Mohamedia Higher Secondary School

Mohamedia Higher Secondary School Mohamedia Higher Secondary School is very famous around East Ramnad.

Till 1970 the education level was low among the girls and the students from the surrounding villages. But after the development of Mohamedia Higher Secondary School, the area's education level went up to 95% and nowadays girls are studying more and better.

*உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி***************************** இன்று (02-02-2026) திங்கட்கிழமை நமது சித்தார் கோட்டை முகம...
02/02/2026

*உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி*
****************************
இன்று (02-02-2026) திங்கட்கிழமை நமது சித்தார் கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் *ஐ.ஐ.டி.மெட்ராஸின் சான்றிதழ் பெற்ற பயிற்றுநர்* *பேராசிரியர்.முஹம்மது அமீர் அப்பாஸ் M.A* அவர்கள் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயனளிக்கும் வகையிலான சிறப்பான ஆலோசனைகளை விரிவாக வழங்கினார்.

சேலம் சுதந்திரா இயக்கம் நடத்திய மாநில அளவிலான திருக்குறள் திறனறியும் போட்டியில் 1330 குறட்பாக்களை 266 அஞ்சல் அட்டையில் எ...
26/01/2026

சேலம் சுதந்திரா இயக்கம் நடத்திய மாநில அளவிலான திருக்குறள் திறனறியும் போட்டியில் 1330 குறட்பாக்களை 266 அஞ்சல் அட்டையில் எழுதி திறனேற்றும் உலக சாதனை நிகழ்வில் எம் பள்ளி மாணவிகள் பங்கேற்றமைக்காக முப்பால் விருதுச் சான்றிதழ் வழங்கப்பட்டது

நாளைய தலைமுறைகள் அமைப்பு நடத்திய மாநில அளவிலான இணையவழியில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று ரூபாய் 1000/...
26/01/2026

நாளைய தலைமுறைகள் அமைப்பு நடத்திய மாநில அளவிலான இணையவழியில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று ரூபாய் 1000/- பரிசுத்தொகை பெற்ற மாணவிக்கு பரிசுத்தொகையும், சான்றிதழும், சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது ( அ. அஸ்ரின் பாத்திமா

இணையவழியில் மாநில அளவில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட வீரர் வ.உ .சி. பற்றிய வினாடி வினா போட்டியில் முதலிடம் பெற்று ரூபாய் ...
26/01/2026

இணையவழியில் மாநில அளவில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட வீரர் வ.உ .சி. பற்றிய வினாடி வினா போட்டியில் முதலிடம் பெற்று ரூபாய் 5000/- பரிசுத்தொகை பெற்ற மாணவிக்கு வழங்கப்பட்ட சிறப்பு பரிசு (எம். ஷமீம் ஹும்னா)

அமெரிக்காவின் புரட்சிக் கவிஞர் தமிழ் மன்றம் சார்பில் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு உலக அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட...
26/01/2026

அமெரிக்காவின் புரட்சிக் கவிஞர் தமிழ் மன்றம் சார்பில் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு உலக அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்று ரூபாய் 7000/- பரிசுத்தொகை பெற்ற மாணவிக்கு வழங்கப்பட்ட சிறப்பு பரிசு ( ரு. நவ்ரீன் தவ்ஹீதா)

இன்று முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 77வது குடியரசு தின விழாவில் தமிழ் மொழி இலக்கியத்  திறனறிவுத் தேர்வில் மாந...
26/01/2026

இன்று முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 77வது குடியரசு தின விழாவில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாட்டில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பரிசு 1 ஹ. நஸிஃபா தஸ்மீம் 2. பா. சக்சனா

*தமிழக அரசின் திருக்குறள் மாணவர் மாநாட்டில் கலந்து கொண்ட முகம்மதியா மேல்நிலைப் பள்ளி மாணவிகள்💐💐💐💐* கன்னியாகுமரி மாவட்டத்...
25/01/2026

*தமிழக அரசின் திருக்குறள் மாணவர் மாநாட்டில் கலந்து கொண்ட முகம்மதியா மேல்நிலைப் பள்ளி மாணவிகள்💐💐💐💐*

கன்னியாகுமரி மாவட்டத்தில் (23.01.26 மற்றும் 24.01.26) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

அம்மாநாட்டில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்ற நம் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவிகள்

1. ஹ. நஸிஃபா தஸ்மீம்
2. பா. சக்சனா

ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட மாணவிகளுக்கு திருக்குறள் நிகழ்வுகள் சிறப்பு அலுவலர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் IAS அவர்களும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.

https://youtu.be/MjmNzk_MHec?si=boYEY5vzkDzUw9ZQ25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்ற முகம்மதியா மேல்நிலைப் பள்ளியின...
06/01/2026

https://youtu.be/MjmNzk_MHec?si=boYEY5vzkDzUw9ZQ
25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்ற முகம்மதியா மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகள்

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

(02.01.2026) அன்று இந்தியாவின் No 1 கல்வி நிறுவனமான IIT Madras -ல்  Open House 2026 கலந்து கொண்ட சித்தார்கோட்டை முகம்மதி...
03/01/2026

(02.01.2026) அன்று இந்தியாவின் No 1 கல்வி நிறுவனமான IIT Madras -ல் Open House 2026 கலந்து கொண்ட சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் .

*புதுச்சேரியில் இன்று (28.12.25)  குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் சார்பில் இயல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ...
28/12/2025

*புதுச்சேரியில் இன்று (28.12.25) குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் சார்பில் இயல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி அ.அஜ்ருன் ராபியா (த/பெ அஜ்மீர் ராஜா ) அவர்களைப் பாராட்டி புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. க. இலட்சுமி நாராயணன் அவர்களால் சிறுவர் கலைச்சிகரம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.*

10/12/2025
🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅 💐💐💐💐💐💐💐💐💐 தமிழகம் முழுவதும் உள்ள 11ஆம் வகுப்பு மாணவ- மாணவியர்களுக்கு நடைபெற்ற தமிழ் இலக்கியத் திறனறிவுத் தேர்வ...
03/12/2025

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅
💐💐💐💐💐💐💐💐💐
தமிழகம் முழுவதும் உள்ள 11ஆம் வகுப்பு மாணவ- மாணவியர்களுக்கு நடைபெற்ற தமிழ் இலக்கியத் திறனறிவுத் தேர்வில் சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள்

H. நஸிபா தஸ்மீம்
( மாநில அளவில் மூன்றாமிடம்
மாவட்ட அளவில் இரண்டாமிடம்)

B. சக்ஸனா
(மாவட்ட அளவில் மூன்றாமிடம்)

பெற்று வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு தமிழக அரசால் மாதம் ரூபாய் 1,500/- வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூபாய் 36,000/- வழங்கப்பட உள்ளது. வெற்றி பெற்ற மாணவியர்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியப் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅
💐💐💐💐💐💐💐💐💐

Address

Chittar Kottai
Ramanathapuram
623513

Telephone

04567-261786

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohamedia Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category