Green house association

Green house association Isha green hands

https://youtu.be/JxR5y2zwqYcபட்டைய கிளப்ப போகும் பாரத பாரம்பரிய நெல் திருவிழா...வெற்றி விவசாயிகள்....வேளாண் விஞ்ஞானிகள்....
21/07/2023

https://youtu.be/JxR5y2zwqYc

பட்டைய கிளப்ப போகும் பாரத பாரம்பரிய நெல் திருவிழா...

வெற்றி விவசாயிகள்....
வேளாண் விஞ்ஞானிகள்.....
விதவிதமான எளிய இயந்திரங்கள்.....
ஆடிப் பட்டத்தை அர்த்தமுள்ளதாக்கும் விதை நெல் பகிர்வு....
கண்ணுக்கும் மண்ணுக்கும் நலம் தரும் கண்காட்சி அரங்குகள்.....

இன்னும் என்ன தாமதம் மக்களே.... இந்த பாரம்பரிய நெல் திருவிழாவில் உங்கள் இருக்கைக்கு இன்றே இணையுங்கள்.....!!!!

30 ஜூலை 2023 நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும்
https://forms.gle/cGTikAVafgEfRky47

அல்லது இந்த எண்களை அழைத்து உங்களது வருகையை உறுதி செய்யவும்

8300093777
9442590077

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கான வாட்ஸ் அப் குரூப் லிங்க்
https://chat.whatsapp.com/C5XQavOkgte8J0TwaBRsRR

என்ன மக்களே இன்னும் பத்தே நாள் தான் இருக்கு பாரம்பரிய நெல் திருவிழாவிற்கு....பதிவு பண்ணி வர்றவங்களுக்கு கலைநிக.....

https://youtu.be/WPWbgf74MnUநாளைய உலகம் நல்ல இளைஞர்கள் கையில்.....வேலை வாய்ப்புகளைத் தேடி நகரை நோக்கி நகர்ந்த வாழ்வு சற்...
12/07/2023

https://youtu.be/WPWbgf74MnU

நாளைய உலகம் நல்ல இளைஞர்கள் கையில்.....

வேலை வாய்ப்புகளைத் தேடி நகரை நோக்கி நகர்ந்த வாழ்வு சற்றே இயற்கையை நோக்கியும் கிராமங்களை நோக்கியும் திரும்பிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இளைஞர்கள் விவசாயத்தை தொழிலாகவும், சிறந்த வேலை வாய்ப்பாகவும் சமூகத்திற்கு தன்னாலான பங்களிப்பாகவும் எடுத்து வெற்றிகரமாக செயல்படுத்தவும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது ஈஷா மண் காப்போம் இயக்கம்.

மூன்று மாத களப் பயிற்சியின் வாயிலாக இயற்கை விவசாயம் சார்ந்த அனைத்து நுட்பங்களையும்... விவசாயம், கால்நடை வளர்ப்பு முதல் மதிப்பு கூட்டல் என அ முதல் ஃ வரை கட்டணமேதுமில்லாமல்...

மண் காப்போம் இயக்கம் வருங்காலத் தலைமுறை விவசாயத்தை காக்க மட்டுமில்லாமல் அதில் அவர்கள் ஜெயிக்கவும் வழிகாட்டுகிறது.... மூன்று மாத களப் பயிற்சியாய்....

அடுத்த மூன்று மாத கால பயிற்சியில் பங்கேற்க அழைக்கவும்..

ஈஷா மண் காப்போம் இயக்கம்.
83000 93777.

நம்மாழ்வாரின் கனவு நஞ்சில்லா உணவானது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான். அப்படி கிடைக்க வேண்டும் என்ற.....

ICAR-IISR--ISHA CAUVERY CALLING.இணைந்து நடத்தும்."மாபெரும் நறுமணப் பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு".நிகழ்வுகள்.◼️ சமவெளியில...
08/07/2023

ICAR-IISR--ISHA CAUVERY CALLING.
இணைந்து நடத்தும்.

"மாபெரும் நறுமணப் பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு".

நிகழ்வுகள்.

◼️ சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே!!

◼️சமவெளியில் மரங்களுக்கு இடையே ஜாதிக்காய், லவங்கம், இஞ்சி சாத்தியமாக்குவது எப்படி ??

