Take-Off IAS Academy

Take-Off IAS Academy TAKE-OFF IAS ACADEMY

வேலை வேண்டுமா? - ஆசிரியர் ஆகலாம்   தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TNTET) மார்ச் 6 முதல் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நா...
01/03/2017

வேலை வேண்டுமா? - ஆசிரியர் ஆகலாம்



தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TNTET) மார்ச் 6 முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய TNTET என்ற ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வினைத் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திவருகிறது. 2017-க்கான ஆசிரியர் தகுதித் தேர்வைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பம் விநியோகம்: மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை (காலை 9 முதல் மாலை 5 வரை)

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 23 மார்ச் 2017 (மாலை 5 மணி)

தேவையான தகுதி

தாள் 1: ஆசிரியர் கல்விப் பட்டயம் (Diploma in Teachers Education- DIET) / அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் ஆரம்பக் கல்வி பட்டயம் (Diploma in Elementary Education from a Recognized Teacher Training Institute- D.E.Ed.) தாள் 1 எழுதலாம். D.E.Ed. (2016-17) படித்துக்கொண்டு இறுதியாண்டு தேர்வை எழுதவிருப்பவர்களும் தாள் 1 எழுதத் தகுதியானவர்கள் (சான்றிதழ் சரிபார்ப்பின்போது அவர்கள் D.E.Ed. சான்றிதழை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்). பார்வையற்றவர்கள் தாள் 1-ஐ எழுத முடியாது.

தாள் 2 : இளநிலை கல்வித்தகுதியுடன் (B.A. / B.Sc. / B.Litt.) ஆசிரியர் பயிற்சி படிப்பு (B.Ed.) முடித்தவர்கள் தாள் 2 எழுதலாம். ஆசிரியர் பயிற்சியில் இறுதியாண்டு படிப்பவர்கள் கல்வி சான்றிதழை சமர்ப்பித்துவிட்டு இரண்டாம் தாளை எழுதலாம்.

தாள் 1 தேர்வு D.T.ED.,/D.E.Ed. தகுதிக்கும், தாள் II தேர்வு B.A/B.Sc./B.Litt. with B.Ed. தகுதிக்கும் நடத்தப்படும்.

எழுத்துத் தேர்வு

தாள் 1: ஏப்ரல் 29, 2017 (காலை 10 முதல் மத்தியம் 1 வரை)

தாள் 2: ஏப்ரல் 30, 2017 (காலை 10 முதல் மத்தியம் 1 வரை)

கூடுதல் தகவல்களைப் பெற http://trb.tn.nic.in/ என்ற இணையத்தைப் பார்வையிடவும்

All Queries / Clarifications relating to Employment Seniority and other issues may be got from the Director of Employment and Training, Guindy, Chennai - 600 032.  Website: tn.gov.in

BREAKING NEWS   EXAM
23/02/2017

BREAKING NEWS EXAM

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணை குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு...
02/02/2017

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணை குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவி வேளாண்மை அதிகாரி தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியாகும். 326 பணியிடங்களுக்கான இந்த தேர்வு ஜூலை 16-ந் தேதி நடக்கிறது.

குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாக இருக்கிறது. 682 பணியிடங்கள் கொண்ட இந்த தேர்வு ஆகஸ்டு 6-ந் தேதி நடைபெறும்.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு ஜூன் முதல் வாரம் அறிவிப்பு வெளியாக உள்ளது. 494 பணியிடங்களுக்கான இந்த தேர்வு செப்டம்பர் 17-ந் தேதி நடத்தப்படும்.

தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்டு 2-வது வாரத்தில் வெளியாகிறது. 100 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நவம்பர் 26-ந் தேதி நடைபெறும்.

குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் 2-வது வாரத்தில் வெளியாகும். 1788 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு 2018-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி நடைபெறுகிறது.

மொத்தத்தில் இந்த வருடம் 26 வகையான தேர்வுகள் நடத்தப்படும். அடுத்த வருடம் 2 தேர்வு நடத்தப்படும். 28 தேர்வுகளிலும் சேர்ந்து 3 ஆயிரத்து 781 பேர் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

தேர்வாணையத்தால் பட்டியலிடப்பட்ட பணிகள், பதவிகளில் ஏதேனும் ஒரு சில பதவிகளுக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக அட்டவணைக்குரிய காலத்திற்குள் நடத்தப்பட முடியாவிட்டால் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகக்கூடும். காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்விற்கு பிறகோ கூட மாறுதலுக்கு உட்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர் - ஐ.பி.எஸ். ஆன பேருந்து ஓட்டுநர்!சென்னையின் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பேருந்தை ஓட்...
18/12/2016

யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர்
- ஐ.பி.எஸ். ஆன பேருந்து ஓட்டுநர்!
சென்னையின் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பேருந்தை ஓட்டிய கா.சிவசுப்ரமணி, ஐ.பி.எஸ். ஆகியுள்ளார். இவருக்கு, 2010-ம் வருட பேட்ச்சில், ஒடிசா மாநிலப் பிரிவில் ரூர்கேலாவின் பயிற்சி ஏ.எஸ்.பி., மல்காங்கிரியில் சப்டிவிஷன் ஆபிஸர் மற்றும் ஏ.எஸ்.பியாக இருந்து தற்போது ராயகடா மாவட்ட எஸ்.எஸ்.பியாகப் பணியாற்றுகிறார்.
ஓட்டுநராக கல்லூரியில்…
விழுப்புரம் மாவட்டம் நேமூர் கிராமத்தில் பிறந்து தமிழ்வழிக் கல்வியில் படித்தவர் சிவசுப்ரமணி. மேற்படிப்பு கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர் பிரிவில் பயின்றார். ஆரம்பத்தில் குறுகிய காலத்துக்கு ஒரு இடத்தில் வேலை செய்துவிட்டு பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஊரப்பாக்கத்தில் லாரி மற்றும் பேருந்து பணிமனை தொடங்கினார். அப்போது சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியின் 30 பேருந்துகளைப் பராமரிக்கும் பணி கிடைத்தது. அப்படியே பேருந்தின் ஓட்டுநராகவும் வேலை செய்தார். அப்போது, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ரமேஷ், யூ.பி.எஸ்.சி.-ல் சென்ட்ரல் செக்ரடரியட் சர்வீஸ் பெற்ற செய்தி, ‘யூ.பி.எஸ்.சி. பாஸ் செய்த விவசாயி மகன்’ என்ற தலைப்பில் 1999-ல் வெளியானது. இதைப்படித்த சிவசுப்ரமணிக்கு தானும் அரசு அதிகாரியாக வேண்டும் என முதன்முறையாகத் தோன்றியது.
கல்லூரிப் பேருந்தை ஓட்டிய நேரம் போக மற்ற நேரங்களில் கல்லூரி நூலகத்தில் அனுமதி வெற்று யூ.பி.எஸ்.சி. சம்பந்தமான புத்தகங்களைத் தேடி படிக்க ஆரம்பித்தார். ஆனால் பட்டப் படிப்பு இல்லாமல் யூ.பி.எஸ்.சி. எழுத முடியாது என்பதால் சொந்த கிராமத்துக்கே திரும்பினார். விவசாயம் செய்தபடியே பிளஸ் டூ மற்றும் பி.ஏ. வரலாறு ஆகியவற்றை அஞ்சலில் படித்துத் தேர்ச்சிபெற்றார். அதை அடுத்து, அரசு பணி மற்றும் வங்கிகளுக்கான தகுதித்தேர்வுகளையும் எழுதினார். இவற்றில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் சிறப்பான பயிற்சி கிடைத்தது. ஆறு முறை யூ.பி.எஸ்.சி. முயன்றவருக்கு இறுதியில் ஐ.பி.எஸ். கிடைத்தது.
பயிற்சி நிலையம் கட்டாயம் இல்லை
“முதல் இரண்டு முயற்சிகளில் முதல்நிலை தேர்வில் வென்றாலும் இரண்டாம்நிலை தேர்வில் வரலாறு பாடத்தில் சறுக்கினேன். மூன்றாவது முறை தமிழ் இலக்கியத்துடன் விருப்பப் பாடமாகப் புவியியலையும் எடுத்தபோது, இரண்டாம் நிலையில் வெற்றி கண்டேன். ஆனால் நேர்முகத் தேர்வில் வெற்றியை வெறும் 8 மதிப்பெண்களில் தவற விட்டேன். அப்போது மனம் உடைந்த எனக்கு சகோதரர் இரமேஷ் ஊக்கம் அளித்தார். அதே உத்வேகத்தில் முயற்சி செய்து ஆறாவது முறையில் ஐ.பி.எஸ். ஆனேன்” என்கிறார் சிவசுப்ரமணி.
யூ.பி.எஸ்.சி.க்கு முயற்சி செய்தபோது விருத்தாச்சலம், திருச்சி ஆகிய ஊர்களில் ரயில்வேயில் வேலை செய்தார் சிவசுப்ரமணி. அப்போது யூ.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநரான சுரேஷ்குமாரின் ‘தன்னார்வ பயிலும் வட்டம்’ பெரிதும் உதவியது.
‘தனியார் பயிற்சி நிலையங்களில் படித்தால் யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியும் என்றில்லை. இந்த தேர்வுக்குத் தயாராகும் நண்பர்களிடமும் சீனியர்களிடமும் சந்தேகங்களைக் கேட்டுதான் நான் தயாரானேன். பள்ளியில் தமிழ்வழிக் கல்வி படித்தாலும், முயற்சி செய்து ஆங்கில நூல்களையே படிப்பது நல்லது. தமிழில் படித்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்பது கடினமானது. இதில், நேரமும் வீணாகும். நேர்முகத் தேர்வை சந்திக்க மாதிரிப் பயிற்சிகள் அவசியம்’ என்கிறார் சிவசுப்ரமணி.
பணி அனுபவம்
மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக ஒடிசா இருப்பதால் அங்கு பொறுப்பேற்கப் பொதுவாக அதிகாரிகள் தயங்குகிறார்கள். ஆனால் சிவசுப்ரமணி ஒடிசாவில் நியமிக்கப்பட்டபோது மகிழ்ந்தார். அவருடைய கறாரான நடவடிக்கையால் ஒடிசா காவல்துறையினர் ‘கமாண்டர்’ எனும் பட்டப்பெயரில் அழைக்கின்றனர். ‘ஐ.பி.எஸ். பெறுவது வெற்றிக்கான அடிப்படையே தவிர முழுமையான வெற்றி அல்ல. இதில் சிறப்பாக செயலாற்றி மக்களுக்கு நற்பணிகள் செய்வதில்தான் உண்மையான வெற்றி உள்ளது’ என்கிறார் சிவசுப்ரமணி.
நான் படித்தவை
# ‘நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம்’ - இறையன்பு, ஐ.ஏ.எஸ்.
# முதல்நிலைக்காக:
6 முதல் பிளஸ் டூ வரையிலான என்.சி.இ.ஆர்.டி பாட நூல்கள்.
# பொது அறிவு:
The Hindu, Wizard and Civi Chronicle.
# Tata Mcgraw Hil Unique guides.
இரண்டாம் நிலையில்
வரலாற்றுப் புத்தகங்கள்
# ‘The Wonder that was India’, A.L. Bhasham
# ‘Advanced Study in the History of the Medieva ’, Vo , II and III, J.L. Mehta
# ‘Modern India 1885-1947’, Sumit Sarkar
# India’s Struggle for Independence’, Bipin Chandra
புவியியல் புத்தகங்கள்
# Physica Geography, Savindra singh
# Environmenta , Savindra Singh
# Human and Economic Geography, Goh ChengLeong and Gillian Cla ...

19/10/2016

Dear Students,

Take-off IAS Academy Pudukkottai.
is conducting Group 4 mock test on Sunday(23/10/2016) at 10 am to 1 pm.

Detailed discussion will be held from 2 pm to 5

Only 150 Students allowed so reservation must.

Entry fee : Rs 30

8508774448/ 8508774449

inform your friends too

வேலை வேண்டுமா? - மத்திய அரசுப் பணியில் ஜூனியர் இன்ஜினீயர்மத்திய அரசின் குரூப்-ஏ அதிகாரிகள் யூ.பி.எஸ்.சி. எனப்படும் மத்...
04/10/2016

வேலை வேண்டுமா? - மத்திய அரசுப் பணியில் ஜூனியர் இன்ஜினீயர்

மத்திய அரசின் குரூப்-ஏ அதிகாரிகள் யூ.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதே போல், மத்திய அரசின் சார்நிலைப் பணியாளர்களான குரூப்-பி அதிகாரிகளும், குரூப்-சி ஊழியர்களும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் என அழைக்கப்படும் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகத் தேர்வுசெய்யப்படுகிறார்கள். அந்த வகையில், மத்திய அரசின் பொதுப்பணித் துறை, மத்திய நீர் ஆணையம், மத்திய நீர்மின் ஆராய்ச்சி நிலையம் போன்றவற்றில் இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களும் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன.

இந்த நிலையில், சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஆகிய பொறியியல் பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்குப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் எத்தனை என்பது அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், ஏறத்தாழ 1,000 காலிப் பணியிடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடிப்படைத் தகுதி

இளநிலைப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கச் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப் பிரிவில் டிப்ளமா அல்லது பொறியியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரையில், பணியின் தன்மைக்கு ஏற்ப 27, 30, 32 என வெவ்வேறு உச்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

தேர்வுக்குத் தயாராகலாமா?

தகுதியுள்ள நபர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். இதில், பொது விழிப்புத் திறன், ரீசனிங், பொது அறிவு மற்றும் பொறியியல் ஆகிய பகுதிகளிலிருந்து கேள்விகள் இடம்பெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த நிலை தேர்வான விரிவாக விடையளிக்கும் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதில் பொதுப் பொறியியல், சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவு ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

முதல்கட்டத் தேர்வான ஆன்லைன் எழுத்துத் தேர்வு டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. உரிய கல்வித்தகுதியும், வயது தகுதியும் உடையவர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.ssconline.nic.in) விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுமுறை, தேர்வுக்கான பாடத்திட்டம், துறைகள் வாரியான பணியிடங்கள், ஒவ்வொரு பணிக்கும் உரிய கல்வித் தகுதி முதலான விவரங்களைப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.ssc.nic.in) விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்

21/09/2016

Address

5711, 2nd Floor, PCC(Magalir Bank ), Santhanathapuram 2nd Street
Pudukkottai
622001

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

8508774448

Alerts

Be the first to know and let us send you an email when Take-Off IAS Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category