13/01/2026
சுவாமி விவேகானந்தர் அறப்பணி இயக்கம், மன்னார்குடி சார்பாக
சுவாமி விவேகானந்தர் 164-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு,
மன்னார்குடி நகர அளவில் நடைபெற்ற
ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில்
எங்கள் பள்ளி மாணவர்கள் சிறப்பாக பங்கேற்று
பரிசுகளை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்பதை
மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் போட்டிகள் மூலம் மாணவர்கள்
✨ சமூக பொறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
✨ தேச முன்னேற்றம் குறித்த சிந்தனை
✨ தன்னம்பிக்கை, பேச்சுத் திறன் மற்றும் வெளிப்பாட்டு ஆற்றல்
என்ற பல்வேறு திறன்களை வளர்த்துக் கொண்டனர்.
🎉 வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும்
இதயம் கனிந்த வாழ்த்துகள்!