Aayudham Seivom

Aayudham Seivom சாமானியர் புரிந்து கொள்ளக்கூடிய அறிவியல்.. Science in Tamil for Common man
(1)

19/08/2026

Crowd Management. need of hour..

17/08/2026

Privatizing the kulasekarapattinam spaceport?

16/08/2026

ISRO Rocket Privatised ?

இஸ்ரோ ஏன் தனது பிரதான ராக்கெட்டுகளை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும்?
நாசா எப்படி ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தை உருவாக்கியது என்பதைப் போன்ற ஒரு திட்டம் இந்தியாவிலும் சாத்தியமா?
ஸ்கைரூட், அக்னிகுல் மற்றும் குலசேகரப்பட்டினம் விண்வெளித் தளத்தின் பின்னணியில் உள்ள முழுமையான அறிவியல் & பொருளாதார அலசல்.
முழு வீடியோவை உடனே பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்! 👇

Next video: Private Sector Rocketsகுலசேகரப்பட்டினம் சில வாரங்களுக்கு ஒரு ஏவுதல் என எப்போதும் பரபரப்பாக இயங்கும் ஒரு முக்...
13/08/2026

Next video: Private Sector Rockets

குலசேகரப்பட்டினம் சில வாரங்களுக்கு ஒரு ஏவுதல் என எப்போதும் பரபரப்பாக இயங்கும் ஒரு முக்கியமான ஏவுதளமாக மாறவுள்ளது. இதோ "குலசையின் ராக்கெட் படை" (Kulasai’s Rocket Squad)! 🛰️

இந்திய தனியார் விண்வெளித் துறை பற்றிய முழுமையான Deep-Dive Video விரைவில் வரவுள்ளது. அதில் நாம் பார்க்கவிருப்பது:

🔹 இந்திய தனியார் விண்வெளித் துறையின் தொடக்கம்: இது எவ்வாறு உருவானது?

🔹 தனியார் நிறுவனங்களின் முக்கியத்துவம்: இந்திய விண்வெளிப் பொருளாதாரத்தை உயர்த்த தனியார் நிறுவனங்கள் ஏன் அவசியம்?

🔹 குலசேகரப்பட்டினத்தின் சாதகமான சூழல்: சிறிய ராக்கெட்டுகளின் சுற்றுப்பாதை பாதையை (Trajectory) குலசேகரப்பட்டினம் எவ்வாறு எளிமையாக்குகிறது?

🎥 இந்த முழு வீடியோவையும், மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்துகொள்ள YouTube மற்றும் Facebook பக்கங்களை உடனே Follow செய்யுங்கள்! 👇

12/08/2026

Can wheel fall off from aircraft ?

🚀 நம்ம அடுத்த வீடியோ – இந்தியாவின் தனியார் விண்வெளிப் பயணம்!இந்தியாவின் விண்வெளித் துறையில் இப்போது பல பெரிய மாற்றங்கள் ...
08/08/2026

🚀 நம்ம அடுத்த வீடியோ – இந்தியாவின் தனியார் விண்வெளிப் பயணம்!

இந்தியாவின் விண்வெளித் துறையில் இப்போது பல பெரிய மாற்றங்கள் நடக்கின்றன.

🤔 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

1️⃣ நம்முடைய ராக்கெட்டுகள் இனி தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் செல்கிறதா?
2️⃣ ஏன் திடீரென்று இவ்வளவு இந்திய Space Startups உருவாகின்றன?
3️⃣ இதனால் ISRO-வின் எதிர்காலம் எப்படி மாறும்?

👇 இந்த மூன்று கேள்விகளுக்கும் உங்கள் கருத்து என்ன?
கமெண்ட்ல சொல்லுங்க!

