In memories of Old School

In memories of Old School memories of old school

19/03/2018
28/10/2013
06/09/2013

capdan rockzzzz!!! share it

Lol :-p
24/08/2013

Lol :-p

ஆதலால் காதல் செய்வீர் ...2013 ஆம் ஆண்டின் சிறந்த எதார்த்தமான படம் , இன்றைய நவநாகரீக தமிழ்நாட்டில் சகஜமாகிப்போன ஒரு சில ப...
24/08/2013

ஆதலால் காதல் செய்வீர் ...


2013 ஆம் ஆண்டின் சிறந்த எதார்த்தமான படம் , இன்றைய நவநாகரீக தமிழ்நாட்டில் சகஜமாகிப்போன ஒரு சில பெரிய தவறுகளில் ஒன்றினை எடுத்துக்காட்டுவதாய் அமைந்திருந்தது திரைக்கதை.

என்ன தந்தது இந்த இளம் பருவக்காதல் ?...

படிக்கும் வயதில் பற்றி எரிந்து படிப்பை எரித்தது

குடும்பத்துடன் கூடி குலுங்கி சிரித்த முகத்தில் சிரிப்பை பறித்தது

வளர்ந்து வந்த நாள் முதலாய் சிந்தை சுமந்த லட்சிய கனவுகளை தொலைத்தது .

உடன் பழகும் தோழமைக்கு ஒரு நிமிடம் ,
உயிர் கொடுத்து உடல் வளர்க்கும் பெற்றோர்க்கு அரை நிமிடம் இவை இரண்டையும் தந்த கடவுளுக்கு ஒதுக்கியது சில நொடிகள் என தாராளமாய் பிரித்து வைத்தது

விடிய விடிய ஓசை குறைத்து ஒன்றுமே பேசாமல் தூக்கம் கெடுத்தது

தந்தை பையில் கை வைத்தது , தாயின் சேமிப்பையும் பதம் பார்த்தது

பொய் , கபடம் , கோபம் , பயம் , குற்றஉணர்ச்சி இவை அனைத்திற்கும் தனி தனியே பாடம் நடத்தியது .

காதலா காமமா என்று பிரித்து பார்க்க தெரியாத வயதில் ரசாயன பிளர்ச்சி பகுத்தறிவினை அமிலமாய் சுட்டு மூளையை சுருக்கி உயிர் விதைத்து வயிர் வளர்த்தது .

பெற்றோரை காவல் நிலையம் காண செய்தது , நடுவீதியில் ஊர் பார்க்க அழுது புலம்ப வைத்தது , மற்றவர் காலில் விழ வைத்தது .

புரியாத வாழ்க்கை புதிராய் போனது , புரிந்த பின் வாழ்க்கை கைமீறிப்போனது .

உயிர் வதை செய்தே கொலை பாதகர் ஆக்கியது ...

மனித வாழ்வின் புனிதம் மறக்க செய்தது .

இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் என் பணிவான வேண்டுகோள் :

படிக்கும் வயதில் காதலிப்போரின் இளம் பருவ காதலை தயவு செய்து ஊக்கப்படுத்தாதீர்.

திருமணதிற்கு முன்பான உடல் உறவு பாதுகப்புடனோ , பாதுகாப்பு இன்றியோ எந்த வகையிலும் சரி ஆகாது .

நீங்கள் தடுமாறி தடம் மாறும் வேளைகளில் பெற்றோரர் முகம் ஒரு கணம் உங்கள் கண்முன்னே வரட்டும்

அணைத்து ஆதரவற்ற குழந்தைகளும் இறைவனின் குழந்தைகள் அல்ல இறைவனுக்கு நம்மால் தத்துகொடுக்கபட்டவர்கள்

பெற்றோர் நிழலில் காதல் வளர்க்காமல் அவர்களுக்கு நீங்கள் நிழல் தரும் வேளையில் காதல் செய்வீர்

ஆதலால் மக்களே காதல் செய்வீர் கவனமாக..!!!.

RAJA RANI THEATRICAL TRAILER
23/08/2013

RAJA RANI THEATRICAL TRAILER

Raja Rani Official Theatrical Trailer Movie: Raja Rani Starcast: Aarya, Jai, Nayanthara, Nazriya Nazim Director: Atlee Kumar Composer: G.V. Prakash Kumar Add...

சென்னையின் 375- வது பிறந்தநாள் !!!1639 ஆகஸ்ட் 22 -ஆம் தேதி சென்னை உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்...
22/08/2013

சென்னையின் 375- வது பிறந்தநாள் !!!

1639 ஆகஸ்ட் 22 -ஆம் தேதி சென்னை உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினர்.

இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் 1639 -ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியதைத் தொடர்ந்து சென்னை நகரம் உருவானது.

1646 கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள்தொகை 19 ஆயிரம். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னையில் மக்கள்தொகை சுமார் 50 லட்சம் ஆகும்.

1947 -ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பின்பு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969 -ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996 -ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

engineering padichadhuku parota'poda kathurkalam!!!!!
21/08/2013

engineering padichadhuku parota'poda kathurkalam!!!!!

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய க...
18/08/2013

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".

ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!

Address

Pattabiram
600072

Website

Alerts

Be the first to know and let us send you an email when In memories of Old School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category