Ithazhagam

Ithazhagam We help you to understand the content of the books.

'த டா வின்சி கோட் - விடைகளைத் தேடி' "The Da Vinci Code - A Quest for Answers"2003ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவ...
08/09/2023

'த டா வின்சி கோட் - விடைகளைத் தேடி'
"The Da Vinci Code - A Quest for Answers"

2003ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவுனால் எழுதப்பட்ட மர்மத்-துப்பறிவுப் புனைவு நாவல் 'த டா வின்சி கோட்' வாசித்தவர்களுக்கும்,
நாவலைத் திரைப்படமாக்கும் உரிமையை கொலம்பியா பிக்சர்ஸ் பெற்று அகிவா கோல்ட்ஸ்மேனின் எழுத்தில் அகடமி விருது பெற்ற இயக்குனர் ரான் ஹோவர்டின் இயக்கத்தில் மே 19, 2006-இல் வெளியான திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கும் மிகவும் சுவாரசியமான புத்தகமாக இருக்கும்.

வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கிறது...

நூல் விமர்சனம் வரைவில்...

07/09/2023

முயற்சி - அயர்ச்சி

என் வாழ்க்கையின் முதல் “தேவதை”மனதில் நின்ற மகத்தான மனிதர்கள் என்ற இத்தொடரை எழுத முற்ப்பட்டபோது முதலில் என் நினைவில் வந்த...
04/09/2023

என் வாழ்க்கையின் முதல் “தேவதை”

மனதில் நின்ற மகத்தான மனிதர்கள் என்ற இத்தொடரை எழுத முற்ப்பட்டபோது முதலில் என் நினைவில் வந்தது, அந்த தேவதையின் முகம்தான்.

ஒரு நிகழ்வை கூற விழைகிறேன்…

நான்காம் வகுப்பில் பயிலும் ஒரு மாணவன், தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளிக்கு வரவில்லை. பரீட்சைகள் நடைபெறும் காலம் அது. வகுப்புக்கு வராததின் காரணத்தை அறிய முற்ப்பட்ட ஆசிரியை சக மாணவர்களில் இரண்டுபேரை அனுப்பி அவனை பள்ளிக்கு அழைத்துவரச் சொன்னார்.

அங்கு வேறு வானிலை…

சுருக்கிச் சொல்ல முயல்கிறேன்,

தாய் கூலி வேலைக்குப் போனால்தான் தனது மூன்று குழந்தைகளுக்கும் எதாவது செய்யமுடியும் என்ற நிலையில், நோய்வாய்ப் பட்டுள்ள தனது ஒன்பது வயது மூத்த மகனை வீட்டின் முன் நிற்கும் வேப்பமரத்தின் நிழலில் ஒரு கோரைப்பாயை விரித்து, கிடத்தி, தலைமாட்டில் குடிக்க கொஞ்சம் தண்ணீரும் தேவையான மருந்தையும், தேவைப்படும் தைரியத்தை வார்த்தைகளாகவும் கொடுத்துவிட்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.
தேடி வந்த மாணவர்களுக்கு நிலையின் வலி புரியவில்லை போலும், அச்சகமாணவனை பள்ளிக்கு வற்புறுத்தி அழைத்தனர்.

நடப்பதைப் பார்த்த பக்கத்துவீட்டு அம்மா, நிலையை அறிந்து, உடனே வந்து, அச்சிறுவனை துக்கி தன் இடுப்பில் சுமந்து, வேகாத வெய்யிலில் நடந்து சென்று ஆசிரியையின் முன் நின்றார்.

நடந்ததை அறிந்த ஆசிரியை மனமுறுகினார், தவறு செய்ததைப் போல உணர்ந்திருக்கக் கூடும், வருந்தம் தெரிவித்தார், மன்னிப்பு கேட்டார்.

சில நாட்களுக்குப் பின் பள்ளிக்கு வந்த அச்சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி, அவனுக்காக வாங்கி வைத்திருந்த ‘Complan’ பொதியை அவனிடம் நீட்டினார் அந்த ஆசிரியை. அந்த பொதி அச்சிறுவனுக்காக நான்கு நாட்களேனும் காத்திருந்திருக்கக் கூடும். மகிழ்சியில் நன்றி சொல்லக் கூட மறந்தான் அவன்.