🎬 விரைவில் – ஆயுதம் செய்வோம் 🚀

06/08/2026

Russan MC 21 aircraft

முழு ஈ.சி.ஆர் (ECR) ரயில் பாதைக்காகக் காத்திருப்பதை விட, திண்டிவனம் – புதுச்சேரி – கடலூர் இணைப்புப் பாதை தான் டெல்டா மாவ...
06/08/2026

முழு ஈ.சி.ஆர் (ECR) ரயில் பாதைக்காகக் காத்திருப்பதை விட, திண்டிவனம் – புதுச்சேரி – கடலூர் இணைப்புப் பாதை தான் டெல்டா மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும் உடனடித் தேவை! 🚆💥

ஏன் இந்த இணைப்புப் பாதை ஒரு 'கேம் சேஞ்சர்'? 👇

1️⃣ விழுப்புரம் நெரிசலுக்கு முற்றுப்புள்ளி: டெல்டா பகுதிக்குச் செல்லும் ரயில் போக்குவரத்தை மாற்றி, நெரிசலை உடனடியாகக் குறைக்கும்.

2️⃣ புதுச்சேரியின் 'டெட்-எண்ட்' நிலைக்குத் முடிவு: புதுச்சேரி ரயில் நிலையத்தை ஒரு முனையமாக இல்லாமல், ரயில்கள் சுலபமாகக் கடந்து செல்லும் நேரடி (Through-station) ரயில் நிலையமாக மாற்றும்.

3️⃣ வேகமான & குறைந்த செலவிலான திட்டம்: ஈ.சி.ஆர் திட்டத்தோடு ஒப்பிடும்போது, இதில் நிலக்கையகப்படுத்தல் எளிது, கடலோரத் தடங்கல்களும் குறைவு.

4️⃣ சரக்கு போக்குவரத்திற்குப் பெரு உதவி: கடலூர் துறைமுகத்தை சென்னைக்கு நேரடியாக இணைக்கும் மிகச்சிறந்த சரக்கு வழித்தடமாக அமையும்.

பிராந்திய ரயில்வே அமைப்பை வலுப்படுத்த, முதலில் இந்த முக்கியமான இணைப்பைச் சாத்தியமாக்குவோம்! 💯⚡

Cauvery  Delta Rail Users Dream: காரைக்காலில் இருந்து தரங்கம்பாடி வழியாக சீர்காழியை இணைக்கும் ஒரு நேரடி கடலோர இரயில் பாத...
06/08/2026

Cauvery Delta Rail Users Dream:
காரைக்காலில் இருந்து தரங்கம்பாடி வழியாக சீர்காழியை இணைக்கும் ஒரு நேரடி கடலோர இரயில் பாதை தான் காவிரி டெல்டா மக்களின் நீண்ட நாள் கனவு திட்டம் என்பது உங்களுக்கு தெரியுமா? 🚆🌊

1️⃣ சீர்காழி – காரைக்கால் புதிய இரயில் பாதை:
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை திருவாரூர் வழியாக சுற்றி கொண்டு செல்லாமல், சீர்காழிக்கு நேரடியாக கொண்டு செல்லவே இந்த பாதை முதன்முதலில் ஆய்வு (Survey) செய்யப்பட்டது. ஆனால், தெற்கு இரயில்வே குறுகிய பாதையான பேரளம் - காரைக்கால் பாதையை சீரமைக்க முன்னுரிமை அளித்ததால், இந்த திட்டம் அப்படியே முடங்கியது. தற்போதைய சூழலில் இந்த பாதை வருவது கடினம் தான் என்றாலும், எதிர்காலத்தில் வலுவான அரசியல் விருப்பம் (Political Will) இருந்தால் இது மீண்டும் சாத்தியமாகலாம்!

2️⃣ மயிலாடுதுறை – தரங்கம்பாடி (MV-TBQ) பழைய பாதை மீட்பு:
முன்பு பயன்பாட்டில் இருந்து பின்னர் மூடப்பட்ட மயிலாடுதுறை – தரங்கம்பாடி மீட்டர் கேஜ் இரயில் பாதையின் நிலம் இன்னமும் இரயில்வே வசமே உள்ளது. தமிழக அரசு நில எடுப்பு மற்றும் உள்கட்டமைப்பிற்கு உதவி செய்தால், இந்த பாதையை மீண்டும் எளிதாக அமைக்க முடியும். இது சாத்தியமானால், புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருக்கடவூர் இரயில்வே வரைபடத்தில் இணைந்து பக்தர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்! 🛕🚂

