PUM School, Komaliyur

PUM School, Komaliyur

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PUM School, Komaliyur, Middle School, PUM SCHOOL, KOMALIYUR R. C. Chettipatti post, Salem.

Photos from PUM School, Komaliyur's post 13/08/2025

நமது பள்ளியில் தொடக்கநிலை வகுப்பு மாணவிகளுக்கான சாரண இயக்கத்தின் 'புல்புல்' பிரிவு இனிதே தொடங்கப்பட்டது

11/08/2025

ஓமலூர், சரபங்கா அறக்கட்டளையின் 13 ஆம் ஆண்டு விழாவில் நமது பள்ளியின் 13 மாணவர்கள் NMMS தேர்வில் வெற்றி பெற்றதற்காக பரிசு பெற்றார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!!!

Photos from PUM School, Komaliyur's post 24/07/2025

மாவட்ட கல்வி அலுவலரிடம் பாராட்டு சான்றிதழ் பெரும் நமது ஆசிரியர்கள்

02/05/2025
Photos from PUM School, Komaliyur's post 30/04/2025

கடந்த 27 வருடங்களாக நமது பள்ளியில் அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் பணிபுரிந்து இன்றுடன் ஓய்வு பெறும் ஆசிரியை திருமதி சி.வசந்தா அவர்களுக்கு இனிவரும் வாழ்க்கையும் வெற்றிகரமாக அமைய நமது வாழ்த்துகள்!!

Photos from PUM School, Komaliyur's post 28/04/2025

25.04.25 முதல் 27.04.25 வரை மூன்று நாட்கள் சேலத்தில் நடைபெற்ற பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் ஆளுநர் விருதுக்கான (ராஜ்யபுரஷ்கார் விருது) தேர்வு முகாமில் நமது பள்ளி மாணவர்கள் (இளவரசன், ஹரிஷ், பசூர், திவ்ய பிரசாத், தினகரன், நவீன், தரணிதரன், ரோகித், அகில் சீனா) ஆகிய 9 பேரும் மாணவிகள் (ரசிதா, ரிஷ்விதா) ஆகிய 2 பேரும் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டனர்.

23/04/2025

கடந்த (21.04.2025) அன்று, மாமல்லபுரத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் , தமிழகத்தில் NMMS தேர்வில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் 82 நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு, மாதிரி பள்ளிகளின்(ELITE SCHOOL) உறுப்பினர் செயலர் திரு.சுதன் IAS அவர்கள் கேடயம் வழங்கி பாராட்டினார்.
*இவ்விழாவில் நம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி மா.சாந்தி அவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது*

Photos from PUM School, Komaliyur's post 22/04/2025

இன்று நமது பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஓமலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட NMMS வெற்றியாளர்களுக்கு பரிசளிக்கும் விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர்கள் மதிப்பிற்குரிய திருமதி.ஆக்னஸ் ராஜகுமாரி மற்றும் மதிப்பிற்குரிய திரு.சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினர். நமது பள்ளியின் சார்பிலும் அனைத்து வெற்றியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நமது பள்ளி மாணவர்கள் 13 பேர் உட்பட மொத்தம் 16 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Photos from PUM School, Komaliyur's post 17/04/2025

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த NMMS எனப்படும் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் நமது பள்ளி மாணவர்கள் 13 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த வருடங்களை போலவே இந்த ஆண்டும் சேலம் மாவட்டத்தில் அதிக மாணவர்களைத் தேர்ச்சி பெற வைத்த நடுநிலைப் பள்ளியாக நமது ஊ.ஒ.ந.நி.பள்ளி, கோமாளியூர் விளங்குகிறது.
தேர்ச்சி பெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி உதவித்தொகையாக ரூபாய் 48,000 கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இவ்வாண்டு தேர்ச்சியின் மூலம் 48000×13=₹6,24,000 கிடைக்கவிருக்கிறது.
இத்துடன் சேர்த்து இதுவரை நமது பள்ளியில் 87 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துவோம்.

Photos from PUM School, Komaliyur's post 27/08/2024

18.8.24 அன்று நடைபெற்ற ஓமலூர் சரபங்கா அறக்கட்டளையின் 12 ஆம் ஆண்டு விழாவில், நமது பள்ளியில் சென்ற வருடம் NMMS தேர்வில் வென்ற மாணவர்கள் பிரியதர்ஷினி, இளவரசி, அர்ஃபாத், சாரதி, கௌதம், திவான் ஜெயராமன் ஆகியோருக்கும் மற்றும் சதுரங்கத்தில் மாவட்ட அளவில் 3 ஆம் இடம் பெற்ற வசீகரனுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

Want your school to be the top-listed School/college in Salem?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


PUM SCHOOL, KOMALIYUR R. C. Chettipatti Post
Salem
636455

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm