23/07/2020
Virtual Learning - Revolutionizes Teaching-Learning Processes
School is a temple of learning. When they cannot function due to abnormal circumstances, teachers go out of their way to help students continue learning through virtual mode.
Katha on Ratha proudly presents extracts from the Panel Discussion held virtually on June 27, 2020 on the topic: Opportunities in e-Learning. The panel consisted of teachers from Ramakrishna Mission Higher Secondary School (referred as RKM), T Nagar, Chennai and Sai Sankalp Nursery and Primary School (referred as SS), Arasankazhani, Chengelpet District moderated by our Katha on Ratha Implementation Lead, Mr. Kannan.
Ms Lalitha, Program Coordinator and Primary grade teacher from RKM and Ms Sangeetha, Headmistress from SS shared their experiences in initiating virtual teaching for their respective schools. They have successfully been doing this ever since lockdown started in March 2020. With 700+ students in RKM and 200+ students in SS these teachers have been working all through summer break so as their students may continue learning without a break.
இணையவழிக் குழு உரையாடலைத் தொகுத்துக் கீழே கொடுத்திருக்கிறோம்:
1. எந்தெந்த வகுப்புகள் இணையவழிக் கல்வி முறையில் பங்கேற்கின்றன? இதில் எத்தனை சதவிகித மாணவர்கள் பங்கேற்கின்றனர்?
RKM: KG to v – 70%
SS: I to V – முதலில் 80%, ஆனால் தற்பொழுது 97%
2. இணையவழிக் கல்வி தொடங்கியதன் நோக்கம் என்ன?
RKM & SS: மாணவர்களின் கல்வி நிலையில் பெரிய சரிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், அவர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்தவும் தொடங்கப்பட்டது,
3. இணையவழியில் கல்வி தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்களின் பங்கேற்புக் குறித்து பெற்றோர்களுடன் ஆலோசித்தீர்களா?
RKM: ஆசிரியர்கள் பெற்றோர்களை செல்பேசி மூலம் தொடர்புகொண்டு இணையவழிக் கல்வி பற்றிய விவரங்களைப் பேசினர். வீட்டுப்பாடங்களாக அனுப்பப்போவதையும், அவற்றில் நீங்களும் ஈடுபடலாம் என்பதையும் தெரிவித்தனர்.
SS: ஆசிரியர்கள் பெற்றோர்களை செல்பேசி மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது மூன்று வகையான பெற்றோர்களை நாங்கள் பார்க்க நேர்ந்தது. இத்திட்டத்திற்கு உடனே ஒப்புக் கொண்டவர்கள் முதலாம் வகை; மற்றவர்களிடம் செல்பேசியைக் கடனாகப் பெறுவோம் எனறவர்கள் இரண்டாம் வகை; தங்களால் எதுவுமே முடியாது என்று கூறியவர்கள் மூன்றாம் வகை. மூன்றாம் வகை பெற்றோர்களை ஊக்குவிக்க நாங்கள் அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருந்தது. மாணவர்கள் அடையும் பயன் எவ்வளவு என்ற விவரத்தை எடுத்துக் கூறியபின்னர்தான் மூன்றாம் வகை பெற்றோர்கள் சம்மதித்தனர்.
4. மாணவர்கள் இணையவழிக் கல்வியைப் பெறுவதற்கான கருவிகளை வைத்துள்ளார்களா என்று எவ்வாறு கண்டறிந்தீர்கள்? கருவி இல்லாதவர்களுக்கு என்ன ஆலோசனை வழங்கினீர்கள்?
RKM: பெற்றோர்களுடைய அலைபேசி எண்களைச் சேகரித்து, வாட்ஸப் குழுக்களை அமைத்தோம். Smart Phone இல்லாத பெற்றோர்கள், தங்கள் உறவினரின் எண்களைக் கொடுத்தனர். அருகருகே வசிக்கும் மாணவர்களைச் சேர்ந்து கற்கச் சொல்லவும் ஆலோத்திருக்கிறோம்.
SS: 50 சதவிகிதம் பெற்றோர்களிடம் செல்பேசி மற்றும் இணையத்தொடர்பு இருந்தது. சில பெற்றோர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் செல்பேசி பயன்படுத்த உதவி கிடைத்தது.
நாங்கள் பெற்றோர்களுடன் மாணவர்களின் கல்விநிலை குறித்தும், அது எந்தக் காரணத்தாலும் சரிந்துவிடக் கூடாது என்பதைப் பற்றியும் நிறையவே பேச வேண்டியிருந்தது. இதை எடுத்துக் கூறியபோதுதான் பெற்றோர்களுக்கு நாங்கள் ஏன் இணையவழி பற்றிப் பேசுகிறோம் என்பதே புரியத் தொடங்கியது.
5. எந்தெந்தச் செயலிகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்? அவற்றுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு எவ்வாறு அளித்தீர்கள்?
