St.Dominic Girls, Perambalur

St.Dominic Girls, Perambalur This is the page for the old students of St.Dominic Girls Higher Secondary School, Perambalur. Let u

07/11/2024

அனைவருக்கும் வணக்கம்.

புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த வருடம் 2024 டிசம்பர் 7 ஆம் தேதி வைரவிழா கொண்டாடப்படுகிறது.

எனவே... வைரவிழா கொண்டாடத்திற்கு சில ஆவணங்கள் சேகரிக்கப்படுகின்றன.

தாங்கள் அனைவரும் பள்ளியில் பயின்றபோது எடுத்த புகைப்படங்கள். ( கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு நாட்கள், ஆசிரியர்கள், ஆய்வுகூடங்கள், மைதானம், ) ஆகியவற்றில் எடுத்த புகைபடங்கள் ஏதேனும் இருப்பின் எங்களிடம் பகிருமாரு உங்களை அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

நம் பள்ளியில் நாம் வாழ்ந்த அந்த பொன்னான நாட்களை நாம் இந்த வைரவிழாவில் நினைவூட்டுவோம்.
நன்றி.

07/11/2024

அன்பு தோழிகளுக்கு வணக்கம்🙏 நீண்ட நாட்களுக்கு பின்னர் முகநூலுக்குள் இன்று தான் வந்தேன்... உங்கள் அனைவரின் நலம் அறிய ஆவல்😍

29/12/2022

அனைவருக்கும் வணக்கம்🙏
*வாழ்வில் நமக்கு எத்தனை நண்பர்கள் இருந்தாலும் பள்ளிப் பருவ நட்பு என்பது மிகவும் அற்புதமானது. நீங்கள் எத்தனை வயதை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எங்கு இருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி இப்போதும் ஏதோ ஒரு பள்ளி தோழி உங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக இருப்பார். சிலரோ, பள்ளி பருவ நட்பை தொடர முடியாவிட்டாலும் நினைவலைகளில் அவர்களை நினைத்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலரோ, தொலைந்த நட்பை தேடிக் கொண்டிருப்பார்கள்.
*அந்த வகையில், நம் பள்ளியின் அனைத்து மாணவிகளையும் ஒருங்கிணைக்கும் தளமாக இந்த தளம் மாற நான் விரும்புகிறேன். எனவே முடிந்தவரை நமது தளத்திற்கான லிங்கை உங்கள் தோழியிடம் பகிருங்கள். உங்கள் பள்ளி தோழிகளுக்கான தனி whatsapp குழு இருந்தால் அந்த குழுவில் இந்த தளத்தில் லிங்கை பகிருங்கள். முக்கியமாக, நம் பள்ளி ஆசிரியர்கள் யாருடனாவது நீங்கள் தொடர்பில் இருந்தால், அவர்களுக்கு இந்த தளத்தின் லிங்கை ஷேர் செய்யுங்கள்.
*நமது பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள் சங்கமிக்கும் தளமாக இந்த பக்கம் உங்களின் உதவியை வேண்டுகின்றேன்.
நமது பக்கத்தின் லிங்க் : https://www.facebook.com/s2gaya3
நன்றி🙏

This is the page for the old students of St.Dominic Girls Higher Secondary School, Perambalur. Let u

29/12/2022
1963 - 2023நமது புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அறுபதாம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கிறது என்பதை பெருமையுடன் பக...
29/12/2022

1963 - 2023
நமது புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அறுபதாம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கிறது என்பதை பெருமையுடன் பகிர்வோம்.

மறக்க முடியாத நினைவுகள்...உங்களுக்கு நியாயம் இருக்கிறதா???
26/12/2022

மறக்க முடியாத நினைவுகள்...

உங்களுக்கு நியாயம் இருக்கிறதா???

தோழிகளுக்கு வணக்கம்...இரண்டு நாட்களுக்கு முன் தீபா கலியமூர்த்தி என்ற சகோதரி என்னுடன் பகிர்ந்த புகைப்படம் இது... 1994 ஆம்...
22/06/2022

தோழிகளுக்கு வணக்கம்...

