தமிழக ஆசிரியர் கூட்டணி,வேப்பந்தட்டை.

  • Home
  • India
  • Perambalur
  • தமிழக ஆசிரியர் கூட்டணி,வேப்பந்தட்டை.

தமிழக ஆசிரியர் கூட்டணி,வேப்பந்தட்டை. Raja Selvanayagam

08/03/2024
 #ஜாக்டோஜியோ #டிட்டோஜாக்
23/02/2024

#ஜாக்டோஜியோ
#டிட்டோஜாக்

22/02/2024

Annamalai Aifeto

நாம் போராட்ட அறிவிப்புகளை அடிக்கடி வாபஸ் பெற்றுக் கொள்வது போல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் அவர்கள் அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை திரும்ப பெற்றுவிட்டாரோ என்ற ஐயம் எழுகிறது.

*AIFETO.*
*நாள்: 22.02.2024.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு எண் : 36/2001.*

*நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் பிப்ரவரி 19 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் அறிக்கையினை தாக்கல் செய்கிற போது பேரறிஞர் அண்ணா சொன்னது போல இந்த நிதிநிலை அறிக்கையில் எங்கள் இதயம் இருக்கிறது என்று தெரிவித்தார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தடைகளை தாண்டி வளர்ச்சியை நோக்கி முன்னேறும் பட்ஜெட் என்று பெருமிதத்துடன் அறிவித்து தாக்கல் செய்தார்கள். 126 நிமிடங்கள் அழகான தமிழில் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைமையில் இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து படித்தார். தமிழ்நாட்டில் நாளேடுகள் வித்தியாசம் இன்றி சபாஷ் பட்ஜெட், நம்பிக்கை தரும் பட்ஜெட் என்றெல்லாம் தலைப்பு கொடுத்து தலையங்கத்தினை தீட்டி உள்ளார்கள்.*

*மாண்புமிகு நிதியமைச்சர் முதன்முதலாக தயாரித்த சாதுர்யமான பட்ஜெட் என்றார்கள். ஆனால் இந்த நிதிநிலை அறிக்கைகளை தயாரிப்பதற்கு துணையாக இருந்து பாடுபட்டுள்ள அலுவலர்கள், பணியாளர்கள் இந்த நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற அரசு ஊழியர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள் என்று சுமார் 12 லட்சம் பேரை பற்றி அவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக இரண்டு மணி ஆறு நிமிடம் படித்த இந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு மூன்று நிமிடமாவது இடம் பெற்றிருக்கலாமே..? ஆனால் எதுவும் இடம்பெறவில்லை.*

*மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் மனித நேயம் கொண்டவர் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் இதய பற்றாளர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலோடு மதிப்புமிகு நிதித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களின் தலைமையில் தயாரிக்கும் அறிக்கை தானே வெளியிடப்படுகிறது. வரவேற்பதற்கு ஒன்றுமே இல்லையா?*

*மாணவர்களின் கல்வி நலன் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு 44ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் ( 6 முதல் 12 ஆம் வகுப்பு ) வரை படிக்கின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயில்வதற்கு மாதந்தோறும் ரூபாய் 1000/-வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம்வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். அதேபோல் அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு "தமிழ்ப்புதல்வன் " திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் மூன்று லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. கல்விக் கடன் வழங்குவதற்கு ஒரு லட்சம் மாணவர்களுக்கு 2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. பேராசிரியர் அன்பழகனார் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டுதல் போன்ற அறிவிப்புகள் எல்லாம் வெளியிடப்பட்டுள்ளன. மேற்காணும் அறிவிப்புகளை எல்லாம் வரவேற்றுப் பாராட்டுகிறோம்.*

*முந்தைய ஆட்சியாளர்கள் காலத்தில் முற்றிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எதையும் செய்து பயனில்லை காரணம் இவர்களுடைய வாக்கு வங்கி நமக்கு ஒரு நாளும் பயன்படாது என்று திட்டமிட்டு செயல்பட்டார்கள். மக்கள் வாக்கு வங்கி எங்களிடம் உள்ளது நீங்கள் தேவை இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார்கள். ஆனால் நமது அரசு, எங்கள் அரசு என்று ஆட்சியில் அமரும்போது பெருமையுடன் கொண்டாடி மகிழ்ந்தோம். ஆனால் அவர்கள் இன்று எங்களுக்கு மக்களின் வாக்கு வங்கி உள்ளது. கூட்டணி கட்சியின் வாக்கு வாங்கி உள்ளது. நீங்கள் தேவையே இல்லை என்று நிதிநிலை அறிக்கையில் முற்றிலும் புறக்கணித்து விட்டார்கள்.*

*இன்று வந்த முரசொலி நாளேட்டில் என்ன இல்லை இந்த நிதிநிலை அறிக்கையில்? எந்த துறை இல்லை? இதில் எந்த தரப்பு தான் இல்லை? இதில் அனைவருக்குமான நிதி நிலை அறிக்கை அல்லவா? என்று தலையங்கத்தினை கண்டு நம்மையும் அறியாமல் படித்து நொந்து போகிறோம். நீங்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள், ஓய்வூதியர்கள் என 18 லட்சம் பேர் வாக்குகள் குடும்ப வாக்குகள் என சுமார் ஒன்றரை கோடி வாக்குகள் தேவை இல்லை என்று முடிவுக்கு வந்துவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர்களின் முடிவுகளை அவரவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.*

*பிப்ரவரி 14ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்தபோது மலர்ந்த முகத்துடன் சிரித்தாரே நம்மவர்களும் வாய்விட்டு சிரித்தார்களே அந்த புகைப்படத்தை பார்த்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை பிறந்தது. அந்த சிரிப்புக்கு பொருள் நம்மை பார்த்து அனுதாப சிரிப்பா..? என்று எண்ண தான் தோன்றுகிறது.*

*பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு நான்காவது நாளாக போராடும் பதிவு மூப்பு ஆசிரியர்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும், சரண் விடுப்பு அனுமதி தொடரும், பேரறிஞர் அண்ணா அறிவித்து சென்ற ஊக்க ஊதிய உயர்வு மீண்டும் அமல்படுத்தப்படும், 90 விழுக்காடு பெண் ஆசிரியர்களுக்கு பாதிப்பாக வெளிவந்துள்ள அரசான 243 உடனடியாக திரும்பப் பெறப்படும் என்றெல்லாம் அறிவிப்பு வரும் என்று விடியல் அரசை நோக்கி விடியும் வரை காத்திருந்தோமே..?*

*தேர்தல் கால வாக்குறுதிகளை முற்றிலும் திரும்பப் பெற்று விட்டீர்களா..? உங்கள் மனசாட்சியே எங்களுக்கு பதில் சொல்லட்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு நம்பிக்கையை ஊட்டி பாதுகாப்பு அளித்து வந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் நினைவிடத்தில் இருந்து எங்கள் உணர்வுகளை சமர்ப்பணம் செய்கிறோம்.*

*சங்கங்கள் போராடாமல் சங்கங்களின் வரலாற்றில் எந்த கோரிக்கையினையும் வெற்றிக் கண்டதாக சரித்திரமும் இல்லை..! வரலாற்றுப் பதிவுகளும் இல்லை..! 15ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தினை தீவிரமாக நடத்தி இருந்தால் அந்த எதிர்ப்பு உணர்வு இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை..! ஐயமும் இல்லை..! நம்பிக்கைத் தளராமல் நாடாளுமன்றத் தேர்தல் வரை காத்திருப்போம்...!*

*இழந்ததை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உணர்வுடன்,*

*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி , ஆர்வலர் மாளிகை 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600005, அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: [email protected]*

16/12/2023

*எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை எப்படித்தான் தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை?..*

*AIFETO..16.12.2023*

*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.*

📕📗📘📙📕📗📘📙📕📗📘📙

*12.12.2023 அன்று சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்ட தீர்மானங்களில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாள் ஊதியத்தினை ஜாக்டோ ஜியோ சார்பாக சுமார் 10 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வழங்குவதாக கூட்டத்தில் அறிவித்துள்ளார்கள்.*

*பிற மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் தமிழகத்தில் இதுவரை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய சுனாமி, கஜா புயல், மழை வெள்ளம், கொரனா பெருந்தொற்று போன்ற பாதிப்புகளுக்கு ஒரு நாள் ஊதியத்தினை மனமுவந்து அளித்துவந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஜாக்டோ ஜியோ இந்த ஒரு நாள் ஊதியம் வழங்கும் முடிவிற்கு எதிர்ப்புணர்வினை பல்வேறு முனைத் தாக்குதலுடன் புலனங்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது கண்டு கவலையுறுகிறோம்.*

*எனது 51 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இல்லாத அதிர்ச்சியினை கண்டு நிலை குலைந்து நிற்கிறேன்.*

*ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மனிதநேயம் இல்லாதவர்களா?.. இல்லவே இல்லை... புலனப் பதிவு சாட்டையை கையில் எடுத்துக் கொண்டு கேள்விக்கணைகளை அடுக்கிக் கொண்டு போகும் இவர்கள்..., 'ஜாக்டோ ஜியோ தலைவர்களே!.. இதுவரையில் இழந்துள்ள பணப்பயன்கள் எதையும் பெற்றுத் தர முடியாத உங்களால் எங்களின் ஒரு நாள் ஊதியத்தினை அரசுக்கு வழங்க சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?.. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனுக்காக பாடுபட்ட சங்கத் தலைவர்கள் காலம் போய், உங்களுடைய சுய விளம்பரத்திற்கும், சுய லாபத்திற்காகவும் அரசிடம் உங்களை நிபந்தனையில்லாமல் ஒப்படைத்துக் கொண்டு, உங்களிடம் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்ற ஒரு காரணத்திற்காக எங்கள் உரிமைகளை அடகு வைப்பதா?..'*

*'கோரிக்கை மாநாடு என்று பெயரிட்டால் முதல்வர் வரமாட்டார் என்று வாழ்வாதார உரிமை மீட்பு மாநாடு என்று பெயர் மாற்றினீர்கள்!.. சென்னைக்கு ஒரு லட்சம் பேர் திரண்டு வந்து கலந்து கொண்டார்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரும் என்று நம்பிக்கையுடன் வந்தார்கள். ஆனால் பணப்பலன் சார்ந்து ஒரு சிறு அறிவிப்பாவது அந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது உண்டா?.. இல்லை நடந்த சட்டமன்ற கூட்டத் தொடர் நிகழ்வுகளிலாவது பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்... கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டியவிடுப்பு சரண் செய்ய அனுமதி வழங்கப்படும்... ஊதிய முரண்பாடுகள் களையப்படும்... என்று ஒரு அறிவிப்பையாவது வெளியிட்டிருப்பார்களா?...'*

*முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள், நம்பக்கம் மக்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் செல்வாக்கு நமக்கு தேவையில்லை என்று முடிவெடுத்தார்கள். அவர் எடுத்தது தவறான முடிவு என்று அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முழுதும் பிரதிபலித்தது என்பதை வரலாறு இன்னமும் சொல்லிக் கொண்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது என்னதான் நாம் இதயப் பற்றுதலுடன் நெருங்கி நெருங்கி சென்றாலும், அவர் நம்மீது அன்பு மழை பொழிந்தாலும், நம் கோரிக்கைகள் எதையும் செய்ய முன்வரமாட்டார்கள் என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அவர்களும் நலத்திட்டங்களால் மக்கள் செல்வாக்கு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் பெருகி வருகிறது என்று செயல்பட்டு வருகிறார். நாம் இவர்களை நம்பி கெட்டது போதும்!. நம்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்காக களத்தில் நின்று போராடுவதை தவிர வேறுவழியில்லை என்பதை உணர்ந்து நம்பிக்கையுடன் கைகோர்த்து களத்தில் தொடர்ந்து நின்று இழந்த உரிமைகளை மீட்டெடுப்பொம்!..*

*மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்ட 12 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கைக்காவது அரசாணை வெளியிட்டு இருப்பார்களா?...*

*நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் பெரும்பான்மையான 14 ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள், 'இன்னமும் தலைநகரம் சென்னை வெள்ளப் பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீளவில்லை!.. அதனால் 28ஆம் தேதி கோட்டை நோக்கி மறியல் முற்றுகைப் போராட்டத்தினை தவிர்த்து விட்டு, 28ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எழுச்சிமிக்க மறியல் போராட்டத்தினை நடத்தலாம்' என்ற கருத்தினை பதிவு செய்த போதும்... அதை செவிமடுக்காதவர்கள் யார்?..யார்?.. கண்டு கொள்ளாமல் இருந்த சங்கத் தலைவர்கள் யார்?.. யார்?.. அந்த வீட்டோ பவர் உள்ள சங்கத் தலைவர்கள் யார்?.. யார்?..*

*ஜனவரி மாதத்தில் கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டத்தினை வைத்துக் கொள்ளலாம் என்று ஆசிரிய சங்க தலைவர்கள் சொன்னதை, கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே ஒரு முடிவினை எடுத்துக் கொண்டு வருகை தந்து திட்டமிட்டபடி கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது ஏன்?..*

*இவர்கள் எடுத்துள்ள முடிவுகள் பற்றி பலரின் புலனப் பதிவில் வெளிவந்துள்ள விகடகவி வார்த்தைகள். நெருப்புகள்... "நடக்கும் என்பார் நடக்காது... அப்படி எதுவும் நடக்காது இவர்கள் மீது சத்தியம்" என்ற பாடல் வரிகளோடு புலனப் பதிவுகள் உலா வந்து கொண்டுள்ளது.*

*நடந்தது என்னவென்றால் இரண்டு சங்கத் தலைவர்கள் ஒரு நாள் ஊதியத்தை நாங்கள் வழங்கி விடுகிறோம் என்று முன்னதாக செய்தி வெளியிட்டு இருந்தார்கள். அதற்கு ஒப்புதல் பெறுவதற்காக உடனே ஜாக்டோ ஜியோ கூட்டத்தினை கூட்டி 10 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தினை தருவதற்கான நெருக்கடியினை கூட்டத்தில் மூலமாக ஏற்படுத்தியுள்ளார்கள். கூட்டம் கூடுவதற்கு முன்னர் இரண்டு தலைவர்கள் முதலமைச்சர் அவர்களை தனித்தனியே சந்தித்து எடுக்கப் போகும் முடிவினை தெரிவித்து வந்த ஆதாரங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.*

*தனிப்பட்ட என்னுடைய 51 ஆண்டு கால பொது வாழ்க்கையில் 1985ல் நடைபெற்ற ஜாக்டீ போராட்டம், 1988ல் நடைபெற்ற ஜாக்டீ- ஜியோ போராட்டம், 2003 இல் நடைபெற்ற டெஸ்மா, எஸ்மா ஜாக்டோ ஜியோ போராட்டத்தினை முன்னின்று நடத்தி மூன்று போராட்டங்களிலும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு வெளியில் வந்திருக்கிறோம். நிரந்தரப் பணி நீக்கத்தில் இருந்த 999 பேரில் 998 பேரையும் ஏழு மாதத்திற்கு பிறகு பணியில் அமர்த்திய பிறகு நாம் பணியில் கடைசியாக சேர்ந்தோம் என்பதை வெளிப்படைத் தன்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.*



*ஆசிரியர், அரசு ஊழியர், பணியாளர்கள், கல்லூரி ஆசிரியர் சங்கங்கத் தலைவர்களுடன் களத்தில் நின்று பணியாற்றிய அனுபவக் கொள்முதலை இன்னமும் நாம் பாதுக்காத்து வைத்துள்ளோம்!. தோழர்கள் போராளிகள் எம்.ஆர்.அப்பன், கே.ஜி என்று அழைக்கப்பட்ட கங்காதரன், தோழர் ஸ்ரீதரன், என்றும் நம் நினைவில் வாழ்ந்து கொண்டுள்ள போராளி தோழர் முத்துசுந்தரம், பெரியவர் நாராயணராவ், கு.பா, செளந்தரபாண்டியன், அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவராக இருந்த சகோதரர் சூரியமூர்த்தி, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக சங்கத்தினுடைய தலைவராக இருந்த சகோதரர் பாண்டுரங்கன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆத்ரேயா அவர்களுடனும், தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து பலமுறை கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளான பேராசிரியர் முனைவர் நெடுஞ்செழியன் அவர்களுடனும் களப்பணி ஆற்றிய நினைவுகள் எல்லாம் இன்னமும் கூட்டமைப்புகளுக்கு பெருமையினை சேர்த்து வருகின்றது என்றால் மிகையாகாது.*

*தனிநபர் கருத்தினை கூட கேட்டு மதித்து போராட்ட திட்டத்தை வகுத்த இயக்கம் தான் அன்றைய ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பாகும். என்ற வரலாற்றுப் பதிவு இன்றும் நிரந்தரமாக இடம் பெற்றுள்ளது.... என்பதை மறக்கத்தான் முடியுமா?..*

*தொடர்ந்து வெளிவரும் புலனப் பதிவுகளை தவறாமல் படித்து சங்கத் தலைவர்கள் சுய பரிசோதனை செய்து கொண்டு கூட்டமைப்புகளை நடத்துங்கள்!.. ஒருவேளை அரசே ஜாக்டோ ஜியோ மீது நம்பிக்கை வைத்து ஒருநாள் ஊதியத்திற்கு அரசாணை வெளியிடுவார்களேயானால் பல்வேறு முனைகளில் இருந்து எதிர்ப்பினை தெரிவிப்பார்கள் என்பதை உணர முடிகிறது. அரசின் மீது உள்ள கோபத்தை விட... சங்கத் தலைவர்கள் மீது வெறுப்புணர்வு தீப்பிழம்பாய் வெளிவந்து கொண்டிருக்கிறது.*

