18/02/2026
குருவடி போற்றுவோம்! - நெகிழ்ச்சியில் நனைந்த முன்னாள் ஆசிரியர்கள் & அலுவலர்கள் சந்திப்பு 🏫✨
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழாவினைத் தொடர்ந்து, நம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பாக ஒரு உன்னதமான சந்திப்பு நிகழ்வு பட்டுக்கோட்டை சாய் கார்த்தி மினி அரங்கில் இனிதே நடைபெற்றது.
நம் பள்ளிக்கு பெருமையும் புகழையும் தேடித்தந்த முன்னாள் ஆசிரியர்களையும், அலுவலர்களையும் கௌரவிக்கும் விதமாக "வேர்கள்" சிறப்பு மலர் வழங்கும் விழாவாக இது அமைந்தது.
நிகழ்வின் சிறப்பம்சங்கள்: 📍
தலைமை: அறக்கட்டளை தலைவர் வழக்கறிஞர் திரு. R. ஜெயவீரப்பாண்டியன் அவர்கள் தலைமை வகித்தார்.
முன்னிலை: அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திரு. R. ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.
வரவேற்புரை: நிர்வாக குழு உறுப்பினர், ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குனர் திரு. D. ரவிச்சந்தர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
நினைவலைகள்: 💭
கூட்டத்தில் அறக்கட்டளை செயலாளர் திரு. T. தனபால், நல்லாசிரியர்கள் திரு. M.R. ரெத்தினகுமார், திரு. U. தேவேந்திரன், திரு. செல்வம், திரு. G. தெட்சிணாமூர்த்தி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. பாலையன் ஆகியோர் உரையாற்றினர். பள்ளியின் பழைய நினைவுகளையும், பணியாற்றிய சிறந்த ஆசிரியர்கள் பற்றியும் சிரிப்போடும் சிந்தனையோடும் பகிர்ந்து கொண்ட தருணங்கள் அனைவரையும் நெகிழச் செய்தது.
கௌரவிப்பு: 💐
முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, சிறப்பு மலரான "வேர்கள்" வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதேபோல் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் சிறப்பு மலர் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
முக்கிய முடிவுகள்: 🤝
இந்தச் சந்திப்பில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:
✅ ஆண்டுதோறும் முன்னாள் ஆசிரியர்கள் - அலுவலர்கள் சந்திப்பை நடத்துவது.
✅ பள்ளியின் மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து உழைப்பது.
✅ அனைத்து முன்னாள் ஆசிரியர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து, ஒரு குடும்பமாக உறுதுணையுடன் செயல்படுவது.
இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. C. தெட்சிணாமூர்த்தி அவர்கள் கலந்து சிறப்பித்தார். நிறைவாக அறக்கட்டளை பொருளாளர் திரு. N. ஜெயராமன் அவர்கள் நன்றி கூற, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
என்றும் அன்புடன்,
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை.