20/11/2023
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பில் 2023-2024 ஆம் ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகளானது 21.11.2023 முதல் 25.11.2023 வரை அருணாச்சலம் மேல்நிலைப் பள்ளி, திருவட்டாரில் வைத்து நடைபெற உள்ளது. சங்கமிப்போம் !சரித்திரம் படைப்போம் !என்ற தமிழ்நாடு அரசின் மாபெரும் தமிழ்க் கனவை முன்னெடுத்துச் செல்கிற விழாவாக, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணருமுகமாக இக்கல்வி ஆண்டு முதல் கலைத் திருவிழாவானது அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டு ஐந்து நாள் விழாவாக கொண்டாடப்பட உள்ளது . இவ்விழாவில் பல்வேறு கலைக்கூறுகளில் வகுப்பு 6 முதல் 12 வரை மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் சுமார் 4520 மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார். மேலும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.மனோதங்கராஜ் அவர்கள் விழா பேருரையாற்ற உள்ளார். இவ்விழாவானது மாவட்ட ஆட்சியர் தலைமையில்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக ஒருங்கமைவு செய்யப்பட்டுள்ளது.