இரண்டு நாட்களுக்கு முன் தீபா கலியமூர்த்தி என்ற சகோதரி என்னுடன் பகிர்ந்த புகைப்படம் இது... 1994 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட, தீபா அவர்களின் 12ஆம் வகுப்பு புகைப்படம் இது. வருடங்கள் பல கடந்த பின்னரும் இந்த புகைப்படத்தை பகிர்வதன் மூலம் தொலைந்த தன் தோழிகளில் யாரேனும் ஒருவரை கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற அவரது எண்ணத்திற்கு நாமும் கைகொடுப்போம்.

இந்த பக்கம் தொலைந்து போன நம் தோழமைகளே அடையாளம் காணும் பக்கமாக மாற உங்கள் உதவியை நாடுகிறேன்....

முடிந்தவரை இந்த பதிவை உங்கள் முகநூல் பக்கத்தில் பகிருங்கள்... எங்கேனும் யாருக்காவது ஒருவருக்கு இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் அடையாளம் தெரிந்து, தொடர்பு கொண்டாலும் அது நமக்கான வெற்றியென கொள்வோம்...

உங்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...
நன்றி...

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இது... நாங்களும் எங்களின் 12 ஆம் வகுப்பு ஆசிரியர்களும் ... எல்லா மாணவிகளை போல தான...
20/06/2022

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இது...
நாங்களும் எங்களின் 12 ஆம் வகுப்பு ஆசிரியர்களும் ...

எல்லா மாணவிகளை போல தான் நாங்களும். ஆசிரியர்கள் மீது மரியாதை, பயம் இருந்த போதிலும், நட்பு என்னும் வட்டாரம் அவ்வப்போது கேலியையும் கிண்டலையும் சொல்லி குடுத்தது அந்த பருவங்களில்... ஆனால் நாட்கள் கடந்து, வருடங்களை கடந்து என் வாழ்வில் நானும் ஒரு ஆசிரியை ஆனபின் தான் தெரிந்தது,
"ஆசிரியராய் இருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல".

உங்கள் பள்ளி பருவ புகைப்படங்களை ஷேர் செய்யுங்கள்... உங்கள் தோழிகளை அடையாளம் காணுங்கள்...

உங்களின் பள்ளிப்பருவ நினைவலைகளை பகிர விரும்பினால், என்னுடன் பகிருங்கள்.. பதிவாக வெளியிட நான் தயார்....

இந்த பாடல் நினைவிருக்கிறதா....?நம் பள்ளியில் அடிக்கடி பாடல்கள் பாடுவது வழக்கம்... அந்த வகையில், நாங்கள் படித்த காலத்தில்...
02/06/2022

இந்த பாடல் நினைவிருக்கிறதா....?
நம் பள்ளியில் அடிக்கடி பாடல்கள் பாடுவது வழக்கம்...
அந்த வகையில், நாங்கள் படித்த காலத்தில், அடிக்கடி இந்த பாடலை பாடுவோம்...
இந்த பாடல் வரிகள், எனக்கு மிகவும் பிடித்தவை...

ஆண்டுகள் பல கடந்தும் இப்போது கேட்டாலும் மனதிற்கு இதமாக இருக்கிறது...

இந்த பாடல் பற்றிய உங்களின் கருத்து...?

இந்த புகைப்படத்தில் உங்களுக்கு தெரிந்த யாரேனும் இருந்தாலோ அல்லது உங்கள் தோழிகள் இருந்தாலோ கமெண்ட் செய்யவும்....
28/05/2022

இந்த புகைப்படத்தில் உங்களுக்கு தெரிந்த யாரேனும் இருந்தாலோ அல்லது உங்கள் தோழிகள் இருந்தாலோ கமெண்ட் செய்யவும்....

Address

Perambalur
621212

Alerts

Be the first to know and let us send you an email when St.Dominic Girls, Perambalur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category