*இன்னும் சென்னையில் வெள்ளம் வடியாத சில பகுதிகள் இருக்கத்தான் செய்கிறது. என்பதை மக்கள் ஊடகங்கள் வழியாக பார்த்து வருகிறார்கள். மத்திய அரசு கண்காணிப்பு குழுவினை அனுப்பி பாதிப்பினை ஆய்வு செய்து வருகிறார்கள். அதே டிசம்பர் மாதத்தில் மீண்டும் பாதிப்புகளில் இருந்து வெளிவராத அதே தலைநகர் சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தினால் பொதுமக்களும், பொது நோக்கர்களும் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?..*

*பல்வேறு புலனப் பதிவுகளில் போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள்... பேச்சுவார்த்தைக்கு முறைப்படி அழைக்காவிட்டாலும் இவர்களே சென்று பார்ப்பார்கள்.. முதலமைச்சர் நின்று கொண்டு இவர்களையும் நிற்க வைத்து வெள்ள பாதிப்பு இன்னமும் நீங்க வில்லை... எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்று தெரிவிப்பார்கள். சில சங்கத் தலைவர்கள் முதலமைச்சர் அவர்களை சந்திக்கவே முடியாது. நமது ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் அவர்கள் நம்மை அடிக்கடி சந்தித்துப் பேசுகிறார்கள். இந்த ஒரு பெருமை போதாதா?.. என்று நமக்கு ஆறுதல் அளிக்க முன் வருவார்கள்.. உடனே தலைவர்களும் போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம் என்று முதல் நாள்தான் அறிவிப்பார்கள்.*

*ஏற்கனவே டிட்டோஜாக் இது போன்ற அறிவிப்புகளுக்கு வழிகாட்டி நிற்கின்றது.*

*போராட்டக் களத்தினை தீவிர படுத்த 19ஆம் தேதி திருச்சியில் ஜேக்டோ ஜியோ கூடுகிறார்களாம்!. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். நடைபெறப் போகும் கூட்டத்திலாவது ஜாக்டோ ஜியோ என்ற வீரம் செறிந்த அமைப்பினை ஒரு தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து கொண்டு வெளியில் வாருங்கள்!*

*ஜாக்டோ ஜியோ பதாகையினை உயர்த்திப் பிடியுங்கள்!..*

*சுதந்திரமான கூட்டமைப்பிற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் ஒற்றுமை உணர்வு ஒன்றுபட்ட உணர்வாக ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியானால்... சங்கத் தலைவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் மத்தியில் கேள்விக்குறிக்கு ஆளாகுவோம்!..*

*மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி மக்களாட்சி என்பார்கள்!.. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனுக்காக போராட்டங்களை நடத்துவது தான் ஜாக்டோ ஜியோ இயக்கம்!.. என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டு செயல்பட முன்வருவோம்!..*

*மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், வருவாய்த் துறையினர் மின்துறை பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தீயணைப்பு வீரர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்கள் இவர்களது இரவுபகல் பாராத அர்ப்பணிப்பு மிகுந்த பணியினை மறக்கத்தான் முடியுமா?.. இவர்களையெல்லாம் பாராட்டுகிற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.. இவர்களின் கோரிக்கைகளைப் பற்றி ஏற்க மறுப்பது ஏன்?.. என்ற உணர்வுகள் மேலிட்டு வருகின்றன.*

*நடந்ததை மறந்து இனி நடக்க இருப்பதை உணர்ந்து ஜாக்டோ ஜியோ பதாகையினை உயர்த்திப்பிடித்து களத்தில் தொடர்ந்து நிற்போம்!..*

*பெற்ற அனுபவங்களை காய்தல், உவத்தல் அகற்றி உரிமை உறவுடன் பகிர்ந்து கொள்கிற உங்களின் சகோதரன்...*

*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: [email protected].*

13/12/2023

*எண்ணும் எழுத்தும் திட்டம் கைவிடப் படாத வரையில் இந்தத் தேர்வு சோதனைகள் தொடரத் தான் செய்யும்!!!!!!*

📕📘📙📗📒📕📘📙📗📒

*AIFETO..….. 12-12-2023*

*தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு*
*எண்:36/2001*

📕📘📙📗📒📕📘📙📗📒

*தமிழ்நாட்டில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இரண்டாம் பருவ தேர்வு ஒன்று முதல் பன்னிரெண்டு வகுப்பு வரை நாளை தொடங்க உள்ளது.EMIS இணையதளத்தின் பதிவுகளிலிருந்து ஒன்று முதல் மூன்று வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு தேர்வு வைப்பதில் இருந்து விடுபட்டாலும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதிலிருந்து இன்னும் நாம் விடுபடவில்லை.*

*ஒரே சமயத்தில் மதியம் 2 மணிக்கு மேல் இன்று வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.தொடக்க நிலை பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளுக்கு சென்று பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.அதை இரும்பு பெட்டகத்தில் அவ்வினாத் தாள்களை பூட்டி வைத்து நாளை தேர்விற்கு மட்டும் வெளியே எடுத்து மாணவர்களுக்கு கொடுக்க வேண்டுமாம்!!!!*

*CBSE தேர்வை விட, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வை விட , இந்த எண்ணும் எழுத்துத் தேர்வு கொடிக் கட்டி பறக்கிறது!!!!!. உயர்ந்து நிற்கிறது.ஒரே சமயத்தில் இரண்டு மணிக்கு வினாத்தாள்களை Download செய்ய வேண்டுமென்றால் சர்வர் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.*

*மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணன் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த நிலைமைகளை பற்றி கூறினார்கள். மேலும் இதை பற்றி எல்லாம் வரும் பல்வேறு மீம்ஸ் செய்திகளை எல்லாம் தொகுத்து மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கும், மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கும், மதிப்புமிகு SCERT இயக்குநர் அவர்களுக்கும், இந்த நிலையினை தொகுத்து அனுப்பி உள்ளோம்*. .

*தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் அலுவலகமும், SCERT இயக்கமும் மத்திய அரசு தேசியக் கல்வி கொள்கையைதான் பல்வேறு கோணங்களில் அமல்படுத்தி வருகிறார்கள் என்பதை நாம் அடிக்கடி உதாரணங்களுடன் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தொடக்கக் கல்விக்கு பொதுத் தேர்வே வேண்டாம் என்பது நமது கொள்கை முடிவாகும். ஆனால் 1,2,3,4,5ம் வகுப்புகளுக்கு நான்கு விதமான வினாத்தாள்கள் தரப்படுகிறது.எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு வித்தியாசமான தேர்வுமுறை சோதனைமுறை கற்றல் கற்பித்தலில் கொடுமை நிகழ்த்தப் பட்டு வருகிறது*

*அரும்பு மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு வினாத்தாள், மொட்டு மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஒரு வினாத்தாள்,மலர் மாணவர்களுக்கு ஒரு வினாத்தாள், நான்காவது வினாத்தாள் வகுப்புநிலை வினாத்தாள்*.

*ஜாதிகள் இல்லையடி பாப்பா!!!!!*
*குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்* !!!!¡
*-என்றார் பாரதியார்*

*பாரதியார் பிறந்த நாளில் கூட தமிழ்நாட்டில் மாணவர்களை தரம் வாரியாக பிரித்து பார்க்கும் கொடுமை தேவைதானா? நெஞ்சு பொறுக்குதில்லையே*
!!!!!!*

*போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் பிள்ளைகளை ஒரு வகுப்பிற்கு நான்கு பிரிவாக பிரித்து வினாத்தாளை நடத்துவது என்று சொன்னால் கல்வியில் சமூக நீதி உண்டா? அந்த மாணவர்களின் மனநிலை எப்படி பாதிக்கப்படும்.*

*நிதி ஒதுக்கீட்டுக்கு செலவு செய்ய வேண்டுமென்றால் எந்த பாவத்தையும் தமிழ்நாட்டில் செய்ய தயங்க மாட்டார்கள்.இது தான் உண்மையிலும் உண்மை.நம்மை பொறுத்தவரையில் இந்த எண்ணும் எழுத்தும் திட்டம் முற்றிலும் கைவிட படும் வரையில் நாம் போர்க்குணத் தோடு வீதிக்கு வந்தால் தான் தமிழ்நாட்டில் கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியின் கொள்கை முழக்கத்தை காப்பாற்ற முடியும்*

*புத்தகத்தை வைத்து பாடம் நடத்துகின்ற நடைமுறை என்று தொடங்குகிறதோ, அன்று தான் இதுபோன்ற பருவ தேர்விற்கெல்லாம் ஒரு முடிவினை கட்ட முடியும்*
*இவர்களுக்கு* *தைரியம் இருந்தால் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிகுலேஷன் மற்றும் சுயநிதி பள்ளிகளில் இந்தத் திட்டத்தினை அறிமுக படுத்தட்டும்*.!!!!!*

*ஏழை பிள்ளைகள் தான் இவர்களுக்கு கிடைத்தார்களா?என்ற கேள்வி எல்லாம் மக்கள் மத்தியில் இருந்து வெளிவரத்தான் செய்கிறது.*

*12 ஆண்டு காலமாக இடைநிலை ஆசிரியர்கள் நியமனமே தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்பது உங்களுக்கெல்லாம் தெரியாதா?*
*மறந்து விட்டீர்களா? கூச்சப்பட வேண்டாமா?*!!!!!!*

*இனி ஒரு விதி செய்வோம்!!!!!!! எண்ணும் எழுத்தும் திட்டம் கைவிடப் படும் வரை நமது உரிமை குரல் ஓங்கி ஒலித்து கொண்டே இருக்கட்டும்!!!!!!*.

*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: [email protected].*
*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.*

26/11/2023

*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுடைய செயல் திட்டங்களை அமைச்சர் அவர்களே நினைவிற்கு கொண்டு வந்து சரி பார்த்திட வேண்டுகிறோம்!...*

🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖

*AIFETO... 26.11.2023.*

*தமிழக ஆசிரியர் கூட்டணி. அரசு அறிந்தேற்பு எண்:-36/2001.*

🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖

*நேற்று 25/11/2023 கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கல்வித்துறை அலுவலர்களின் மீளாய்வுக் கூட்டத்தின் செயல்முறைகள் பெரிதும் வரவேற்க கூடிய வகையில் நடைபெற்றிருக்கிறது. இயக்குனர்கள் துறைவாரியாக தீர்வு காண வேண்டிய தலைப்புகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தது. மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனைகளை நெறிப்படுத்தி, வழிகாட்டுதல் குறிப்புகளை வழங்கியிருக்கிறார். மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் கலந்து கொண்டு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தீர்வு காண வேண்டிய பிரச்சனைகளை தொகுத்து வழங்கி உள்ளார்கள்.*

*மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடைய மீளாய்வு அறிக்கை தொகுப்பு நாளேடுகளில் செய்தியாக வெளிவந்துள்ளது. எப்போதும் ஆசிரியர்கள் மீது இதயப் பற்றாளராகத்தான் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் உரை அமைந்து வருக்கிறது.*

*ஆங்கிலம், கணக்கு பாடங்களை ஆய்வு செய்த போது மாணவர்களுக்கு அடைவுத்திறன் குறைவாக இருந்ததாக வருத்தப்பட்டுள்ளார். ஆங்கிலமும், கணிதமும் சாதாரணமாக மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்கிற திறன் பாடப்பிரிவு அல்ல; என்பதை அமைச்சர் அவர்களும் அறிவார்கள்.*

*தாங்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எமிஸ் இணையதள பதிவுகள், எண்ணும் எழுத்தும் திட்ட ஆன்லைன் பதிவுகள், பயிற்சிகள்... குருவள மைய கூட்டப் பயிற்சிகள், கருத்தாளர்களாக ஏதுவாளர்களாக தொடர்ந்து பயிற்சி...பயிற்சி, பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம், கலைத் திருவிழாப் போட்டிகள், வானவில் மன்றம், பள்ளி சிறார் திரைப்பட திருவிழா, வினாடி வினா மன்றம், இலக்கிய மன்றம் இத்தனையையும் பட்டியலிட்டு போட்டிகள் நடத்துவதற்கு தான் நேரம் இருக்கிறதே தவிர ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு சில மணி நேரமாவது ஒதுக்கி கொடுத்துள்ளீர்களா?... அல்லது அலுவலர்களையாவது அழைத்து கேட்டிருக்கிறீர்களா?.. பலமுறை ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தங்களை சந்தித்து இதனை விளக்கியும் இதுவரை தீர்வு கண்டுள்ளீர்களா?..*

