16/11/2017
அன்பு முன்னாள் மாணவர்களுக்கு வணக்கம், நம் பள்ளி 1877-1883 வருடம் வரை இரண்டு முதல்வர்களையும் , 1883 ல் இருந்து 2017 ம் ஆண்டு வரை 11, தலையாசிரியர்களின் கீழ் நம் பள்ளி 140 வருடங்கள் இயங்கி வருகிறது, இந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த பள்ளியின் 11 வது தலைமையாசிரியராக பொறுப்பேற்றுள்ள #திருமதி_ப்யூலாரூபி , அவர்களை முன்னாள் மாணவர்கள் சந்தித்து அவர்களது பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தோம்.... அருகில் பள்ளியின் உதவி தலைமையாசிரியர் அவர்கள்.... (முன்னாள் மாணவர்கள் சங்கம்) WATSUP குழுவில் இணைய 9042701000.....
01/07/2017
#தாகம்_தீர்த்த_தருணம்.....
சேலம் சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளியில் பல வருடங்களாக மாணவ மாணவிகள் தாகத்திற்கு போர்வெல்லில் வரும் உப்பு தண்ணீரை அருந்தி வந்தனர் , சென்ற மாதம் இந்த தகவல் எங்களுக்கு கிடைத்ததும் எங்கள் #சி_எஸ்_ஐ_முன்னாள்_மாணவர்கள்_சங்கம் மூலமாக முயற்சி எடுத்து மாணவர்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம்( R.O SYSTEM) பள்ளியில் பொருத்தப்பட்டு மாணவர்களின் பல ஆண்டுகளாக தீராத தாகத்தை தீர்த்து வைத்தோம்......
நெகிழ்வான தருணம் அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியே...
10/06/2017
நம் பள்ளியில் 10 மற்றும் 12 வகுப்பில் முதல் மூன்று இடங்களில் தேறிய மாணவர்களுக்கும், தங்களது பாடத்தில் மாணவர்களை 100% தேர்ச்சி பெற செய்த மரியாதைக்குரிய ஆசிரியர்களுக்கும் சிறிய பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடத்துவது சம்பந்தமாக வரும் ஞாயிறு 11/06/2017 அன்று காலை 11.30 க்கு நம் பள்ளி வளாகத்தில் திட்டமிடல் கூட்டம் நடைபெற உள்ளது , முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிரவும். நன்றி....