Power Electronics Technology

Power Electronics Technology We are doing Latest IEEE Power Electronics Projects

11/02/2017

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் .
நன்றி தமிழக நண்பர்கள் .வாட்ஸ் அப் .

1. WhatsApp - புலனம்
2. youtube - வலையொளி
3. Instagram - படவரி
4. WeChat - அளாவி
5.Messanger - பற்றியம்
6.Twtter - கீச்சகம்
7.Telegram - தொலைவரி
8. skype - காயலை
9.Bluetooth - ஊடலை
10.WiFi - அருகலை
11.Hotspot - பகிரலை
12.Broadband - ஆலலை
13.Online - இயங்கலை
14.Offline - முடக்கலை
15.Thumbdrive - விரலி
16.Hard disk - வன்தட்டு
17.GPS - தடங்காட்டி
18.cctv - மறைகாணி
19.OCR - எழுத்துணரி
20 LED - ஒளிர்விமுனை
21.3D - முத்திரட்சி
22.2D - இருதிரட்சி
23.Projector - ஒளிவீச்சி
24.prinder - அச்சுப்பொறி
25.scanner - வருடி
26.smart phone - திறன்பேசி
27.Simcard - செறிவட்டை
28.Charger - மின்னூக்கி
29.Digital - எண்மின்
30.Cyber - மின்வெளி
31.Router - திசைவி
32.Selfie - தம் படம் - சுயஉரு
33 Thumbnail சிறுபடம்
34.Meme - போன்மி
35.Print Screen - திரைப் பிடிப்பு
36.Inket - மைவீச்சு
37.Laser - சீரொளி
நல்ல முயற்சி நாமும் மனனம் செய்வோம் .
இனி இவற்றின் பெயர்களைத் தமிழில் எழுத
முனைவோம் .

தமிழுணர்வு கொண்டோர் இதை நண்பர்களுக்கும்
பகிரலாம் .

21/10/2016

More than 100 Keyboard Shortcuts must read
SHARE IT........

Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)
2. CTRL+X (Cut)..... 3. CTRL+V (Paste)
4. CTRL+Z (Undo)
5. DELETE (Delete)
6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)
7. CTRL while dragging an item (Copy the selected item)
8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)
11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)
12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)
13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)
14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
15. CTRL+A (Select all)
16. F3 key (Search for a file or a folder)
17. ALT+ENTER (View the properties for the selected item)
18. ALT+F4 (Close the active item, or quit the active program)
19. ALT+ENTER (Display the properties of the selected object)
20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)
21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneou sly)
22. ALT+TAB (Switch between the open items)
23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)
24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)
25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)
26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)
27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)
28. CTRL+ESC (Display the Start menu)
29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)
30. F10 key (Activate the menu bar in the active program)
31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)
32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)
33. F5 key (Update the active window)
34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)
35. ESC (Cancel the current task)
36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)
Dialog Box - Keyboard Shortcuts
1. CTRL+TAB (Move forward through the tabs)
2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)
3. TAB (Move forward through the options)
4. SHIFT+TAB (Move backward through the options)
5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)
6. ENTER (Perform the command for the active option or button)
7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)
8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)
9. F1 key (Display Help)
10. F4 key (Display the items in the active list)
11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

Microsoft Natural Keyboard Shortcuts
1. Windows Logo (Display or hide the Start menu)
2. Windows Logo+BREAK (Display the System Properties dialog box)
3. Windows Logo+D (Display the desktop)
4. Windows Logo+M (Minimize all of the windows)
5. Windows Logo+SHIFT+M (Restorethe minimized windows)
6. Windows Logo+E (Open My Computer)
7. Windows Logo+F (Search for a file or a folder)
8. CTRL+Windows Logo+F (Search for computers)
9. Windows Logo+F1 (Display Windows Help)
10. Windows Logo+ L (Lock the keyboard)
11. Windows Logo+R (Open the Run dialog box)
12. Windows Logo+U (Open Utility Manager)
13. Accessibility Keyboard Shortcuts
14. Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off)
15. Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off)
16. Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off)
17. SHIFT five times (Switch the StickyKeys either on or off)
18. NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off)
19. Windows Logo +U (Open Utility Manager)
20. Windows Explorer Keyboard Shortcuts
21. END (Display the bottom of the active window)
22. HOME (Display the top of the active window)
23. NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder)
24. NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder)
25. NUM LOCK+Minus sign (-) (Collapse the selected folder)
26. LEFT ARROW (Collapse the current selection if it is expanded, or select the parent folder)
27. RIGHT ARROW (Display the current selection if it is collapsed, or select the first subfolder)
Shortcut Keys for Character Map
After you double-click a character on the grid of characters, you can move through the grid by using the keyboard shortcuts:
1. RIGHT ARROW (Move to the rightor to the beginning of the next line)
2. LEFT ARROW (Move to the left orto the end of the previous line)
3. UP ARROW (Move up one row)
4. DOWN ARROW (Move down one row)
5. PAGE UP (Move up one screen at a time)
6. PAGE DOWN (Move down one screen at a time)
7. HOME (Move to the beginning of the line)
8. END (Move to the end of the line)
9. CTRL+HOME (Move to the first character)
10. CTRL+END (Move to the last character)
11. SPACEBAR (Switch between Enlarged and Normal mode when a character is selected)
Microsoft Management Console (MMC)
Main Window Keyboard Shortcuts
1. CTRL+O (Open a saved console)
2. CTRL+N (Open a new console)
3. CTRL+S (Save the open console)
4. CTRL+M (Add or remove a console item)
5. CTRL+W (Open a new window)
6. F5 key (Update the content of all console windows)
7. ALT+SPACEBAR (Display the MMC window menu)
8. ALT+F4 (Close the console)
9. ALT+A (Display the Action menu)
10. ALT+V (Display the View menu)
11. ALT+F (Display the File menu)
12. ALT+O (Display the Favorites menu)

MMC Console Window Keyboard Shortcuts
1. CTRL+P (Print the current page or active pane)
2. ALT+Minus sign (-) (Display the window menu for the active console window)
3. SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item)
4. F1 key (Open the Help topic, if any, for the selected item)
5. F5 key (Update the content of all console windows)
6. CTRL+F10 (Maximize the active console window)
7. CTRL+F5 (Restore the active console window)
8. ALT+ENTER (Display the Properties dialog box, if any, for theselected item)
9. F2 key (Rename the selected item)
10. CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console)
Remote Desktop Connection Navigation
1. CTRL+ALT+END (Open the Microsoft Windows NT Security dialog box)
2. ALT+PAGE UP (Switch between programs from left to right)
3. ALT+PAGE DOWN (Switch between programs from right to left)
4. ALT+INSERT (Cycle through the programs in most recently used order)
5. ALT+HOME (Display the Start menu)
6. CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen)
7. ALT+DELETE (Display the Windows menu)
8. CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
9. CTRL+ALT+Plus sign (+) (Place asnapshot of the entire client window area on the Terminal server clipboardand provide the same functionality aspressing ALT+PRINT SCREEN on a local computer.)

Microsoft Internet Explorer Keyboard Shortcuts
1. CTRL+B (Open the Organize Favorites dialog box)
2. CTRL+E (Open the Search bar)
3. CTRL+F (Start the Find utility)
4. CTRL+H (Open the History bar)
5. CTRL+I (Open the Favorites bar)
6. CTRL+L (Open the Open dialog box)
7. CTRL+N (Start another instance of the browser with the same Web address)
8. CTRL+O (Open the Open dialog box,the same as CTRL+L)
9. CTRL+P (Open the Print dialog box)
10. CTRL+R (Update the current Web )

SHARE IT WITH YOUR FRIENDS........

சாதாரண ஸ்கிரீனினை டச் ஸ்கிரீனாக மாற்றுவது எப்படி?? ========================================================= பழைய லாப்டா...
02/01/2016

சாதாரண ஸ்கிரீனினை டச் ஸ்கிரீனாக மாற்றுவது எப்படி?? ========================================================= பழைய லாப்டாப் பயன்படுத்தப்படாமல் வீட்டில் இருக்கின்றதா, அப்படியானால் அதில் சிறிய கருவியை பொருத்தி அதன் திரையை டச் ஸ்கிரீனாக மாற்றிடுங்கள். குழப்பமாக உள்ளதா? சாதாரண திரையை தொடு திரையாக மாற்றும் சிறிய கருவி தொழில்நுட்ப சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை பற்றிய விரிவான தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள். நியோநோடு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நியோநோடு எனும் நிறுவனம் ஏர்பார் எனும் கருவியை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கருவியை சாதாரண திரையை தொடு திரையாக மாற்றிடும் திறன் கொண்டிருக்கின்றது. யுஎஸ்பி போர்ட் மூலம் கணினியில் இணைத்து திரையின் கீழ் பொருத்தினால் போதும். உடனடியாக உங்களது திரை தொடுதிரையாகி விடும். ஏர்பார் கருவியை பொருத்திய பின் உங்களது கை, பென்சில், கையுறை என எதை கொண்டும் திரையை பயன்படுத்தலாம். ஏர்பார் பயன்படுத்த யுஎஸ்பி மட்டுமே போதுமானது, தனியே ஏதும் மென்பொருள் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. தற்சமயம் வரை விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஏர்பார் கருவியானது விரைவில் ஆப்பிள் இயங்குதளத்திலும் பயன்படுத்த முடியும் என கூறப்படுகின்றது. http://air.bar ஏர்பார் இணையதளத்தில் 15.6 இன்ச் திரை கொண்ட கணினி வகைகளுக்கான கருவியை $49க்கு முன்பதிவு செய்திட முடியும். இந்த கருவி சந்தையில் 2016 முதல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.

