25/01/2026
LEAP's
ஜெயித்துக் காட்டுவோம் 2026
பரங்கிப்பேட்டையில் வளரும் தலைமுறைக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளை
MORAL ETHICS - அடிப்படையில் ஊக்குவித்து வழிகாட்டி மையமாக செயல்படும் அகடமி ஏற்பாட்டில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 24/01/2026 சனிக்கிழமை அன்று மீராப்பள்ளி தெருவில் அமைந்துள்ள மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது. நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட மாணவியர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் நஜீர் உபைதுல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் , பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ் மற்றும் கல்வி ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
மீராப்பள்ளி மஹ்மூதியா மதரஸா மாணவர் முஹம்மது முஜம்மில் கிராஅத் ஓதி துவக்கிவைத்தார்.
முதலாவதாக வரவேற்றுப் பேசிய சேர்மன் ஹுசைனுல் ஆபிதீன் அவர்கள் "கல்வி என்பது வெறும் தகவல்களை சேகரிப்பது அல்ல, அது மனிதனை செதுக்குவது" என்பதாகவும், பரங்கிப்பேட்டை பாரம்பரியமாக பல கல்வியாளர்களை உருவாக்கி வருகின்றது என்பதையும் பதிவுசெய்தார்.
சென்னையில் செயல்பட்டு வரும் #சித்தீக்_M.Tech தலைமையிலான #விஸ்டம் கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டி குழுவினர் மாணவ மாணவியர்களுக்கு பயனுள்ள பல்வேறு தகவல்களை எளிதாக விளக்கினர்.
#விஸ்டம் கல்வி அமைப்பின் நிறுவனர் #சித்தீக் அவர்கள் கல்வியின் அத்தியாவசியத்தை குறித்து விளக்கி பேசினார். மேலும் தேர்வு பயம் நீங்கி அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான யோசனைகளை வழங்கினார்.
மாணவ மாணவிகள் தேர்வு எழுதும் பொழுது "ஒரு ஆசிரியராக தன்னை கருதிக் கொண்டு அதாவது அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியும் என்ற தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள அறிவுறுத்தினார்.
அடுத்ததாக பேசிய விஸ்டம் கல்வி அமைப்பின் ஆலோசகர் அப்துல் மதீன் அவர்கள் அதிக திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை பற்றி பேசினார். "திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு ஆர்வம் அவசியமானது" என்பதையும் விளக்கினார்.
அடுத்து பேசிய LEAP பொருளாளர் நூர் அலி அப்பாஸ், LEAP உடைய நோக்கம் மற்றும் இதுவரையான LEAP - ன் செயல்பாடுகள், பயிற்சி மற்றும் தமிழக அளவில் அரசுப்பணி ஒருங்கிணைப்பு அமைப்பான
FACE கமிட்டியில்
"அரசு பணி போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் ஒருங்கிணைப்பு குழு"
LEAP - ம் ஒரு அங்கமாக இருப்பது குறித்து விளக்கி பேசினார் .
அடுத்ததாக பேசிய அமானுல்லாஹ் மற்றும் ஜாவீத் சிறந்த நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் சிறப்பான திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதை விளக்கினார். இடையிடையே மாணவர்களை சில செயல்முறைகள் மூலம் நிகழ்ச்சியில் ஆர்வமுடனும் ஈடுபாட்டுடனும் வைத்திருந்தனர். மேலும் மாணவர்களுக்கு வினாடிவினா போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது குறித்தும், படிப்பவைகளை புரிந்து நினைவில் வைப்பதற்கான வழிமுறைகள் யாவை எனவும் விளக்கப்பட்டது. தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி, எந்த வகையில் பதிலளிப்பதன் மூலம் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது விளக்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களுடைய கேள்விகளுக்கான விளக்கமும் சிறந்த கேள்விகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. சிறப்பான கேள்விகளுக்கும் பங்கேற்பிற்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக எனக்கென ஒரு கனவு - I HAVE A DREAM என்ற பெயரில் மாணவர்களின் எதிர்கால இலக்குகளை அடையாளம் காணவும் அவர்களுக்கு அதை பற்றி புரிதல் ஏற்படுத்தவும் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டிக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசுகள் வழங்கும் பொறுப்பினை நூர் அலி அப்பாஸ் மற்றும் பதுருஜமான் சிறப்பாக செய்திருந்தனர்
ஆரம்பத்திலிருந்து மைக் பிடித்து நிகழ்ச்சியை MASS - ஆக தொகுத்து வழங்கினார் ஹமீத் மரைக்காயர் இறுதியாக LEAP தலைவர் பசுமை ஹாஜி @ மொய்தீன் அப்துல் காதர் நன்றியுரை வழங்கினார்.
LEAP ஏற்பாட்டில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக நடத்தப்பட்ட இந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை LEAP செயலாளர் அபுல்கலாம் ஆஜாத் ஒருங்கிணைத்தார்
வழக்கம் போல தன்னார்வ மாணவ/மாணவியர் சிலர் இந்நிகழ்ச்சியின் அனைத்து நிலைகளிலும் ஆர்வமுடன் பங்களித்தது பாராட்டப்படக்கூடியதாக இருந்தது. குறிப்பாக LEAP அலுவலர் பாத்திமா ஜுவைரியா தலைமையில் பெண் தன்னார்வலர்கள்
மற்றும் கல்வி ஆர்வலர்ரும் LEAP உறுப்பினருமான
முகமது யாசின் LEAP டியூஷன் மாணவர் அப்துர் ரஹ்மானும் சிறப்பாக பங்களித்தனர்.
தமிழ் கூறும் நல்லுலகின் சமூக நலனை கல்வியின் பார்வையில் அக்கறைப்படுத்தும் LEAP அகடமி இன்னொரு நேர்மறை முயற்சியாக ஆசிரியர்கள் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றினை கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிக்கு அடுத்ததாக அதே நாளிலேயே இன்னொரு அமர்வில் நடத்தியது.
பரங்கிப்பேட்டையில் இருந்து ஆசிரியர் பெருந்தகைகள் பலர் இதில் கலந்து கொண்டனர். சென்னையில் இருந்து கல்வியாளர் WISDOM ஷேக் தாவூத் அவர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி தருவதற்காக நேரில் வந்திருந்தார். ஆசிரியர்கள் தற்போது எதிர்கொள்ளும் சமகால சிக்கல்கள் குறித்து ஆசிரியர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது. இறுதியாக ஷேக் தாவூத் அவர்கள் தனது power point presentation மூலம் சமுதாயத்தை தற்கால சூழலுக்கு ஏற்ப சிறப்பாக வார்த்தெடுக்க வேண்டிய டெக்னிக்குகளை மிகவும் எளிமையாகவும் ஆசிரியர்கள் கைக்கொள்ளத் தக்க பயிற்சி முறைகளையும் விளக்கி கூறினார்.
#பரங்கிப்பேட்டை
#கல்வி