◼️ ஜாதிக்காய்,மஞ்சள், இஞ்சி உயர் விளைச்சல் ரகங்கள் அறிமுகம்..

க. கண்டியண்ணன் (Dr. K.Kandiannan) ICAR - Indian Institute of Spices Research, Kozhikode

🗓️ 16-ஜூலை-2023 ஞாயிறு

🏕️ செந்தமிழ் செல்வன் மிளகுத்தோட்டம்,
சேந்தன்குடி,
புதுக்கோட்டை.

முன்பதிவிற்கு,

📱 9442590079
💻 https://forms.gle/eNJqhxiVA6JyyMHDA

பயிற்சி கட்டணம் ₹ 200

மலைகளில் விளையும் மிளகு, ஜாதிக்காய் ,காபி சமவெளியிலும் சாத்தியமே!!! இடம்: திரு செந்தமிழ் செல்வன் மிளகுத்தோட்டம்....

*ஒரே கல்லில் மூணு மாங்காய்…**ஒரே ஒரு உரம் மூன்று பயன்பாட்டிற்கா…?**மூங்கில் E.M. கரைசல்*இது  இயற்கை விவசாயத்தில் அதிகமான...
07/07/2023

*ஒரே கல்லில் மூணு மாங்காய்…*
*ஒரே ஒரு உரம் மூன்று பயன்பாட்டிற்கா…?*

*மூங்கில் E.M. கரைசல்*

இது இயற்கை விவசாயத்தில் அதிகமான நுண்ணுயிர்களை உள்ளடக்கிய இயற்கை உரம் ஆகும்.

இந்த மூங்கில் E.M. கரைசலானது பயிர் *வளர்ச்சி ஊக்கியாகவும்*, பூச்சி, நோய் *தடுப்பு மருந்தாகவும்*, தாவர & கால்நடை கழிவுகளை விரைவாக மட்க செய்து, மண்ணுக்கு *உரமாக மாற்றவும்* உதவுகிறது.

*பயன்கள்:*
1.மண் வளம் பாதுகாக்கப்படும்.

2.மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும்.

3.வேர் வளர்ச்சி அதிகரித்து பயிர்கள் செழித்து வளரும்.

4.மண்ணில் உள்ள சத்துக்களை சிதைத்து பயிர்கள் சுலபமாக எடுத்துக்கொள்ள வழிவகை செய்கிறது.

5.பயிர்களுக்கு ஏற்படும் வைரஸ் தொற்றானது தடுக்கப்படும்.

6.இதைப் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வதால் முளைப்புத்திறன் கூடுகிறது.

7.நுனிக் கருகல், வேர் அழுகல், இலைப்புள்ளி நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.

8.பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

9.வறட்சியின் போதும், அதிக மழை பெய்யும் போதும் பயிர்களின் தாங்குதிறனை அதிகரிக்கிறது.

10.குறைவான செலவில் அதிக மகசூல் கிடைக்கிறது.

E.M கரைசல் பயன்பாடு இயற்கை விவசாயத்தில் மட்டும் இல்லாமல் கால்நடை, மீன்வளம், கழிவு நீர் பராமரிப்பு, குப்பை கூளங்கள் பராமரிப்பு போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இதுபோன்று குறைந்த செலவில் மண்ணை வளமாக்கும் இரசாயன உரத்திற்கான மாற்று *இடுபொருட்கள் செய்முறை பயிற்சியில்* கலந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும்
https://forms.gle/tnLYba5jCgRdp2Pd6
அல்லது
8300093777
9442590077
இந்த எண்களை அழைத்து உங்களது வருகையை உறுதி செய்யவும்

இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கான வாட்ஸ் அப் குரூப் லிங்க்
https://chat.whatsapp.com/J76kFAEU8gICGRYuETA8Lp

ஆரோக்கிய வாழ்விற்கு தாய் மண் காக்கும் விவசாயமே தீர்வு!!

ICAR-IISR--- ISHA CAUVERY CALLINGஇணைத்து நடத்தும்.*மாபெரும்  மசாலா பயிர்கள் சாகுபடி கருத்தரங்கம்* சமவெளியில் ஏற்றுமதி தர...
07/07/2023

ICAR-IISR--- ISHA CAUVERY CALLING
இணைத்து நடத்தும்.

