25/04/2018
நேற்று சச்சின் பிறந்த நாள். அதே நாளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு போட்டி ஒதுக்கப் பட்டுள்ளது.
இவை யதார்த்தமான நிகழ்வு என நாம் நினைத்தால் நாம் முட்டாளே.
IPL சூதாட்டத்தில் உச்ச பட்ச பெட்டிங் நேற்று தான் நிகழ்ந்திருக்கும். எப்படி, ஏன்!??
சச்சின் பிறந்த நாளில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் அல்லது பெற வேண்டும் என்பது அந்த அணியின் ஆதரவாளர்களுக்கு இயல்பான உணர்வு. இதனை ஆங்கிலத்தில் SENTIMENTAL FOOLISH என்பர்.
ஆக அந்த அடிப்படையில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் அல்லது வெற்றி பெரும் என பெரும்பான்மை ஆன சதவிகிதத்தினர் சூதாட்டத்தில் ஈடு பட்டு இருப்பார்கள்.
குறிப்பாக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணியை குறைந்த ஸ்கோருக்கு அவுட் செய்து, முதல் பாதி வரை மும்பை அணிக்கு ஆதரவாக சூதாட்டத்தில் புழங்கிய பணம் சில ஆயிரம் கோடிகள் இருக்கும்.
இந்த சூழ்நிலையில் மும்பை அணி வெற்றி பெற்றால் லாபம் சூதாட்டத்தில் பணம் கட்டியவர்களுக்கு போகும்..
தோற்றால் தான் சூதாட்டம் நடத்துபவனுக்கு லாபம். லாபத்தில் உரிய பங்கு IPL நிர்வாகத்திற்கு போய் சேர்ந்திருக்கும்..
#விழிப்புணர்வு_கொள்