The Right Club for Education

The Right Club for Education Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Right Club for Education, Education, Sivakasi.

இன்று நமது RCE பள்ளி மற்றும் அருகாமை பள்ளி மாணவ மாணவிகள் M/s. Bell Printersக்கு  Industrial Visit சென்றோம்! மிகவும் மகிழ...
31/01/2021

இன்று நமது RCE பள்ளி மற்றும் அருகாமை பள்ளி மாணவ மாணவிகள் M/s. Bell Printersக்கு Industrial Visit சென்றோம்!

மிகவும் மகிழ்ச்சியான மற்றும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக அமைந்தது..

Bell Printersக்கு இதுவே முதன் முறையாக ஒரு பள்ளிக்கு அதுவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழில்முறை பயிற்சி அளிப்பது இதுவே முதல் முறை!

இந்தியாவின் அச்சு தொழிலில் Innovation பிரிவில் *தேசிய விருது* பெற்ற ஒரு தொழிற்சாலைக்கு நம் மாணவர்களை அழைத்து சென்றது மிக பெரிய சந்தோஷம் எனக்கு!

நன்றி Bell Printers,
.Manimaran - HRexe

சிவகாசி அரிமா சங்கம் மற்றும் RCE இணைந்து நடத்தும் *DRONEPRENEUR* முற்றிலும் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் திறமை சார்ந்...
16/01/2021

சிவகாசி அரிமா சங்கம் மற்றும் RCE இணைந்து நடத்தும் *DRONEPRENEUR* முற்றிலும் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் திறமை சார்ந்த முயற்சி! DRONE பற்றிய WORKSHOP 🚩

விரைவில்...

12/01/2021

*சிறு விதை பெரு விருட்சமாகும்* என்பதை உணர்ந்த தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசையுடன் இப்பதிவு...

02-01-2021 சனிக்கிழமை அருகாமைப்பள்ளியில் ஒரு அறிவியல் வகுப்பு... திருச்சியில் இருந்து வந்த திரு.விஷ்ணுகுகன் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டது. பயிற்சி முடிந்தபொழுது ஒரு சவால் அக்குழந்தைகளுக்கு... அடுத்த வாரம் ஒரு "மிக்ஸி" வேண்டும் என்று. நாங்களும் கடந்து வந்து விட்டோம்.

கடந்த சனிக்கிழமை 09-01-2021 வேறொரு பயிற்சிக்கு சென்று முடித்து கிளம்பும்போது, அக்குழந்தைகளிடம் இருந்து ஒரு அன்புக்கட்டளை , "அருண் அண்ணே, நீங்க இருங்க, உங்ககிட்ட ஒன்னு காட்டணும்" என்று. சரி என்று காத்திருந்தேன்.

எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை, "ஒரு மிக்ஸி & 4 ப்ரொஜெக்டர்". சரி நாங்கள் சவால் விடுத்ததால் ஏதோ ஆர்வ கோளாறில் எதையோ கொண்டு வருகிறார்கள் என்று நினைத்தேன். பார்த்தால், திடீரென்று அந்த மிக்ஸியை உண்மையாக அரைத்து காட்டினார், அதுவும் பொரிகடலை உள்ளே போட்டு. சற்று மூச்சடைத்து எதுவும் பேச முடியாமல் நின்றேன். "அண்ணே, போன வாரம் நீங்க சவால் விட்டீங்கல்ல, இதோ இருக்கு பாருங்க மிக்ஸி" என்ற குழந்தையை பார்த்து சற்று காணீரே வந்துவிட்டது. அடக்கி கொண்டு, எப்படி செய்தாய் என்று கேட்கும் போது, வெறும் நம்மை சுற்றி உள்ள பொருட்களை வைத்து இதை செய்து முடித்துள்ளது அக்குழந்தை. பெருமிதத்தை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியவில்லை. விஷ்ணுகுகன் நண்பா உங்களுக்கு தான் இந்த முழு வெற்றியும்.