*மாபெரும் மசாலா பயிர்கள் சாகுபடி கருத்தரங்கம்*

சமவெளியில் ஏற்றுமதி தரத்துடன் மிளகு உற்பத்தி சாத்தியமே

தமிழகத்தின் முதல் முன்னோடி சமவெளி மிளகு விவசாயி திரு பாலுசாமி .
வடகாடு புதுக்கோட்டை

நாள்: 16.07.2023

இடம்: செந்தமிழ் செல்வன் மிளகு தோட்டம்..
சேந்தன்குடி.
புதுக்கோட்டை..

முன்பதிவுக்கு
94425 90079

பயிற்சி கட்டணம் ₹200

எலித் தொல்லைக்கு எளிமையான தீர்வுகள்:நமது பயிர்களில் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்துவது எலிகள். அந்த எலிகளை சுலபமான வழிகளி...
04/07/2023

எலித் தொல்லைக்கு எளிமையான தீர்வுகள்:

நமது பயிர்களில் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்துவது எலிகள். அந்த எலிகளை சுலபமான வழிகளில் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவில் பார்ப்போம்.

# ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை ஆந்தை மற்றும் கோட்டான்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 அடி முதல் 8 அடி உயரம் கொண்ட T வடிவ குச்சிகளை நட்டு வைப்பதன் மூலம் ஆந்தைகளையும் கோட்டான்களையும் நிலத்திற்கு வரவழைக்க முடியும். மேலும் ஆந்தை மற்றும் கோட்டான்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை மரப்பெட்டி செய்து தோட்டத்தில் இருக்கும் மரத்தின் உயரமான பகுதிகளில் வைப்பதன் மூலம் ஆந்தை மற்றும் கோட்டான்கள் அங்கு வந்து தங்கி தனது இனப்பெருக்கத்தை செய்யும் பொழுது உங்களுக்கு அதிகமான எலிகளை கட்டுப்படுத்த வசதியாக இருக்கும்.

# கோட்டான் மற்றும் ஆந்தைகள் ஒருமுறை முட்டை வைத்து குஞ்சு பொரித்தவுடன் அதன் குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று எலிகளை உணவாக கொடுக்கும் தேவை இருக்கும் மேலும் தாய் பறவைகளும் எலிகளை மிக கச்சிதமாக வேட்டையாடி கொன்று விடும். இதனால் இயற்கயாகவே உயிரியல் உணவுச் சங்கிலி முறைப்படி கோட்டான்கள் மற்றும் ஆந்தைகள் மூலம் நம் நிலத்தில் இருக்கும் எலிகளை அதிக அளவில் கட்டுப்படுத்த முடியும்.

# நம்முடைய நிலத்தில் இருக்கிற எலித் தொல்லையை குறைப்பதற்கு நம் வயல்களில் இருக்கிற வரப்புகளின் உயரத்தையும் அகலத்தையும் குறைக்க வேண்டும்.
நிலத்தின் வரப்பை செங்குத்தாக அமைக்காமல் *45 டிகிரி சாய்வாக* அமைப்பின் மூலம் எலி தொல்லையில் இருந்து விடுபட முடியும்.

# வயல்களில் இருக்கும் *களைகள் மற்றும் தேவையற்ற பொருட்களை* அகற்றுவதன் மூலம் எலிகள் வயல்களில் தெரியும் பொழுது அதனை பிடிக்கவும் பிடித்து அழிக்கவும் முடியும்.

# வரப்புகளில் புதினாக்கீரை செடிகளை வளர்ப்பதன் மூலம் எலிகளின் நடமாட்டத்தை குறைக்க முடியும்.

# மிகவும் வளர்ந்த இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருக்கும் விவசாய நிலங்களிலும், கிராமப் பகுதிகளில் இருக்கும் எலிகளை கட்டுப்படுத்தவும், பசுமை குடில் போன்ற மிகப்பெரும் அமைப்புகளுக்குள் இருக்கும் எலிகளை கட்டுப்படுத்தவும் இஸ்ரேல் விவசாயிகள் அந்த இடங்களில் ஆந்தைகள் வளர்ப்பதன் மூலம் இயற்கை முறையில் எந்தவித தடங்கலுமின்றி ரசாயனங்களை பயன்படுத்தாமல் எலிகளைக் கட்டுப்படுத்த முடிகிறது.

