SNRschool students 2014 batch

SNRschool students 2014 batch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SNRschool students 2014 batch, Education, Rajapalayam Road, Sankarankovil.

தமிழம்மை மறைந்தார்! நம்முடைய ஆழ்ந்த இரங்கல்கள்!
14/05/2020

தமிழம்மை மறைந்தார்! நம்முடைய ஆழ்ந்த இரங்கல்கள்!

உஅணியாரும் உன் விழா நாளில் அலங்காரம் பலகொண்டுமணிவீதி முழக்கோடு வருநின்னைக் கண்டக்கால்பணியாத தலைபணியும் பாடாத வாய்பாடும்த...
16/08/2016



அணியாரும் உன் விழா நாளில் அலங்காரம் பலகொண்டு

மணிவீதி முழக்கோடு வருநின்னைக் கண்டக்கால்

பணியாத தலைபணியும் பாடாத வாய்பாடும்

தணியாத சிந்தையும் தான் தணிந்து ஒடுங்கும்கோமதியே !

- சைவத்திரு. ஈசுரமூர்த்திப் பிள்ளை

( கோமதி சதரத்ந மாலை )

பேரன்புசால் பக்தர்களே,

சிவபெருமானை விட்டுப் பிரியாத அருட்சக்தியாம் உமையம்மை, உலகத்தின் உயிர்களாகிய நாம் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்தை உணர்த்தும் பொருட்டு, திருக்கயிலை மலையில் பரமசிவனாரிடம்,“சிவபெருமானே! தாங்கள் நாராயணமூர்த்தியுடன் பொருந்தியிருக்கும் திருக்கோலத்தை காட்டியருள வேண்டும்” என்று வேண்ட, எம்பெருமான் அதற்கு இணங்கி அம்மையை நோக்கி, “ பூலோகத்தில் பொதிகை மலைச்சாரலில் உள்ள புன்னை வனத்தலமாகியசங்கரநயினார்கோயில் என்னும் தவம்செய்து நீ விரும்பும் திருமேனயைத் தரிசிக்க” என்று அருளினார். அதன்படி உமையம்மை தம்மைச் சூழ்ந்து பசுக்களாகி வந்த தேவமாதர்களுடன் கோமதியம்மை, ஆவுடையம்மை என்னும் காரணப்பெயர்களைத் தாங்கி தவம் இருந்தார். அம்மையின் தவத்திற்கிணங்கிய சிவபெருமான் ஆடித் திங்கள் உத்திராட நன்னாளும் பெளர்ணமி திதியும் கூடிய நாளில் ஆவுடையம்மைக்கு காட்சி கொடுத்தார். இதையே நாம் தவசுக்காட்சி என்று கண்டு களித்து வருகிறோம். இத்தகைய சிறப்பு மிக்கது ஆடித்தவசுத் திருவிழா.

நிகழும் கொல்லம் ஆண்டு 1191ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 32 ஆம் நாள் ( 16.08.2016 ) செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்குசிவபெருமான் ஶ்ரீகோமதி அம்பாளுக்கு, முரசு இடி முழங்கி வர நகரா முழங்க பாவாணர்கள் பண்ணிசைக்க ஓதுவாமூர்த்திகள் திருமுறை ஓத இடப வாகனத்தில் ஶ்ரீ சங்கரநாராயணராகவும் நடுஇரவு 12.00 மணிக்கு யானை வாகனத்தில் ஶ்ரீ சங்கரலிங்க மூர்த்தியாகவும் தவசுக்காட்சி தரும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெறும். அன்பர்கள் அனைவரும் இத்திருவிழாவிற்கு வருகைதந்து இறைவனையும் இறைவியையும் வணங்கி இறையருளும் மேன்மையும் பெற்றுய்ய வேண்டுகிறோம்.

சீராசை வரராசை திகழ்புன்னை கூழையெனும்

பேராரிந் நகரத்துன் பெருங்யில் புகுந்துசுனை

நீராடி நீறணிந்துன் சன்னதியி னின்றன்பு

பேராமல் வணங்காரும் பிறந்தாரோ கோமதியே!



ஆவுடையம்மை உடனமர் சங்கரலிங்க மூர்த்தி சீரடிகள் சரணம்

“ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை

ஆரறிவார் இந்த அகலமும் நீளமும்”

23/10/2015

Hi friends,
Good evening.
I want to know something..
Shall we start an alumni association for our school?
What is ur thought?
Please comment or mail me or message me.

18/10/2014

நம் பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது வாங்கினமைக்கு பாராட்டு விழா நடத்தலாமா?

16/07/2014
04/06/2014

இன்று முதல் +2 மாணவருகள் தங்களது விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் student.hsc14rtrv.in என்ற இணையதளத்தில்

26/05/2014

நம் பள்ளியில் ஆறாம் வகுப்பிற்கான சேர்க்கை இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

அகஸ்தியர் மலையில் வழுக்கி விழுந்து பறவை ஆராய்ச்சியாளர் பலி!!
30/04/2014

அகஸ்தியர் மலையில் வழுக்கி விழுந்து பறவை ஆராய்ச்சியாளர் பலி!!

Address

Rajapalayam Road
Sankarankovil
627756

Alerts

Be the first to know and let us send you an email when SNRschool students 2014 batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category