27/01/2026
*மயிலாடுதுறை மாவட்டம்* இன்று(27/1/2026)
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு தேர்வு கட்டணம், சான்றிதழ் கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் என உயர்த்தப்பட்டது .
ஏழை எளிய மாணவர்கள் படிக்கக்கூடிய கல்லூரிகளில் இந்த பல்கலை கழகம் உயர்த்திய கட்டண உயர்வு ஏராளமான மாணவர்களை பாதிக்கக்கூடிய சூழல் இருப்பதினால். அண்ணாமலை பல்கலைக்கழகம் போடப்பட்ட கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்து இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள் .
ஆனால் அண்ணாமலை பல்கலைக்கழகம் எந்தவித பதிலும் இதுவரையில் தெரிவிக்கவும் இல்லை .ஆகையினால் இந்திய மாணவர் சங்கம் TBML கல்லூரி கிளையின் சார்பாக இன்று முதல் தொடர் போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள் அந்த வகையில் பொறையார் TBML கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது .இப் போராட்டத்தை கல்லூரி நிர்வாகி MR பிரவின் ( ஒன்றிய தலைவர் )தலைமையில் நடைபெற்றது மற்றும் போராட்டதை விளக்கி மாவட்ட குழு உறுப்பினர் R.ராகுல் ,மாவட்ட துணை தலைவர் S.பகத்சிங் மற்றும் V.ஆதித்யா விளக்கி பேசினார்கள் . போராட்டத்தை நிறைவு செய்து மாவட்ட செயலாளர் R. அபினாஷ் பேசினார் .
இந்திய மாணவர் சங்கம் மயிலாடுதுறை மாவட்ட குழு