Sri Ambaals Matriculation School

Sri Ambaals Matriculation School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Ambaals Matriculation School, Education, Sree Ambaals Matric Hr. Sec. School, Padalur.

We as a Perfect educations,give conscious progressive training in subject related activities to inspire a real competitive spirit and enhance their knowledge to face the challenges in this challenging world.

 #ஆலத்தூர்_குறுவட்ட அளவிலான  #விளையாட்டுப்_போட்டிகள் (26-27) 🏆தமிழக பள்ளிக் கல்வித் துறை மூலம் நடத்தப்பட்ட ஆலத்தூர் குறு...
20/08/2026

#ஆலத்தூர்_குறுவட்ட அளவிலான #விளையாட்டுப்_போட்டிகள் (26-27) 🏆
தமிழக பள்ளிக் கல்வித் துறை மூலம் நடத்தப்பட்ட ஆலத்தூர் குறுவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் நம் பள்ளியில் இருந்து U-14 , U- 17 , U- 19 போன்ற வயதுப் பிரிவுகளில் நம் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றதோடு, மாவட்ட மற்றும் மாநில அளவிற்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
:
Boys :
Hockey -U-14, U-17, U- 19
Basket ball - U-14, U- 19
Ball badminton - U-19
Table tennis - U -17 , U- 19
Girls:
Ball badminton - U-19
Hockey - U-14, U-19
Kabbadi - U-14
:
Boys:
Tennikoit - U-19
Basketball - U- 17
Badminton - U-17, U-19
Ball badminton - U -17
Table tennis - U -14, U -17
Foot Ball - U -19
Kho-kho -U-17, U -19
Throw ball - U-17, U -19
Girls:
Kabbadi - U -19
Badminton - U-17,19
Basketball -U-14, U-17
Ball badminton - U-17
Foot Ball - U- 14, U- 17, U-19
Kho-kho - U -14, U-17, U-19
Hand ball - U-14, U- 17
கலந்து கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.மேலும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்த பள்ளித் தாளாளர், துணைத் தாளாளர், பள்ளி முதல்வர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், ஊக்கப்படுத்தி அனுப்பிய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
நன்றி!

 #பாராட்டு_சான்றிதழ்_வழங்குதல் -  #கல்வி_வளர்ச்சி_நாள் (26-27) 🎓அனைவருக்கும் வணக்கம். கல்வி வளர்ச்சி நாளான காமராஜர் பிறந...
17/08/2026

#பாராட்டு_சான்றிதழ்_வழங்குதல் - #கல்வி_வளர்ச்சி_நாள் (26-27) 🎓
அனைவருக்கும் வணக்கம். கல்வி வளர்ச்சி நாளான காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு ERODE (GOBICHETTIPALAYAM) MAHATHMA ACADEMY & COIMBATORE ROYAL ART ACADEMY இணைந்து நடத்திய #ஓவியம், #சுவரொட்டிகள் தயாரித்தல் மற்றும் #கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகள் நம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அவற்றில் *600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தனித் திறனை வெளிப்படுத்தியதன் பொருட்டு , நம் பள்ளியை மாணவர்களின் திறமையை ஊக்கப்படுத்தும் சிறந்த பள்ளியாக அங்கீகரித்து " " - 2026 என்ற விருதினை வழங்கி கௌரவித்துள்ளதோடு , கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டு மாணவர்கள் ஊக்குவிக்கப் பட்டார்கள்*. போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் ஊக்கப்படுத்தி அனுப்பிய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மேலும் போட்டியை ஏற்பாடு செய்துக் கொடுத்த தாளாளர், துணைத் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.
நன்றி!

