08/03/2019
தமிழகத்தில் ஒரு மத்திய பல்கலைக்கழகம் வேண்டுமென்ற பல ஆண்டு போராட்டத்தின் விளைவாக கல்வியில் பிந்தங்கிய டெல்டா பகுதியில் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
ஆனால் இங்கு இப்போதுவரை தமிழக மாணவர்கள், அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்வதுமில்லை படிப்பதுமில்லை.
இதற்கான பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமானவை
1) போதிய விழிப்புணர்வு இல்லாமை
2) ஆங்கில நுழைவுத் தேர்வு
3) உள்ளூர் மாணவர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லாதது.
4) விடுதிக் கட்டணம் கட்ட முடியாதது.
இதை மாற்றியமைக்க வாசல் கடந்த ஆண்டு முதல் முயற்சி செய்து வருகிறது. சிறப்பான கல்வி வசதிகள் உள்ள ஒரு பல்கலைக் கழகம் நமக்கு அருகாமையில் இருந்தும் பலர் அது பற்றி தெரியாமலும் அங்கு விண்ணப்பிகாமலும் இருக்கும் நிலை மாற வேண்டும். அறிவியல் பட்டப் படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் ஆகியவற்றை நோக்கி நமது மாணவர்களும் நகர வேண்டும்.
இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும்!
1. உங்களுக்கு தெரிந்த ப்ளஸ் 2 மாணவர்களுக்கு இந்த நுழைவுத் தேர்வு குறித்தும் மத்தியப் பல்கலைக் கழகத்தில் உள்ள படிப்புகள் குறித்தும் எடுத்துக் கூறி விண்ணப்பிக்கச் சொல்லுங்கள்!
2. நாங்கள் நடத்த இருக்கும் இலவச பயிற்சிக்கு உங்களாலான உதவி - வகுப்பு எடுப்பது, தேவையான பயிற்சி மெட்டீரியல்கள் திரட்டி தருவது, விண்ணப்பிக்க உதவி, மற்றும் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படும் சில மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது!