15/07/2024
15.7.24 -மாண்புமிகு முதல்வரின் காலை சிற்றுண்டி ஊரக அரசு உதவிபெறும் பள்ளிகளில் இன்று துவங்கப்பட்டது.மல்லசமுத்திரம் ஒன்றிய அளவிலான துவக்க விழாவானது காலை 8.00 மணி அளவில் கருமனூர் ஆர்.சி.அரசு உதவி பெறும் பள்ளியில் கர்ம வீரர் காமராசர் உருவப்படத்திற்கு ரோஜா மாலை அணிவித்து உதிரி பூக்களால் அலங்கரித்து மரியாதை செலுத்தி துவங்கப்பட்டது.விழாவில் INFRA உதவி திட்ட அலுவலர்- நாமக்கல்,மல்லசமுத்திரம் ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், கருமனூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர்,மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர் ,வட்டார கல்வி அலுவலர்கள்,வட்டார இயக்க மேலாளர்,பள்ளியின் தாளாளர்,NREGA பொறுப்பாளர்கள்,CMBFS முதன்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.