TELC Higher Secondary School, Pudukkottai.

TELC Higher Secondary School, Pudukkottai. The Tamil Evangelical Lutheran Church is one of the oldest Protestant Churches and one of the largest Lutheran Churches & started this school 100 years b4

05/09/2021

Hi to All... one of the school kid from pudukkottai, 7 years old presenting lots of science experiments activities with fun..

Watch and if you like and believe helpful for others, then share...

Thanks

A 8 Years School Kid presenting various science experiments with lots of fun and providing easy learn

25/02/2017
18/02/2017


10/01/2017

Can we have a post to supports Jallikattu on our page, please provide your comments
If we have 300 more likes then we can...
நாம் சல்லிகட்டிற்கு ஆதரவாக பதிவுகளை இங்கே இடலமா?
உங்களது கருத்துகளை இங்கே தெரிவிக்கவும்

18/05/2016

பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு நரம்பியல் டாக்டராக விருப்பம்

புதுக்கோட்டை, : நரம்பியல் சிறப்பு டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன் என பிளஸ்2 தேர்வில் புதுகை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ராஜேஸ்கண்ணன் தெரிவித்தார். கந்தர்வகோட்டை வித்தியாவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் ராஜேஸ்கண்ணன் 1185 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவர் தமிழ் 197, ஆங்கிலம் 193, இயற்பியல் 198, வேதியியல் 199, உயிரியல் 198 கணிதம் 200 என 1185 மதிப்பெண்கள் பெற்றார்.

இது குறித்து மாணவர் ராஜேஸ்கண்ணன் கூறியதாவது: மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மாநில அளவில் முதலிடம் பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். இதனால் சற்று வருத்தமாக உள்ளது. மருத்துவ படிப்பில் சேர்ந்து நரம்பியல் சிறப்பு டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன். மாவட்ட அளவில் முதல் இடம்பெற பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்கள், முதல்வர் மற்றும் நண்பர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.
எனது தாய் ராஜலெட்சுமி அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார். அவர் எனக்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார்என்றார்.

2 ம் இடம் பெற்ற மாணவிகளுக்கு டாக்டர், ஆடிட்டராக விருப்பம் அதே பள்ளி மாணவி அனுசோபியா 1183 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 2ம் பெற்றார். அவர் தமிழ் 197, ஆங்கிலம் 193, இயற்பியல் 193, வேதியல் 200, உயிரியல் 200 கணிதம் 200 என 1183 மதிப்பெண்கள் பெற்றார். மாணவி அனுசோபியா கூறியதாவது: மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுப்பேன் என்று எதிர்பார்த்தேன். இருப்பினும் 2ம் இடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. பெற்றோர் ஆசைப்படி டாக்டராகி பொதுமக்களுக்கு சேவை செய்வேன். இதற்காக நான் தற்போது அரசு பொது மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதி உள்ளேன். எனது தந்தை முருகன் நகை அடகு கடை நடத்தி வருகிறார். தாயார் செல்வமணி. இவர்களின் வழிகாட்டுதலின்படி நான் படித்தேன். மேலும் எனது இந்த வெற்றிக்கு பள்ளி ஆசிரியர்களும், நண்பர்களும் ஊக்கம் அளித்தனர் என்றார்.

புதுகை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கனிஷிதா 1183 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பெற்றார். இவர் தமிழ் 194, ஆங்கிலம் 192, வணிகவியல் 200, கணக்குபதிவியல் 200, பொருளியல் 197, வணிககணிதம் 200 என 1183 மதிப்பெண்கள் பெற்றார். மாணவி கனிஷிதா கூறியதாவது: மாவட்ட அளவில் 3ம் இடம் பிடித்தது மகிழ்ச்சி. மாநில அளவில் மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். எனக்கு பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், பள்ளி நிர்வாகத்தினர் உறுதுணையாக இருந்தனர். எனது தந்தை பத்மநாதன் தொழிலதிபர். தாய் புஷ்பா. நான் ஆடிட்டராக விரும்புகிறேன் என்றார்.

3ம் இடம் பெற்றவருக்கும் ஆடிட்டராக விருப்பம் அதே பள்ளி மாணவி தையல்நாயகி 1182 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 3 ம் இடம் பெற்றார். இவர் தமிழ் 190, ஆங்கிலம் 193, வணிகவியல் 200, கணக்குபதிவியல் 200, பொருளியல் 200, வணிககணிதம் 199 என மொத்தம் 1182 மதிப்பெண்கள் பெற்றார். மாணவி தையல்நாயகி கூறியதாவது: மாவட்ட அளவில் முதலிடம் பெறுவேன் என எதிர்பார்த்தேன். எனக்கு பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர். எனது தந்தை குப்பன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தாய் முத்தாத்தாள் அரசு பள்ளி ஆசிரியர். நான் ஆடிட்டருக்கு படிக்க விரும்புகிறேன் என்றார்.