*எல்லாமே புதிய கல்விக் கொள்கையை மையப்படுத்தியே தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது என்பதை மறுக்க முடியுமா?..*

*12.10.2023 டிட்டோஜாக் ஆசிரியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசினீர்களே!.. அழைத்து பேசியபோது 12 கோரிக்கைகள் உடனடியாக தீர்வு காணப்பட்டு அரசாணைகள் வெளிவரும் என்று அறிவித்தீர்களே!.. ஒன்றரை மாதம் கடந்து விட்டது. நிதிசாராத கோரிக்கைகளையாவது அலுவலர்களை அழைத்து கலந்துரையாடி தீர்வு காண முன்வந்து இருக்கின்றீர்களா?... கனவு ஆசிரியர்களை அறிவிக்கிறீர்கள்!.. தாங்கள் நிறைவேற்றுவதாக சொன்ன கோரிக்கைகள் எல்லாம் கனவாகவே தான் மிதந்து கொண்டிருக்கிறது.*

*ஆசிரியர் மனசுப் பெட்டியை வைத்தீர்கள்!.. தீர்வு காண்பதற்கான மனசு இருந்தால் தானே மனசுப் பெட்டியில் போடும் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முடியும். இதுவரையில் தமிழ்நாட்டில் கண்டிராத ஒரு புதிய துறையினை தங்கள் காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் உருவாக்கி இருக்கிறீர்கள்!.. 'ஆசிரியர்கள் மனசுத் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியையும் ஏற்படுத்தியுள்ளீர்கள். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தில் 2004 இல் இடைநிலை ஆசிரியராக பணிநியமனம் பெற்ற ஆசிரியர் ஒருவருக்கு அந்தப் பதவியினை வழங்கியுள்ளீர்கள். மாநில அளவில் திருச்சியை மையப்படுத்தி அலுவலகம் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கான மாத ஊதியத்தினை அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலர் தான் இன்னமும் வழங்கி வருகிறார்.*

*அந்த ஆசிரியருக்கு ஏன்?. அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது என்பதை தாங்களே திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறீர்கள்!. அந்த ஆசிரியர் மனசுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் நடத்திய நிகழ்ச்சியில் நீங்கள் தான் அடுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சராவீர்கள்!.. என்று கூறினார் என்றும், அதேபோல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் ஆகியிருக்கிறேன், என்றும் புளகாங்கிதம் அடைந்து இந்த ரகசியத்தினை வெளிப்படுத்தினீர்கள்.*

*உங்களை அமைச்சர் ஆக்கியது மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்... அன்பிலார் தொடங்கி மூன்று தலைமுறை உறவுள்ள குடும்பம்... இதை பகுத்தறிவு என்று எடுத்துக் கொள்வதா? அன்பிலாரின் பெயரன் இதயத்திலிருந்து வெளி வருகின்ற உணர்வாக எடுத்துக் கொள்ள இயலுமா?..*

*சங்கங்கள் அளிக்கின்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காண முன்வரவில்லை!.. ஆனால் தங்களால் பெயர் சூட்டப்பட்டுள்ள ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் மாவட்ட முழுவதும் பள்ளிக் கல்வித்துறையோடு கல்வியாளர் சங்கமம் இணைந்து பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சியினை முன்நின்று நடத்துகிறார்கள்.*

*மாண்புமிகு அமைச்சர் அவர்களின் நேர்முக உதவியாளருக்குக் கூட இல்லாத அதிகாரத்தினை அந்த ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைத்து உள்ளீர்கள்!. ஆசிரியர்களுடன் அன்பில் என்ற தலைப்பில் நிகழ்ச்சியினை அவர் கல்வியாளர்கள் சங்கமம், பள்ளிக் கல்வித்துறையோடு இணைந்து நடத்தி வருகிறார். அந்தக் கல்வியாளர் சங்கமம் என்பது என்ன அமைப்பு?.. அதில் இடம்பெற்றுள்ள கல்வியாளர்கள் யார்?.. யார்?.. அந்த அமைப்பு அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றதா?.. ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு பள்ளிக் கல்வித்துறைக்கும் கல்வியாளர்கள் சங்கமத்திற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏதாவது போடப்பட்டுள்ளதா?.. என்ற எங்கள் ஆசிரியர் சமுதாயத்தின் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.*

*கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரும் எண்ணிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்க செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள் செயல்முறைக் கடிதத்தினை அனுப்பி உள்ளார்கள். அழைப்பிதழையும் அனுப்பி உள்ளார்கள். இந்த கூட்டத்திற்கான செலவுகளை கல்வியாளர்கள் சங்கமம் ஏற்றுக் கொள்கிறதா?.. இல்லை பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக் கொள்கிறதா?.. என்ற ஆசிரியர்களின் கேள்விகளுக்கு பதில் அறிய விரும்புகிறோம்.*

*ஒருவர் மனதை இன்னொருவரால் புரிந்து கொள்ள முடியாது!.. அவர் மனதையே அவர் கட்டுப்பாட்டிற்குள் பல நேரங்களில் கொண்டுவரமுடியாது. இந்த நிலைமையில் ஆசிரியர் மனசை ஒருங்கிணைக்க முடியும் என்று எண்ணுகிறீர்கள்...*

*தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கெல்லாம் தலைவர் நீங்கள்தான் என்று பெருமையுடன் சொல்லி வருகிறீர்கள்!.. மாவட்டம் தோறும் விழா நடத்தும் போது கோரிக்கைகளை எல்லோரிடமும் தொகுத்துப் பெற்று கோரிக்கைகளை அந்த விழாவில் உங்களிடம் தருகிறார். உடனடியாக நீங்கள் இயக்குனர்களிடம் இந்தக் கோரிக்கைகளை எல்லாம் உடனே நிறைவேற்ற சொல்கிறீர்கள்!.*

