Athayi Islamic Women's College, Puducherry

Athayi Islamic Women's College, Puducherry

Share

Athayi Islamic Women’s College, Puducherry

Photos from Athayi Islamic Women's College, Puducherry 's post 06/07/2026

ATHAYI ISLAMIC WOMEN'S COLLEGE, புதுச்சேரி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

06.07.2026 (திங்கட்கிழமை) அன்று நம் கல்லூரியில் நடைபெற்ற வாராந்திர தேசியக் கொடியேற்ற நிகழ்வு அல்லாஹ்வின் பேரருளால் சிறப்பாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்நிகழ்வு, நமது கல்லூரியின் தலைவர் P.K.Y. அப்துல் சமது ஹாஜியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலும், Starlight Kids School-இன் தாளாளர் திருமதி. கோகிலா லக்ஷ்மி. J., MCA., B.Ed. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவிகள் சமூக வலைத்தளங்களின் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பான நாடகத்தை அரங்கேற்றினர். மாணவிகளின் சிறந்த நடிப்பும், கருத்து நிறைந்த காட்சிகளும் அனைவரின் பாராட்டைப் பெற்றன.

அல்ஹம்துலில்லாஹ்!

அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய திருமதி. கோகிலா லக்ஷ்மி. J. அவர்கள், மாணவிகள் அரங்கேற்றிய நாடகத்தை மேற்கோள் காட்டி, இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், பெண் கல்வியின் முக்கியத்துவம், நல்லொழுக்கத்தின் அவசியம், சிறந்த பண்புகளை வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவம் ஆகியவற்றை தெளிவாக எடுத்துரைத்து, மாணவிகளுக்கு பயனுள்ள அறிவுரைகளையும் ஊக்கமளிக்கும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, நமது கல்லூரியின் பேராசிரியர்களான பரீரா தபஸ்ஸும் முஅஸ்கரிய்யா அவர்களும், ஷாகின் பானு, MBA. அவர்களும் மாணவிகளுக்கு பயனுள்ள அறிவுரைகளையும் ஊக்கமளிக்கும் கருத்துகளையும் வழங்கினர்.

மேலும், அண்மையில் நடைபெற்ற Fresher's Meet நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவில், நமது கல்லூரியின் பேராசிரியை ஷாகின் பானு, MBA. அவர்கள் சிறப்பு விருந்தினர் திருமதி. கோகிலா லக்ஷ்மி. J., MCA., B.Ed. அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செலுத்தினார்.

அல்லாஹ் தஆலா இந்நிகழ்வில் பங்காற்றிய அனைவரின் நற்சேவைகளையும் ஏற்றுக்கொண்டு, நமது கல்லூரிக்கு மேலும் பல நற்பணிகளை மேற்கொள்ளும் அருளையும் பரக்கத்தையும் வழங்குவானாக. ஆமீன்.

ஜஸாகுமுல்லாஹு கைரன். 🌹

தொடர்புக்கு - 9445106448

Photos from Athayi Islamic Women's College, Puducherry 's post 18/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அல்ஹம்துலில்லாஹ்!

15.06.2026 (திங்கட்கிழமை) அன்று நம் கல்லூரியில் நடைபெற்ற வாராந்திர தேசியக் கொடியேற்ற நிகழ்வு அல்லாஹ்வின் பேரருளால் சிறப்பாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்நிகழ்வு, நமது கல்லூரியின் *தலைவர் P.K.Y. அப்துல் சமது ஹாஜியார்* அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலும், பைஸுர் ரஹ்மான் பள்ளிவாசலின் முத்தவல்லி *அல்-ஹாஜ் ஜனாப் Z. முஹம்மது இப்ராஹிம் அவர்களும்*, அவர்களின் துணைவியார் *அல்-ஹாஜா H. ஜீனத் நிஷா* அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில், நமது கல்லூரியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளான *ஆயிஷா பாத்திமா அதாயி ஆலிமா அவர்கள் AI பற்றியும் மற்றும் தாஹிரா அதாயி ஆலிமா அவர்கள் "பெண் கல்வியின் அவசியம்"* என்ற தலைப்பில் சிறப்பான உரையாற்றினர்.

அல்ஹம்துலில்லாஹ்!
இந்நிகழ்வு மாணவிகளுக்கு மிகுந்த ஊக்கத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

நிகழ்ச்சியின் நிறைவில், நமது கல்லூரியின் தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி மரியாதை செலுத்தினார்.

அல்லாஹ் தஆலா இந்நிகழ்வில் பங்காற்றிய அனைவரின் நற்சேவைகளையும் ஏற்றுக்கொண்டு, நமது கல்லூரிக்கு மேலும் பல நற்பணிகளை மேற்கொள்ளும் அருளையும் பரக்கத்தையும் வழங்குவானாக. ஆமீன்.

