்ந்து கொண்டிருந்தனர்.

அவற்றில் சில சம்பவங்கள்: அன்னை ஆமினா رضي الله عنها அவர்களிடமிருந்து நூர் வெளிப்பட்டது, அவர்கள் அந்த நூரைக் கண்டது, மேலும் அப்துல்லாஹ் رضي الله عنه அவர்களின் நெற்றியில் நூர் இருப்பதைக் கண்டவுடன் ஒரு பெண் அவரைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தது போன்ற சம்பவங்களாகும்.

திடீரென்று, ஒரு குழுவினரைச் சுற்றி நூர் (ஒளி) சூழ்ந்திருப்பதை நான் கண்டேன். இதை நான் என்னுடைய புறக்கண்களால் கண்டேன் என்று நான் கூறவில்லை. அதேபோன்று, அது ஆன்மீகக் காட்சியாக இருந்தது என்றும் நான் கூறவில்லை. இந்த இரண்டில் எது உண்மை என்பதை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

எனினும், அந்த அன்வார்களை (ஒளிகளை) நான் ஆழ்ந்து கவனித்தபோது, எனக்கு ஒரு உண்மை வெளிப்பட்டது: இவை இத்தகைய மஜ்லிஸ்களில் கலந்துகொள்ளும் மலக்குகளின் நூர் (ஒளியாகும்).

மேலும், அந்த மலக்குகளின் நூருடன் சேர்ந்து அல்லாஹ்வின் ரஹ்மத் (அருள்) இறங்குவதையும் நான் கண்டேன்.

ஆதார நூல் 📕 ஃபயூழுல் ஹரமைன், பக்கங்கள் 80–81

இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களை அஹ்லேஸுன்னத் வல் ஜமாத்தினர் மட்டுமல்லாது தேவ்பந்திகள் ,அஹ்லே ஹதீஸ் ஜமாத்தினரும் தம்மவர் ,தமது இமாம் என்று தாவா செய்கின்றனர். அன்னாரது பல நூற்களை மொழிபெயர்த்து பல செய்திகளை தமது கொள்கைக்கு ஏற்றவாறு நீக்கி ,மறைத்து பதிப்பித்து வருகின்றனர்.

இப்பதிவு இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது மவ்லிதுந்நபி குறித்த கொள்கையையும், மக்கா முகர்ரமாவில் அக்காலத்தில் உள்ள இஸ்லாமியர் நடைமுறையும் காட்டுகின்றது .

காட்டுகின்றது

 #மவ்லித்  #மீலாது  #மீலாதுந்நபி
24/08/2026

#மவ்லித் #மீலாது #மீலாதுந்நபி

🌹    அண்ணல் நபி ﷺ அவர்களே தமது மீலாதை அனுசரித்தார்கள் 🌹 " மீலாதுந் நபி ﷺ — மகிழ்ச்சியின் நாள் "“நிச்சயமாக, அல்லாஹ்வின் த...
23/08/2026

🌹 அண்ணல் நபி ﷺ அவர்களே தமது மீலாதை அனுசரித்தார்கள் 🌹

" மீலாதுந் நபி ﷺ — மகிழ்ச்சியின் நாள் "

“நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

‘அது நான் பிறந்த நாளாகும்; மேலும் அந்நாளில்தான் நான் நபியாக ஆக்கப்பட்டேன்; அந்நாளில்தான் என்மீது திருக்குர்ஆன் அருளப்பட்டது.’”

என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் பதில் உரைத்தார்கள்

📚 கன்ஸுல் உம்மால், இமாம் முத்தக்கி அல் ஹிந்தீ رضي الله عنه, ஹதீஸ் எண் : ஹதீஸ் 24170–24171

#மீலாத் #மவ்லித் #மவ்லிதுந்நபி

 #மவ்லித்  #மவ்லுத்   #மவ்லிதுந்நபி
23/08/2026

#மவ்லித் #மவ்லுத் #மவ்லிதுந்நபி

22/08/2026

#மவ்லித் #மவ்லிதுந்நபி #மீலாத்
#அஹ்லுஸ்ஸுன்னா

🌹    அண்ணல் நபி ﷺ அவர்களே தமது மீலாதை அனுசரித்தார்கள் 🌹 " மீலாதுந் நபி ﷺ — மகிழ்ச்சியின் நாள் "“நிச்சயமாக, அல்லாஹ்வின் த...
22/08/2026

🌹 அண்ணல் நபி ﷺ அவர்களே தமது மீலாதை அனுசரித்தார்கள் 🌹

" மீலாதுந் நபி ﷺ — மகிழ்ச்சியின் நாள் "

“நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

‘அது நான் பிறந்த நாளாகும்; மேலும் அந்நாளில்தான் நான் நபியாக ஆக்கப்பட்டேன்; அந்நாளில்தான் என்மீது திருக்குர்ஆன் அருளப்பட்டது.’”