18/05/2016

புதுகை மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 93.01% தேர்ச்சி 14 அரசு பள்ளிகள் 100 சதவீதம்

புதுக்கோட்டை, : பிளஸ் 2 பொதுத் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 93.01 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 3.45 சதவீதம் அதிகம் ஆகும்.கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 8,549 மாணவர்களும், 9,919 மாணவிகள் என 18,468 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 7634 மாணவர்களும், 9543 மாணவிகள் என மொத்தம் 17,177 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.01 சதவீத தேர்ச்சியாகும். இது கடந்த ஆண்டை விட 3.45 சதவீதம் அதிகம்.

மாவட்டத்தில் 151 மேல்நிலைப்பள்ளிகளில் 34 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் 99 அரசு பள்ளிகளில் 14 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியும், 16 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியும், 36 தனியார் பள்ளிகளில் 15 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று ள்ளன. கீரமங்கலம், திருமயம் மற்றும் சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாஞ்சூர், மேற்பனைக்காடு, தாந்தோனி, நெடுவாசல், ஆலவயல், மண்டையூர், கவரப்பட்டி, கல்லூர், கலியராயன்விடுதி, புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 15 தனியார் பள்ளிகள் என 34 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன.

புதுகை கல்வி மாவட்டத்தில் 4722 மாணவர்கள், 5,578 மாணவிகள் உள்ளிட்ட 10,300 பேர் தேர்வு எழுதினர். இதில் 4,295 மாணவர்கள், 5,357 மாணவிகள் என மொத்தம் 9652 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.71 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 3.68 சதவீதம் அதிகம். கல்வி மாவட்ட அளவில் தேர்வு எழுதிய 65 பள்ளிகளில் 13 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 3827 மாணவர்கள், 4341 மாணவிகள் உள்ளிட்ட 8168 பேர் தேர்வு எழுதினர். இதில் 3339 மாணவர்கள், 4186 மாணவிகள் உள்ளிட்ட 7525 தேர்ச்சி பெற்றனர். இது 92.13 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட 3.18 சதவீதம் அதிகம் ஆகும்.

அரசுப்பள்ளி அளவில் முதல் 3 இடங்களை மாணவிகளே பிடித்தனர்.அறந்தாங்கி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரியதர்ஷனி 1157 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்தார். புதுக்கோட்டை அரசு ராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தன்சிரா பர்வீன் 1155 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தையும். புதுக்கோட்டை அரயாப்பட்டி அரசு மேநிலைப்பள்ளி மாணவி சரஸ்வதி 1152 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தை பிடித்தார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதுக்கோட்டை தூய இருதய மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி ஷமீம்ருக்சனா 1164 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், கடியாபட்டி உலகப்பர் மேனிலைப்பள்ளி மாணவி வைரமணி 1143 மதிப்பெண் பெற்று 2ம் இடத்தையும், புதுகை தூய இருதய மகளிர் மேனிலைப்பள்ளி மாணவி காவியரசி 1137 மதிப்பெண் பெற்று 3ம் இடமும் பெற்றனர்.

மாவட்டத்தில் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம்: தமிழ்- 97.67, ஆங்கிலம்-97.96, இயற்பியலில் 98.27, வேதியியல்- 98.39, உயிரியல்-97.27, தாவரவியல்- 94.9, விலங்கியல்-95.12, புள்ளியியல்- 98.09, கணினி அறிவியல்- 98.74, கணிதம்-94.99 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

18/05/2016

அரசுப்பள்ளிகளில் 1179 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்த காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாம்பேட்டை பள்ளி மாணவி சரண்யாவிற்கு வாழ்த்துக்கள்....!!!

17/05/2016

Wish you all the best for 12th students who deliberately awaiting for d day....

06/01/2016

We have reached an milestone
1000 Followers....

Congrats and thanks to everyone.....

06/01/2016
அப்துல் கலாம் - இந்தியாவின் நாயகன்...பல இடங்களில் தன் நாட்டையும் தன் தாய் மொழியான தமிழையும் தலைத்தோங்க செய்த மகாண்...சிற...
31/07/2015

அப்துல் கலாம் - இந்தியாவின் நாயகன்...
பல இடங்களில் தன் நாட்டையும் தன் தாய் மொழியான தமிழையும் தலைத்தோங்க செய்த மகாண்...

சிறந்த மனிதர் என்பதற்கு உதாரணமாய் திகழ்ந்தவர் என்பதில் மாற்று கருத்தேதுமில்லை...

ஆனால் தனது கடைசி கால கட்டங்களில் அவர் கூடங்குளம் அனுமின் நிலையம் மற்றும் நியுட்ரிணோ பற்றியும் அவர் தெரிவித்த கருத்துக்கள் சில என் மனதில் சற்று நெரிடிவிட்டது...

அவர் அதை சிலரின் அரசியல் வற்புருத்தலுக்காக கூறி இருப்பாரோ என்றும் அது இன்றய மாணவர்களுக்கு தவறுதலாக சென்று விடக்கூடாது என்று ஐயப்படுகிறேன்....

எதுவாயினும் அவர் ஆத்மாவக இம்மண்ணை பாதுகாப்பார் என்ற என்னத்தோடு வணங்கி என் அஞ்சலியை அர்பணிக்கிறேன்....

Address

Pudukkottai
622001

Telephone

04322 221850

Website

Alerts

Be the first to know and let us send you an email when TELC Higher Secondary School, Pudukkottai. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category