3️⃣ சீர்காழி NLC அனல்மின் திட்டம் (UMPP) & துறைமுகம்:
சீர்காழி அருகே NLC நிறுவனம் அமைக்க திட்டமிட்டிருந்த மாபெரும் அனல்மின் திட்டம் (UMPP) மட்டும் வந்திருந்தால், அதற்காக தனியாக ஒரு நிலக்கரி இறக்குமதி துறைமுகமும் (Captive Jetty), சீர்காழியுடன் இணைக்கும் பிரத்யேக இரயில் பாதையும் (Railway Siding) உருவக்கப்பட்டிருக்கும். ஆனால், நில எடுப்பு சிக்கல்கள் மற்றும் சுற்றுசூழல் காரணங்களால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

எது எப்படியோ... சீர்காழியில் இருந்து திருக்கடவூர் வழியாக காரைக்காலை இணைக்கும் இந்த கடலோர இரயில் பாதை நிஜமாக வேண்டும் என்பதே காவிரி டெல்டா மக்களின் மாபெரும் கனவாக இன்றளவும் இருந்து வருகிறது! 🌾📍

🌊 கடலூர்: தமிழ்நாட்டின் அடுத்த பிரம்மாண்ட தொழில் மையம்! ⚓️🏭 2 முக்கிய துறைமுகங்கள் மூலம் கடலூர் புதிய வர்த்தக புரட்சியை ...
04/08/2026

🌊 கடலூர்: தமிழ்நாட்டின் அடுத்த பிரம்மாண்ட தொழில் மையம்! ⚓️🏭

2 முக்கிய துறைமுகங்கள் மூலம் கடலூர் புதிய வர்த்தக புரட்சியை நோக்கி பயணிக்கிறது!

1️⃣ பழைய துறைமுகம் (Cuddalore Brownfield Port - நவீனமயமாக்கல்)
40 ஆண்டுகால PPP ஒப்பந்தம்: தமிழ்நாடு கடல்சார் வாரியத்தால் (TNMB) 'மஹதி கடலூர் போர்ட் அண்ட் மேரிடைம்' (MISPL) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதலீடு & மேம்பாடு: மஹதி நிறுவனம் ₹200 கோடியை உள்கட்டமைப்பிற்கும், அரசு தரப்பில் ₹160 கோடி மிதவை மற்றும் தூர்வாரும் பணிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்: ரசாயனம் மற்றும் திரவப் பொருட்கள் (Liquid Bulk) கையாளுதல், நவீன சேமிப்பு கிடங்குகள் மற்றும் நதிமுகத்துவ மேம்பாடு.

2️⃣ புதிய பசுமைக்கள துறைமுகம் (Cuddalore Greenfield Deep-Water Port)
பிரம்மாண்ட பரப்பு: 1,200 ஏக்கர் பரப்பளவில், 3.6 கி.மீ கடற்கரை நீளத்தில் அமையவுள்ளது.

ஆழம் & கப்பல் திறன்: 18 மீட்டர் இயற்கை ஆழம் கொண்டதால், உலகின் மிகப்பெரிய 'கேப்சலைஸ்' (Capesize) சரக்குக் கப்பல்களும் நேரடியாக வந்து செல்ல முடியும்.

சரக்கு திறன்: முதல் கட்டத்தில் 13.5 MMTPA திறனில் தொடங்கி, முழுமையாக நிறைவடையும் போது 40 MMTPA சரக்குகளை கையாளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து இணைப்பு: நகர நெரிசலை தவிர்க்க NH 32 தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிரத்யேக இரயில் பாதைகளுடன் நேரடியாக இணைக்கப்படும்.

🏗️ தொழில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறைகளுக்குப் புதிய கதவுகளைத் திறக்கும் இந்த இரட்டைத் துறைமுக திட்டம், மத்திய தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்! 🚛🚢

Address

Parangipettai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aayudham Seivom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category