NGNG Hr Sec School

NGNG Hr Sec School பழைய நட்புகள் மீண்டும் இங்கே புதுப்பிக்க ஒரு வாய்ப்பு..

ஏறியவன் எங்கோ மேலேயிருக்க ஏற்றிவிட்ட ஏணி மட்டும் அதே இடத்தில் அடுத்தவனை ஏற்றிவிட்டு கொண்டிருக்கிறது.. ❤️
18/09/2020

ஏறியவன் எங்கோ மேலேயிருக்க ஏற்றிவிட்ட ஏணி மட்டும் அதே இடத்தில் அடுத்தவனை ஏற்றிவிட்டு கொண்டிருக்கிறது.. ❤️

துயர செய்தி:- உயர்திரு. நல்லுசாமி (கணித ஆரிசியர்) இறைவனடி சேர்ந்துவிட்டார்.அங்கலகுறிச்சியில் இன்று (13/9/2020)அதிகாலை 2 ...
13/09/2020

துயர செய்தி:-

உயர்திரு. நல்லுசாமி (கணித ஆரிசியர்) இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அங்கலகுறிச்சியில் இன்று (13/9/2020)அதிகாலை 2 மணியளவில் இருதய வலியால் மருத்துவமனை செல்லும் போது உயிர் பிரிந்தது..😢😢😱

ஐயாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.. ஆழ்ந்த இரங்கல்கள்.. 😢😢🙏

கரும்பலகையையும், சுண்ணாம்பையும் வைத்துஉலகத்தின் வரலாற்றையும், மாணவர்களின் வருங்காலத்தையும்  ஒருங்கே எழுதும்உலகத்தின் வடி...
05/09/2020

கரும்பலகையையும், சுண்ணாம்பையும் வைத்து
உலகத்தின் வரலாற்றையும், மாணவர்களின் வருங்காலத்தையும் ஒருங்கே எழுதும்
உலகத்தின் வடிவமைப்பாளர்கள் அவர்கள்.!

ஆசிரியர் தின வாழ்த்துகள் 💐🥰

நமது பள்ளியின் முன்னாள் மாணவர்தேசவீரனுக்கு வீரவணக்கம்!தந்தைக்கு நேர்ந்த அதேசோகம் மகனுக்கும். எல்லையில் இறந்த தென்காசி வீ...
05/05/2020

நமது பள்ளியின் முன்னாள் மாணவர்

தேசவீரனுக்கு வீரவணக்கம்!

தந்தைக்கு நேர்ந்த அதேசோகம் மகனுக்கும். எல்லையில் இறந்த தென்காசி வீரரின் குடும்பத்தை துரத்தும் துயரம்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்றுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர், சந்திரசேகர். 31 வயதான இவருக்கு ஜெனி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். சந்திரசேகர் கடந்த 2014 முதல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
கடந்த ஒரு வருடமாக ஜம்மு - காஷ்மீரில் உள்ள குப்வாரா என்ற இடத்தில் பணியாற்றி வந்தார். எல்லைப் பகுதியில் வேலை என்பதால் சந்திரசேகரின் மனைவி ஜெனி, குழந்தையுடன் திருச்சியில் உள்ள தன் தாயுடன் வசித்து வந்தார். சந்திரசேகர் பணியாற்றிய பகுதியில் நேற்று திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். அதை எதிர்த்து சி.ஆர்.பி.எப் வீரர்களும் பதிலடித் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். இந்த மோதலின்போது சந்திரசேகர், எல்லைப் பகுதியில் வீரமரணம் அடைந்தார்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் சந்திரசேகரின் மனைவி மற்றும் உறவினர்கள் வேதனை அடைந்தார்கள். 31 வயதான இளம் வீரரான சந்திரசேகரின் மரணம் அவரது குடும்பத்தினரை நிலைகுலைய வைத்துள்ளது. அவரது உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் நண்பர்கள் கூறுகையில், ``பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சந்திரசேகர் துடிப்பாக இருப்பார். அவருக்கு, தான் ஒரு ராணுவ வீரராகி நாட்டுக்காகப் பாடுபட வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. சி.ஆர்.பி.எப் பணி கிடைத்ததும் அதை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டார்.
எல்லைப் பகுதியில் அவர் வீர மரணம் அடைந்த தகவல் கிடைத்திருப்பது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சந்திரசேகரின் தந்தை செல்லச்சாமி, அச்சன்புதூர் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். அவரும் பணியில் இருந்தபோதே உயிரிழந்தவர்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

நாட்டுக்காக தன் உயிரைப் பறிகொடுத்த நம் சகோதரருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

வீரவணக்கம் வீரவணக்கம்...
சந்திரசேகரனுக்கு வீரவணக்கம்..

