08/08/2024
04.08.24 காலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற விழாவில் அரசு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விருது வழங்கினார்கள். மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு, மாண்புமிகு மேயர் திருமதி பிரியா, திரு தயாநிதி மாறன் MP, திரு பரந்தாமன் MLA, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திரு.திண்டுக்கல் I லியோனி மற்றும் கல்வித்துறை செயலாளர் உடன் இருந்தனர். எமது பரங்கிப்பேட்டை, பாபா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி அமைச்சர் மாண்புமிகு திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில்பாபா பள்ளி மாணவர்கள்100% தேர்ச்சி பெற்றதை முன்னிட்டு பள்ளி நிர்வாகி முனைவர். வைரமணியும், செயலாளர் முனைவர்.சண்முகமும், இரண்டு பாராட்டு சான்றிதழ்கள் பெற்றனர்.