ஊ.ஒ.ந பள்ளி பெருந்துறை-கிழக்கு

ஊ.ஒ.ந பள்ளி பெருந்துறை-கிழக்கு

Share

எம் பள்ளி மாணவ, மாணவியர் செயல்பாடுகள?

13/09/2024

13/9/24

At the Perunthurai sub-district level chess tournament, Lopamitra, a class five student, secured the second position and was awarded a certificate and medal, which was presented to her during the morning prayer service today.

பெருந்துறை குறு வட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் ஐந்தாம் வகுப்பு மாணவி லாபமித்ரா சதுரங்கப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சான்றிதழ் மெடல் பரிசாக பெற்றுள்ளார் அவருக்கு இன்று காலை வழிபாட்டின்போது பாராட்டு தெரிவித்து வழங்கப்பட்டது

Photos from ஊ.ஒ.ந பள்ளி பெருந்துறை-கிழக்கு's post 04/09/2024

*வெற்றிச் செய்தி*

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி , பெருந்துறை - கிழக்கு.
PANCHAYAT UNION MIDDLE SCHOOL , PERUNDURAI EAST.

எல் ஐ சி யின் 68 ஆம் ஆண்டு விழா - கொண்டாட்ட வாரத்தை முன்னிட்டு , பெருந்துறை எல்ஐசி அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி பேச்சு போட்டி நடத்தப்பட்டது

பெருந்துறை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி *எட்டாம் வகுப்பு அ பிரிவு மாணவி பாரதி கிருஷ்ணா பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு* பெற்றுள்ளார் வாழ்த்துக்கள்

*ஐந்தாம் வகுப்பு ஆ பிரிவு மாணவர் மெளலீஷ் ஓவியப் போட்டியில் இரண்டாம் பரிசு* பெற்றுள்ளார் . வாழ்த்துக்கள்

*ஐந்தாம் வகுப்பு ஆ பிரிவு மாணவி லோப முத்ரா ஓவியப் போட்டியில் மூன்றாம் பரிசு* பெற்றுள்ளார் . வாழ்த்துக்கள்

வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

மாணவ மாணவிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்று பங்கேற்க வைத்து அழைத்து வந்த பள்ளியின் ஓவிய ஆசிரியருக்கு பள்ளியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

The 68th anniversary of LIC was celebrated at the Perundurai East Panchayat Union Middle School with a painting and speech competition held at the Perundurai LIC office. Bharathi Krishna, a student from the 8th standard, secured the first prize in the speech competition, while Moulish and Loba Mudra, students from the 5th standard, won the second and third prizes in the painting competition. The school extends its congratulations to the winners and appreciates the art teacher's efforts.

Photos from ஊ.ஒ.ந பள்ளி பெருந்துறை-கிழக்கு's post 31/08/2024

இன்று 31/8/24

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் *ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , பெருந்துறை கிழக்குப் பள்ளி மேலாண்மை குழு* கட்டமைப்பு நடைபெற்றது

தலைமையாசிரியர் திரு வெங்கடாசலம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்

தேர்தலில் கலந்து கொள்ள பெற்றோர்கள் ஆர்வத்துடன் வருகை புரிந்திருந்தனர்.

ப மே குழு உறுப்பினர்களாக விரும்பிய பெற்றோர் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்

ப மே குழுத்தலைவராக திருமதி பொன்மணி அவர்களும்

துணைத் தலைவராக திருமதி கலா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

மாவட்டக் கல்வி அலுவலர் திரு பெல்ராஜ் அவர்கள் கலந்துகொண்டு முறையாக தேர்தல் நடைபெற்றதை பார்வையிட்டார் .

மேற்பார்வையாளர் கிராம நிர்வாக அலுவலர் திரு மா சே துங் , வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்

உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்று குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்

ப ஆசிரியர் பிரசாத் நன்றி கூறினர்

Want your school to be the top-listed School/college in Perundurai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Agraharam Street
Perundurai
638052