துயர செய்தி நம்ம பள்ளி முன்னாள் ஆசிரியர் உயர்திரு.காளியப்பன்  ஐயா அவர்கள் நேற்று 3/8/19 இரவு அவரது இல்லத்தில் இறைவனடி சே...
04/08/2019

துயர செய்தி

நம்ம பள்ளி முன்னாள் ஆசிரியர் உயர்திரு.காளியப்பன் ஐயா அவர்கள் நேற்று 3/8/19 இரவு அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்

மிகவும் அன்பானவர்
அதிர்ந்து ஒரு வார்த்தை பேசாதவர்

ஐயாவின் ஆன்மா இறை நிழலில் இளைப்பாரட்டும் 😭😭😢

12.01.2017 பொன்விழா - ஆண்டு அழைப்பிதழ்
02/01/2017

12.01.2017 பொன்விழா - ஆண்டு அழைப்பிதழ்

நமது பள்ளி பொன்விழா ஆண்டு (12-01-2017)நல்லமுத்துக்கவுண்டர் நாச்சிமுத்துக்கவுண்டர் மேல்நிலை பள்ளி, ரெட்டியாரூர்,பொள்ளாச்ச...
26/12/2016

நமது பள்ளி பொன்விழா ஆண்டு (12-01-2017)

நல்லமுத்துக்கவுண்டர் நாச்சிமுத்துக்கவுண்டர் மேல்நிலை பள்ளி, ரெட்டியாரூர்,பொள்ளாச்சி.

நாம் அனைவரும் பங்கேற்போம், விழாவை சிறப்பிப்போம்..

குறிப்பு:-
விழாவன்று பள்ளி மாணாக்கர்கள் மற்றும் அனைவருக்கும் மதிய உணவு வழங்க 2000 வருடத்தில் +2 படிப்பு முடித்த முன்னாள்மாணவர்கள் ஏற்பாடு செய்யதுள்ளோம்..

3-ம் ஆண்டு சந்திப்பு இனிதாய் அமைந்தது...நமது பள்ளி விரைவில் ஐம்பதாவது ஆண்டு பொன்விழா கொண்டாட உள்ளது.. மீண்டும் சந்திப்போ...
14/08/2016

3-ம் ஆண்டு சந்திப்பு இனிதாய் அமைந்தது...

நமது பள்ளி விரைவில் ஐம்பதாவது ஆண்டு பொன்விழா கொண்டாட உள்ளது..

மீண்டும் சந்திப்போம்.. :)

*வரும் ஞாயிறு 14.08.2016 நமது முன்னாள் மாணவர் (2000 பேட்ஜ்)சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..**காலை - 10 மணி (கலந்துரைய...
08/08/2016

*வரும் ஞாயிறு 14.08.2016
நமது முன்னாள் மாணவர் (2000 பேட்ஜ்)சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..*

*காலை - 10 மணி (கலந்துரையாடல்கள்)
மதியம் - 01 மணி (மதிய உணவு)*

அனைவரும் தவறாமல் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்...
😇😊

இந்த குழுவில் இல்லாத நமது நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..

தொடர்பு எண் -
ப. கெளரிசங்கர் +91 96-98-622234
S.M. சிவக்குமார் +91 97-50-376791

குறிப்பு:-

நிலத்தை உழ வேண்டும் என நினைப்பவனுக்கு லாந்தர் வெளிச்சமே போதுமானது..
**கண்டிப்பாக அனைவரும் கலந்துகொள்வோம்..👍

14/04/2016

1000 likes ....

08/02/2016

938 likes rocking....

Address

Pollachi
642007

Telephone

+919944101198

Website

Alerts

Be the first to know and let us send you an email when NGNG Hr Sec School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category