27/08/2025
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
💐💐💐💐💐💐💐💐💐💐💐🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேலும் ஒரு மகுடம் சேர்க்கும் விதமாக மத்திய அரசின் நிதி ஆயோக் மற்றும் அடல் இன்னோவேஷன் மிஷன் பாராட்டுச் சான்று வழங்கி கௌரவித்துள்ளது
மத்திய அரசின் அடல் இன்னோவேஷன் மிஷன் மற்றும் நிதி ஆயோக் சார்பில் இந்தியா முழுவதும் பள்ளிகளில் உள்ள அடல் டிங்கரிங் ஆய்வகத்தின் மூலமாக கடந்த 12/08/2025 ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரையில் மெகா டிங்கரிங் டே என்ற தினம் கொண்டாடப்பட்டது. இது தேசிய அளவில் ஒரே நேரத்தில் ஆய்வகத்தின் வழியாக மாணவர்கள் மூலம் மாதிரிகள் உருவாக்க முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் சுமார் 10000 அடல் டிங்கரிங் ஆய்வகம் செயல்பட்டு வந்திருந்த நிலையில் அதில் 9467 அடல் டிங்கரிங் ஆய்வகத்தில் மட்டும் இந்த நிகழ்வானது சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வில் சுமார் 4,73,350 மாணவர்கள் கலந்துக்கொண்டு இந்த நேரடி பணிமனையில் பங்கேற்று சிறப்பித்து தந்தனர். இந்நிகழ்வில் இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாரத்தில் உள்ள மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் இந்நிகழ்வானது நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளியின் சார்பாக 110 மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு மாதிரிகளை உருவாக்கி தங்களது படைப்பாற்றலையும் புதுமைகளையும் மற்றும் குழு ஒருங்கிணைப்பினையும் சிறப்பாக வெளிப்படுத்திக் காட்டினர். இந்நிகழ்வினை சிறப்பாக செய்தமைக்காககவும்,கலந்து கொண்டமைக்காகவும் பள்ளிக்கு தேசிய அளவில் ஒரு மாபெரும் அங்கீகாரத்தை நிதி ஆயோக் மற்றும் அடல் இன்னோவேஷன் மிஷன் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டு மடல்களையும் அனுப்பியுள்ளது.. இந்நிகழ்வினை சிறப்பாக வடிவமைத்து தந்த வழிகாட்டி ஆசிரியரும், ATL பொறுப்பாசிரியரும் மற்றும் பயிற்சியாளருமான திரு அ. கமலக்கண்ணன் அவர்களுக்கும் இந்நிகழ்வினை தலைமை ஏற்றி வழிநடத்தி சிறப்பித்து தந்த தலைமையாசிரியர் திரு டி ஜி சீனிவாசன் ஐயா அவர்களுக்கும் மற்றும் உடன் உதவிய இருபால் ஆசிரியர்களுக்கும் பள்ளியின் சார்பாகவும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு சார்பாகவும் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.*
அறிவியலை வளர்ப்போம்!
அறிவியலைப் பரப்புவோம்
புதுமையை படைப்போம்*
*நன்றி
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆💐💐💐💐💐💐💐💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