ஆசிரியர்களின் கைகளில் பிரம்பை மட்டுமே பார்த்திருந்த அவன் முதன்முறை அன்பை பெறுகிறான். தன்னம்பிக்கை பிறகிறது, முதன்முறை ஒரு ஆசிரியரைப் பிடிக்கிறது. அவர் கற்றுத்தரும் பாடம் புரிகிறது.

1999 இல் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும் எனக்கு அந்த ஆசிரியை தேவதையைப் போல காட்சியளித்தார்.

மேசையைச் சுற்றி மாணவர்களை நிறுத்தி அறிவியல் பாடத்தை படம் வரைந்து கற்றுத்தந்த அந்த ஆசிரியை அன்பின் மொத்த உருவம். எங்ளுக்கு முதன்முதலில் ஆங்கில எழுத்துக்களை கற்றுத்தந்தவரும் அவர்தான்.

அவர்தான் என் வாழ்க்கையின் முதல் “தேவதை”.

அந்த ஆசிரியரின் பெயர் : திருமதி. கோமதி மிஸ்

அந்த சிறுவனின் பெயர்: பால் சாமுவேல் +91 9715002662

பள்ளியின் பெயர் (அப்போது): ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஊர்: பனப்பட்டி, கோயம்புத்தூர்.

நீண்ட வருடங்கள் ஓடிவிட்டன… அவரைப் பற்றி எந்த தகவலும் தெரியாது… சந்திக்க முற்படும் போதெல்லாம் எதோ ஒரு தயக்கம்… இந்தப் பதிவு அவரைச் சென்றடைய விரும்புகிறேன்.

நான் சந்திக்க விரும்பும் மிக முக்கியமான, என் மனதில் நிற்கும் மகத்தான மனிதர் “திருமதி. கோமதி மிஸ்”

"மனதில் நின்ற மகத்தான மனிதர்கள்" என்ற வகைப்பாட்டில் என் மனதில் நின்றவர்கள் பற்றி எழுத நினைக்கிறேன். "இதழகம்" பக்கத்தில் ...
04/09/2023

"மனதில் நின்ற மகத்தான மனிதர்கள்" என்ற வகைப்பாட்டில் என் மனதில் நின்றவர்கள் பற்றி எழுத நினைக்கிறேன்.

"இதழகம்" பக்கத்தில் (page) பதிவிடப்படும். விருப்பப்படுவோர் பக்கத்தை வாசித்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியர் தினத்தன்று முதல் பதிவு...

சில புத்தகங்களை வாசிப்பதுண்டு ஆனால் 'நூல் விமர்சனம்' எழுத ஏனோ ஒரு தயக்கம்....சமீபத்தில் வாசித்த புத்தகத்தின் தாக்கத்திலி...
30/08/2023

சில புத்தகங்களை வாசிப்பதுண்டு ஆனால் 'நூல் விமர்சனம்' எழுத ஏனோ ஒரு தயக்கம்....

சமீபத்தில் வாசித்த புத்தகத்தின் தாக்கத்திலிருந்து இந்த பதிவு பிறந்தது.

ஆனால் இது அந்த புத்தகத்தைப் பற்றிய பதிவல்ல...
என்னைப் பற்றியது.
தனிப்பட்டதா? -இல்லை.
கருத்துக்கள் எதாவது...? -இல்லை.
இரகசியங்கள்? - இல்லவே இல்லை.

பின் ஏன்? எதற்க்காக இந்த பதிவு?

வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு வணக்கம்!! உங்கள் நேரம் விலைமதிப்பற்றது என அறிவேன்.

இந்த முக நூல் பக்கத்தை like செய்து follow செய்ய உங்களை அழைப்பதே இப்பதிவின் நோக்கம்.

இப்பக்கத்தில் என்ன பதிவிடப்படும்?

- நூல் விமர்சனங்கள், மனதில் நின்ற மகத்தான ம்னிதர்களின் கதைகள் மற்றும் நான் கற்ற, உங்களுக்கு பயனளிக்கும் என நான் நினைக்கும் சில விடயங்கள் இப்பக்கத்தில் பதிவிடப்படும்.

வரவேற்கிறேன்!!!!

வாசித்தமைக்கு நன்றி!!

16/12/2021

Address

Mahalaxmi Avenue
Palladam
641664

Telephone

+919715002662

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ithazhagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ithazhagam:

Shortcuts

Share