14/03/2025
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள J குரூப்ஸ் கல்வி நிறுவனத்தின் சேசு பாலிடெக்னிக் கல்லூரியில் 8-ஆம் ஆண்டு விளையாட்டு விழா, பரிசளிப்பு விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா உற்சாகம் நிறைந்த ஒரு துடிப்பான நிகழ்வாக அமைந்தது. இன்றைய நிகழ்வுகளைக் காண ஆர்வத்துடன் மாணவர்கள் வழிமீது விழிவைத்து அரங்கத்தில் கூடியிருந்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் சேர்மன் திரு. S.சேசுதாஸ் மற்றும் கெளரவ விருந்தினர்கள் துணை சேர்மன். திரு.J.வின்சன், நிர்வாக இயக்குனர்.திரு. S.சேவியர், அறங்காவலர்.திரு.A.மரிய அருள், செயலாளர் திரு.J.அந்தோணிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். விழா தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து முதல்வர் Er. R. ரமேஷ்குமார் அன்பான வரவேற்பு அளித்தார், கல்லூரியின் சாதனைகள் வருடாந்திர அறிக்கைகள் மூலம் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இந்த விழாவில் மாணவர்களை கௌரவிக்கும் விதமாக அக்டோபர் 2024 வாரியத் தேர்வில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் (679/700) பெற்ற சிவில் துறை மாணவர் G. அஜித்குமார் -க்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது மேலும் கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் கல்வித் திட்டங்களில் பங்கேற்பது, அவர்களின் திறன்களை சோதிக்கவும் மதிப்பீடு செய்யவும் உறுதுணையாக இருந்தது. ஒவ்வொரு மாணாக்கருக்கும் கற்றல் முறையை ஊக்குவிக்கவும், நல்ல விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும் J குரூப்ஸ் கல்வி நிறுவனம் இந்த முப்பெரும் விழாவில் வாய்ப்பளித்துள்ளது, மணாக்கர்களுக்கு பொதுப் பேச்சு, மேடை பயம் தன்னம்பிக்கை இல்லாமை குறித்த பயங்களை போக்குவதற்கான நல்ல சூழலை J குரூப்ஸ் கல்வி நிறுவனம் உருவாக்குகிறோம். கல்வி, விளையாட்டு மற்றும் நுண்கலைகளில் சிறந்து விளங்கியதற்காக சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எதிர்காலத்தில் எங்கள் கல்லூரியின் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் இன்னும் பல விழாக்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது எங்கள் உண்மையான நம்பிக்கை
நிறைவான இந்த ஆண்டு விழா, ஒவ்வொரு மாணவரும் முன்னோக்கி வரவும், கல்வி மற்றும் கல்விசாரா செயல்பாடுகளில் சிறப்பாக விளங்கவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது.மேலும் எங்கள் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் கலை போன்ற படைப்பாற்றலைக் கூட கருத்தில் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்வி குழுமத்தின் மூன்று கல்லூரியின் முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ / மாணவிகள் மற்ற பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
Facebook