மேலும் தகவல்களுக்கு மாவட்ட வாரியாக வாட்ஸ் அப் குழுவில் இணைய

https://bit.ly/3M31bLD

இந்த லிங்கை பயன்படுத்தி உங்கள் மாவட்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்*

பயிற்சி விவரங்கள் மற்றும் உங்கள் பகுதியில் இதேபோல் பயிற்சிகளை நடத்த விருப்பமா?.....

தொடர்புக்கு
ஈஷா மண் காப்போம்
83000 93777

தொடர் வருமானம் தரும் கீரை  ஒரு வரம் - கரிசலாங்கண்ணி ஈஷா மண் காப்போம் இயக்கம் தொடர்ந்து வருமானம் தரும் கீரை சாகுபடி பயிற்...
04/07/2023

தொடர் வருமானம் தரும் கீரை ஒரு வரம் - கரிசலாங்கண்ணி

ஈஷா மண் காப்போம் இயக்கம் தொடர்ந்து வருமானம் தரும் கீரை சாகுபடி பயிற்சிகளை விவசாயிகளுக்கு நடத்தி வருகிறது. இந்த பதிவில் கரிசலாங்கண்ணி கீரையின் பயன்களை காண்போம்.

# இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது.

# இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.

# கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.

# கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும்.

# ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

# இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும்.

# மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு.

# குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும்.

# கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.

# தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.

பிரதி மாதம் இரண்டாம் வாரத்தில் கோயம்புத்தூர், செம்மேட்டில் உள்ள இயற்கை விவசாய பண்ணையில் கீரை சாகுபடி பயிற்சி நடைபெறும்.

மேலும் பயிற்சி மற்றும் இயற்கை விவசாயம் சார்ந்த தகவல்களுக்கு உங்கள் மாவட்ட வாட்ஸ்அப் குழுவில் இணைய

https://bit.ly/3M31bLD

இந்த லிங்கை பயன்படுத்தி உங்கள் மாவட்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

தொடர்புக்கு
ஈஷா மண் காப்போம்
83000 93777

இயற்கை உரங்கள் சொட்டுநீர் பைப்பில் அடைக்கிறதா?....இனி கவலை வேண்டாம்....இயற்கை உரங்கள் பயன்படுத்தி வரும் இயற்கை விவசாயிகள...
04/07/2023

இயற்கை உரங்கள் சொட்டுநீர் பைப்பில் அடைக்கிறதா?....இனி கவலை வேண்டாம்....

இயற்கை உரங்கள் பயன்படுத்தி வரும் இயற்கை விவசாயிகளின் பிரச்சினை சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்தும் போது அதில் ஏற்படும் அடைப்பே ஆகும்.

இதனைத் தவிர்க்க என்ன முறையை பயன்படுத்தலாம் என்பதை என்பதை விளக்கும் வீடியோ பதிவு இங்கே நமது விவசாயிகளுக்காக.....

மேலும் இதுபோன்ற தகவல்களுக்கு மாவட்ட வாரியாக வாட்ஸ் அப் குழுவில் இணைய

https://bit.ly/3M31bLD

இந்த லிங்கை பயன்படுத்தி உங்கள் மாவட்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்*

தொடர்புக்கு
ஈஷா மண் காப்போம்
83000 93777

https://youtu.be/Ou92hINWE64

பண்ணாரி அம்மன் வேளாண்மை நிலையத்தின் வாடிக்கையாளர்களுக்கு வணக்கம் ! எங்களது சேவையை தேர்வு செய்ததற்கு நன்றி ! எங...

தட்டான் தட்டான் தண்ணிக்குள்ள தாவிப் பிடிப்பான் பூச்சிகள.....தட்டான் மற்றும் ஊசி தட்டான்  பூச்சிகள் வயல்களிலும், வானிலும்...
04/07/2023

தட்டான் தட்டான் தண்ணிக்குள்ள தாவிப் பிடிப்பான் பூச்சிகள.....