02/01/2016

அறிவியல் & தொழில்நுட்ப தகவல்கள்
தமிழகத்தில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கூகுளின் இலவச வை-பை பெற இருக்கின்றது. கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகத்தில் மொத்தம் ஆறு ரயில் நிலையங்களை தேர்வு செய்திருக்கின்றார்.
அதன் படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலவச வை-பை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்டெல் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வழங்க கூகுள் நிறுவனம் மற்றும் ரயில்டெல் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 2014 முதல் வை-பை சேவை சோதனை செய்யப்பட்டு வருவதால் மார்ச் 2016 முதல் அதிவேக இண்டர்நெட் இணைப்பு வழங்க முடியும் என கூறப்படுகின்றது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை தொடர்ந்து எழும்பூர், அரக்கோணம், கோயம்பத்தூர், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இலவச வை-பை வழங்கப்பட இருப்பதாக ரயில்டெல் நிறுவனத்தை சேர்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த சுந்தர் பிச்சை இந்தியாவில் 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வழங்கப்பட்டு விடும் என தெரிவித்திருந்தார். கூகுளின் இலவச வை-பை திட்டம் இந்தியாவில் முதல் முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜனவரி மாதம் முதல் துவங்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது
---------------------------------------------------------------------------------
முதலாவது இணையத்தளத்திற்கு வயது 25

இன்று உலகே சுருங்கி ஒரு கிராமம் போல் தோற்றமளிப்பதற்கு இணையத்தளம் முக்கிய காரணமாக விளங்குகின்றது.
இவ்வாறான இணையத்தளத்தினை முதன் முதலில் ரிம் பேர்னர்ஸ் லீ (Tim Berners-Lee) என்பவர் அறிமுகம் செய்திருந்தார்.
அதாவது சுவிட்ஸர்லாந்தில் உள்ள CERN எனும் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த இவர் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதன் முதலாக World Wide Web (WWW) எனும் நெறிமுறையை அறிமுகம் செய்து தற்போதைய இணையத்தளங்களுக்கு அடித்தளமிட்டிருந்தார்.
இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது உலகெங்கிலும் சுமார் 4 பில்லியன் வரையான இணையத்தளங்கள் அல்லது இணைய பக்கங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------------------------
கண்களில் நிரந்தரமாகப் பொருந்தக்கூடிய கன்டாக்ட் லென்ஸ் !!
கருவிழியின் மேல் சரியாகப் பொருந்தாத கன்டாக்ட் லென்ஸ்களின் தொல்லைகள் மற்றும் நடைமுறை சிக்கல்களைத் தவிர்க்க கண்களில் நிரந்தரமாகப் பொருந்தக்கூடிய கன்டாக்ட் லென்ஸ்களை உருவாக்கி வருகிறார் இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் தேவேஷ் மிஸ்ட்ரி.
கண்களில் நிரந்தரமாகப் பொருந்தக்கூடிய ஆட்டோ ஃபோகஸ் திறனுள்ள எல்.சி.டி வகையான இந்த லென்ஸின் முதல் மாதிரி 2018 இல் தயாராகும் என தேவேஷ் மிஸ்ட்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், 2025 ஆம் ஆண்டுக்குள் இவை மக்கள் பாவனைக்கு தயாராகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-----------------------------------------------------------------------------------
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் எதுவும் வேண்டாம் : ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 400 மைல் வரை செல்லும் கார் !!

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் போன்றவற்றுக்கு பதிலான மாற்று உந்துசக்தியாக ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 400 மைல் (சுமார் 643 கிலோமீட்டர்) வரை தங்குதடையின்றி செல்லும் வகையில் கையடக்கமான நவீன லித்தியம் பேட்டரியை இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 400 மைல் (சுமார் 643 கிலோமீட்டர்) வரை தங்குதடையின்றி செல்லும் வகையில் கையடக்கமான நவீன லித்தியம் பேட்டரியை இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுபோன்ற ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் கடந்த பத்தாண்டுகளாகவே நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது இதில் மேம்பாடான கட்டம் எட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியான இன்னும் சில சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்கான மேலும் சில ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் போன்றவற்றுக்கு பதிலான மாற்று உந்துசக்தியாக இந்த ‘லித்தியம்-ஐயான்’ பேட்டரிகள் உருவெடுக்கும் என்றும் தெரியவந்துள்ளது
----------------------------------------------------------------------------------
யுட்காலத்தை அதிகரிக்க 4 வகையான ஜீன்கள் !!
https://www.facebook.com/pelstechprojects/
மனிதனின் ஆயுட்காலத்தை 100 வருடங்களை தாண்டியும் அதிகரிக்கக்கூடியது என நம்பப்படும் 4 வகையான ஜீன்களை (பரம்பரை அலகுகள்) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது அதிகளவானவர்கள் 90 வயதினை அண்மித்த காலப்பகுதியிலேயே மரணமடைகின்றனர். எனவே இந்த ஜீன்களின் உதவியுடன் 100 வருடங்களை தாண்டியும் வாழ வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் இரத்தத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ABO எனும் ஜீன், கலங்களின் செயற்பாட்டினை ஒழுங்குபடுத்தும் CDKN2B எனும் ஜீன், பழ ஈய்க்களில் காணப்படும் SH2B3 வகை ஜீன் மற்றும் நிர்ப்பீடணத்துடன் தொடர்புடைய HLA எனும் ஜீன் ஆகியவற்றினை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படும் மாற்றத்தின் ஊடாகவே இவ் ஆயுள் அதிகரிப்பு சாத்தியமாகும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்
-----------------------------------------------------------------------------------
விமான உற்பத்தியிலும் காலடி பதித்துள்ளது ஹொண்டா !!
நான்கு சில்லு வாகன உற்பத்தியில் உலகளாவிய ரீதியில் சிறந்த சந்தைவாய்ப்பினை கொண்ட நிறுவமான ஹொண்டா விமான உற்பத்தியிலும் காலடி பதித்துள்ளது.
இதன் அடிப்படையில் வியாபார நோக்கம் கொண்ட தனது முதலாவது பாரம் குறைந்த HondaJet எனும் விமானத்திற்கன பறப்பு சான்றிதழை கடந்த வாரம் பெற்றுள்ளது.
இவ் விமானம் 420 நொட்ஸ் வேகத்தில் பறப்பில் ஈடுபடக்கூடியதாக இருப்பதுடன், 42.62 அடிகள் நீளமானதாகவும், இறக்கைகளுக்கிடையில் 39.76 அடிகள் அகலம் உடையதாகவும், 14.90 அடிகள் உயரம் உடையதாகவும் காணப்படுகின்றது.
மேலம் தனது விமானங்களின் கட்டுமாணப் பணிகளை அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதுடன், தனது சந்தைப்படுத்தலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளவுள்ளது.
-----------------------------------------------------------------------------------
லெனோவோ கே4 நோட் : ஜனவரி வெளியீடு.!!
torrborder.gif
ட்விட்டர் மூலம் லெனோவோ நிறுவனம் தனது புதிய கருவி சார்ந்த தகவல்களை உறுதி செய்திருக்கின்றது. அதன் படி லெனோவோ கே4 நோட் கருவியில் 3ஜிபி ரேம் இருக்கும் என்றும் இந்த கருவி ஜனவரி 5 ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த கருவியானது மீடியாடெக் ஹூலியோ எக்ஸ்10 பிராசஸர் மற்றும் 32ஜிபி இன்டர்னலெ மெமரியும் கொண்டிருக்கும் என்றும் மெட்டாலிக் ஃபிரேம் மற்றும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருவியின் மற்ற சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. லெனோவோ கே3 நோட் கருவியில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 4ஜி, ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளமும் கொண்டிருக்கின்றது. இதோடு 64-பிட் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் எம்டி6572 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம் கொண்டிருந்தது.
கேமராவை பொருத்த வரை கே3 நோட் கருவியில் 13 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா கொண்டிருக்கின்றது. இதோடு 16 ஜிபி இன்டர்னல் மெமகியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது

We are doing Latest IEEE Power Electronics Projects

இரட்டை பேட்டரிகளுடன் ஜீப்ரானிக்ஸின் புதிய யூபிஎஸ்=====================================================ஜீப்ரானிக்ஸ் நிறுவ...
11/08/2015

இரட்டை பேட்டரிகளுடன் ஜீப்ரானிக்ஸின் புதிய யூபிஎஸ்
=====================================================
ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் 1000va UPS ZEB-U1200 என்ற புதிய கம்ப்யூட்டர் யூபிஎஸ்ஸை (UPS)அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்வெட்டு நேரங்களில் தொடர்ந்து வேலை செய்யவும் கம்ப்யூட்டரை பாதுகாப்பாக ஷட்டவுன் செய்யவும் UPS உதவுகிறது. மேலும் UPS கம்ப்யூட்டரை பல மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பதுடன் கம்ப்யூட்டருக்கு தரமான மின்சாரத்தை தருகிறது.

ZEB-U1200 ஒரு மைக்ரோப்ராசஸர் அடிப்படையிலான UPS. இந்த UPSன் கொள்ளளவு 1000VA. மேலும் இது நீண்ட நேர சக்திக்காக உள்ளேயே பொருத்தப்பட்ட இரட்டை பேட்டரிகள் கொண்டது. இந்த UPS பல சிறப்பம்சங்களுடன் வருகிறது. குறிப்பாக ஆஃப் செய்யப்பட்ட நிலையிலும் UPSஐ சார்ஜ் செய்ய உதவும் ஸ்லீப் மோட் சார்ஜிங் முக்கியமானது. இந்த UPS ஜெனரேட்டருடன் வசதியாக பொருந்தக் கூடியது.

இது மின்வெட்டு அதிகமாக இருக்கும் பகுதிகளில், மின்சாரத்திற்காக ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படும் பகுதிகளில் மிகவும் உதவுகிறது. இதில் கோல்ட் ஸ்டார்ட் சாத்தியம். அதாவது மின்சாரம் இல்லாத பொழுதும் இந்த UPSஐ ஸ்டார்ட் செய்ய இயலும். இந்த UPSல் பல அலாரம்களுக்காக ஒலி மற்றும் LED விளக்கு உள்ளது. மேலும் இது, நல்ல பேட்டரி ஆயுளை உறுதி செய்யும் ஓவர்லோடு, ஓவர்சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் பாதுகாப்புடன் வருகிறது.

இதன் முக்கிய அம்சங்கள்

# மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளைலிருந்து டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு பாதுகாப்பு

# மைக்ரோ கன்ட்ரோலர் அடிப்படையிலானது

# 1000VA, இரட்டை பேட்டரி

# ஓவர்லோடு பாதுகாப்பு

# ஜெனரேட்டருடன் பொருந்தக் கூடியது

# ஸ்லீப் மோட் சார்ஜிங்

# கோல்ட் ஸ்டார்ட் சாத்தியம்

ZEB-U1200 UPS, ரூபாய் 4200/-. விலையில் கிடைக்கிறது. இது ஒரு வருட ஜீப்ரானிக்ஸ் வாரன்டியுடன் வருகிறது.