 #சுதந்திர_தின_விழா &  #விருது_வழங்கும்_விழா (26-27) 🏆நம் ஸ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  80-வது சுதந்திர ...
17/08/2026

#சுதந்திர_தின_விழா & #விருது_வழங்கும்_விழா (26-27) 🏆
நம் ஸ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா பள்ளித் தாளாளர் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட மாற்று திறனாளிகளுக்கான கபடி, நீச்சல் போட்டி, தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதோடு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்த #தமிழ்நாடு #கபடி அணி பயிற்சியாளர் மற்றும் கபடி வீரர் திரு. ரமேஷ், #நீச்சல் வீராங்கனை திருமதி. அம்பிகாபதி மற்றும் #தடகள வீராங்கனை திருமதி. ரஞ்சிதா அவர்கள் கலந்து கொண்டு கல்வியோடு விளையாட்டும் மாணவர்களுக்கு இன்றியமையாதது எனவும், ஒவ்வொரு துறையிலும் மாணவர்கள் தடம் பதிக்க வேண்டும் என்பது குறித்தும், முயற்சியோடு பயிற்சியும் இருந்தால் வெற்றி நம் வசம் என்ற கருத்துகளை மாணவர்கள் மனதில் பதிய வைக்கும் வகையில் உரை நிகழ்த்தி மாணவர்களை ஊக்கப்படுத்தினர். மேலும் சுதந்திர தாகத்தினை தூண்டும் விதமாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளான #பரதம், #தமிழ்_பேச்சு, #தேசப்பற்று_நடனம், #தேசியக்_கொடி மற்றும் தேசப்பற்றை பறைசாற்றும் நடனம், 80 தேசத் தலைவர்களின் பெயர் அவர்கள் பிறந்த ஊரோடு மெய்சிலிர்க்க எடுத்துக் கூறுதல், மாணவர்களின் வீர சாகசங்கள் கொண்ட பிரமிடு என அனைத்து நிகழ்விலும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நமது தேசிய கொடியை பிரதிபலிக்கும் விதமாக மிக பிரமாண்டமான தேசியக் கொடியை ஒற்றுமையோடு ஏந்தியும், #இந்திய_ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்கள் பயன்படுத்துகின்ற #துப்பாக்கி மற்றும் #தலைக்கவசத்தின் வடிவத்தை அலங்கரித்தும் விழா கொண்டாடப்பட்டது. மேலும் விழாவின் சிறப்பு விருந்தினர்களான விளையாட்டு வீரர்களுக்கு " " என்ற விருதும், ரொக்கப் பரிசும் நம் பள்ளி தாளாளர் அவர்கள் கரம் கொண்டு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்*. தொடர்ந்து கல்வி வளர்ச்சி நாளான காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு, ERODE - MAHATHMA ACADEMY சார்பில் நடத்தப்பட்ட கலை மற்றும் இலக்கியப் போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். இதனைப் பாராட்டும் விதமாக, மாணவர்களின் திறமைகளை ஊக்குவித்து வளர்க்கும் பள்ளியாக நம் பள்ளியைத் தேர்வு செய்து "BEST TALENT NURTURING SCHOOL - 2026 என்ற விருதினை வழங்கி கௌரவித்ததன் பொருட்டு, விருதினை பள்ளித் தாளாளர் அவர்கள் கரம் கொண்டு வழங்க, துணைத் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து பெற்றுக்கொண்டனர். நிறைவாக, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, சுதந்திர தின விழா இனிதே நிறைவுற்றது. மேலும் விழாவினை ஏற்பாடு செய்து கொடுத்த பள்ளித் தாளாளர், துணைத் தாளாளர், பள்ளி முதல்வர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.
நன்றி!