தட்டான் மற்றும் ஊசி தட்டான் பூச்சிகள் வயல்களிலும், வானிலும்,
நீர்நிலைகளின் மீதும் பறந்து கொண்டு இருப்பவை ஆகும். வரும் மழையை முன் கூட்டியே அறிவிக்கும் மழை அறிவிப்பார் இந்த தட்டான்கள். இந்த தட்டான் பூச்சிகள்
வயல்களின் மேல் பறந்து செல்லும் கொசுமற்றும் சிறு பூச்சிகளைப் பிடித்து
உண்ணும் சிறந்த வேட்டையாடிகள்..

தட்டான் பூச்சிகள் தனக்கு தேவைப்படும் இரையை சுற்றிவளைத்து உண்ணும் இயல்பைக் கொண்டவை.
வயல்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் புழுக்களையும் இவை
தேடிப்பிடித்து உண்ணும்.

மேலும் மகரந்த சேர்க்கை அதிக அளவில் நடக்க உதவி செய்கின்றன.
அதிக மகரந்த சேர்க்கை நடந்தால் அதிக மகசூல் கிடைக்கும்.

தட்டானின் வாழ்க்கை முறை:

வயது வந்த தட்டான் தண்ணீர் உள்ள நெல்வயலில் முட்டையிடுகின்றன. பின்னர் அதில்
வரும் இளம் புழுக்கள், தண்ணீரில் உள்ள பூச்சி புழுக்களை உண்டு வாளர்ந்து
கூட்டு புழுக்களாக மாறி நெற்பயிரின் அடிப்பாகத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும்.

இது வளர்ந்து கூட்டுப் புழுவிலிருந்து பூச்சியாக மாறி கூட்டிலிருந்து வெளியே வளர்ந்த தட்டானாக வருகிறது. இதன் வாழ்நாள் சுமார் முப்பது
நாட்களாகும்.

தட்டானின் தட்டில் விருந்தாகும் பூச்சிகள்:

வளர்ந்த தட்டான் பயிரில் உள்ள பூச்சிகளை பிடித்து உண்ணும். பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதை தவிர்ப்பதன் மூலம் வயல்களில் இருக்கும் நன்மை செய்யும் பூச்சிகளை காக்க முடியும்.

பெரும்பாலும் இவை தண்டின் அடிப்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும்
புகையான் குஞ்சுகளை உணவாக உட்கொள்ளும்.

தாய்ப்பூச்சி நெற்பயிரின் இடையிடையே பறந்து தாவிச் செல்லும்
தத்துப் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும்.

இதன் கால்கள் இலகுவாக சாறு உறிஞ்சும் பூச்சிகள், இளம் புழுக்களையும்
கவ்விப்பிடித்து தாக்க ஏதுவாக அமைந்துள்ளன.

மேலும் தகவல்களுக்கு மாவட்ட வாரியாக உள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைய

https://bit.ly/3M31bLD

இந்த லிங்கை பயன்படுத்தி உங்கள் மாவட்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்*

அடுத்த பூச்சிகளை கவனிங்க பூச்சி - பயிற்சி விவரங்கள் மற்றும் உங்கள் பகுதியில் இதேபோல் பயிற்சிகளை நடத்த விருப்பமா?.....

தொடர்புக்கு
ஈஷா மண் காப்போம்
83000 93777

தரமான உரமாகும் தக்கை பூண்டு🐇அனைத்து வகையான மண்ணில் வளரக் கூடிய தாவரம்.பல ஆண்டுகளாக  மண் வளத்தை மேம்படுத்தும் பசுந்தாள் உ...
04/07/2023

தரமான உரமாகும் தக்கை பூண்டு

🐇அனைத்து வகையான மண்ணில் வளரக் கூடிய தாவரம்.பல ஆண்டுகளாக மண் வளத்தை மேம்படுத்தும் பசுந்தாள் உரமாக பயன் படுகிறது.

🐢வறட்சியத் தாங்கி வளரும். எந்த தாவரமும் வளராத களர் மண்ணில் கூட சாதாரணமாக வளரும். மழை பெய்யும் காலங்களில் வளர்ச்சி வெகு வேகமாக இருக்கும்.

🐱ஏக்கருக்கு பன்னிரண்டு முதல் பதினைந்து கிலோ விதைகள் தேவை. இதனை அதிகமாக நெல் பயிரிடும் விவசாயிகள் விளைநிலம் காலியாக இருக்கும் போது விதைத்து விடலாம்.