அதிரடி தொழில் நுட்ப வசதிகளுடன் விண்டோஸ் 10 மொபைல்மொபைல் போனில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங...
03/04/2015

அதிரடி தொழில் நுட்ப வசதிகளுடன் விண்டோஸ் 10 மொபைல்

மொபைல் போனில் இயங்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குச் சவால் விடும் வகையில் நவீன தொழில் நுட்பங்களில் இயங்கும் அதிரடி வசதிகளுடன் விண்டோஸ் 10 மொபைல் போன் சிஸ்டம் வர இருக்கிறது. இதற்கான முன்னோட்டத்தினை, மைக்ரோசாப்ட், அண்மையில் சீனாவில் நடைபெற்ற WinHEC (Windows Hardware Engineering Community) Shenzhen 2015 என்ற கருத்தரங்கில் காட்டியது. “Windows 10 Mobile” என்ற தலைப்பில் இந்த புதிய வசதிகள் குறித்து, மைக்ரோசாப்ட் அதிகார பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. அவற்றை இங்கு காணலாம்.



4கே வீடியோ பதிவு (4K Video Recording):



விண்டோஸ் 10 கேமரா அப்ளிகேஷன், 4கே வீடியோ பதிவிற்கான முழு சப்போர்ட்டுடன் கிடைக்கும். வீடியோ பதியப்படுகையிலேயே, ஸூம் செய்வதற்கான வசதி, ப்ளாஷ் இயக்கத்தினைத் தனியே கட்டுப்படுத்தும் வசதி, வீடியோ எச்.டி.ஆர். (High dynamic range) தொழில் நுட்பம் மற்றும் இது சார்ந்த தொழில் நுட்ப வசதிகள் ஆகியன தரப்படுகின்றன.



வை பி டைரக்ட் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் 2:



விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில் வை பி டைரக்ட் தரப்படுகிறது. இதன் மூலம் பயனாளர்கள், வை பி நெட்வொர்க்கில் இணையாமலேயே, தங்களுக்குள் வை பி இணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளலாம். வை பி ஹாட் ஸ்பாட் வசதியின் மூலம், பயனாளர்கள் ஒரு இணைப்பினை, பலர் பயன்படுத்திக் கொள்ள முடியும்.



புளுடூத் அம்சங்கள்:


விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில், பலவகையான ஆடியோ மேம்பாட்டிற்கான அம்சங்கள், அதன் புளுடூத் டூலில் தரப்படுகின்றன. Wideband speech எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலம், எச்.டி. வாய்ஸ் தன்மை கிடைக்கும். A2DP மூலம், ஸ்டீரியோ ஆடியோ தன்மை வெளியாகும்.



எச்.சி.இ. சப்போர்ட் இணைந்த என்.எப்.சி.:


தற்போது அண்மைக் களத் தகவல் தொடர்பு என அழைக்கப்படும் என்.எப்.சி. அனைத்து மொபைல் போன்களிலும் தரப்படுகிறது. விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டம் இதனை இன்னும் எளிமையாகவும் நவீனமாகவும் அமைக்கிறது. இதுவரை மொபைல் சேவை வழங்கும் சிம் கார்டில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்தியே, என்.எப்.சி. இணைப்பு செயல்பட்டு வருகிறது. ஆனால், எச்.சி.இ, (Host card emulation) எனப்படும் சாப்ட்வேர் கட்டமைப்பில், சாப்ட்வேர் மட்டுமே பயன்படுத்தி பலவகை கார்ட்களின் எலக்ட்ரானிக் அடையாளங்கள் அறியப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.



ஸ்மார்ட் டயல்:

இதுவரை மொபைல் போன்களில் பயன்படுத்தப்படாத ஒரு ஸ்மார்ட் டயல் வசதி, விண்டோஸ் 10ல் அறிமுகமாகிறது. இதில் “Yellow Books” என்று ஒரு வசதி உள்ளது. இதன் மூலம், பயனாளர்கள், மற்றவர்களின் தொடர்பு விபரங்களைத் தேடி அறியலாம்.



பேட்டரி பாதுகாப்பு:


பேட்டரியின் திறன் செலவாவதைப் பயனாளரே கட்டுப் படுத்தும் வகையில், Battery Saver என்னும் டூல் தரப்பட்டுள்ளது. இது மேம்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது.


யு.எஸ்.பி. டூயல் ரோல் மற்றும் சி வகை இணைப்பு:



விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில், பலவகையான யு.எஸ்.பி. வழி இணைப்பு சாதனங்களை இணைத்திட சப்போர்ட் தரப்பட்டுள்ளது. கீ போர்ட், மவுஸ் மற்றும் பெரிய அளவிலான ஸ்டோரேஜ் சாதனங்களை இணைக்கலாம்.


செயல்பாடு கண்காணிப்பு (activity tracking):

மொபைல் போன் வைத்திருப்பவர் நடக்கிறாரா, ஓடுகிறரா அல்லது நீச்சல் அடிக்கிறாரா என்பதைக் கண்காணிக்க ஒரு டூல் தரப்படுகிறது. இதனை Activity Tracking Tool என அழைக்கலாம்.



