19/08/2026
விண்ணை நோக்கிய பயணம்!
“கனவு காணுங்கள்… கற்றுக்கொள்ளுங்கள்… சாதியுங்கள்… விண்ணையும் தாண்டி உயருங்கள்!”
ராஜபாளையம் CASA Di Mir Matriculation Higher Secondary School மாணவர்கள் NASA விண்வெளி வீரர் டாக்டர் டான் தாமஸ் (Dr. Don Thomas) அவர்களின் சிறப்பு Interaction Programme-ல் பங்கேற்று, அவரது ஊக்கமூட்டும் வாழ்க்கைப் பயணத்தையும் விண்வெளி அனுபவங்களையும் அறியும் அரிய வாய்ப்பைப் பெற்றனர்.
விண்வெளி அறிவியல், ஆராய்ச்சி மனப்பான்மை, புதுமைச் சிந்தனை மற்றும் உயர்ந்த இலக்குகளை நோக்கிச் செல்லும் உறுதியை மாணவர்களிடம் விதைக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது. டாக்டர் டான் தாமஸ் அவர்களின் அனுபவங்களும் ஊக்கமூட்டும் கருத்துகளும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டி, அவர்களின் எதிர்காலப் பயணத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்தன. இந்த விண்வெளிக் கனவை விதைக்கும் சிறப்பு நிகழ்வு இராஜபாளையம் RIT கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பயனடையும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
Proud Participation of CASA Di Mir Students
NASA Astronaut Dr. Don Thomas – Interaction Programme
RIT Campus | CASA Di Mir Matriculation Higher Secondary School, Rajapalayam