26/11/2013
சென்னை – காரைக்குடி இருப்பு பாதை அகலப்பாதையாக மாற்றப்பட வேண்டும். திருத்துறைப்பூண்டி – கோடியக்கரை அகலப்பாதையாக மாற்றப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென்று வலியுறுத்தி பிரதமர், மத்திய ரெயில்வே மந்திரி மற்றும் மத்திய நிதிமந்திரி டெல்லியில் அவர்களது அலுவலகங்களில் நேரிடையாக டிராஜா எம்.பி., பி.லிங்கம் எம்.பி,. ஆகியோருடன் சென்று நேரில் கோரிக்கை விண்ணப்பம் கொடுத்தோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள். ஆனால் அந்த திட்டங்களை நிறைவேற்றவில்லை.
எனவே நாளை (26–ந்தேதி) காலை 6 மணிக்கு திருவாரூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும். இதில் அனைத்து பகுதி பொதுமக்கள், வர்த்தகர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவளித்து பல்லாயிரக் கணக்கில் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
சென்னை– காரைக்குடி வழித்தடத்தில் திருவாரூர்– திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை– காரைக்குடி வரை அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும்.
திருத்துறைப்பூண்டி – வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி–கோடியக்கரை வரை அகல ரெயில்பாதை அமைத்து போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும்.
நீடாமங்கலம் ரெயில்வே கேட் பல மணி நேரம் மூடப்படுவதால் பொது மக்களும், போக்குவரத்தும் மிகப் பெரிய அளவு பாதிப்புடன் உயிர் இழப்புகளும், போக்குவரத்தும் மிகப்பெரிய அளவு பாதிப்புடன் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும்.
திருவாரூர் ரெயில் சந்திப்பு நிலையத்தினை ரெயில்வே துறை அறிவித்தபடி அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி நிலையமாக உருவாக்கிட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.