14/07/2020
எங்கு பார்த்தாலும், எப்போது போனில் அழைத்தாலும் அண்ணன் அண்ணன் என்று சலிப்பு இல்லாமல் கூறுவீர்களே, நான் உங்களை விட வயதில் சிறியவனான போதிலும் அண்ணன் என்று அன்பொழுக அழைக்கும் எனது சேனா அண்ணனின் மறைவினை நானும் , அவர் குடும்பத்தாரும் , மற்ற மக்களும் மனதால் ஏற்றுக்கொள்ள வல்ல இறைவனை வேண்டுகிறேன் . அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற இயலாதவனாக நான் இருக்கறேன். அநேகம் பேருக்கு ஆறுதலாகவும் ஆபத்து நேரத்தில் உதவிகள் செய்வதில் வல்லவராகவும் விளங்கிய நீ இவ்வளவு சீக்கிரம் சென்றது ஏன்? ان لله و ان اليه راجعون (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) சங்கைமிக்க இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு! எல்லோரிடமும் அன்பாக பழக கூடியவர் நீங்கள் , சாதி மதம் பார்க்காமல் எந்த நேரமாக இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு செவிசார்ப்பீர்களே ! எந்த வயதனாலும் பாகு பாடு இல்லாமல் எல்லோருடனும் நட்பாக பழக கூடுபவரே நீங்கள் 😢😢😢 என்னால் உங்களைப் பற்றி கூற வார்த்தைகள் இல்லை என் அன்பிற்குரிய அண்ணனே உங்களுடைய சேவையை அல்லாஹ் (சுப) ஏற்றுக்கொண்டு ,பிழைகளை பொறுத்து உங்களுக்கு மறுமையில் சுவனத்தை வழங்குவனாக . உங்களுடைய குடும்பத்தார்க்கும் உங்களுக்காகவும் துவாச் செய்தவனாக உங்களுடைய தம்பி இருக்கிறேன் ஆமீன் யா அல்லாஹ் எனது சேனா அண்ணனுக்கு மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தௌஸை அழிப்பாயாக ,அவர் மீது கருணை புரிவாயாக ,அவர் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன் உங்களுடைய தம்பி இப்ராஹிம் , ஸ்மார்ட் அகாடமி .