04/09/2020
நமது பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் பெருமிதம் கொள்வோம்👏🏼👏🏼👏🏼, வாழ்த்துகள் Mohamed Hanifa
"என்னை நான் நேசித்த தருணம்" இது தற்பெருமைக்காக பதிவிடவில்லை. 29.8.2020 அன்று என்மகள் NATA. Exam எழுத சென்றபோது நடந்த நிகழ்வு. வானகரம் PragyaTegnology ல் Nata exam center. 12.30 மணி தேர்வுக்கு 11.15 க்கே வந்துவிடவேண்டும் என்றார்கள்.11 மணிக்கே நாங்கள் சென்று காத்திருந்தோம்.11.15 மணிமுதல் செக்பண்ணி ஒவ்வொருவராக உள்ளே அனுப்பினார்கள்.ஒருபையனை ஏதோ காரணத்திற்காக திருப்பி அனுப்பிவிட்டார்கள்.அதை, பெற்றோகள் நிற்கும் பகுதியில் நின்றிருந்த நான் பார்த்துவிட்டேன்.அந்தப்பையனை அனுகி உதவலாமென அவனைநோக்கி கூட்டத்தை விலக்கிக்கொண்டு நான் செல்லமுடியவில்லை அதற்குள் அந்தப்பையனும் சென்றுவிட்டான். அடுத்து இன்னொரு பையனை Original ID(ஆதார்)இல்லையென அனுமதிக்கவில்லை.அவன் தன்தாயுடன் திருப்பத்தூரிலிருந்து வந்திருந்தான்.உடனே அவனை அழைத்துக்கொண்டு, Two Wheeler வைதிருப்பவர்களிடம் , அருகிலுள்ள Browsing center ல் Adhaar color photo print எடுத்துவர உதவுமாறு ஐந்தாறு நபர்களிடம் கெஞ்சினேள். யாருமே உதவ முன்வரவில்லை. சாக்குபோக்கு சொல்லி , உதவ மறுத்துவிட்டார்கள்.ஒவ்வொருவரிடமாக நான் கெஞ்சுவதை பார்த்துக்கொண்டிருந்த ஒருபையன், அண்ணா நான் கூட்டிட்டுப்போரேன் என்றான்.நான் இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு எவ்வளவு தூரமானாலும் தேடிப்பிடித்து எடுத்துவருமாறு சொல்லி அனுப்பினேன். திருப்பி அனுப்பப்பட்ட ஆறு மாணவர்களில், முதலில் கூட்ட நெரிசலில் விடுபட்ட மாணவனைத்தவிர, மீதம், ஐந்து மாணவ மாணவியர்களை என்னால் இயன்றவரை போராடி, எப்படியோ முயற்சி செய்து கடைசி மாணவனை 12 45 க்கு (15 நிமிடம் Late. Allowed) உள்ளே அனுப்பியபின்னர்தான் நிம்மதியானேன்.வந்திருந்த காவல் துறை ஆண், பெண் காவலர்களும் என் செய்கையை பார்த்து சந்தோசித்தனர்.ஒவ்வொரு மாணவனையும் நான் அவர்களின் பிரச்சினையை புரிந்து தக்க ஏற்பாடு செய்து வெற்றிகரமாக தேர்வு மையத்துக்குள் அனுப்பி வைத்தவுடன் அவகளின் பெற்றோர்களின் கண்கள் சந்தோஷத்தில் பனித்தன.கையெடுத்து கும்பிட்டு இந்தக்காலத்தில் இப்படி ஒரு மனிதனா என்று சொல்லி என்கைகளை பிடித்து நன்றி சொன்னபோது எனக்கே அத்துனைபேர் முன்னிலையில் கூச்சமாக இருந்தது..ஒன்னேகால் மணிநேரம் ஒரு நிமிடம்கூட வீனாக்காமல் சக்கரமாய் சுழன்று யாரையும் விட்டுவிடாமல் நல்லவிதமாக உள்ளே அனுப்பி வைத்துவிட்டுத்தான் ஓய்ந்தேன்.இந்த செய்கை நான் திட்மிட்டதில்லை.முதலாவதாக திரும்பிச்சென்ற மாணவனின் முகத்தில் கண்ட சோகமும்,ஏமாற்மும் என்னை இனி எந்த மாணவனும் தேர்வெழுதாமல் திரும்பி செல்ல விடக்கூடாது என முடிவெக்கவைத்து அடுத்த கணமே காரியத்தில் இறங்கி இறைவனின் பேருதவியால் நல்லவிதமாக நடந்தது.இது என்னை நான் நேசித்த தருணம் என்பதைவிட அங்கு என் செயலை எல்லோரும் நேசித்த தருணம்.இதில் எனக்குள் எவ்வித பெருமையோ, செருக்கோ ஏற்படவில்லை.என்மனநிலை எப்பொழுதும்போல் சாதாரணமாக சமநிலையில்தான் இருந்தது.