ST Cecilia Middle School R C Pettaipalayam

ST Cecilia Middle School R C Pettaipalayam THIS MIDDLE SCHOOL IS MANAGED BY SALEM DIOCESE. THE FIRST SCHOOL STARTED IN MOHANUR SURROUNDINGS.

அனைவருக்கும் காலை வணக்கம்! அன்புள்ள பங்கு மக்கள் அனைவருக்கும்,நம் ஆலயத்தின் புதிய பங்குத் தந்தையாக அருட்தந்தை ஜான் பால் ...
04/10/2025

அனைவருக்கும் காலை வணக்கம்!

அன்புள்ள பங்கு மக்கள் அனைவருக்கும்,

நம் ஆலயத்தின் புதிய பங்குத் தந்தையாக அருட்தந்தை ஜான் பால் (Rev. Fr. JOHN BRITTO) அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். மறைந்த அருட்தந்தை ஜான் போஸ்கோ அவர்களுக்குப் பிறகு வந்துள்ள இவர், தமது மறையுரைகளை மிகுந்த பக்தி உணர்வுடனும், கவரும் விதத்திலும் ஆற்றி வருகிறார்.

நான் ஆலயத்திற்குள் நுழையும்போதே, சில விஷயங்களில் ஒரு ஒழுங்கமைப்பைக் காண முடிந்தது. குறிப்பாக, அவர் திருப்பலியை நடத்தும் விதம், வேதாகம வசனங்களை உறுதியாகப் பின்பற்றுதல், செய்தியை வழங்கும் பாங்கு மற்றும் மக்களை அணுகும் முறை ஆகியவற்றில் ஒரு தெளிவு தெரிகிறது. அமரும் பலகைகள் (பெஞ்சுகள்) ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன, ஒலிபெருக்கிகள் சரியான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக, *வெள்ளிக்கிழமை திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனையில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கின்றனர்* .
குணம் அளிக்கும் வழிபாடு.

இதைப்போல ஒவ்வொரு நாளும் கொண்டாட்டத்துடன் திருப்பலி நிறைவேற்ற அவர் திட்டமிட்டுள்ளார்.

பங்கு மக்களாகிய நாம், அவரது இந்தக் கடமையாற்றும் காலத்தில், ஆன்மீக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவரது அணுகுமுறையைப் பாராட்டி, அவருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும்.

அவர் ஆலயத்தின் தேவைகள் குறித்து சிலவற்றைக் கவனித்துள்ளார். நீங்கள் மனமுவந்து கொடுக்க விரும்பினால், முன்வந்து உதவலாம். பணமாகவே கொடுக்க வேண்டியதில்லை; பொருட்களை வாங்கி நேரடியாக ஆலயத்தில் ஒப்படைக்கலாம். இது நம் திருஅவைக்கு , நம் குடும்பத்தின் ஆசீர்வாதத்திற்காகவும் நாம் செய்யும் ஒரு செயல்.

அவருடைய அலைபேசி எண்: +91 *96292 52565* .

ஆலயத் தேவைகள் பட்டியல் (நீங்கள் வழங்க விரும்பினால்
*எனக்குத் தெரிந்தவரை* உள்ள தேவைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:

1.பலிபீட ஆடைகள்: (Altar Cloths) தங்க நிறம், பச்சை, சிகப்பு, ஊதா, வெள்ளி நிறம்.

2.பலிபீட வெள்ளைத் துணிகள் (Altar White Clothes).

3.மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகள் மற்றும் கோளம் (Candle Stand and Globe).

4.திருப்பலிப் பாத்திரங்கள் (Mass Vessels).

4.1. Altar Flowers not plastic but natural

4.2. திருவிவிலியம்: தமிழ் மற்றும் ஆங்கில கத்தோலிக்கப் பதிப்புகள், மற்றும் மக்களுக்கு வாசிப்பதற்கான தாங்கி (Reading Stand).

5.ஒவ்வொரு இருக்கைக்கும் (Bench) பாடல் புத்தகங்கள்.