  (26-27) ✨அனைவருக்கும் வணக்கம். உலகத் தரம் வாய்ந்த கல்வியை உள்ளூர் சூழலில் வழங்கிக் கொண்டிருக்கும் நம் ஶ்ரீ அம்பாள்ஸ் ம...
11/08/2026

(26-27) ✨
அனைவருக்கும் வணக்கம். உலகத் தரம் வாய்ந்த கல்வியை உள்ளூர் சூழலில் வழங்கிக் கொண்டிருக்கும் நம் ஶ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று (08.08.2026- சனிக்கிழமை) 6 முதல் 9 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் " " கல்வியோடு குன்றாத ஒழுக்கம், தன் திறன் அறிந்து அவற்றில் மேலோங்குதல், முயற்சியோடு தொடர்ந்து பயிற்சி போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய "YOUR FUTURE BEGINS WITH JEGAN" - DON'T MISS IT என்ற தலைப்பில் பள்ளித் தாளாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக உலக புகழ் பெற்ற "சிந்தனைச் சிற்பி, தன்னம்பிக்கை பேச்சாளர், இளைய அப்துல் கலாம் Dr.I.JEGAN" அவர்கள் கலந்து கொண்டார். விழாவில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்களும், 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்*. நிகழ்வில் சிறப்பு விருந்தினர் அவர்கள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தேவை உணர்ந்து செயலாற்றிட வேண்டும் என்பது குறித்தும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நமக்கான கடமை, பொறுப்புகள் உணர்ந்து செயல் புரிதல் வேண்டும் என்பது குறித்தும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயலாற்றும்போது மாணவர்களின் முன்னேற்றம் உயர்வானதாக அமையும் என்பது குறித்தும், உயரந்த இலக்கினை அடைந்திட முயற்சியும், பயிற்சியும் தொடர்ந்து இருந்தால் வருங்காலம் வெல்லலாம் என்பது குறித்தும் பல உண்மை சம்பவங்களை எடுத்துக்கூறி அனைவரையும் உணர்வுப் பூர்வமாகவும், ஆழ்மனதின் சிந்தனையை தூண்டும் விதமாகவும் , மெய்சிலிர்க்க சிறப்புரை நிகழ்த்தி உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தினார். மேலும் நிகழ்வை ஏற்பாடு செய்து கொடுத்த பள்ளித் தாளாளர் , துணைத் தாளாளர், பள்ளி முதல்வர் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.
நன்றி.!!!

  (DHANALAKSHMI MEDICAL COLLEGE) 26-27 🎓ஶ்ரீ அம்பாளின் அன்பார்ந்த பெற்றோர்களுக்கு  வணக்கம்.நம் பள்ளியில் பயிலும் 11 மற்ற...
07/08/2026

(DHANALAKSHMI MEDICAL COLLEGE) 26-27 🎓
ஶ்ரீ அம்பாளின் அன்பார்ந்த பெற்றோர்களுக்கு வணக்கம்.
நம் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் (BIOLOGY GROUP) மாணவர்களை அவர்களின் எதிர்காலம் சிறக்க NEET தேர்விற்கான முக்கியத்துவம் , மருத்துவம் மற்றும் மருத்துவத் துறை சம்பந்தமான பிரிவுகள் போன்றவற்றை பற்றிய முழு விவரங்களை மாணவர்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் பொருட்டு DHANALAKSHMI MEDICAL COLLEGE - SIRUVACHUR - க்கு அழைத்து சென்றோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்களுக்கு DEPT OF ORAL AND SURGERY Dr.DHIVYA , DEPARTMENT OF AND Dr.PRIYA , PRINCIPAL ALLIED HEALTH SCIENCE Mr. SHARATH , M PHARM PRINCIPAL Mr. JOHN KIRUBHAKARAN, ASSOCIATE PROFESSOR OF Mr. ABDUL ஆகியோர் மருத்துவத் துறை சம்மந்தமான தகவல்களை விரிவுரை ஆற்றினர்.* மேலும் மாணவர்கள் அனைவரும் LAB , - NURSING , , , , என அனைத்து ஆய்வுக் கூடங்களையும் பார்வையிட்டு அவற்றைப் பற்றிய முழு விவரங்களையும் நேரடி அனுபவத்தின் மூலம் தெரிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி!!