சரி என்று மூச்சு விடுவதற்குள் அடுத்த படைப்புகள்... 3 ப்ரொஜெக்டர்கள் வரிசையாக 3 குழந்தைகளிடமிருந்து *(இது லிஸ்ட்லயே இல்லையே என்பது போன்ற உணர்வு)*

முதல் குழந்தை பெரிதாக மெனக்கெடவில்லை, ஒரே ஒரு செருப்பு டப்பா, ஒரு குண்டு பல்பு. அவ்வளவே. ப்ரொஜெக்டர் ரெடி. சுவற்றில் படம் ஓட்டியும் காமிச்சாச்சு... எப்படிப்பா இப்டிலாம் யோசிக்குறீங்க?? 🙄🙄

அடுத்த இரு குழந்தைகள், ஒரு பேட்டரி, 2 ஒயர்கள், ஒரு LED பல்ப். பின்னர் சிறு சிறு கைவேலைகளால் உருவாக்கப்பட்ட பேப்பர் பொம்மைகள். அந்த காலத்து பையாஸ்கோப் படத்தை இப்பொழுது கண்முன்னே காட்டிவிட்டார்கள். (எப்புடிலாம் யோசிக்குறாய்ங்க பா 🧐)

நடத்தப்பட்ட அறிவியல் வகுப்புகள் எதுவுமே வீண் போகவில்லை என்பதை தாண்டி products ஆக திரும்பி வந்தது தான் ஆகச்சிறந்த வெற்றியே... இன்னும் பல வில்லேஜ் விஞ்ஞானிகளை உருவாக்கும் பயணத்தில்

RCE Team❤️

அட என்னன்னே சனிக்கிழமை டியூசன் வர சொல்றிங்க... இன்னைக்கு உங்களுக்கெல்லாம் ஒரு Class இருக்கு, எல்லாரும் கண்டிப்பா வரணும் ...
10/01/2021

அட என்னன்னே சனிக்கிழமை டியூசன் வர சொல்றிங்க... இன்னைக்கு உங்களுக்கெல்லாம் ஒரு Class இருக்கு, எல்லாரும் கண்டிப்பா வரணும் என்று கூறியதும் வர மனமில்லாமல் வந்தனர் குழந்தைகள். திடீர்னு பாத்தா யாரோ ஒரு அக்கா உள்ள போய்ட்டாங்க, யாருனு தெரியல என்று குழந்தைகள் தங்களுக்குள் பேசி கொண்டனர்.

திடீர்னு, பாடசாலைல உள்ள கரும்பலகையில் Time Management, by K.Marisankari, Optemerist என்று எழுதுவதை பார்க்கவும் குழந்தைகள் உற்சாகம் அடைந்தனர். "ஹே ஏதோ நடத்த போறாங்க போல" என்று குழந்தைகளின் சலசலப்பு.

சொன்ன நேரமோ 6 மணி. ஆனால், சிறப்பு பேச்சாளர் வந்ததோ 5.50. எடுக்க வந்த தலைப்போ "Time Management(நேர மேலாண்மை)". (அதனால் தான் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே வந்தாரோ? 🤔). நமது பாடசாலையின் ஒரு ஆசிரியை எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டினார், "சிறப்பு விருந்தினர் வந்துட்டாங்க, நீங்க எங்க இருக்கீங்க? எப்ப பாத்தாலும் லேட்டு" என்று(😑). அதன்பின் விரைவாக பாடசாலை சென்றடைந்து நிகழ்ச்சியை துவக்கிய போது மணி 6.05(நேர மேலாண்மை வகுப்பிற்கே இப்படியா☹️).

அதன் பின் துவங்கியது திருமதி. மாரிசங்கரி கார்த்திக் போஸ் அவர்களின் சிறப்பு வகுப்பு(இவர் ஒரு Professional Zonal Trainer என்பது பின்னர் தான் தெரிய வந்தது😳) ஆரம்பம் முதலே குழந்தைகளுடன் ஒன்றிப்போய் அவர்களுக்கு ஏற்றவாறு அழகிய விளக்கங்களுடன் கேள்வியும் பதிலுமாய் சிறப்பாக வகுப்புகள் சென்று கொண்டிருந்தன. இடையில் குழந்தைகள் உறங்கி விடுவார்களோ என்று சிறு சிறு விளையாட்டு போட்டிகளும்(அட, விளையாட்டா என்று சாதாரணமாக நினைக்கும் போது தான் தெரிய வந்தது அதிலும் அவர் நேர மேலாண்மை குறித்த concept வைத்திருந்தார் என்று, பிரமிப்புடன் நாங்கள், அம்மாடியோவ் 😳🙄)

கடைசியில் சிறப்பு விருந்தினர் வந்து, வருத்தப்பட்டு கூறிய ஒன்று, உண்மையில் எங்களை நெகிழ செய்தது. "நேரம் இல்லை எனக்கு, இங்கு இன்னும் ஒரு, ஒரு மணி நேரம் சேர்த்து வகுப்பு எடுக்கலாம் என்று தோன்றுகிறது" என்று.👏👏👏

உண்மையில் இன்றைய நிகழ்வு, குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமானது. நாங்களும் நிறைய கற்று கொண்டோம்.

