03/02/2026
வனத்துறைசார்பில் வனமும் வாழ்வும்
நிறைவு நிகழ்ச்சி
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாசா அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 02/02/2026 நடைப்பெற்றது.
இந்நிகழ்வில்
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு. காந்தி அவர்களும், இராணிப்பேட்டை
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி முனைவர் ஜெ.யு.சந்திரகலா அவர்களும், ஆற்காடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. திரு.ஈஸ்வரப்பன் அவர்களும் மாவட்ட வன அலுவலர். திரு.டி.கே.அசோக்குமார்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ம.மோகனா மற்றும் , முனைவர் பூ.தேவி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பயிற்சியில் நிறைவு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும்
வனத்துறை சார்பாக வனவிலங்கு வார விழா நிகழ்வில் நடைபெற்ற பேச்சுப்போட்டி & கட்டுரைப்போட்டியில் எம் பள்ளி மாணவி சே.ஹேமநிஷா எட்டாம் வகுப்பு முதல் பரிசும், ஓவியப்போட்டியில் நான்காம் வகுப்பு மாணவன் முகமதுயூனஸ் முதல் பரிசும், நான்காம் வகுப்பு பேச்சுபோட்டியில் மூ.மோனிகா மூன்றாம் பரிசும் பெற்றனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட வன அலுவலர் அவர்களும் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசும்,பாராட்டுச் சான்றிதழும் பதக்கமும் வழங்கினர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. T.M.S.இலதா (வாலாஜா கிழக்கு) மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
தி.க.தென்றல்
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்