5.1. திருப்பலிப் பாடல் தாள்கள் (Paper binding).

5.2. பாடகர் குழுவுக்கான மைக் ஸ்டாண்ட் (Mike Stand for Choir).

5.3. ஆலயத்திற்கு வெளியே உள்ள ஹார்ன் ஸ்பீக்கர் (Horn Speaker outside).

6.பலிபீடச் சிறுவர்களின் நாற்காலிகள் (Altar Boys Chairs): இவை தற்போது பங்குத் தந்தையின் அறையில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை மீண்டும் பலிபீடத்திற்குக் கொண்டு வர, பங்குத் தந்தையின் அறைக்குப் பிளாஸ்டிக் நாற்காலிகளை வாங்கி மாற்ற வேண்டும்.

7.மேல்மட்ட மின்விசிறிகள் (Ceiling Fans).

8.பங்குத் தந்தையின் அறையில் பணம் வைப்பதற்கான லாக்கர் இல்லாததால், பூட்டு வசதியுடன் கூடிய மேசை (Desk with Locker).

*எனது தனிப்பட்ட ஆலோசனைகள்* (பங்கின் சமூகத் தேவைகள்)

1.ஆலயத்தைச் சுற்றியுள்ள மரங்கள்: அவற்றைச் சுற்றி மக்கள் அமர்வதற்கான திட்டுக்கள் (Sitting Platform) அமைத்தல்.

2.தேர் கொட்டகை (Car / தேர் shed).

3.மதில் சுவர்கள்: ஆலயத்தின் சுற்றுச் சுவர்கள் உடைந்த நிலையில் இருப்பதால், அவற்றைச் சரிசெய்தல் அல்லது புதிய வேலிகள் (Fences) அமைத்தல்.

4. நேரக் குறியீட்டுடன் வசன வாசிப்பு" (Verse reading with time tape..

இவைதான் நம் ஆலயத்தின் தேவைகள். நீங்கள் மனமுவந்து உதவ விரும்பினால், அல்லது இதைச் செய்யக்கூடிய மற்றவர்களை நீங்கள் அறிந்திருந்தால், தயவுசெய்து அவர்களைத் தங்கள் தாராள மனதுடன் இவற்றை வழங்கும்படி அழைக்கலாம்.

நன்றி.

https://youtube.com/Please Subscribe for your daily spiritual thoughts and social consciousness
21/06/2023

https://youtube.com/

Please Subscribe for your daily spiritual thoughts and social consciousness

“Change is not a threat, it's an opportunity".

20/11/2022

Parish feast Flag hoisting ceremony

20/11/2022

Saint Cecilia Feast Flag hoisting

06/03/2022
Wish you all very Happy Feast day of Saint Cecilia
22/11/2021

Wish you all very Happy Feast day of Saint Cecilia

† இன்றைய புனிதர் †(நவம்பர் 22)✠ புனிதர் செசிலியா ✠(St. Cecilia)கன்னியர் மற்றும் மறைசாட்சி:(Virgin and Martyr)பிறப்பு: கி...
22/11/2020

† இன்றைய புனிதர் †
(நவம்பர் 22)

✠ புனிதர் செசிலியா ✠
(St. Cecilia)

கன்னியர் மற்றும் மறைசாட்சி:
(Virgin and Martyr)

பிறப்பு: கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
ரோம், இத்தாலி
(Rome, Italy)

இறப்பு: நவம்பர் 22, 230
சிசிலி
(Sicily)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
லத்தீன் கத்தோலிக்க திருச்சபை
(Latin Catholic Church)
கிழக்கு கத்தோலிக்க திருச்சபை
(Eastern Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox)

முக்கிய திருத்தலம்:
தூய செசிலியா தேவாலயம், ட்ரஸ்டேவெர், ரோம்
(Santa Cecilia in Trastevere, Rome)

பாதுகாவல்:
பாசுரங்கள் (Hymns), இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், "ஒமாஹா பேராயம்" (Archdiocese of Omaha), அர்ஜென்ட்டினா (Argentina), “மர் டெல் ப்லடா” – ஒரு அர்ஜென்டினிய நகரம் (Mar del Plata – An Argentinian City), ஃபிரான்ஸ் (France)