🐃 ஐம்பது நாளில் கிட்டத்தட்ட ஐந்து அடி உயரம் வரை வளர்ந்து பூ விட்டு பிஞ்சு வர ஆரம்பிக்கும் சமயத்தில் மடக்கி உழுதுவிட வேண்டும்.

🐐அதற்கு மேல் தாமதித்தால் தண்டு நார் பிடித்துவிடும். இதனால் இயந்திரம் கொண்டு உழும் போது துண்டாகாமல் சிக்கி கொள்ளும்.

🐯இதையே தொண்ணூறு நாட்களுக்கு மேல் விட்டு வைத்தால் காய்கள் நன்கு முற்றி விதைகளை அறுவடை செய்யலாம். பல விவசாயிகள் அரசு வேளாண்மை துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் விதைகளை விற்பனை செய்கின்றனர்.

🐉இவற்றை மண்ணில் மடக்கி உழும் போது

1.களர் தன்மை மாறுகிறது. தொடர்ந்து விதைப்பதால் களர் தன்மை முற்றிலும் மாறும்.

2.மண் பொலபொலப்பு தன்மை அடைகிறது.

3.மண்ணில் கரிம சத்து அதிகரிக்கும்.

🐄4.மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும்.

5.மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கும்.

6.மண்ணில் நுன்னுயிர்கள் வெகுவாக மற்றும் வேகமாக பெருகும். மண் புழுக்கள் எண்ணிக்கை உடனே உயரும்.

7. வேர் முண்டுகளில் உள்ள தழைச்சத்தை நிலை நிறுத்தும் நுன்னுயிர்கள் மூலம் தழைச்சத்து மண்ணில் சேமிக்க படுகிறது .

🐪இதனுடன் சின்ன சோளம் .கம்பு இவற்றை தலா மூன்று கிலோ உடன் கலந்து அளிப்பதன் மூலம் மண் நன்கு வளப்படும்.

காரணம் இவை இரண்டின் வேர்களில் இயற்கையாகவே உள்ள வேம் VAM என்னும் வேர் பூஞ்சானம்

சேறு கலந்து நெல் நாற்று நடும் வயல்களில் இதை விதைத்து உழுது நாற்று நடுவது சிறப்பு.

காற்றிலேயே 78% நைட்ரஜன் (தழைசத்து) இருக்கையில் வெறும் 46% மட்டுமே தழைசத்து உள்ள யூரியா நமக்கு தேவையா*..??. எனவே தக்கைப்பூண்டை விதைப்போம் களர்நிலத்தையும் தரமான பூமியாய் மாற்றுவோம்....

காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் பிடித்து வைத்து செடிகளுக்கு அளிக்கும் நுண்ணுயிரிகளை பெருக வைத்தாலே போதும். இந்த வேலையை நாட்டு மாடுகளின் சாணம், மூத்திரம் கொண்டு செய்யபடும் இயற்கை உரங்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்றவை செவ்வனே செய்து விடும். மண்ணின் உயிரை மீட்டுவிட்டாலே தன்னை தானே உரமேற்றிகொள்ளும் திறன் பூமிக்கு வந்துவிடும்.

மேலும் இதுபோன்ற தகவல்களுக்கு மாவட்ட வாரியாக வாட்ஸ் அப் குழுவில் இணைய

https://bit.ly/3M31bLD

இந்த லிங்கை பயன்படுத்தி உங்கள் மாவட்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

தொடர்புக்கு
ஈஷா மண் காப்போம்
83000 93777

இன்று ஒரு தகவல்கால்நடைகளுக்கான தீவன மேலாண்மைகறவைமாடுஐந்து லிட்டர் பால் கொடுக்கும் கறவைமாட்டின் உடல் பராமரிப்பிற்கும் பால...
04/07/2023

