03/11/2020
TENKASI EDUCATIONAL FORUM மற்றும் UNITED WELFARE ORGANIZATION இணைந்து நடத்திய தமிழ்நாடு காவலர் தேர்வு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி தென்காசி VTSR மஹாலில் வைத்து 11.10.2020 அன்று நடைபெற்றது.
VTSR முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். TENKASI EDUCATIONAL FORUM ன் தலைவர் S.N.மீரான் அவர்கள் துவக்க உரையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தென்காசி காவல் துறை ஆய்வாளர் ஆடிவேல், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முகம்மது அப்துல் ஹக்கீம், ஆகாஷ் அகாடமி மாரியப்பன் , கோஆப்ரேட்டிவ் ஆடிட்டர் சகுந்தலா, வெற்றி அகாடமி அருணாச்சலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
TEF ன் செயலாளர் சுலைமான் அவர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். TEF ன் துணைத் தலைவர் சலீம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டில் TEF ன் செயலாளர் சுலைமான் மற்றும் உறுப்பினர்கள் இஸ்மாயில், முஹம்மது ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.