புனிதர் செசிலியா, இசைக்கலைஞர்களின் பாதுகாவலர் ஆவார். தமது திருமணத்தின்போது, தமது மனதுக்குள் கடவுளிடம் பாடினார் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. திருப்பலியின்போது, பெயர் சொல்லி நினைவு கூறப்படும் (அன்னை கன்னி மரியாளைத் தவிர்த்து) ஏழு பெண்களுள் செசிலியாவும் ஒருவர் ஆவார்.

அவரது சரித்திர விவரங்கள் கற்பனையாக இருப்பதாகத் தோன்றினாலும், அவரது இருப்பு மற்றும் மறைசாட்சியம், ஒரு வரலாற்று உண்மை என்றே கருதப்படுகிறது. ரோம் நகரின் “டிரஸ்டேவியர்” (She is said to have been beheaded with a sword) பகுதியிலுள்ள, நான்காம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட, “தூய செசிலியா” (Santa Cecilia) எனும் ஒரு ஆதி கிறிஸ்தவ ரோமன் தேவாலயத்தின் பக்கத்திலயே செசிலியா வசித்துவந்ததாகவும் கூறப்படுகிறது. பல்வேறு இசையமைப்புகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ள புனிதர் செசிலியாவின் நினைவுத் திருநாள், நவம்பர் மாதம் 22ம் நாள் கொண்டாடப்படுகின்றது.

ரோம் நகரின் பிரப்புக்கள் குடும்பமொன்றினைச் சேர்ந்த பெண்ணான செசிலியா, தமது கணவரான “வலேரியன்” (Valerian), கணவரின் சகோதரரான “’டிபர்ஷியஸ்” (Tiburtius), மற்றும் “மேக்சிமஸ்” (Maximus) எனும் பெயர்கொண்ட ரோம சிப்பாய் ஆகியோர் “பேரரசர் அலெக்சாண்டர் செவெரஸ்” (Emperor Alexander Severus) காலத்தில், சுமார் கி.பி. 230ம் ஆண்டில் மறைசாட்சியராக மரித்தனர்.

ஓரு ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து, கிறிஸ்துவுக்காக வாழ வேண்டுமென்று சிறுவயதிலிருந்தே விரும்பியவர் புனிதர் செசிலியா ஆவார். இளம் வயதிலேயே தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்ததால் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் இவரின் பெற்றோர் செசிலியாவை “வலேரியன்” (Valerian) என்ற “பாகன் இன பிரபுத்துவ” (Pagan Nobleman) இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். ஆனால் அதனை செசிலியா பெரிதாக கருதாமல் தன்னுடைய ஆன்மீக காரியங்களில் மட்டுமே கருத்தாக இருந்தார். வலேரியனுடன் திருமணம் செய்யவிருப்பதை வெறுத்தார். இருப்பினும் பெற்றோரை எதிர்த்து அவரால் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்தார்.

திருமண நாள் வந்தது. இவரின் பெற்றோர் இவருக்கு திருமண உடையை அணிவித்தபோது இதயம் வலித்தவராய், தன்னை முழுவதும் தன் மணவாளன் இயேசுவிடம் ஒப்படைத்து செபித்தார். பெற்றோர் இவரை கணவரிடம் ஒப்படைத்தபோது, தான் கடவுளிடம் கொடுத்த கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை உன்னிடம் இழக்கமாட்டேன் என்று உறுதியாக தெளிவாக கூறினார். தான் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவள் என்பதை தைரியமாக எடுத்துக்கூறினார்.

அவள் தன் கணவனை நோக்கி, "கடவுளின் தூதர் ஒருவர் என் கற்புக்கு காவலராய் இருக்கிறார். எனவே, என்னுடைய கன்னிமைக்கு தீங்கிழைக்கக்கூடிய அல்லது கடவுளது கோபத்தை உம்மீது வரச்செய்யும்படியான எதையும் செய்ய நீர் முயற்சிக்கலாகாது" என்றாள்.