Golden rules :
1. காலையில் சீக்கிரம் எழ வேண்டும்
2. எந்த வேலையையும் தள்ளி வைக்க கூடாது.
3. நாம் செய்ய நினைக்கும் செயல்களை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும்

என்று இன்னும் பல.

நன்றி திருமதி. மாரிசங்கரி கார்த்திக் போஸ் சகோதரி. மீண்டும் இன்னொரு தலைப்பில் இணைவோம், தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.

RCE Team❤️

07/01/2021

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை கேள்விப்பட்டிருப்போம், கண்டுள்ளோமா? இல்லை எனில் இங்கு காண்க.

அதன் மாணவர்களுக்கு நடத்தும் Skill Development மூலமாக Self Learning அதாவது சுயகற்றல் முறை முன்னெடுத்துள்ளது. அதில் அடுத்த பட்டாசாக எங்களிடம் பயிலும் 4-ம் வகுப்பு மாணவி வீரசாயி நடத்திய "இயற்கை" பற்றிய அழகிய பெருவுரையின் சிறு பகுதியை இங்கு நம்மால் காண முடியும். இயற்கையை நாமதான் அழிக்கிறோம், இனிமேலாவது அதை பேணி காப்போம் என்ற இந்த மழலையின் உரை அனைவரையும் சற்றே யோசிக்க வைத்துள்ளது தான்.

காப்போம் இயற்கையை..!! நாளைய சமுதாயம் விழித்து கொண்டது, நாமும் விழித்து செயல்படுவோம்.

வாழ்த்துக்கள் வீரசாயி 💐💐

31/12/2020

அனைவருக்கும் வணக்கம்..!!

கற்போம், கற்பிப்போம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் செயல்படும் நமது பாடசாலை தற்போது அதை செயல் வடிவமாக கொண்டு வந்துள்ளது.

ஆம், ஆசியர்கள் மாணவர்களுக்கு கற்பித்தல் என்பதற்கு மேலே, மாணவர்களே மாணவர்களுக்கு கற்பிக்கும் புதிய முறையை நேற்று முதல் துவங்கியுள்ளோம். இதில் மாணவர்களுக்கு நாங்கள் சொல்லிக்கொடுக்கவே இல்லை, மாணவர்கள் அவர்களாக தேடி, படித்து, கற்று, எங்களுக்கும் கற்பிக்கின்றனர்.

நேற்றைய நாளில் நமது பாடசாலையின் 11வது படிக்கும் மாணவர் செல்வன். பாலவிஷ்வவேல், சூரிய குடும்பத்தை பற்றியும், பூமியை சுற்றிலும் என்ன நடக்கிறது, நாம் இங்கு வாழ்வதற்கு நம்மை சுற்றி என்னவெல்லாம் தேவை என்பது குறித்து அழகாக விளக்கினார். அதன் ஒரு பகுதி காணொளியாக உங்கள் பார்வைக்கு.

இது நமது பாடசாலையில் இனிவரும் நாட்களிலும் தொடரும் உங்கள் ஆதரவுடன்...

RCE குடும்பத்திற்கு வணக்கம்..!!  நமது 5 ரூபாய் பாடசாலையின் *கிறிஸ்துமஸ் தின விழா* கொண்டாட்டம் ஆடலுடனும்,  பாடலுடனும்,  ந...
25/12/2020

RCE குடும்பத்திற்கு வணக்கம்..!! நமது 5 ரூபாய் பாடசாலையின் *கிறிஸ்துமஸ் தின விழா* கொண்டாட்டம் ஆடலுடனும், பாடலுடனும், நடிப்புடனும், இன்று மாலை நமது பாடசாலையில் வைத்து நடைபெற இருப்பதால் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பாடுவோர் பாட... ஆடுவோர் ஆட... ஒவ்வொருவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்த இதுவும் ஒரு வாய்ப்பாகும். கலந்துகொள்ளுங்கள்..!! கிறிஸ்துமஸ் தின விழாவினை சிறப்பாக கொண்டாடி மகிழ்ச்சியை பரிமாறுவோம். நேரம் : மாலை 6 மணி முதல் இடம் : RCE அலுவலகம்

14/12/2020

கற்றல்...

