01/09/2021
இன்று கோரோனவிற்கு பிறகு மீண்டும் தமிழக அரசின் உத்தரவின் பேரில் எமது பள்ளி(ராயல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தக்கோலம்) திறக்கப் பட்டது. அனைத்து மாணவர்களையும் பள்ளித் தாளாளர் பல்கீஸ் பேகம், நிர்வாக இயக்குனர் புகாரி,பள்ளி முதல்வர் இன்பராஜ், தலைமை ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பின்னர் மாணவர் அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்தனர். பள்ளியைத் திறக்க உத்தரவிட்ட முதல்வர், கல்வித்துறை அமைச்சர், ராணிப்பேட்டை CEO, அரக்கோணம் DEO ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாணவர்கள் பதாகைகளை எடுத்து வந்தனர்.
(இனி தேவையில்லை டேட்டா மொபைலுக்கு சொல் டாடா # நாங்கள் ராயல் பிள்ளை போனது ஆன்லைன் தொல்லை #மீண்டும்பள்ளி, மீண்டது கல்வி #ஜானி ஜானி எஸ் பாப்பா ஆன்லைன் கிளாஸ் நோ பாப்பா #தூக்கம் வந்தது ஆன்லைன் கிளாஸ்ல, ஊக்கம் வந்தது ராயல் கிளாஸ்ல class worst, offline class best twinkle little star பள்ளியைத் திறக்க சொன்ன CM எங்கள் சூப்பர் ஸ்டார் போன்ற பதாகைகள்)