ஜே. கே .கே ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி

  • Home
  • India
  • Namakkal
  • ஜே. கே .கே ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி

ஜே. கே .கே ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி பெண்கல்வியின் தேவையை உணர்ந்து காமரா?

ஜே.கே.கே ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி
செய்பவர் பெயர் விளங்கி நிலைத்து நிற்கக் செய்யும் பல்வேறு அறச்செயல்களில் உயர்ந்தது ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்ற பாரதியின் வரிகளுக்கு வடிவம் கொடுத்தவர் நம் ஐயா கொடைவள்ளல் திரு. ஜே.கே.கே.நடராஜா செட்டியார் அவர்கள்.
தனது ஆற்றல், அறிவு, செல்வம், அரசியல் செல்வாக்கு அனைத்தையும் குமாரபாளையம் நகர மேம்பாட்டிற்காக முற்றிலும் பயன்படுத்தினார்.
உயர்நிலைப் பள்ளி தொடங்கவேண்டும் என்ற எண்ணம் நம் ஐயாவிற்கு அறுபதுகளில் தோன்றியது. குமாரபாளையம் நகரில் பெண்கள் படிக்க வேண்டுமானால் பவானிக்கு செல்ல வேண்டும். சுமார் 1 ½ மைல் ஆற்றுப்பாலத்தைக் கடந்து, நடந்து சென்றுதான் பெண்கள் படித்தார்கள். ஆண்களோடு சேர்ந்து தங்கள் பெண்குழந்தைகள் படிப்பதை விரும்பாத பல பெற்றோர், அவர்கள் படிப்பிற்கே முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த நிலையைத் தொடரவிடக்கூடாது என நம் ஐயா அவர்கள் அப்போதைய முதலமைச்சராய் இருந்த திரு.பக்தவத்சலம் அவர்களுக்கும், கல்வி அமைச்சராய் இருந்த திரு. கக்கன் அவர்களுக்கும் தம் கைப்பட பள்ளி திறக்க அனுமதி கோரி கடிதம் எழுதினார். திரு. பக்தவத்சலம் அவர்கள் சொந்த இடம் கொடுத்து பள்ளிக்கூடம் திறந்தால் நடத்த அனுமதி தருகிறோம் என்றார். அதன்படியே தம் சொந்த செலவில் நிலம் வாங்கி கட்டிடங்களைக் கட்டி அனுமதி பெற்று பள்ளியைத் துவங்கினார்.
இவ்வாறாக கொடைவள்ளல் தெய்வத்திரு.ஜே.கே.கே.நடராஜா ஐயா அவர்களால் உயர்நிலைப் பள்ளியாக 28 மாணவிகளுடன் 1965-ம் ஆண்டு ஜூலை திங்கள் 15-ம் நாள் இப்பள்ளி தோற்றுவிக்கப்பட்டது. முதலாமாண்டு சேர்ந்த அனைத்து மாணவிகளுக்கும் பள்ளிக்கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை. அக்கட்டணத்தை பள்ளி நிர்வாகமே ஏற்றுக்கொண்டது. இச்செய்தி தற்போது உள்ளவர்களுக்கு ஓர் அதிசயமே.
கர்மவீரர் காமராஜரோடு நம் ஐயாவிற்கு நல்ல நெருங்கிய நட்பு இருந்தது. அவர்களிடையே இருந்த நட்பு இப்பள்ளி துவங்க அடிப்படையாக இருந்தது. குறிப்பாக கிராமப்புற பெண்கல்வியின் தேவையை உணர்ந்து காமராஜரின் பிறந்த நாளில் (ஜூலை 15) இப்பள்ளி துவக்கப்பட்டது. அவர்கள் இருவரின் உன்னத நட்பிற்கான அடையாளம் நம்பள்ளி ஆகும்.
உயர்கல்வி பயில விரும்பும் மாணவியர் மற்றும் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு ஜே.கே.கே.ரங்கம்மாள் உயர்நிலைப் பள்ளி (உயர்கல்வி வழங்க) 25-6-1979 அன்று மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கல்லூரிக் கல்வியும் தடைபடாமல் கிடைக்க 1974-ல் குமாரபாளையத்தில் முதன்முதலாக பெண்கள் கல்லூரி துவங்கப்பட்டது.
பள்ளி மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான வகுப்புகள், விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடம், (இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல்) குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி முதலான அனைத்து உள் கட்டமைப்புகளும் பள்ளி நிர்வாகத்தால் செவ்வனே செய்துதரப்பட்டுள்ளது.
மேல்நிலைப் பிரிவில் இயங்கி வரும் பாடப்பிரிவுகள்
Group I : Physics, Chemistry, Maths, Computer Science
Group II : Physics, Chemistry, Maths, Biology
Group III: Physics, Chemistry, Biology, Nursing
Group IV: Commerce, Accountancy, Economics, Computer Science.

21.08.24.மற்றும்22.08.24 அன்று எக்ஸெல் பொறியியல் கல்லூரி, மைதானத்தில் நடைபெற்ற குறுமைய வட்ட அளவிலான தடகளப் போட்டியில் நம...
29/08/2024

21.08.24.மற்றும்22.08.24 அன்று எக்ஸெல் பொறியியல் கல்லூரி, மைதானத்தில் நடைபெற்ற குறுமைய வட்ட அளவிலான தடகளப் போட்டியில் நமது பள்ளியை சார்ந்த மாணவிகள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் ,நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்று குமாரபாளையம் வட்ட பெண்கள் தடகளப் போட்டியில் இரண்டாவது ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.



குமாரபாளையம் வட்ட அளவிலான இளையோருக்கான கபடி போட்டியானது பள்ளிபாளையம் காடச்சநல்லூர் எஸ் பி கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில...
30/07/2024

குமாரபாளையம் வட்ட அளவிலான இளையோருக்கான கபடி போட்டியானது பள்ளிபாளையம் காடச்சநல்லூர் எஸ் பி கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 23/07/ 2024 செவ்வாய் அன்று நடைபெற்றது .அதில் குமாரபாளையம் வட்ட அளவில் இருந்து எட்டு பள்ளிகள் கலந்து கொண்டனர் .அதில் ஜே கே.கே ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் .

Address

Komarapalayam
Namakkal
அஞ்சல்என்-638183

Alerts

Be the first to know and let us send you an email when ஜே. கே .கே ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category