எங்கும் எப்பொழுதும் நாம் ஒவ்வொரு செயலிலும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். நான் படிப்பை முடித்து விட்டேன்(? ), டிகிரி வாங்கிவிட்டேன் என்று நாம் நினைத்து கற்பதை நிறுத்தினால் அது நம் அறியாமையே... சரி நான் Ph.D. முடித்து விட்டேன் இனி கற்க ஒன்றுமில்லை என்று நினைத்தாலும் அதுவும் அறியாமையே... நாம் நாள்தோறும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறோம்... குழந்தைகள் நமக்கு அவ்வளவு கற்றுக்கொடுப்பார்கள், ஆனால் நாம் தான்(சிலரை தவிர) அவர்கள் கூறி அல்லது அவர்களிடம் இருந்து நான் என்ன கேட்பது என்ற பொய்யான ஒரு முகமூடியை அணிந்து திரிகிறோம்.

12-12-2020 சனிக்கிழமை நிகழ்வில் கற்றுக்கொண்டவை பல... அதை கற்றுக்கொடுத்தவர் திரு. Karthick S அவர்கள்...

அருகாமைப்பள்ளி குழந்தைகளுக்கு மன்னிக்கவும், அந்த வில்லேஜ் விஞ்ஞானிகளுக்கு ஏதோ நம்மால் முடிந்ததை செய்வோம் என்று அழைத்தார், உடன் சென்றோம்.

நேற்று நடந்தது Activity Based Learning (செய்முறை மூலம் கற்றல்). ப்ரொஜெக்டர் மூலமாக அவர்களின் சுவற்றில் நாம் காண்பித்ததை பிரமிப்புடன் கண்டார்கள். அவர்களுக்கு இது தான் முதன்முறை போலும். அதிசயித்து பார்த்தனர் அந்த குழந்தைகள்.

பின், ஆரம்பித்தது சிறப்பு வகுப்பான செயல்முறை மூலம் கற்றல். கார்த்திக் அவர்கள் கூறிய ஒவ்வொன்றும் பிரமிப்பின் உச்சமே... எரியும் சூடத்தை வாயினுள் போட்டு வாயை மூட சொல்லி, அதில் என்ன அறிவியல் என்பதை அந்த குழந்தைகளுக்கு அழகாய் விளக்கினார். இது தான் செயல் முறை மூலம் கற்றலோ 🤔🤔

அடுத்து கவனசிதறலை தடுக்க, கவனத்தை ஒருநிலைப்படுத்த விளையாடிய விளையாட்டு Pink, Ponk, Shoot, VIP. இது குழந்தைகளுக்கான விளையாட்டு போல என்று நினைத்தால் அது நம் தவறே, எந்த வயதுடையோர் விளையாடினாலும் நம் கவனம் எவ்வாறு உள்ளது என்பதை நாம் சுயபரிசோதனை செய்யலாம். அவ்வளவு அழகான கற்றல்.

அடுத்து ஒரு காகிதத்தை இரண்டு பக்கமும் ஒரு துளையிட்டு ஒரே நேரத்தில் இழுக்க கூறிய பொழுது, அது ஒரு பக்கம் மட்டுமே கிழியும்... அது ஏன் என்பதையும் விளக்கினார்.

அடுத்து பலூனில் மெத்தை மற்றும் நாற்காலி அமைத்து அதில் மேலமர்ந்தால் பலூன் உடையாமல் இருக்கும்... அதன் காரணத்தையும் விளக்கினார். பின், ஒரு சாக்பீஸை வாட்டர் பாட்டிலில் நுனியில் வைத்து உள்ளே ஊதி தள்ள சொன்னார், அதுவும் நடக்கவே இல்லை... அதற்கும் ஒரு காரணம் கூறி விளக்கினார்.

