21/05/2025
நேற்றைய 19.05.2025 தினம் நடைபெற்ற ஆங்கில மொழி பயிற்சி நிறைவு மற்றும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா . சிறப்பு விருந்தினர்கள் JRS கல்வி பகுதி பொறுப்பாளர் அருட்தந்தை மரிய ஆல்பின் அவர்கள் தலைமை ஏற்று ,மண்டல பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பாளர் முன்னிலைவகித்து வருவாய்த்துறை அதிகாரி . Q பிரிவு அதிகாரி, offer பணியாளர்கள் , அனைத்துக்குழு பொறுப்பாளர்கள், சமாதானக்குழு உறுப்பினர்கள் , முகாம் பொதுப்பணி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மாணவர்கள் சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். இவ்வாய்ப்பினை எமது மாணவர்களுக்கு வழங்கிய JRS நிறுவனத்திற்கும்,அருட்தந்தை யர்களுக்கும், மணடல&மாவட்ட பொறுப்பாளருக்கும் அனைவரின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பாக மேடை அலங்காரம் செய்த மாதாகோயில் பெருளாளர் சுபராஜ் , மற்றும் இடம் அனுமதி கொடுத்த கோயில் நிர்வாக உறுப்பினர்கள் அனைவர்க்கும் நன்றிகள் பல. மேலும் பலவகைகளில் ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். சான்றிதழ்கள் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி ! 🙏🙏