  (3rd to 5th Std) 26-27 🥳அனைவருக்கும் வணக்கம். உலகத்தரம் வாய்ந்த கல்வியை உள்ளூர் சூழலில் வழங்கிக் கொண்டிருக்கும் நம் ஶ்...
06/08/2026

(3rd to 5th Std) 26-27 🥳
அனைவருக்கும் வணக்கம். உலகத்தரம் வாய்ந்த கல்வியை உள்ளூர் சூழலில் வழங்கிக் கொண்டிருக்கும் நம் ஶ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று (06.08.2026- வியாழன்) 3 முதல் 5 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு AUGUST -15 சுதந்திர தினத்தை முன்னிட்டு FANCY DRESS COMPETITION (மாறுவேடப் போட்டி) , , , , , CHATRAPATHI SHIVAJI , SAY NO TO PLASTIC , DIGITAL LEARNING , ROAD SAFETY போன்ற தலைப்புகளில் நடைபெற்றது. போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு ஏற்றவாறு வேடமணிந்து அவற்றைப் பற்றிய தகவல்களை நேர்த்தியாக எடுத்துரைத்து தங்களது தனித்திறனை அழகாக வெளிப்படுத்தினர். மேலும் இதன் மூலம் மாணவர்கள் கடவுள் , தேசத் தலைவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் SOCIETY சம்மந்தமான பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் தங்கள் குழந்தைக்கு அழகாக வேடம் அணிவித்து ஊக்கப்படுத்தி அனுப்பிய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மேலும் போட்டியை ஏற்பாடு செய்துக் கொடுத்த தாளாளர், துணைத் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.
நன்றி!

  (1st & 2nd) 26-27 🎊அனைவருக்கும் வணக்கம். உலகத்தரம் வாய்ந்த கல்வியை உள்ளூர் சூழலில் வழங்கிக் கொண்டிருக்கும் நம் ஶ்ரீ அம...
06/08/2026

(1st & 2nd) 26-27 🎊
அனைவருக்கும் வணக்கம். உலகத்தரம் வாய்ந்த கல்வியை உள்ளூர் சூழலில் வழங்கிக் கொண்டிருக்கும் நம் ஶ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று (05.08.2026- புதன்கிழமை) 1 மற்றும் 2- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு AUGUST -15 சுதந்திர தினத்தை முன்னிட்டு (மாறுவேடப் போட்டி) , , , LORD SEETHA, , , , , , போன்ற பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது. போட்டியில் 150 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு ஏற்றவாறு வேடமணிந்து அவற்றைப் பற்றிய தகவல்களை நேர்த்தியாக எடுத்துரைத்து தங்களது தனித்திறனை அழகாக வெளிப்படுத்தினர். மேலும் இதன் மூலம் மாணவர்கள் கடவுள், இயற்கை , விவசாயம் மற்றும் SOCIETY சம்மந்தமான பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் தங்கள் குழந்தைக்கு அழகாக வேடம் அணிவித்து ஊக்கப்படுத்தி அனுப்பிய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மேலும் போட்டியை ஏற்பாடு செய்துக் கொடுத்த தாளாளர், துணைத் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.
நன்றி!

  (KG) 26-27 🥳அனைவருக்கும் வணக்கம். உலகத்தரம் வாய்ந்த கல்வியை உள்ளூர் சூழலில் வழங்கிக் கொண்டிருக்கும் நம் ஶ்ரீ அம்பாள்ஸ்...
06/08/2026

