G.H.S.School, Kasangadu

G.H.S.School, Kasangadu காசாங்காடு அரசு மேல்நிலை பள்ளியின் வரலாறு:

1957 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி முறைப்படி உயர்நிலை (SSLC) வரை கொண்டு தொடங்கப்பட்டது.

1983 ஆம் ஆண்டுக்குப்பின்பு தமிழக அரசின் முடிவின்படி PUC முறை மாற்றப்பட்டு மேல்நிலைப்பள்ளிகள் என புதுமுறை அறிமுகப்படுத்தப்பட்டு +1,+2 என்றவகுப்புகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி நம் பள்ளியை 1984 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளி என தரம் உயர்த்தி அனுமதி வழங்கப்பட்டது. அதனுடன் அவ்வாண்டிலேயே பெண்களுக்கான ஆசிரியப் பயிற்சிப்பள்ளிக

்கான அனுமதியும் அன்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.பி.என்.இராமச்சந்திரன் மற்றும் ஐயா திரு.விஸ்வநாதன் ஆகியோருடைய பெருமுயற்சியினால் கிடைக்கப்பெற்றது. இந்த ஆசிரியப் பயிற்சிப்பள்ளி மூலம் 3 அமர்வு மாணவர்கள் அமர்விற்கு தலா 24 வீதம் 72 ஆசிரியைகளை உருவாக்கி இன்று அவர்கள் நம் பகுதி முழுவதிலும் உள்ள பல பள்ளிகளில் பணிபுரியும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த பெருமைக்குரிய பள்ளி நம் மேல்நிலைப்பள்ளி.

பள்ளி சுற்று சுவர்:

பாடம் கற்று தருவது எங்கள் பள்ளி ஆசிரியர் மட்டும் அல்ல. எங்கள் பள்ளி சுவரும் தான்.

விளையாட்டு மைதானம்:

பள்ளி வளாகத்தில் இருந்த பல்வேறுபட்ட குடும்பங்களுக்குச் சொந்தமான கூட்டு நிலங்கள் மற்றும் தனி நிலங்கள் ஐயா திரு.விஸ்வநாதன், ஐயா திரு.தம்பிஅய்யன், ஐயா திரு.மொ.ரா.சின்னத்தம்பி ஆகியோருடைய முற்போக்கான நடவடிக்கைகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் 12 1/4(பன்னிரெண்டே கால்) ஏக்கரில் மாபெரும் பள்ளி விளையாட்டுமைதானம் உருவாக்கப்பட்டது. அம்மைதானத்திற்கு 1984 ஆம் ஆண்டு வாக்கில் சிங்கப்பூரில் வாழும் காசாங்காடு பெரியோர்களால் கொடுக்கப்பட்ட பெருந்தொகையால் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு பள்ளியின் கம்பீரத்தோற்றம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிகளிலேயே மிகப்பெரிய விளையாட்டுமைதானத்தைப் பெற்றிருக்கக்கூடிய முதன்மையான பள்ளி என்ற பெருமையைப்பெற உதவலாயிற்று.

1990 ஆம் ஆண்டு சுற்றுசுவர் கட்டும் பணி முடிவடைந்துவிட்டது அதோடு ஆய்வு கூட பணியும் நடைபெற்றது. 1990 ஆம் ஆண்டில் சுற்று சுவருக்கும், ஆய்வுக்கூட கட்டிட திறப்புவிழாவுடன் சேர்த்து முறைப்படி துவங்கி வைக்கப்பட்டது.

அறிவியல் ஆய்வுக்கூடம்:

1989 ஆம் ஆண்டு தமிழக அரசின் கல்வித்துறை திட்ட ஒதுக்கீட்டின்படி பள்ளியின் அறிவியல் பிரிவிற்கென தனி ஆய்வுக்கூட கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பள்ளி வளாகதின் தென்பகுதியில் மிகச்சிறந்தமுறையில் ஒரு ஆய்வுக்கூடம்கட்டப்பட்டு 1990 ஆம் ஆண்டு கல்வி அமைச்சர் மாண்புமிகு.பேராசிரியர் க.அன்பழகன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பள்ளி கட்டமைப்பு:

2007 ஆம் ஆண்டு அரசு பள்ளி வளர்ச்சிக்குழுவின் பரிந்துறையின் படி பழைய வகுப்பறைக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய மூன்றடுக்கு மாடி கட்டிடங்கள் அரசினால் கட்டித்தரப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி குறித்த விபரங்கள் தங்களுக்குத் தெரியுமெனில் பகிர்ந்து கொள்ளவும்.

08/03/2017

8/3/2017 தொடங்கி 30/3/2017 வரை நடைபெற உள்ள 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதும் மாணவ- மாணவியர் நன்றாக எழுதி சிறப்பான வெற்றியைப்பெற மனதார வாழ்த்துகிறோம்...

25/05/2016

10th +2 result ennappa aachu?

26/10/2015

Thanks for supported me.....

23/05/2012

காசாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்கள் ........

1.ரேவதி - 1031
2.பழனிதுரை - 1026
3.பிரபாத் - 989

(Thanks Mr.Veeramurasu)

17/12/2011

இப்பள்ளியின் மைதானம் மட்டுமல்ல சுற்றுச்சுவர் (சில இடங்கள் சிதிலமடைந்துள்ளது-தென் மேற்கு மூலை), மாணவர்கள் வரும் பாதைகள், உணவுக்கூடம் இடமாற்றம், தடகள ஓடுபாதை நிரந்தரபடுத்தல், புதிய மேற்கு நுழைவுவாயில் ஏற்படுத்தல், கழிப்பிட வசதிகள் சரிப்படுத்தல் மற்றும் அனைத்து பாதைகளின் கதவுகள் சரிபார்த்தல் என சில முக்கியப் பணிகள் உடனடியானது. இதுதவிர மாணவர் இருக்கைகள், வகுப்புத்தகவல் பலகைகள் மற்றும் ஆசிரியர்கள் இருக்கைகள் என சிலபணிகளும் கவனிக்கத்தக்கவை. தம்பி செந்தில் கருத்தின்படி வருடந்தோறும் மைதானம் சிறு சிறு பராமரிப்பு வேலைகளைச் செய்தால் மட்டுமே பகுதியின் மிகப்பெரிய மைதானம் எனப் போற்றப்படும் நம் பள்ளி மைதானம் அச்சிறப்புடனேயே விளங்கும். நன்றி.

Address

Kasangadu
Pattukkottai
614613

Alerts

Be the first to know and let us send you an email when G.H.S.School, Kasangadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category