இவ்வாறு, அறிவியலை விளையாட்டுகளுடன் விளக்கி அருமையாக கற்பித்தார். அருமை சகோதரா... 💐💐💐💐

அருகாமைப்பள்ளி ஆசிரியை திருமதி. Bharathi Santhiya(ஜெயமேரி) அவர்கள் வாய்ப்பு வழங்கி, அவரும் எங்களுடன் அமர்ந்து அறிவியலை கற்றார். நன்றி மேடம் 💐💐💐

இறுதியாக குழந்தைகள்.... கிட்டத்தட்ட ஒரு 4-5 மணி நேரங்கள் எங்களுடன் பொறுமையாய் அமர்ந்து(யாரும் உறங்கி விடாமல்🤪) கவனித்த தங்கங்கள்... இனி வரும் வாரங்களில் சிறு சிறு அறிவியல் வகுப்புகள் மூலம் நிச்சயமாக பல வில்லேஜ் விஞ்ஞானிகளை உருவாக்குவோம் என்பதில் துளியும் ஐயமில்லை...

கற்றல்... எங்கும் எப்பொழுதும் நாம் ஒவ்வொரு செயலிலும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். நான் படிப்பை முடித்து விட்டேன்(? ), ...

பறையிசை... அதிர்வு தமிழிசையகம்... நன்றி திரு. சரவணகாந்த் அண்ணனுக்கு... கடந்த 09-12-2020(புதன்கிழமை) திடீரென நம் பாடசாலைக...
13/12/2020

பறையிசை... அதிர்வு தமிழிசையகம்... நன்றி திரு. சரவணகாந்த் அண்ணனுக்கு...

கடந்த 09-12-2020(புதன்கிழமை) திடீரென நம் பாடசாலைக்கு ஒரு சிறப்பு விருந்தினர். எதிர்பாராமல் அனைவரையும் ஆச்சரியமூட்டும் வகையில் வந்து நின்றார்... ஆம், சிவகாசி மாநகரில் இவரை தெரியாது என்று கூறுபவர்கள் சிலரே...

ஆம்...

சிறந்த எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர், கற்றல் மற்றும் கற்பித்தல் இரண்டிலும் கை தேர்ந்தவர்... அதிர்வு தமிழிசையகம் என்றவுடனேயே நம் நினைவுக்கு வருபவர்... திரு.சரவணகாந்த், பறையிசையின் மூலம் ஆடாத கால்களையும் ஆட வைப்பவர்...

09-12-2020 அன்று நம் பாடசாலைக்கு வந்து மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார். கலை என்பதை பற்றி, கலை என்றால் என்ன என்றும், இசைக்கருவிகள் என்னென்ன அவை எவ்வாறு உருவானது என்றும் அழகாய் மாணவர்களுக்கு புரியும்படி விளக்கினார்.

பேசி முடித்ததும், பறையிசையை அனைவர் முன்னிலும் இசைத்து அனைவரையும் கண் இமைக்காமல் ரசிக்க வைத்தார்.

விரைவில் RCE, சரவணகாந்த் அண்ணன் மூலம் பறையிசை கற்கும்... அந்த நாளை எதிர்நோக்கி...

#அஞ்சுரூபாஸ்கூலு

05/11/2020

Education is the only thing, which gives you wings to Fly...❤️

#அஞ்சுரூபாஸ்கூலு ❤️

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக""கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு"மேற்கண்ட வாக்கியங்கள் மூலமாக கல்வியி...
25/10/2020

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக"

"கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு"

மேற்கண்ட வாக்கியங்கள் மூலமாக கல்வியின் சிறப்புகளை நாம் அறிய முடிகிறது.

இவ்வாக்கியங்களை ஒரு உறுதியாக எடுத்து RCE கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அதை செயல்படுத்தி வருகிறது.

ஆம், RCE-யின் நோக்கமும் அதுவே. வளரும் குழந்தைகளை பின்னாளில் அவர்கள் செல்லும் இடமெல்லாம் சிறக்க வைக்க, RCE களம் கண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக "கலைமகளின்" அருளை பெற்று தன்னுடைய சேவையை தொடர்கிறது RCE.

"கலைமகள்" எனப்படும் சரஸ்வதி தேவியின் பூஜை நாளான இன்று RCE சரஸ்வதி பூஜை கொண்டாடியது.

"எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கட்டும், அதில் கல்வி முதன்மையாய் இருக்கட்டும்"

அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை / ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.

#அஞ்சுரூபாஸ்கூலு

Address

Sivakasi
626123

Alerts

Be the first to know and let us send you an email when The Right Club for Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category