(KG) 26-27 🥳
அனைவருக்கும் வணக்கம். உலகத்தரம் வாய்ந்த கல்வியை உள்ளூர் சூழலில் வழங்கிக் கொண்டிருக்கும் நம் ஶ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று (05.08.2026- புதன்கிழமை) LKG மற்றும் UKG பயிலும் மாணவச் செல்வங்களுக்கு AUGUST -15 சுதந்திர தினத்தை முன்னிட்டு COMPETITION (மாறுவேடப் போட்டி) , , , , , LORD , , , , போன்ற பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது. போட்டியில் 200 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு ஏற்றவாறு வேடமணிந்து அவற்றைப் பற்றிய தகவல்களை நேர்த்தியாக எடுத்துரைத்து தங்களது தனித்திறனை அழகாக வெளிப்படுத்தினர். மேலும் இதன் மூலம் மாணவர்கள் கடவுள் , பறவை , பழங்கள் மற்றும் காய்கறிகள் சம்மந்தமான பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் தங்கள் குழந்தைக்கு அழகாக வேடம் அணிவித்து ஊக்கப்படுத்தி அனுப்பிய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மேலும் போட்டியை ஏற்பாடு செய்துக் கொடுத்த தாளாளர், துணைத் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.
நன்றி!

 #ஆலத்தூர்_குறுவட்ட  #விளையாட்டுப்_போட்டி (26-27) ✨அனைவருக்கும் வணக்கம்.   நம் பள்ளியில் (31.07.2026- வெள்ளிக் கிழமை) அன...
05/08/2026

#ஆலத்தூர்_குறுவட்ட #விளையாட்டுப்_போட்டி (26-27) ✨
அனைவருக்கும் வணக்கம். நம் பள்ளியில் (31.07.2026- வெள்ளிக் கிழமை) அன்று பள்ளித் தாளாளர் த. பாலச்சந்திரன் அவர்கள் தலைமையில் ஆலத்தூர் குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது . போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10- க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 14,17,19 போன்ற வயது பிரிவுகளில் உள்ள மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் நம் பள்ளியில் இருந்து 70- க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு , போன்ற குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு KHO- KHO வில் இரண்டாம் ( RUNNER ) இடம் பிடித்து வெற்றிப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் Mr. GANESAN மற்றும் ZONAL JOIN SECRETARY Ms.CHITRA கலந்து கொண்டார். மேலும் போட்டியினை ஏற்பாடு செய்துக் கொடுத்த தாளாளர், துணைத் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.
நன்றி!

  (26-27) ✨அனைவருக்கும்  வணக்கம். உலகத்தரம் வாய்ந்த கல்வியை உள்ளூர் சூழலில் வழங்கிக் கொண்டிருக்கும் நம் ஶ்ரீ அம்பாள்ஸ் ம...
19/07/2026

(26-27) ✨
அனைவருக்கும் வணக்கம். உலகத்தரம் வாய்ந்த கல்வியை உள்ளூர் சூழலில் வழங்கிக் கொண்டிருக்கும் நம் ஶ்ரீ அம்பாள்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் LKG மற்றும் UKG பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு இன்று (18.07.2026 - சனிக் கிழமை) 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் " " என்ற தலைப்பில் பள்ளித் தாளாளர் அவர்கள் தலைமையில் மங்கள விளக்கேற்றி துவங்கப்பெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக . Mr.RANDEEP RAJKUMAR-TRICHY & TERRITORY MANAGER BURLINGTON ENGLISH Mr. RANJITH KUMAR அவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினர் அவர்கள் குழந்தைகளின் நலன் குறித்தும், ஒழுக்கம் மற்றும் கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்தும், அவர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் வழங்கப்படுவது குறித்தும், மாணவர்களின் நலனில் பெற்றோர்களின் பங்கு மற்றும் கடமை போன்றவற்றை குறித்தும் மிகச் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.* கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகழ்வினை ஏற்பாடு செய்து கொடுத்த பள்ளித் தாளாளர், துணைத் தாளாளர், பள்ளி முதல்வர் அவர்களுக்கும், கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள்.
நன்றி!

Address

Sree Ambaals Matric Hr. Sec. School
Padalur
621109

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919655009894

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ambaals Matriculation School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sri Ambaals Matriculation School:

Shortcuts

Share

Category