GRIT Studies

GRIT Studies A thriving Global Education Management Firm

30/04/2025

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற “நான் முதல்வன்” வேலை வாய்ப்பு முகாம் மூலம் 95 மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயின்ற,
2024–2025 கல்வியாண்டிற்கான கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான நான் முதல்வன் வேலை வாய்ப்பு முகாம் அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.

அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இம் முகாமில் பல்வேறு துறைளைச் சேர்ந்த 12 பிரபல தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்ற கல்லூரிகளிலிருந்து இறுதியாண்டு பயின்று வரும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இம்முகாமில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், கணிதம், வேதியியல், வணிகவியல் ,
பொருளியல் , தொழில் நிர்வாகவியல், வரலாறு மற்றும் தமிழ் துறையைச் சார்ந்த 95 மாணவ மாணவியர் ஆண்டுக்கு ரூபாய் 2 முதல் 3 லட்சம் என்ற ஊதியத்தில் கேட்வே சாஃப்ட்வேர், யுக்தா எண்டர்பிரைஸ், கோடக் மஹிந்திரா, மல்டி விசுவல் மீடியா போன்ற நிறுவனங்களின் சார்பாக
பணிக்குத் தேர்ந்தெடுக்கப்
பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி,
அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் நான் முதல்வன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் முருகன்,
கல்லூரியின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி முகமையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சோமசுந்தரம் , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகமையின் உறுப்பினர்கள் முனைவர் கவிதா, முனைவர் தியாகராஜன் மற்றும் ஆசிரியர்களும், ஆசிரியரல்லாப் பணியாளர்களும் பாராட்டி வாழ்த்தினர்.

பொங்கல் திருநாளில் உங்கள் குடும்பம் நலமும் செழிப்பும் நிறைந்ததாக இருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்...
15/01/2025

பொங்கல் திருநாளில் உங்கள் குடும்பம் நலமும் செழிப்பும் நிறைந்ததாக இருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Address

59/1 VOC Street
Sivaganga
630561

Alerts

Be the first to know and let us send you an email when GRIT Studies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to GRIT Studies:

Shortcuts

Share

Category