Siragukal ghss thevur alumni association

Siragukal ghss thevur alumni association பல பின்தங்கிய மாணவர்கள் படித்த பள்ளி

ஆழ்ந்த இரங்கல்கள்
14/05/2021

ஆழ்ந்த இரங்கல்கள்

22/04/2021

Remembrance of the legend Vivekh Sir, On his Behalf planting 500 மரக்கன்றுகல் to succeed viveks sir dream planting one crore tree Saplings. Do watch and shar...

14/03/2021

நீளமான பதிவுதான் என்றாலும்
நினைவு அகலா பதிவு

[ நேற்றைய பதிவின் தொடர்ச்சி ]

********************************************

பணியிட மாறுதல் அல்லது பணிநிறைவு பெறும் ஆசிரியர்களை
பாராட்டும்போது பொதுவாக ' உங்கள்
இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது ' என்று எல்லோரையுமே பாராட்டுவது வழக்கம் . ஆனால் அது
ஆழி அய்யாவை பொறுத்தவரை நூறு சதவீதம் உண்மை .

ஆழி அவர்கள் 2000 ல் ஓய்வுபெற்ற பிறகு அந்த பணியிடம் நிரப்பப் படாமலேதான் உள்ளது . அய்யாதான்
எங்கள் பள்ளியின் கடைசி கலையாசிரியர் . அய்யாவுக்கு பிறகு
அந்த இடத்தையே நீக்கிவிட்டது அரசு

ஆனால் அய்யாவை தற்கால மாணவர்களும் நினைவுகூரும் வகையில் அவர் எழுதிய ' நேர்மை '
என்னும் சிறுகதையை ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் துணைப்பாடமாக அரசு வைத்துள்ளதால் ஆழி சார் அவர்கள்
தமிழ்நாடு முழுவதுமே மாணவர்களால் / ஆசிரியர்களால் நினைக்கப்படுகிறார் என்பது பெருமைக்குரியதாகும் .

40 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் / அலுவலர்களை கொண்டிருந்த எங்கள் குழுமத்தில் என்மீது அய்யாவுக்கு அன்பும் அக்கறையும்
அதிகம் என்றே சொல்லலாம் .

1994 ல் காலாண்டுத் தேர்வின் கடைசி நாள் . நன்றாக நினைவில்
உள்ளது .

" வாங்க , எம் எஸ் , கிரவுண்ட் வரை
நடந்துட்டு வருவோம் " என்று அழைத்தார் . இருவருக்கும் தேர்வறை பணியில்லை .

கிரவுண்ட் ல நடக்கும்போதே எதேச்சையாக சொல்வது போல்
" நம்ம பள்ளக்கூடத்துல
நாலைந்து பேருக்கு சிகரெட் பழக்கம் இருப்பது தெரியும் , ஆனால் உங்களிடம் மட்டுமே சொல்ல தோனுச்சு , சொல்றேன் . . . வேண்டாமே அந்த பழக்கம் . . . " என்று
சொன்னவுடன் மிகவும் சங்கோஜமாகி விட்டது எனக்கு .

" இனிமே விட்டுடுறேன் , சார் . " என்றேன் , நிமிர்ந்து பார்க்கும் நிலையற்றவனாய் . அந்த நாள் தான் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பலமுறை முயன்றும் விட முடியாதிருந்த அந்த கெட்டப் பழக்கத்திலிருந்து நான் விடுதலை அடைந்த நாள் ஆகும் .

விடுமுறைக்கு பிறகோ வெளியில்
எங்குமோ சந்திக்க நேர்ந்தால்
விஸ்வபாரதி , பிரசாந்த் நல்லா இருக்காங்களா , எம் எஸ் ? " என்று
அன்புடன் என் பிள்ளைகளின் நலம் விசாரிப்பார் .

" எப்படி சார் பேரெல்லாம் நினைவிருக்கு ? " எனறு கேட்டபோது
இப்படி சொல்வார் .

ஒருமுறை பெயர் தெரிந்தால் உங்கள் பெயரோடு உங்கள் குழந்தைகளின்
பெயர்களையும் இணைத்து விடுவேன் . மொட்டையாக குழந்தைகள் என்று சொல்வதைவிட இப்படி பெயரை குறிப்பிடுங்கள் . அவர்கள் மீது நமக்கிருக்கும் அன்பையும் அக்கறையையும் காட்டுவதாக அமையும் . நீங்களும் செய்து பாருங்களேன் ' என்பார் .
அந்த பண்பு நான் அவரிடம் இரவல் பெற்ற இனிய பண்பு என்பதில் ஒரு மகிழ்ச்சி .

இருபது அடி உயரத்தில் கயிறு மீது கழைகூத்தாடி நடப்பதை விடவும் இன்னொரு பேலன்ஸ் எல்லோருக்கும் தெரிந்திருக்கனும் .
அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையில் பேலன்ஸ் தவறாமல் நடப்பது எவ்வளவு பெரிய வித்தை தெரியுமா ? என்பார் . முடிந்தவரை அந்த வித்தையை கற்றுக்கொண்டேன் .

காலை ஆறு டூ எட்டு , மாலை ஐந்து டூ ஒன்பது என்று ட்யூசனில் பிஸியாக இருந்த நேரம் .

ஆங்கிலம் , கணிதம் போல தாய்மொழிக்கும் வீட்டில் இடமுண்டா எம் எஸ் ? என்றார் ஒருநாள் .

இல்லை சார் . தமிழ் நடத்துவதில்ல
என்று நான் சொன்னவுடன் " இல்லை
எம் எஸ் , நான் உங்க அம்மாவை கேட்டேன் . . . " என்றதும் எனக்கு உரைத்தது .