புதிய சென்சார்கள்:


ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஸ்மார்ட் போன்களில், பலவகையான சென்சார்கள் உள்ளன. இவை பல்வேறு சூழ்நிலைகளை உணர்ந்து அவற்றிற்கேற்ப செயல்படுகின்றன. பாரோமீட்டர், ப்ராக்ஸிமிடி சென்சார், அல்டிமீட்டர், பெடோ மீட்டர், பயோ மெட்ரிக் சென்சார், இதயத் துடிப்பு, கேஸ் லீக்கேஜ், சீதோஷ்ணநிலை அளந்து கூறும் சென்சார்கள் எனப் பல உள்ளன. விண்டோஸ் இயக்கத்தில் இன்னும் பல சென்சார்கள் தரப்படுகின்றன. காற்றில் உள்ள ஈரப்பதம், புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றை அறியும் சென்சார்களை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.

நிச்சயமாக, விண்டோஸ் 10 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம், மொபைல் பயன்பாட்டில் ஒரு புதிய கட்டமைப்புடன் வர இருப்பதை மேலே கூறியவை காட்டுகின்றன. இன்னும் கூட நவீன தொழில் நுட்ப வசதிகள் சில, சிஸ்டம் வெளி வரும்போது கிடைக்கலாம்.

வாட்ஸ் அப் பயன்பாட்டில் பாதுகாப்பு குறைவு..உடனடி செய்திகளைப் பரிமாறிக் கொள்வதில், இன்று மிகப் பெரிய அளவில் வாடிக்கையாளர்...
09/03/2015

வாட்ஸ் அப் பயன்பாட்டில் பாதுகாப்பு குறைவு..

உடனடி செய்திகளைப் பரிமாறிக் கொள்வதில், இன்று மிகப் பெரிய அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்ட தளமாக வாட்ஸ் அப் வளர்ந்துவிட்டது. நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துபவராக இருந்தால், அதில் உள்ள பாதுகாப்பு குறைவான வழிகள் சிலவற்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இணைய மால்வேர் புரோகிராம்கள்:


இப்போது வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, பெர்சனல் கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகப் பயன்படுத்தலாம் என்று வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. இதனால், பல ஹேக்கர்கள், வாட்ஸ் அப் தளத்திலிருந்து வருவதைப் போன்ற செய்திகளை உலா விட்டுள்ளனர். பல வாடிக்கையாளர்கள், இந்த போலியான தளங்களில் சிக்கி, கொத்து கொத்தாகத் தங்கள் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்து இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆண்ட்டி வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் காஸ்பெர்ஸ்கி லேப்ஸ், வாட்ஸ் அப் போல, போலியாக இயங்கும், அதுவும் பல்வேறு மொழிகளில் இயங்கும் தளங்களைக் கண்டறிந்துள்ளனர். இவை, வங்கிக் கணக்குகள் போன்றவற்றைக் கண்டறிந்து கறந்துவிடும் வகையில் இயங்கும் மால்வேர்களாக உள்ளன. இதிலிருந்து தப்பிக்கும் வழி எளியதுதான். பெர்சனல் கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் செயலி இயங்க வேண்டும் என்றால், அந்த நிறுவனத்தின் இணைய தள முகவரி உள்ள உண்மையான தளம் சென்று, அதற்கான புரோகிராமினைத் தரவிறக்கம் செய்திடவும். நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://web.whatsapp.com/.


கிராஷ் ஆகும் செய்திகள்:

யாராவது ஒருவர், உங்களுக்கு 7 எம்.பி. அளவிலான மெசேஜ் ஒன்றை வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பினால், உங்கள் அக்கவுண்ட் க்ராஷ் ஆகும் வாய்ப்பு உள்ளது. இது அண்மையில் கண்டறியப்பட்டது. இந்த செய்தியைப் பெற்ற பின்னர், எப்போது வாட்ஸ் அப் சென்றாலும், அது க்ராஷ் ஆனது.

இது பரவலான பின்னர், தற்போது 2 எம்.பி. அளவில் செய்தி அனுப்பினாலும் க்ராஷ் ஆனது தெரியவந்தது. இந்த செய்தியில், சில ஸ்பெஷல் கேரக்டர்கள் இருந்தன. மெசேஜ் பேக் அப் ஆனாலும், அந்த குறிப்பிட்ட செய்தி வந்த உரையாடலை மீண்டும் சென்று பார்த்தால், அது கிராஷ் ஆனது. இது அந்த மெசேஜ் அனுப்பியவருக்கும் பெற்றவருக்கும் மட்டுமின்றி, இவர்களில் யாரவது ஒருவர், குரூப் ஒன்றில் சேர்ந்திருந்தால், அந்த குழுவின் நடவடிக்கைகளும் கிராஷ் ஆகும். இது தனிப்பட்ட நபருக்குப் பெரிய இழப்பினைத் தராது. இதுவே, நிறுவனங்களுக்கானது எனில், ஈடுகட்ட முடியாத இழப்பினைத் தரும். இந்த பிரச்னைக்கான தீர்வினை இன்னும் யாரும் தரவில்லை. விரைவில் வாட்ஸ் அப் அல்லது பேஸ்புக் பொறியாளர்கள், தீர்வினைக் கண்டு தருவார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்த கிராஷ் ஆகும் பிரச்னை, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் வாட்ஸ் அப் செயலியில் மட்டுமே ஏற்படுகிறது. மற்ற இயக்க முறைகளில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் ஏற்படவில்லை.