*ஆசிரியர் சங்கங்களைப் பலவீனப்படுத்தி பள்ளிக் கல்வித்துறை அமைச்சகத்தின் தோற்றத்தினை தனியாசிரியர் ஒருவருக்கு அளித்து வளர்த்து விட முடியும் என்று தாங்கள் எண்ணிக்கொண்டு செயல்படவில்லை... என்பதை நாங்கள் அறிந்தாலும், தங்களுடைய செயல்பாடுகள் அப்படித்தான் ஆசிரியர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.*

*குழந்தைகள் தின விழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் நகைச்சுவை உணர்வுடன் உரையாற்றிய போது, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை பார்க்கின்ற பொழுது எனக்கு பொறாமையாக இருக்கிறது.. அவர் அடிக்கடி மாணவர்களுடன் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று வருகிறார்... என்றும் அந்த நாடுகளினுடைய பெயர்களை எல்லாம் பட்டியலிட்டு சொன்னார்கள்.*

*நீங்கள் வெளிநாடு செல்வதை எல்லாம் நாங்கள் பெருமையுடன் வரவேற்கிறோம்!. கொண்டாடுகிறோம்!..*

*ஆனால் ஆசிரியர்களுடைய எந்த கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படாமல் பள்ளிக் கல்வித் துறையினை விளம்பரத் துறையாக மாற்றி வருகிறீர்கள்!. என்பதை வெளிப்படையாக சொல்கிறோம்!..*

*பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பழுத்த அனுபவம் உள்ளவர்கள் தான் இதுவரை பொறுப்பேற்று நடத்தி வந்துள்ளார்கள். என்றும் அனைவராலும் மதித்துப் போற்றக்கூடிய கல்வித்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள்.. சி.சுப்பிரமணியம் அவர்களும், அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களும், நாவலர் அவர்களும், இனமான பேராசிரியர் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும் வகித்த பதவிகளுக்கு பெருமையினை சேர்த்தவர்கள்... அதேபோல் முந்தைய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர்களின் பெயர்ப் பட்டியலைப் பார்த்தால் பொது வாழ்வில் நீண்ட காலம் அனுபவம் உள்ளவர்கள்தான் இருந்தார்கள். அவர்கள் காலத்தில் கூட தனிநபர் விளம்பரத்துறையாக பள்ளிக்கல்வித்துறையை மாற்றவில்லை.*

*தங்களை முதன்முறையாக நேரில் சந்தித்தபோது உங்கள் தாத்தாவை 1965-66 இல் திருச்சியில் அழைத்து கூட்டம் நடத்தியவன்... என்று அறிமுகம் செய்து கொண்டதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்!.. என்று நினைக்கிறோம்.*

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித் துறையை உங்களிடம் ஒப்படைத்துள்ளார்கள்!. பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள்!.. ஆசிரியர் சமுதாயத்தின் மனசு பெட்டியில் அல்ல; இதயப் பெட்டகத்தில் வைத்து தங்களைப் போற்றுவார்கள்!..*

*இது விமர்சனமும் அல்ல...*

*விளக்கம் பெறுவதற்காகவும் அல்ல...*

*நம்மை நாமே மனசாட்சியுடன் படித்துப்பார்த்து சரி செய்து கொள்வதற்கான வெளிப்படைத் தன்மையுடன் பதிவு செய்யப்படுகிற புலனப் பதிவாகும்..*

*நல்லது நடைபெறும் என்ற நம்பிக்கையுணர்வுடன்...*

*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: [email protected].*

19/11/2023

Annamalai Aifeto

*மாணவர்களின் கல்வி நலனை பாதுகாப்பதற்காகவே எமிஸ் இணையதளப் பதிவுகளில் இருந்து எங்களை விடுவித்து கொண்டுள்ளோம்!..*

*AIFETO..18.11.2023*

*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதிப்படிதான் இணையதளப் பணிகளில் இருந்து நாங்கள் எங்களை விடுவித்துக் கொண்டுள்ளோம்!.. தேசியக் கல்விக் கொள்கையில் கூட இல்லாத கொடுமை!.. வாரம் தோறும் 15 நாட்களுக்கு ஒரு முறை பள்ளி சிறார்களுக்கு தேர்வு வைப்பதும்... மதிப்பீடு செய்வதும் எந்த மாநிலத்திலும் இல்லாத கொடுமை!..*

*அச்சுறுத்தும்அலுவலர்கள் இருப்பார்களேயானால் முறைப்படி அவர்களின் செயல்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்!..*

📕📙📘📗📕📙📘📗📕📙📘📗

*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.*

📕📗📘📙📕📗📘📙📕📗📘📙

*டிட்டோஜாக் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி அறைகூவலினை ஏற்று எமிஸ் இணையதள பதிவுகளில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப் பதிவினை தவிர்த்து அனைத்து பதிவுகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொண்டுள்ள.... வட்டாரக் கிளைகளை, மாவட்ட அமைப்பினை எடுத்த முடிவில் உறுதியாக நின்றார்கள் என்ற பெருமையுடன் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!..*

*அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் மாநில அளவில் தகவல் கேட்டறிந்து கொண்டதில் சில மாவட்டங்கள் 70% சதவீதத்திற்கும் குறையாமல் இணையதள பதிவுகளில் இருந்து விடுவித்துக் கொண்டுள்ளார்கள். சில ஒன்றியங்கள் முழுவதும் விடுவித்துக் கொண்டு மானம் காத்த இயக்க செயல் வீரர்களாக தலைநிமிர்ந்து நிற்பதை கண்டு இதயம் மகிழ்ந்து பாராட்டுகிறோம்!. விரல் விடக்கூடிய சில ஒன்றிய மாவட்டங்களில் பொறுப்பாளர்கள் உள்ள மாவட்டங்கள் வட்டாரக் கிளைகளில் ஏனோதானோவென்று ஒதுங்கி இருந்ததால் ஆசிரியர்கள் தன்னையும் அறியாமல் பதிவு செய்து வருகிறார்கள் என்ற செய்தியை உணர முடிகிறது.*

*தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு குடும்பத்தில் சகோதரிகள் பெரும்பான்மையானோர் EMISஇணையதள அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் மரணமடைந்த சகோதரி தொடங்கி, பலர் வெளியே தெரியாத மாரடைப்பு மரணங்கள் நடந்துள்ளது. பல ஆசிரியர்கள் விருப்ப ஓய்வில் சென்று கொண்டுள்ளார்கள். ஆண் ஆசிரியர்கள் பலர் மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டு வருவதையும், எல்லாவற்றுக்கும் மேலாக மாணவர்களின் கல்வி நலன் அன்றாடம் பாதிக்கப்பட்டு வருவதையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.*

*கற்பித்தல் பணியாற்ற ஆசிரியர்களால் நேரம் ஒதுக்க முடியவில்லை இந்த நிலைமையில் டிட்டோஜாக் போராட்டம் அறிவித்தார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நவம்பர் 1 ஆம் தேதி முதல் எமிஸ் இணையதள பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவீர்கள்!.. என்று உறுதி அளித்தார்கள். பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் முனைவர் க. அறிவொளி அவர்கள் அக்டோபர் 25 முதல் இணையதள பதிவு செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.*

*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் உறுதிமொழியினை ஏற்று தான் நாம் நவம்பர் 1ஆம் தேதி முதல் வருகை பதிவினை தவிர ஏனைய பதிவுகளை EMIS இணையதளத்தில் மேற்கொள்வதில்லை என்று முடிவெடுத்து கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.*

*நடந்தது நடந்ததாக இருக்கட்டும்! இன்று முதல் இணையதளத்தில் வருகைப் பதிவை தவிர வேறு பதிவுகள் செய்வதில்லை என்பதில் உறுதி எடுத்து நிறுத்தி விடுவோம். நமக்கு காலக்கெடு (Deadline) விதிப்பதற்கு எவருக்கும் அந்த அதிகாரம் இல்லை. அவரவர் பணியினை அவரவர் சரியாக செய்தால் போதும்!.. நமக்குள்ள பணி கற்பித்தல் பணிதான்.*

*We reject NEP-2020*

*ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு வாரம் தோறும் அசெஸ்மென்ட் தேவையா?... இப்போது 15 நாட்களுக்கு ஒரு முறை அசெஸ்மெண்ட் தேவையா?.. எந்த மாநிலத்திலும் இல்லாத மாணவர்களுக்கு இழைக்கப்படுகின்ற காலக் கொடுமையாகும். நாங்கள் பாடத்தை நடத்துகிறோம்!.. வந்து பார்த்துக் கொள்ளுங்கள்!..*

*எந்த கம்பெனியின் இணையதளத்திற்கோ?.. நிதி ஒதுக்கீட்டை செய்து, அந்த கம்பெனி சொல்கின்ற அத்தனை இணையதள பதிவுகளையும் செய்ய வேண்டும் என்று அவர்கள் பணப் பலன்களை பெறுவதற்காக கல்வி நலனை பாழ்படுத்த வேண்டாம்.*

*மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் சத்துணவு திட்டத்தினை தொடங்கியபோது தலைமை ஆசிரியர்களிடம் பொறுப்பினை ஒப்படைத்தார்கள். தலைமையாசிரியர்கள் கற்பித்தல் பணி பாதிக்கப்படும் அதனால் சத்துணவு பொறுப்பினை ஏற்று நடத்த இயலாது என்பதை சங்கங்கள் வாரியாக தெரியப்படுத்தினோம். அதிகாரிகள் தலைமை ஆசிரியர்கள் தான் சத்துணவு திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் என்று கெடுபிடியுடன் அரசாணைகளை வெளியிட்டார்கள். சங்கங்கள் சத்துணவு பொறுப்பில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்கிறோம் என்று அறிவித்து வெளியே வந்தோம்.*

*மாண்புமிகு முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் சில மாவட்டங்களை தேர்வு செய்து பள்ளிகளை பார்வையிட்டார்கள். தலைமையாசிரியர்கள் சத்துணவு பொறுப்பினை ஏற்று நடத்தவில்லை... அதை நேரில் கண்டார்கள். அதன் பிறகு தான் சத்துணவு வழங்குவதற்கு தனியாக சத்துணவு அமைப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்தார்கள்.*

*தலைவர் கலைஞர் காலத்தில் ஆசிரியர்களுக்கு அளித்த கற்பித்தல் சுதந்திர உணர்வினை.... அவரது பிள்ளை காலத்தில் பாதிப்புக்கு ஆளாக்க வேண்டாம் என பெரிதும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.*

*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள அறிவிப்பின்படி இணையதள பதிவு செய்யும் பணிகளில் இருந்து முற்றிலும் எங்களை விடுவித்துக் கொள்கிறோம். ஆட்சிக்கோ?.. பள்ளிக் கல்வித்துறைக்கோ?.. எதிரான போராட்டம் அல்ல; எங்கள் போராட்டம் கற்பித்தல் பணியில் மட்டும் எங்களை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்வதற்காக எமிஸ் (EMIS) இணையதள பதிவுகளில் இருந்து முழுவதும் விடுவித்துக் கொள்கிறோம்.*

*இனி எவராவது காலக்கெடு (Deadline) விதித்து எச்சரிக்கை செய்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல்... மாணவர்களின் கல்வி நலனை மனதில் கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபடுவோம்!. எப்படிப்பட்ட நடவடிக்கை வந்தாலும், நடவடிக்கை எடுப்பவர்களைப் பற்றிய உள்ளும் புறமும் ஆய்வினை பட்டியல் போட்டு வெளியிட தயாராக உள்ளோம்!...*

*இணையதள பதிவுகள் செய்யவில்லை என்பதற்காக எவரேனும் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களேயானால் நடைபெறும் வீரம் செறிந்த ஜேக்டோஜியோ போராட்டத்திற்கு வலுவினை சேர்க்கட்டும்!... வலுவினை சேர்க்கட்டும்!...*

*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: [email protected].*

Address

Perambalur

Telephone

+919943384777

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக ஆசிரியர் கூட்டணி,வேப்பந்தட்டை. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to தமிழக ஆசிரியர் கூட்டணி,வேப்பந்தட்டை.:

Shortcuts

Share

Category