ஜஸாகுமுல்லாஹு கைரன். 🌹

Photos from Athayi Islamic Women's College, Puducherry 's post 17/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

🌸 அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி
புதுச்சேரி

🎭 இஸ்லாமிய நாடகம் – நிகழ்வு சிறப்புப் பதிவு

📅 14.06.2026

"மொபைல் போனின் தீங்குகளும் அதன் பயன்பாட்டு ஒழுக்கங்களும்" என்ற தலைப்பில், மொபைல் போனின் அளவுக்கு மீறிய பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், அதன் சமூக மற்றும் ஆன்மீக விளைவுகள், மேலும் அதனைப் பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய ஒழுக்க நெறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகளால் சிறப்பாக இஸ்லாமிய நாடகம் அரங்கேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சி மாணவிகளிடையே நல்ல சிந்தனையை உருவாக்கியதோடு, தொழில்நுட்பத்தை பொறுப்புடனும் மார்க்க வழிகாட்டுதலுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

📸 இந்நிகழ்வின் சில அழகிய தருணங்கள் உங்கள் பார்வைக்கு.

📖 "அறிவும், அமலும், நல்லொழுக்கமும் இணைந்த கல்வியே எங்கள் இலக்கு."

🎓 2026–2027 கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

📞 சேர்க்கை தொடர்புக்கு: 9445106448

அல்லாஹ் ﷻ நமது மாணவிகளின் அறிவையும், அமலையும், நல்லொழுக்கத்தையும் மேலும் வளரச்செய்து, இம்மை மறுமை வெற்றியை அருள்வானாக. ஆமீன். 🤲

28/05/2026
18/05/2026

https://youtube.com/shorts/RhTLVgTxndE?si=HHznnb4MCNdOKkPP

அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி – புதுச்சேரி

📢 *குர்பானி கொடுப்போருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு*

https://youtube.com/shorts/RhTLVgTxndE?si=HHznnb4MCNdOKkPP

⚠️ மகரிப் பிறகு இதனை செய்யக்கூடாது.
📞 அட்மிஷன் தொடர்புக்கு: 9445106448

08/05/2026

அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி
ATHAYI ISLAMIC WOMEN’S COLLEGE
சுல்தான்பேட்டை, வில்லியனூர், புதுச்சேரி
மார்க்க கல்வி கற்றுக்கொண்டே ரெகுலர் முறையில் பள்ளி கல்வியையும் பயின்று, நல்ல மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவிகளை கல்லூரியின் சார்பாக வாழ்த்துகிறோம். இன்னும் பல சாதனைகள் படைக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம்.

8, 10, 12 ஆம் வகுப்பு முடித்த பெண் பிள்ளைகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது
அட்மிஷன் தொடர்புக்கு:
📞 9445106448
📞 9840568273

Photos from Athayi Islamic Women's College, Puducherry 's post 03/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அல்ஹம்துலில்லாஹ்!
01.05.2026 அன்று நமது புதுச்சேரி அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் *அரசியல் மற்றும் சமூகத் துறை சார்ந்த கலந்துரையாடல் நிகழ்வு* சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு நமது கல்லூரியின் தலைவர் P. K. Y. அப்துல் சமது ஹாஜியார் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், தாய்தமிழ் வாழும் பல்வேறு நாடுகள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு சென்று இனிய தமிழில் உரையாற்றி கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சிறந்த எழுத்தாளரும் அறிஞருமான
*முனைவர். மானசீகன் @ ரா. முகமது ரபீக்* M.A., M.Phil., NET., PhD.
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரி, உத்தமபாளையம்
அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் அரசியல் குறித்து நமது பார்வை எவ்வாறு இருக்க வேண்டும், பக்குவம் அடையும் வயது எது, சிந்தனைத் தெளிவை எவ்வாறு பெற முடியும் என்பன போன்ற முக்கியமான தலைப்புகள் குறித்து சிறப்பான முறையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும், நமது கல்லூரி மாணவிகள் அரசியல் மற்றும் சமூகத் துறைகளைச் சார்ந்த பல்வேறு கேள்விகளை எழுப்பி தெளிவுகளை பெற்றனர். மாணவிகள் இந்நிகழ்வில் உற்சாகத்துடனும் ஆழ்ந்த கவனத்துடனும் கலந்து கொண்டு கலந்துரையாடலை கேட்டு பெரும் பயனடைந்தனர்.
நிகழ்வின் இறுதியில், நமது அதாயிக கல்விக் குழுமம் சமூகத்திற்கு செய்து வரும் சிறப்பான சேவைகளைப் பற்றி சிறப்பு விருந்தினர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.

இறுதியாக, நமது கல்லூரியின் தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளதாகவும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிப்பதாகவும் அமைந்தது.
ஜஸாக்கல்லாஹு கைரா.

Want your school to be the top-listed School/college in Pondicherry?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Arasur Road Sulthanpet Villianur Puducherry
Pondicherry
605110

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm