வணக்கம் கீழாயக்குடி

வணக்கம் கீழாயக்குடி near paramakudi

தீவிர அரசியலில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க அண்ணாமலை முடிவு?பாஜகவில் இருந்து வெளியேறி அண்ணாமலை அவர்கள் தனி கட்சி த...
05/06/2026

தீவிர அரசியலில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க அண்ணாமலை முடிவு?

பாஜகவில் இருந்து வெளியேறி அண்ணாமலை அவர்கள் தனி கட்சி தொடங்க இருப்பதாகவும் தனி இயக்கம் தொடங்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இன்று மதியம் 12:00 மணி அளவில் சமூக ஊடகம் வாயிலாக மனம் திறந்து பேச இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் என்னை பொருத்தவரை அவர் இன்றைய தினம் சமூக ஊடகங்கள் வாயிலாக பேசும் போது தீவிர அரசியலில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போகிறேன் என அறிவிப்பார் என்று தோன்றுகிறது.

ஏனென்றால் மற்றவர்கள் சொல்வது போல ஒரு தனி கட்சியோ அல்லது தனி இயக்கமோ தொடங்குவது என்றால் அனைத்து செய்தியாளர்களையும் கூட்டி தன்னுடைய அடுத்த கட்டங்கள் தான் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் என்ன அரசியல் கட்சி தொடங்கப் போகிறேன் அதனுடைய கொள்கை என்னவாக இருக்கப் போகிறது என்பது தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் தெளிவாக கூறினால் தான் அது மக்களிடம் போய் சென்று சேரும்.

மேலும் செய்தியாளர்கள் எழுப்பக்கூடிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியும்.

கட்சி தொடங்குவது என்பது உண்மையில் மிகப் பெரிய ஒரு நகர்வு அல்லது முடிவு.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தி அறிவிக்காமல் வெறுமனே சமூக ஊடகங்கள் வாயிலாக எந்தவிதமான கருத்தையும் எதிர்கொள்ளாமல் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டு அல்லது அறிவித்துவிட்டு செல்வது என்பது சாத்தியமல்ல.

எனவே இவற்றை வைத்து பார்க்கும் போது அவர் தீவிர அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருப்பது என்றும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுக்குப் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தம்முடைய அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்பதை அறிவிப்பார் என எனக்கு தோன்றுகிறது.

இது தான் நடக்கும் என்று கூறவில்லை.

ஆனால் இப்படித்தான் இருக்கும் என்று என்னுடைய மனதுக்கு தோன்றுகிறது.

பார்க்கலாம்...

நான் தான் நேதிக்கே சொன்னேன்.பெட்ரோல் டீசல் விலை உயர போகுதுன்னு.சுதாரிக்காம போனது உங்க தப்பு😀
15/05/2026

நான் தான் நேதிக்கே சொன்னேன்.

பெட்ரோல் டீசல் விலை உயர போகுதுன்னு.

சுதாரிக்காம போனது உங்க தப்பு😀

விரைவில் பெட்ரோல் டீசல் விலை லீட்டர் ஒன்றுக்கு 05 ரூபாய் வரை உயர வாய்ப்பு...

14/05/2026

இன்னும் விலை ஏறப்போகுது…
பெட்ரோல் விலை ஏறப்போகுது, டீசல் விலை ஏறப்போகுது…
“பெட்ரோலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்”, “டீசலை சேமியுங்கள்” என்று எல்லோரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் யாரும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பெரிதாக பேச மாட்டார்கள் — தண்ணீர்.

இத்தனை நாளாக தண்ணீர் நமக்கு எளிதாக கிடைத்ததால்தான் அதன் மதிப்பு பலருக்கு புரியவில்லை.
ஆனால் வரும் காலத்தில் மிகவும் அரியதாக மாறப்போவதே தண்ணீர்தான்.

அதனால் இப்போதே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்.
தண்ணீரை சேமிக்க வழிகளைத் தேடுங்கள்.

ஏனெனில்…
பெட்ரோல் இல்லாமல் சில நாள் வாழ முடியும்.
ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு நாள்கூட வாழ முடியாது.


என்ன தான் ஆச்சு இந்த CSK விக்கு தொடர் காயம்
14/05/2026

என்ன தான் ஆச்சு இந்த CSK விக்கு

தொடர் காயம்



விரைவில் பெட்ரோல் டீசல் விலை லீட்டர் ஒன்றுக்கு 05 ரூபாய் வரை உயர வாய்ப்பு...
14/05/2026

விரைவில் பெட்ரோல் டீசல் விலை லீட்டர் ஒன்றுக்கு 05 ரூபாய் வரை உயர வாய்ப்பு...

சட்டப்பேரவையில் தவெக விற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி உயர்த்திய வ...
13/05/2026

சட்டப்பேரவையில் தவெக விற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி உயர்த்திய விஜயபாஸ்கர் சிவி சண்முகம் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அனைவரது கட்சிப் பதவிகளும் பறிப்பு.

அனைத்து பதவிகளுக்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்...

CM விஜய் சார் என்ன சார்  உங்களுக்கு வர எண்ணிக்கை தமிழ்நாட்டுக்கு ஏதோ சொல்ல வர மாதிரியே எனக்கு தோணுது..உங்க கட்சியோட சட்ட...
13/05/2026

CM விஜய் சார் என்ன சார் உங்களுக்கு வர எண்ணிக்கை தமிழ்நாட்டுக்கு ஏதோ சொல்ல வர மாதிரியே எனக்கு தோணுது..

உங்க கட்சியோட சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 108 (அவசர சிகிச்சை) இன்று உங்களுக்கு ஆதரவு தந்த கட்சியின் எண்ணிக்கை 144 (தடை)..

உங்களுக்கு எதுவும் தெரிஞ்சா சொல்லுங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் ஜோசப் விஜய்..மிளகு மிஞ்சிய மருந்தும் இல்லை முருகருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை திருச்செந்தூர...
09/05/2026

தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் ஜோசப் விஜய்..

மிளகு மிஞ்சிய மருந்தும் இல்லை
முருகருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை

திருச்செந்தூர் முருகனை வணங்கிவருக்கு ஏறு முகம் தான்
ஆறுமுகம் அருளிடும்
அனுதினம் ஏறுமுகம்

அரசியலில் கைகோர்த்த பரம எதிரிகள்.தமிழ்நாட்டில் திரும்புகிறதா உத்தர பிரதேச வரலாறு?உத்தரப் பிரதேச அரசியலில் மாயாவதியின் பக...
06/05/2026

அரசியலில் கைகோர்த்த பரம எதிரிகள்.

தமிழ்நாட்டில் திரும்புகிறதா உத்தர பிரதேச வரலாறு?

உத்தரப் பிரதேச அரசியலில் மாயாவதியின் பகுஜன் சமாஜும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதியும் பரம விரோதிகள்.

இருவரும் உத்திர பிரதேச அரசியலில் கீரியும் பாம்பையும் போல.

தமிழ்நாட்டில் கருணாநிதி ஜெயலலிதா எப்படி இருந்தார்களோ அப்படி.

2017 வரை இப்படி தான் இருந்தது.

ஆனால் 2017 இல் நடைபெற்ற உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் யாருமே எதிர்பாராத அளவில் ஆண்ட கட்சிகளான சமாஜ்வாதியையும் பகுஜன் சமாதியும் ஓரம் கட்டி பாஜக ஆட்சியைப் பிடித்தது.

பாஜகவின் திடீர் வளர்ச்சியும் ஆட்சி அமைப்பும் இரு கட்சிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியது.

2019 நாடாளுமன்ற தேர்தல் வந்தது.

பாஜகவை வீழ்த்த பரம எதிரிகளான மாயாவதியும் முலாயம் சிங்கும் ஒன்றாக கைகோர்த்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர்.

மாயாவதி முலாயம் சிங் கூட்டணி ஒருபுறம் பாஜக மற்றொருபுறம்.

மொத்தமுள்ள 80 தொகுதிகளில் மாயாவதி கட்சி 38 தொகுதிகளிலும் முலாயம் சிங் யாதவ் கட்சி 37 தொகுதிகளிலும் சரிசமமாக பகிர்ந்து போட்டியிட்டனர்.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் அந்த கூட்டணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிலும் திரும்புகிறதா உத்தரப்பிரதேச வரலாறு?

MP தேர்தல் ஆனாலும் சரி ,MLA தேர்தல் ஆனாலும் சரி ,இவிங்க கண்டிப்பா வேட்பாளராக இருப்பாங்க.கொடுமை :📌ஒருவர் ஆளுனராக இருந்தவர...
06/05/2026

MP தேர்தல் ஆனாலும் சரி ,
MLA தேர்தல் ஆனாலும் சரி ,

இவிங்க கண்டிப்பா வேட்பாளராக இருப்பாங்க.

கொடுமை :
📌ஒருவர் ஆளுனராக இருந்தவர்
📌ஒருவர் மத்திய அமைச்சர்

காலக் கொடுமை :

இருவர் கடந்தமுறை வெற்றி பெற்ற தொகுதியை எட்டப்பனுக்கு தாரைவார்த்து அடுத்த தொகுதியை தேடி போனவங்க.

இவங்க லாம் இருக்கும் வரை பாஜக உருப்படாது என்பதே உண்மை 🚶.

#தேசிய_தமிழன்_அண்ணாமலை

Address

Thevar
Sivagangai
623701

Website

Alerts

Be the first to know and let us send you an email when வணக்கம் கீழாயக்குடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category