SS: WhatsApp, FCC, Zoom செயலிகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். மாணவர்களுக்கு அச்செயலிகளைப் பயன்படுத்துவதில் ஒருவாரப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயன்படுத்தும் முறையை பற்றிய வீடியோக்கள் பதிவு செய்து அதன்மூலமாகவும் பயிற்சி கொடுத்தோம்.
RKM: பெரும்பாலான மாணவர்கள் WhatsApp பயன்படுத்துகிறார்கள். Screen recorder என்ற செயலி வீடியோ பதிவு செய்வதற்காக ஆசிரியர்களால் பயன்படுத்தப்படுகிறது.
6. இணையவழி என்பதற்குப் பெற்றோரின் பதில் எவ்வாறாக இருந்தது? சவால்களைச் சமாளித்தது எப்படி?
RKM: ஆரம்பத்தில் 30% பெற்றோருடன் தொடங்கினோம். தினமும் கொடுக்கப்பட்ட செயல்பாடுகளைச் செய்த மாணவர்களின் விவரத்தை WhatsApp மூலம் தெரிவித்தோம். சில பெற்றோர் T.C. வாங்க முற்பட்டனர். அவர்களிடம் அனுப்பப்படும் Games மற்றும் Videoவைப் பாருங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தோம். இரண்டு வாரத்தில் அப்படிப்பட்ட பெற்றோரும் மாறத் தொடங்கினர்.
SS: பிடிவாதமான பெற்றோரைச் சரிக்கட்ட எங்களுக்கு ஒரு வாரம் எடுத்தது. தற்போது அவர்கள் ஏதாவது ஒருநாள் வீட்டுப்பாடமோ அல்லது செயல்பாடுகளுக்கான விவரங்களோ குழுவில் வரவில்லையென்றால் அன்றே எங்களை செல்பேசியில் கூப்பிடுகின்றனர். இத்தகைய மாற்றத்தை இணையவழி முறை அளித்துள்ளது.
7. இணையவழி முறையைப் பயன்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தனவா?
RKM: எல்லா ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர். தொழில்நுட்பம் தெரியாத ஆசிரியர்களும் தங்கள் பிள்ளைகளின் உதவியோடு சிறந்த முறையில் கற்றறிந்து செயல்படுகின்றனர்.
SS: ஒரு சில ஆசிரியர்களிடம் பிரச்சனை காணப்பட்டது. அவர்களை அழைத்து மாணவர்களின் நலன் பற்றியும் அதில் ஆசிரியர்களாகிய நாம் செய்யவேண்டியவற்றைப் பற்றியும் பேசிய பின்னரே அவர்கள் முழுமையாக ஈடுபடத் தொடங்கினர்.
8. இணையம் வழியே கற்கும் முறையில் மாணவர்கள் முழுமையாக ஈடுபட்டனரா? அவர்களின் கவனத்தை ஈர்க்க என்ன உத்தியைக் கையாண்டீர்கள்?
RKM: மாணவர்களை ஊக்குவிக்க STAR மற்றும் Emoji அனுப்பத் தொடங்கினோம். தினமும் பதில் அனுப்ப முடியாதவர்கள்கூட ஒருவார வீட்டுப்பாடத்தைச் சேர்த்து செய்து அனுப்பினர். நாங்கள் மின்-சான்றிதழ் வழங்கியும் மாணவர்களை ஊக்குவித்தோம்.
SS: மாணவர்களை ஊக்குவிக்க Star of the Day, Star of the Week, Star of the Month போன்றவற்றை அறிவிக்கத் தொடங்கினோம். அதன்பின் கேட்கவா வேண்டும்! பதில்கள் நேரத்திற்கு வந்து குவியத்தொடங்கின.
9. எவ்வாறான செயல்பாடுகளை இணையவழி முறையில் நடத்துகிறீர்கள்?
RKM: Games மற்றும் puzzles கொடுக்கிறோம். ஒரு வாரம் முன்னதாகவே திட்டமிட்டு, தினம் ஒரு Subject என்று அட்டவணையிட்டுக் கொடுக்கிறோம். சனிக் கிழமைகளில் ஆங்கில வாசிப்புப் பயிற்சியை ஒலிப்பதிவு மூலமாகச் செய்கிறோம்.
SS: முன்னர் கூறிய அடிப்படைத் திறன்களை மேம்படுத்த முந்தய கல்வியாண்டின் மூன்றாம் பருவப் பாடங்களை எடுத்துக் கொண்டோம். மே மாதத்திலிருந்து இந்த ஆண்டின் முதல் பருவப் பாடங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
10. இணையவழியில் கற்பிப்பதால் கல்வித்தரம் மேம்படுமா? தங்கள் பள்ளி மாணவர்களைத் தவிர மற்றவர்களும் பயன்பெற ஏதேனும் செய்திருக்கிறீர்களா?
RKM: ஆம், மேம்படும்.
RKM & SS: WhatsApp தவிர, நாங்கள் Youtube மூலமாக எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறோம்.
01/06/2020
10/12/2019
07/12/2019