மீறப்படும் ப்ரைவசி செட்டிங்ஸ்:

அண்மைக் காலத்தில், வாட்ஸ் அப் செயலிக்கான பாதுகாப்பு கூடுதலாகப் பலப்படுத்தப்பட்டது. இருப்பினும், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் திருடப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மைக்கேல் என்பவர், வாட்ஸ் அப் நாம் எண்ணுகிறபடி, அதிக பாதுகாப்பு கொண்ட செயலி அல்ல என்று கூறியுள்ளார். WhatsSpy Public என்ற தர்ட் பார்ட்டி புரோகிராம் மூலம், அடுத்தவருடைய ஸ்டேட்டஸ் மெசேஜ், ஸ்டேட்டஸ் மாற்றங்கள், அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் போட்டோ, அதன் மாற்றம் ஆகியன குறித்து உடனுடக்குடன் அறியலாம் எனத் தெரிவித்துள்ளார். இந்த செயலியின் மூலம், மற்றவர்களின் செட்டிங்ஸ் அமைப்பினையும் மாற்ற முடியும். துரதிருஷ்டவசமாக, இதற்கு எதிராக நாம் எதுவும் செய்திட முடியாது. வாட்ஸ் அப் நிறுவன வல்லுநர்களே, இதற்கான பாதுகாப்பு பைலை வழங்கிட வேண்டும்.


மற்ற பயனாளர்களை வேவு பார்ப்பது

வாட்ஸ் அப் அண்மையில், அதன் செயலியில் இடப்படும் செய்திகளை, தகவல்களை, அனுப்பப்பட்ட இடத்திலிருந்து, அது பெறப்படும் இடம் வரையிலும், பாதுகாப்பான முறையில் சுருக்கி அனுப்பி, இறுதி நிலையில் விரித்துக் காணும் வகையில் அமைத்திருந்தது. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும், நம் உரையாடல்களை இன்னொருவர் கைப்பற்ற முடியும் என்ற உண்மை நம்மைப் பயமுறுத்துகிறது. mSpy என்ற ஒரு சாப்ட்வேர் புரோகிராம், ஒருவர் அனுப்பும் மெசேஜ்கள், அழைப்புகள், பிரவுசிங் தளங்கள் இன்னும் பல விஷயங்கள் குறித்து, இந்த சாப்ட்வேர் நிறுவியவருக்கு அனுப்புகிறது. இந்த ஸ்பை வேர் செயலியை, உங்கள் போனில் சில நொடிகளில் பதித்துவிடலாம் என்பதால், அது உங்கள் போனில் வருவது உங்களுக்குத் தெரியாமலே போகலாம்.

இது போன்ற வேவு பார்க்கும் புரோகிராம்களை, நம் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களின் பட்டியலை அவ்வப்போது ஆய்வு செய்தால், கண்டறிந்து நீக்கிவிடலாம்.

வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? இவ்வளவு சிக்கல்கள், மால்வேர் புரோகிராம்கள் பாதிக்கும் வாட்ஸ் அப் மெசஞ்சர் செயலியை, நாம் வைத்துக் கொள்ள வேண்டுமா? நீக்கிவிடலாம் என்று தோன்றுகிறதா? வேண்டாம். அவ்வாறு நீக்க வேண்டாம். இன்றைக்கு இணைய உலகில், இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்ப உதவும் செயலிகளில், அதிக அளவு எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பது வாட்ஸ் அப் புரோகிராம் தான். எனவே, இதனை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்துச் செயல்படவும்.

WORLDWIDE MOBILE NETWORK - கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடிஉலகளாவிய மொபைல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கூக...
09/03/2015

WORLDWIDE MOBILE NETWORK - கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி

உலகளாவிய மொபைல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது.இதற்கான அறிவிப்பு, அண்மையில் பார்சிலோனா நகரில் நடைபெற்ற, உலக மொபைல் கருத்தரங்கில் வெளியானது. தகவல் தொழில் நுட்பப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள், இணைய இணைப்பினை அனைவருக்கும் கொண்டு செல்வதில் முனைப்புடன் செயல்படவில்லை என்றும் அப்படியே செயல்பட்டாலும், அவ்வசதியினை அனைவருக்கும் கொண்டு செல்வதில்லை என்றும் கூகுள் குற்றம் சாட்டி வருகிறது. இதனால், தான் விரும்பும் வகையில், மக்களுக்குப் புதிய வசதிகளைக் கொண்டு செல்ல இயலவில்லை எனக் குற்றம் சாட்டும் கூகுள், உலகின் பல இடங்களில், அநேக மக்கள் இணைய இணைப்பு கிடைக்காமல் உள்ளனர் என்றும் வருத்தப்படுகிறது. இந்நிலையைப் போக்க, கூகுள், தானே களத்தில் இறங்கி, தன் வலிமையைக் காட்ட திட்டத்தினை அறிவித்துள்ளது.


மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்கள், தாங்கள் அனுமதி பெற்ற இடங்களில், மொபைல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்கி, மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சேவை வழங்கி வருகின்றன. இந்தியாவில், பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல். போன்ற பொதுத் துறை நிறுவனங்களும், ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்களும் இது போல் இயங்கி வருகின்றன. இதே போல, உலகளாவிய அளவில், கூகுள் மொபைல் நெட்வொர்க் ஒன்றை அமைக்கத் திட்டமிடுகிறது.

இதற்கென உலகளாவிய மொபைல் நெட்வொர்க் ஒன்றை உருவாக்குகிறது. இது மொபைல் டவர் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் இணைந்ததாக இருக்கும். இதனால், மொபைல் போன் ஒன்றில் அழைப்பு ஏற்படுத்துகையில், அது மொபைல் டவர் மற்றும் வை பி ஹாட் ஸ்பாட் வழிகளில் மாறி மாறிச் சென்று, விரைவாக இணைப்பை ஏற்படுத்தும். இதற்கான முன்னோட்ட அறிவிப்பினை, அண்மையில் பார்சிலோனா நகரில் நடந்த உலக மொபைல் கருத்தரங்கு மாநாட்டில், கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுந்தர் பிச்சை சூசகமாக அறிவித்தார்.


அமெரிக்காவில் கூட, இணைய வேகமும் இணைப்பும், ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் பின் தங்கியே உள்ளது. இதனால், அதிக மக்களை கூகுள் தன் சேவைகள் மூலம் அடைய இயலவில்லை. தான் அமைக்க இருக்கும் மொபைல் நெட்வொர்க் மூலம், சிறப்பான, விரைவான சேவையை வழங்க முடியும் என மக்களுக்குக் காட்ட கூகுள் விரும்புகிறது. இதன் மூலம், தற்போது இயங்கும் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள், தங்கள் செயல்பாட்டினை மாற்றிக் கொண்டு, புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்துவார்கள் என்று கூகுள் எதிர்பார்க்கிறது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம்!!---------------------------------------------------------------...
07/10/2014

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம்!!
-------------------------------------------------------------------------------------------------------------------
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை செவ்வாய்கிழமை அன்று (செப்டம்பர் 30ம் தேதி) அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல் சாதனங்கள் மற்றும் இணையதளச் சேவைகளை மையமாக கொண்டு விண்டோஸ் 9 பதிப்பை நிறுத்திவிட்டு பல புதிய அம்சங்கள் சேர்த்து விண்டோஸ் 10 என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் பாரம்பரிய வழிகளில் செய்யும் சில செயல்களை மறுசீரமைப்பு செய்து மற்றும் யூசர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டது போல விண்டோஸ் 10 இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளது.

உதாரணமாக, விண்டோஸ் 10ல் உள்ள ஸ்டார்ட் மெனு, விண்டோஸ் 7ல் காண்பதுபோல தோன்றும், மற்றும் அதன் பக்கத்தில் திறக்கப்படும் டைல்ஸ் விண்டோஸ் 8ல் காண்பதுபோல தோன்றும்.

'விண்டோஸ் 8ல் இருக்கும் சலுகைகள் சிலவற்றுடன் விண்டோஸ் 7ல் உபயோகிப்பதை போன்ற தோற்றத்தையும்' விண்டோஸ் 10 வழங்குகின்றன. இது வணிக பயனர்களுக்கு மாற்றம் செய்ய உதவும் வகையில் இருக்கும் என்று ஜோ பெல்ஃபோர்னி, விண்டோஸ் டிசைன் மற்றும் எவல்யூசன் மேற்பார்வையிடும் மைக்ரோசாப்ட் நிர்வாகி கூறியுள்ளார். 'எங்களது நிறுவனத்தின் மிகப்பெரிய ப்ளாட்ஃபார்மாக என்றுமே விண்டோஸ் 10 இருக்கும்' என்று டெர்ரி மையர்சன், மைக்ரோசாப்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் தலைவர், சான் பிரான்சிஸ்கோவில் ஓர் நிகழ்வில் தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 நிறுவனங்களில் 20% மட்டுமே இடம் பெற்றுள்ளது என்று தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் ஃபாரஸ்டர் படி குறிப்பிடப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட்டின் புதிய விண்டோஸ் வெளியிடப்படும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், நிறுவனத்தின் மற்ற நிர்வாகிகள் 2015ம் ஆண்டு இளவேனிற்காலத்தில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளனர். யூசர்கள் புதன்கிழமை முதல் தொழில்நுட்ப முன்னோட்டத்தை மைக்ரோசாப்ட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவனத்திற்கு கருத்துகளை வழங்கலாம்.

டெஸ்க்டாப், எக்ஸ்பாக்ஸ், ஸ்மார்ட்போன், டேப்ளெட் போன்ற அனைத்திலும் விண்டோஸ் 10 பயன்படுத்த முடியும். இந்த புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் ஆப்ஸ் எந்தளவு இருக்கும் என்பது பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. ஆப்ஸ்களை எளிதாக வைத்துக்கொள்வதோடு மல்டி டெஸ்க்டாப் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

Address

2nd Floor, NSR New Complex
Sathyamangalam

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+91 9487617617

Alerts

Be the first to know and let us send you an email when Power Electronics Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Power Electronics Technology:

Shortcuts

Share

Category