"அம்மா என்கிற பாடத்திட்டம் ரொம்ப பழசு . எப்ப வேண்டுமானாலும் நீக்கிடலாம் . அதுக்கும் ரெண்டு பீரியட்ஸ் நேரம் ஒதுக்கலாமே " என்றார் .

அன்று முதல் மாலை ஏழு மணியுடன் ட்யூசனை நிறுத்திவிட்டேன் . அதன் பிறகு ஆங்கிலத்தையும் கணிதத்தையும்
அப்புறப்படுத்தி விட்டு அம்மாவுடனும் குழந்தைகளுடனும் அன்பு மொழி
ட்யூசன் மட்டுமே என்று வழக்கப்படுத்திக்கொண்டேன் .

ஆழி அவர்களின் கைவண்ணம் எனக்கு கைவரவில்லை , ஆனால்
அவரது கால்வண்ணம் காட்டிய
வழியை இன்னமும் நான் மறக்கவில்லை .

ஆழி அய்யாவால் நிர்வகிக்கப்பட்ட சித்ரகலா பதிப்பகமும் ஆப்செட் பிரின்டர்ஸ் நிறுவனமும் அவர்தம் புதல்வர்கள் சிறப்பாக செயல்படுவது அவரையே பார்க்கும் ஆனந்தத்தை தருவதாகும் .

ஆழி சார் போலவே அவரது புதல்வர் திரு ஆழி சத்தியன் அவர்களும் எழுதுவதிலும் வரைவதிலும் வல்லவர் . கவிதை நூல்கள் பல வெளியிட்டுள்ளார் .

எனது மூத்த மகன் திருமணத்திற்கான அழைப்பிதழுக்கு
அட்டை வாங்கியதிலிருந்து அழகுற
வடிவமைத்து ஸ்கிரீன் பிரிண்டிங்
செய்து விட்டுக்கு அனுப்பியது வரை
அவரே எனக்காக எடுத்துக் கொண்ட
பணியாகும் . அப்பாவின் நண்பர் என்ற முறையில் மிகவும் குறைந்த தொகையே பெற்றுக்கொண்டார் .
எனக்கு மட்டுமல்ல , அவர் தந்தையுடன் பணியாற்றிய ஆசிரியர்கள் / மாணவர்கள் யாராயிருப்பினும் ஆழி சத்தியனின்
சலுகை நிச்சயம் உண்டு .

நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருடன் நேற்று ஃபோனில் பேசியதில் ஆழி சாருடன் பேசியதாய் நெகிழ்ந்து போனேன் . அதே மாறா அன்பு , அடக்கம் . . .

பத்தாண்டுகளுக்கு முன் இதே நாளில் ஆழி சாருக்காக அழுத வரிகளில் ஒன்று . . .

' ஆழியிடம் கேட்டிருந்தால் _
ஒன்றுக்கு பத்தாக
ஓவியங்கள் தந்திருப்பார் _ ஆனால்
கடவுளும் ஒரு களவாணி போலும் !
ஏனோ _ அந்த
தூரிகையை பறித்து விட்டான்
தொலைதூரம் கடந்து விட்டான் !

__ ஆழியுடன் பயணித்த ஆசிரியர்களும் அவரே பயில்வித்த
மாணவர்களும் .

27/08/2020

முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும். ஆனால் முயலாமைவெல்லாது. மெதுவாக நடக்கும் தோல்வியை வேகமாக ஓடிப்பிடிக்கிறது சோம்பல். நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இருங்கள் நதி போல, ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கும் கடலாக. நீங்கள் சுமக்கின்ற நம்பிக்கை, நீங்கள் கீழே விழும்போது உங்களை சுமக்கும். ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை, நம்பிக்கை இருக்கும் வரை நாம் தோற்பதில்லை. நீங்கள் பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே, தோல்வியுற அல்ல. அப்படியே உங்களைத் தோல்விவந்து அணைத்தாலும் அந்தத்தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உங்களது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும். நீங்கள் வெற்றிக்கு போராடும்போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள்,நீங்கள் வெற்றிபெற்றபின் விடாமுயற்சி என்பார்கள். வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறீர்கள் என்பதைஅறிந்து செய்யுங்கள், செய்வதை விரும்பிச் செய்யுங்கள், செய்வதை நம்பிக்கையோடு செய்யுங்கள். சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான். பலரும் தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக்கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து தங்களுக்கானசூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலைகிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.

08/02/2018

நமது பள்ளியின் மூத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் pv sir என்கிற வேதநாயகம் ஐயா அவர்கள் இயற்கை எய்துவிட்டார் என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறது

சிறகுகள் முன்னாள் மாணவர்கள் அமைப்பு தேவூர்

இன்று மதியம் இறுதி சடங்கு நடைபெற உள்ளது...

13/01/2018

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

09/12/2015

பிரபாகரனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இவண்
சிறகுகள் முன்னாள் மாணவர்கள் அமைப்பு தேவூர்.

04/12/2015

எங்கள் "சிறகுகள்"முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை,கடலூர் மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண உதவி செய்ய இருக்கிறோம்.......
முடிந்தவர்கள் உதவலாம்....
இவண்
சிறகுகள் முன்னாள் மாணவர்கள் அமைப்பு,தேவூர்.

31/12/2014

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

# # சிறகுகள் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு தேவூர்.

Address

THEVUR
Nagapattinam
611001

Telephone

9566335008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siragukal ghss thevur alumni association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share