இன்று ஒரு தகவல்

கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை

கறவைமாடு

ஐந்து லிட்டர் பால் கொடுக்கும் கறவைமாட்டின் உடல் பராமரிப்பிற்கும் பால் உற்பத்திற்கும் 3 கிலோ அடர் தீவனமும், 15 முதல் 20 கிலோ பசுந்தீவனமும், 5 முதல் 7 கிலோ உலர் தீவனமும் அளிக்க வேண்டும். பசுந்தீவனங்கள் கிடைக்காத சமயங்களில் 1.5 கிலோ அடர் தீவனமும், 2 முதல் 3 கிலோ உலர் தீவனமும் அதிகமாக அளிக்க வேண்டும். ஐந்து லிட்டருக்கு மேல் பால் தரும் கறவைமாடுகளுக்கு மேற்கூறிய தீவனங்களுடன் 500 கிராம் அடர் தீவனம் ஒவ்வொரு லிட்டர் பால் உற்பத்திக்கும் கொடுக்க வேண்டும்.

சினை மாடுகள்

கடைசி 3 மாத சினை காலத்தில் சினை மாடுகளுக்கு எப்பொழுதும் அளிக்கும் பசும் மற்றும் உலர் தீவனங்களுடன் 2 கி.கி அடர் தீவனம் அதிகமாக தரவேண்டும்

கன்றுகள்

கன்று பிறந்த 3 முதல் 4 வாரங்களில் தீவனங்களை நாக்கில் தடவி விடுவதன் மூலம் விரைவில் தீவனங்களை உட்கொள்ள ஆரம்பிக்கும். ஆரம்ப காலத்திலே திட உணவுகளை வழங்கும்பொழுது முன் வயிறு விரைவில் வளர்ச்சியடையும். அடர் தீவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பகாலங்களிலே கொடுப்பதால் கன்றுகள் 6 மாத வயதை அடையும்பொழுது 1.5லிருந்து 2.0 கிலோ அடர் தீவனங்களை உட்கொள்ள ஆரம்பிக்கும். இவ்வாறு தீவனம் அளிப்பதால் கன்றுகள் 10 மாத வயதிலே பருவமடைந்து 20 22 மாதங்களில் முதல் கன்றை ஈனும்.

எளிய தொழில்நுட்பங்களையும் சரியான தீவனப் பராமரிப்பு முறைகளையும் கையாண்டால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி உயர்வதோடு பொருளாதார ரீதியாகவும் பண்ணை இலாபகரமாக இயங்கும்.

மேலும் இதுபோன்ற தகவல்களுக்கு மாவட்ட வாரியாக வாட்ஸ் அப் குழுவில் இணைய

https://bit.ly/3M31bLD

இந்த லிங்கை பயன்படுத்தி உங்கள் மாவட்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

தொடர்புக்கு
ஈஷா மண் காப்போம்
83000 93777

இந்திய அளவிலான மாபெரும் நெல் திருவிழா மற்றும் கண்காட்சி☘️வேளாண் வல்லுனர்களின் சிறப்பு உரை☘️முன்னோடி விவசாயிகளின் அனுபவ ப...
04/07/2023

இந்திய அளவிலான மாபெரும் நெல் திருவிழா மற்றும் கண்காட்சி

☘️வேளாண் வல்லுனர்களின் சிறப்பு உரை

☘️முன்னோடி விவசாயிகளின் அனுபவ பகிர்வு

🌾பாரம்பரிய அரிசியில் மதிப்பு கூட்டல் மூலம் லாபம் பெறும் வழிமுறைகள்

☘️எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சி

🌾பாரம்பரிய நெல்ரகங்களின் அணிவகுப்பு

30 ஜூலை 2023 (ஞாயிறு) | 9am-5pm

SRM மருத்துவ கல்லூரி வளாகம், திருச்சி சென்னை சாலை, இருங்கலூர் கிராமம் திருச்சி,

பங்கேற்பாளர் கட்டணம் ₹200

பயிற்சியில் கலந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும்
https://forms.gle/cGTikAVafgEfRky47
அல்லது இந்த எண்களை அழைத்து உங்களது வருகையை உறுதி செய்யவும்
8300093777
9442590077
இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கான வாட்ஸ் அப் குரூப் லிங்க்
https://chat.whatsapp.com/C5XQavOkgte8J0TwaBRsRR

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாரம்பரிய விதை நெல் வழங்கப்படும்

Address

10/37, Bhairavi Krupa, Market Opposite, Vellichanthai And Post, Kanniyakumari
Nagercoil
629203

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919787747838

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green house association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Green house association:

Shortcuts

Share