வலேரியன், செசிலியா சொல்வது உண்மையா என்பதை சோதிக்கும் நோக்குடன், "கடவுளின் அந்தத் தூதரை நான் பார்ப்பேனானால் இயேசு கிறிஸ்துவை விசுவசிப்பேன்" என்றார்.

செசிலியா அதை நிரூபிக்க வேண்டுமானால், வலேரியன் முதலில் திருத்தந்தை “அர்பனிடம்” (Pope Urban) சென்று திருமுழுக்குப் பெற்று வருமாறு கூறினார். செசிலியாவின் வார்த்தைகளுக்கு சம்மதித்து, அவரும் திருமுழுக்கு பெற்றார். அவர் திருமுழுக்கு பெற்ற நாளன்றே வானதூதர் ஒருவர் அவர் முன்னின்று செசிலியாவுக்கு ரோஜா மலர் கிரீடம் அணிவித்து வாழ்த்தியதைக் கண்டார்.

அதன்பின்னர் வலேரியன் செசிலியாவை அவரின் விருப்பப்படி வாழ விட்டுவிட்டார். செசிலியாவை நம்பினார். வலேரியன் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கத்தோலிக்க திருச்சபைக்கு மனமாற்றினார். அவர்கள் அனைவரும் மனமாற்றம் பெற்ற நாளிலிருந்து செசிலியாவிற்கு பணிந்து இரவும் பகலும் அவருக்கு பணிவிடை புரிந்தனர்.

செசிலியா, தான் மணந்த வலேரியனின் உதவியுடன் கடவுளின் அன்பை உணர்ந்து வாழ்ந்தார். ஏழைகளின் மீது இரக்கம் காட்டி, அனைவரையும் சமமாக அன்பு செய்தார். இறைவனை இரவும் பகலும் பாடல்களால் போற்றிப் புகழ்ந்தார்.

இவரின் பக்தியைக் கண்ட எதிரிகளில் ஒருவனான அரசு அதிகாரியான "டுர்சியஸ் அல்மசியஸ்" (Turcius Almachius) என்பவன் செசிலியாவை கூரிய குறுவாளால் மூன்றுமுறை அவரது கழுத்திலேயே குத்தினான். மரணத்தின் விளிம்பில் வீழ்ந்த செசிலியா, தம்மை தேவாலயத்திற்கு இட்டுச்செல்லுமாறு திருத்தந்தையிடம் வேண்டினார். அதன்பின் மூன்றே நாட்கள் உயிர்வாழ்ந்த செசிலியா மறைசாட்சியாக உயிர் துறந்தார்.

புனிதர் “கல்லிஸ்டஸ்” (Catacombs of St. Callistus) கல்லறை நிலத்தில் அடக்கம் செய்யப்பட்ட செசிலியாவின் உடல் 'ட்ரஸ்ட்டேவேர்" எனும் இடத்திலுள்ள "தூய செசிலியா” தேவாலயத்திற்கு (Church of Santa Cecilia in Trastevere) மாற்றப்பட்டது. கி.பி. 1599ம் ஆண்டில், அவரது உடல் அழிந்துபோகாமல் உறங்குவது போல் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இவர் கிறிஸ்தவ பெண்கள் அனைவருக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். கிறிஸ்துவின் மீது கொண்ட அன்புக்காக கன்னிமை காத்து வாழ்ந்தார். அவருக்காக மறைசாட்சியாகவும் மரித்தார்.

09/10/2020

Today Gospel and Thought

Eternal rest grant unto him o Lord, and let perpetual light shine upon him.May his soul, and the souls of all the faithf...
22/09/2020

Eternal rest grant unto him o Lord, and let perpetual light shine upon him.

May his soul, and the souls of all the faithful departed, through the mercy of God, rest in peace💐💐💐💐

Address

R C PETTAIPALAYAM
Mohanur
637015

Website

Alerts

Be the first to know and let us send you an email when ST Cecilia Middle School R C Pettaipalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category