என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் பதில் உரைத்தார்கள்

📚 முஸ்னத் அஹ்மத் பின் ஹன்பல், இமாம் ஹன்பல் رضي الله عنه – அரபி, ஹதீஸ் 22550

#மீலாத் #மவ்லித் #மவ்லிதுந்நபி

 #மவ்லித்  #மீலாது  #மீலாதுந்நபி  #அஹ்லுஸ்ஸுன்னா
22/08/2026

#மவ்லித் #மீலாது #மீலாதுந்நபி
#அஹ்லுஸ்ஸுன்னா

21/08/2026

🌹 முஹத்திஸீன்களின் மவ்லித் 🌹முஹத்திஸே ஹரமைன் இமாம் ஷெய்கு ஸெய்யது  முஹம்மது பின் அலவி அல் மாலிகி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறை...
21/08/2026

🌹 முஹத்திஸீன்களின் மவ்லித் 🌹

முஹத்திஸே ஹரமைன் இமாம் ஷெய்கு ஸெய்யது முஹம்மது பின் அலவி அல் மாலிகி رَحِمَهُ ٱللَّٰهُ ( மறைவு 1426) அவர்கள் சமீபகாலத்தில் இஸ்லாமிய உம்மத்தின் பெரும் அறிஞராக அறியப்பட்டவர்கள்.

எம்பெருமானார் ﷺ அவர்களது திருப்பேரர் சுவனத்து இளைஞர்களின் தலைவர் ஸெய்யிதினா ஹஸன் رضي الله عنه அவர்களது பாரம்பரித்தில் வந்தவர்கள்.

அன்னவர்களது குடும்பத்தினர் ஐந்து தலைமுறைகளாக மக்கா முகர்ரமாவில் மாலிகி மத்ஹபின் இமாமாக மக்களுக்கு பணிபுரிந்தனர்.

இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது பாட்டனார் ஸெய்யது அப்பாஸ் அலவி அல்மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் மக்கா முகர்ரமாவின் முப்தி மற்று காழீயாகவும்,இமாமாகவும்,கதீபாகவும் மார்க்கப் பணியாற்றினார்கள்.

அன்னார் இப்பணிகளை உஸ்மானிய கிலாபத்தின் போதும்,பின்னர் ஹாஷிமியாக்களது ஆட்சியலும்,அதன் பின்னர் இன்று 200 வருடங்கள் முன்னர் நிர்மாணிக்கப்பட்ட நவீன சவூது ஆட்சியிலும் தொடர்ந்தனர். அன்றைய மன்னர் அப்துல் அஜீஸ் பின் சவூது இவர் பால் மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்.

இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களது ,தகப்பனார் ஸெய்யது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் நாற்பதாண்டு காலம் மக்கா முகர்ரமாவில் பல்வேறு இஸ்லாமிய உலூம்களை கற்பித்துக் கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள்.

தமது தகப்பனாரிடம் இஸ்லாமிய கல்வியை கற்ற இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் ,தமது 15 வது வயதில் ஹதீஸ் மற்றும் பிக்ஹ் உடைய கல்வியை ஹரம்ஷரீபில் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

ஆரம்பகால கல்வியை கற்ற பின்னர்,தமது 25 வது வயதில் உலகப் புகழ்பெற்ற ' அல் அஸ்கர்' பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று தேர்ச்சியானார்கள்.

இஸ்லாமிய உலகெங்கும் பயணித்து மக்ரிப் முதல் மஷ்ரிக் வரை மார்க்கக் கல்வியை பல்வேறு உலமாக்களிடம் கற்றார்கள்.

மவ்லிதுந்நபி ﷺ ஏன் கொண்டாடுகிறீர்கள் ? ,மற்றும் இன்னபிற ஆட்சேபனைகளுக்கு இரத்தின சுருக்கமாக பின்வருமாறு தமது மவ்லிது குறித்து நூலில் பதிலுரைத்தார்கள்,

" நான் மவ்லிதுந்நபி கொண்டாடுகின்றேன் ஏனெனில் பூமான் நபி ﷺ அவர்களைக் கொண்டு மகிழ்வுறுகின்றேன், நான் பூமான் நபி ﷺ அவர்களைக் கொண்டு மகிழ்வுறுகின்றேன் ஏனெனில் நான் நபி ﷺ அவர்களை நேசிக்கின்றேன், நான் பூமான் நபி ﷺ அவர்களை நேசிக்கின்றேன் ஏனெனில் நான் ஒரு முஃமின் "

📕 ஹவ்ல் அல்இக்திபால் பீ திக்ரி மவ்லித் அல்நபி அஷ்ஷரீப்,இமாம் ஸெய்யது முஹம்மது அலவி அல் மாலிக்கி رَحِمَهُ ٱللَّٰهُ

#மவ்லித் #மவ்லிது #மவ்லிதுந்நபி
#மீலாதுந்நபி

      #மவ்லிதுந்நபி  #மீலாதுந்நபி
21/08/2026


#மவ்லிதுந்நபி #மீலாதுந்நபி

Address

Thanjavur

Alerts

Be the first to know and let us send you an email when Sufi Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sufi Academy:

Shortcuts

Share